Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்".... திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளிடம் தேசியத் தலைவர்

Featured Replies

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளை அழைத்த தமிழீழத் தேசியத் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று அறிமுகப்படுத்தியதாக தூயவன் அரசறிவியல் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான கலைக்கோன் தெரிவித்துள்ளார்.

21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாள் தலைவர் அனைத்துப் பொறுப்பாளர்களுடனுமான தனது வழமையான சந்திப்புக்களை நிறுத்தி அந்தப் போராளிகளைப் பற்றிய நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார். அன்று நள்ளிரவில் தளபதிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று கூறினார். தலைவர் அவ்வாறு கூறிய ஒரு சிலமணி நேரத்தில் இளங்கோவிடமிருந்து "நாங்கள் இறுதி நகர்வை ஆரம்பிக்கப் போகின்றோம்" என்ற செய்தி வந்தது.

தலைவர் பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அந்தப் பெரும் வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தார். சென்றிருந்த ஒவ்வொரு போராளிகளிடத்திலும் தலைவர் அதிக நம்பிக்கையுடனும் பற்றுடனும் இருந்தார்.

அந்த அணிக்குத் தளபதியாகச் சென்றவர் இளங்கோ, 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பல்வேறுபட்ட சிறப்புப் பயிற்சிகளையும் பெற்றதோடு கைத்துப்பாக்கிப் பயிற்சி ஆசிரியராகவும் அடிப்படைப் பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும் இருந்தார். இவற்றுக்கு அப்பால் சிறப்புப் புலனாய்வுப் பணிகள், சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு போராளி. 14-க்கும் மேற்பட்ட களங்களைக்கண்ட ஒரு வீரன். இவரின் போரிடும் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்ட களமாக இத்தாவில் சமர்க்களம் அமைந்திருந்தது. அவர் விக்டர் கவச எதிர்புப்படையணியின் அணியொன்றுக்குத் தலைமை தாங்கிச் சென்றிருந்தார். அங்கு எமது அணிகளின் காப்பரண்களுக்குள் எதிரியின் கவசப்படையணி உள்நுழைந்த போது அவரது அணியைச் சேர்ந்த போராளிகள் இரு டாங்கிகளைத் தகர்த்து அழிக்க இளங்கோ தனது கையிலிருந்த ஆர்.பி.ஜி. மூலம் ஒரு பவள் கவச வாகனத்தை நோக்கி மிக வேகமாக ஓடிச்சென்று அதன் மீது ஏறித் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த எதிரியைச் சுட்டுவீழ்த்தி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை எடுத்து அதனைப் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டார். இதன் மூலம் எமக்குப் பெரும் நெருக்கடியாகவிருந்த இத்தாவில் களமுனையை முற்றுமுழுதாக எமது பக்கம் திருப்பித்தந்த ஒரு பெரும் வீரன். அதற்குப்பின்னரும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின் குறித்த சில காலம் எமது தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணியில் மிக முக்கியமான ஒரு பணியைப் பொறுப்பேற்று மிக நேர்த்தியாகச் செய்து முடித்திருந்தார்.

இளங்கோ தான் கரும்புலியாகச் செயற்படவேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைவருக்குத் தொடர்ச்சியாகக் கடிதம் வரைந்து கொண்டே இருந்தார். ஆனாலும் அவரது கடமைகளின் முக்கியத்துவம் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தை வழங்குவதில் சற்றும் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 10 ஆண்டுகளாக இளங்கோ சுமந்து வந்த அந்த உணர்வைப் புரிந்து கொண்ட தலைவர் 2006 ஆம் ஆண்டு அவருக்குக் கரும்புலிகள் அணியில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினார்.

இளங்கோவின் தலைமையில் புறப்படுகின்ற அணியில் இரண்டாவது பொறுப்பாளராக வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

அவரின் செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்களை தற்போது வெளியிட முடியாதுள்ளது. திரியாயைப் பிறப்பிடமாகக்கொண்ட வீமன் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்து புதுக்குடியிருப்பில் வசித்து வந்த காலத்தில் விடுதலை புலிப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். மிகச்சிறிய வயதில் அன்று அவர் அமைப்பில் இணைந்ததனால் படையணிகளுக்கு இணைக்கப்படாமல் படைத்துறைப் பள்ளியில் சில காலம் கற்று வந்தார். அதன்பின் குறித்த வயதை எட்டியதும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார். பின் அவரும் தலைவரின் மெய்பாதுகாப்பு அணிக்கு உள்வாங்கப்பட்டார். அதில் அதியுச்ச நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். அப்பணியில் மிக இரகசியமான பல்வேறுபட்ட கடமைகளை மிக நேர்த்தியாகச் செய்தார். அதேவேளை "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாயகத்திற்குப் பயணிக்கும் போது அவருடைய பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் தலைவர் வீமனிடமே ஒப்படைத்திருந்தார்.

ஈழப்பிரியா மிகுந்த ஆளுமை மிக்க ஒரு போராளி. அவர் பயிற்சியின் போது மிக உற்சாகமாகச் செயற்பட்டார். அவர்கள் பெற்ற பயிற்சி என்பது சாதாரணமான பயிற்சி அல்ல. அவர்கள் தாக்குதலுக்குச் செல்லும் போது உதவி அணிகள் செல்லப்போவதில்லை. எனவே தாக்குதலுக்குத் தேவையான முழு வெடிபொருட்களையும் சுமந்து கொண்டு நீண்டதூரம் பயணிக்க வேண்டும். அந்தளவு மிகக்கடினமான பயிற்சியைப் பெற்றவர்தான் ஈழப்பிரியா.

இளம்புலி மிக உற்சாகமான போராளி எல்லோரையும் நகைச்சுவையாக வைத்திருக்கக்கூடிய ஒரு போராளி. அவர் இறுதியாகச் செல்லும் நேரத்தில் தலைவரிடம் எமது தேசியக்கொடியைக் கொண்டு செல்ல அனுமதி கேட்டிருந்தார். ஏனெனில் இத்தாக்குதல் ஒரு இரகசியமான தாக்குதலாக இருக்காது என்பதை உணர்ந்த அவர் முகாமை அழித்து விட்டுத் தொடர்புக் கோபுரத்தில் ஏறி எமது கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று அவர் அந்த அனுமதியைக் கேட்டிருந்தார். அதற்கு அமைவாக அவர் தேசியக் கொடியினையும் கொண்டு சென்றிருந்தார்.

பஞ்சீலன் மட்டக்களப்பிலிருந்து மிகச் சிரமங்களுக்கு மத்தியில் கால்நடையாக இங்கு வந்து மிகக் கடுமையாகப் பயிற்சிகளைப் பெற்றவர். சமாதான காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பிற்குள் எதிரியின் ஊடுருவலைத் தடுப்பதற்காகத் தீவிரமாகச் செயற்பட்ட வீரன். அதற்கான பெரும் அணியொன்றினைப் பொறுப்பெடுத்து செய்து வந்த வீரன்.

இவ்வாறு தான் ஒவ்வொரு வீரர்களும் ஒரு அணியாக நின்று மிகக்கடுமையான பயிற்சிகளைப் பெற்ற பெரும் வீரர்கள். ஒவ்வொரு போராளிகளும் தங்களது உணர்வுகளைத் தலைவரிடம் பல ஆண்டுகளாகத் தெரியப்படுத்தி வந்தனர். தலைவரும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அப்போராளிகளைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தார். அன்று தொடக்கம் அவர்கள் உச்ச இலக்கொன்றைத் தாக்கி அழிப்பதற்கான முறையில் மிகக்கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த அணிதான் அன்று அனுராதபுரம் வான் படைத்தளத்திற்குள் நுழைவதற்கான இறுதி நகர்வை தொடங்கிக் கொண்டிருந்தது.

அன்று தலைவர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தார். அதிகாலை 3:20 மணிக்கு இளங்கோ அறிவிக்கின்றார். "நான் சண்டையைத் தொடக்கப் போகின்றேன். சண்டை தொடங்கியதும் மிகுதி விடயங்களை அறிவிக்கின்றேன்" என்று கூறிச் சமரை ஆரம்பித்தார்.

அனுராதபுரம் வான் படைத்தளம் என்பது ஒரு சாதாரண வான் படைத்தளம் அல்ல. வடபகுதியில் இருக்கின்ற அனைத்து இராணுவத் தளங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதும் வடபகுதியில் ஒரு இராணுவ நடவடிக்கையைச் செய்வதானால் அதற்கு இதயமாகச் செயற்பட வேண்டிய தளமாகவும் இருந்தது.

அது மட்டுமல்ல, வடபகுதியில் அனைத்து இராணுவச் செயற்பாடுகளுக்குமான ஒரு மையத்தளமாக அனுராதபுரம் வான் படைத்தளம் இருந்தது. இலங்கையில் உள்ள அனைத்து தளங்களிலும் இத்தளம் மிக வித்தியாசமானது. ஏனெனில் ஏனைய தளங்களில் மக்களின் போக்குவரத்திற்கும் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் முற்றுமுழுதாக இராணுவத் தேவைகளுக்காகவே ஒதுக்கப்பட்ட தளம் அனுராதபுரம் தளம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு பொதுமகனும், ஊடகவியலாளரும் கூட உள்நுழைய முடியாதளவுக்கு மிக இறுக்கமான பாதுகாப்பைப் பேணிவந்த தளம் தான் அத்தளம்.

3 கிலோ மீற்றருக்கு மேலான நீளமும் 2 கிலோ மீற்றருக்கு மேலான அகலமும் கொண்ட ஒரு பெரும் தளம். அதற்குள் தான் இந்த வீரர்கள் உள்நுழைந்தார்கள். 3:20 மணிக்குத் தாக்குதல் தொடங்குகின்றது. மிக வேகமாகத் தாக்குதலை நடத்தி தமக்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்து அங்கிருந்த வானூர்திகளைத் தகர்த்து முடித்தார்கள்.

சிங்களம், அனுராதபுர வான் படைத்தளத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது. அத்தளம் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்ருக்கின்றது. மிகையொலி வானூர்திகளை நிறுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் பல தாக்குதல் வானூர்திகளையும் நிறுத்தி வைக்கப் பாதுகாப்பான தளம் எனவும் கருதி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதேவேளை முற்று முழுதாக சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட பகுதி. அதற்குள் ஊடுருவுவது என்பது மிகக் கடினமான விடயம். சிங்களம் பெரும் மமதையுடன் இருந்த அக்கோட்டைக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் 20 நிமிடத் தாக்குதலுக்குள் அத்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள்.

அந்த நிலையில் இளங்கோ மீண்டும் தொடர்பு கொண்டு கதைத்தார். நான் காலில் காயமடைந்து விட்டேன் தொடை எலும்பு முறிந்துவிட்டது. எனவே இந்த இடத்தில் அமர்ந்து கொண்டே கட்டளைகளை வழங்குகின்றேன் எனக்கூறி அவர் கட்டளைகளை வழங்கினார். இதேவேளை வீமனின் கட்டளையும் கட்டளைப்பீடத்துடன் தொடர்புபட்டிருந்தது. வீமன் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். எம்ஐ-24 ரக உலங்குவானூர்தியையும், எம்ஐ-17 ரக உலங்குவானூர்தியையும் அழித்துவிட்டு கட்டளைப்பீடத்திற்கு அறிவித்தார். எனக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் நான் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார்.

பல நூற்றுக்கணக்கான படையினரால் பாதுகாக்கப்பட்டிருந்த அம் முகாம் எதிரியால் கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு அதி உக்கிரமாகவும், வேகமாகவும் அந்த வீரர்கள் தாக்குதலை நடத்தி வந்தார்கள். தாக்குலில் உக்கிரமாக ஈழப்பிரியா செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் எதிரியின் பிரதானமான வானூர்திகளுக்கு அப்பால் வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தன. அதனை எடுத்து இயக்கித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார். தளத்திற்குள் நூறு மீற்றர் நீளமான ஒரு கட்டடத்திற்ள் பல வானூர்திகள் நின்றிருந்தன. அறிவுமலரும் இன்னுமொரு போராளியும் அதற்குள் நுழைந்து தாக்குதலை நடத்திக் கொண்டு அறிவித்தார்கள். இங்கு நிறைய வானூர்திகள் நிற்கின்றன. பல வானூர்திகள் எரிந்து கொண்டிருக்கின்றன. உள்ளே சென்று பார்க்க முடியாமல் உள்ளது. ஆனாலும் எல்லாவற்றையும் அடித்து அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்று எரிந்து கொண்டிருக்கும் வானூர்திகளின் இலக்கத்தைக் கூடக் கூறிக் கொண்டு வானூர்திகள் எரியும் போது அவர்கள் மகிழ்ச்சியில் சிரித்து ஆரவாரித்தவாறு தாக்குதலில் ஈடுபட்டார்கள். தாக்குதல் தொடங்கி சில மணிநேரத்தில் தளத்தைக் கைப்பற்றுவதற்காகத் தளத்தின் வாசலில் படையினர் குவிக்கப்படுகின்றனர். அப்போது பல போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். பலர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ஒருவர் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையிலும் தனது ஆயுதத்தால் வந்த படையினர் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எமது வானூர்திகள், படையினர் மீது தாக்குதல் நடத்தின. அதனால் படையினர் சிதறி ஓட அதனையும் அவர் அங்கிருந்து கொண்டு அறிவித்துக்கொண்டிருந்தார்.

பின்னர், தீயணைப்புக் கருவிகளுடன் இராணுவத்தினர் வர அவர்கள் மீதும் அப்போராளிகள் தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் அங்கிருந்த எல்லா வானூர்திகளும் அழித்து முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் வேவு வானூர்திகள் மட்டும் அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். பின் மறைவான இடமொன்றில் அவை நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு விட்டார்கள். அப்போது வீமனுக்கு இளங்கோ கட்டளையிட வீமன் படுகாயமடைந்த நிலையிலும் தனது டொங்கானால் அவற்றைத் தாக்கினார். தாக்கிவிட்டு அவை வெடித்துக் சிதறுகின்ற ஒலியை அனுப்பிவிட்டு மகிழ்ச்சியில் சிரித்தார். அவ்வாறு அத்தளத்தில் ஒரு பொருளையும் மிஞ்சவிடாது தளத்தையே துவம்சம் செய்துவிட்டுத்தான் அந்த வீரர்கள் வீரச்சாவடைந்தார்கள்.

இன்று நாங்கள் பெரிய வெற்றியொன்றின் மிதப்பில் நிற்கின்றோம். மாபெரும் மனக்கோட்டை கட்டிவந்த சிங்களம் இந்த 21 வீரர்களின் வீரத்திலும் அர்ப்பணிப்பிலும் அனைத்தையும் போட்டு உடைத்துள்ளது. இருந்த போதும் எங்களுக்கு நிமிர்வைத் தந்த வீரர்களின் நினைவுகள் எம் ஒவ்வொருவரது இதயத்தையும் பாறாங்கல்லாக அழுத்தத்தான் செய்கிறது. அந்த வீரர்களைப் பொறுத்தவரை அவர்கள் 21 பேரும் எம்மிடம் ஒன்றைத்தான் எதிர்பார்த்தார்கள். தலைவர் கவனம், அவரது கரத்தைப் பலப்படுத்துங்கள். அதன்மூலம் எமது மக்களை அவலத்தில் இருந்து மீட்டு எடுங்கள். நீங்கள் அனைவரும் ஒன்றாக எழுந்தால் அது முடியும் என்றார் அவர்.

http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

  • தொடங்கியவர்

22 ஆண்டுகளுக்குப் பின்னர் மரண பீதியை ஒக். 22 ஆம் நாள் எதிர்கொண்ட அனுராதபுரம்: "லக்ம்பிம"

[சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2007, 08:45 PM ஈழம்] [கொழும்பு நிருபர்]

அனுராதபுரம் மக்கள், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மரண பீதியை கடந்த ஒக்ரோபர் 22 ஆம் நாள் எதிர்கொள்ள நேரிட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்ம்பிம" சிங்கள வார ஏட்டில் "அனுராதபுரம் தாக்குதல்" செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

சிங்கள பௌத்த கலாச்சாரத்தின் முக்கிய இடமாக விளங்கும் அனுராதபுரத்தில் கடந்த 22 ஆம் நாள் பயங்கரமும் பீதியுமே ஆட்சி செய்தன. சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள அந்த நகரத்தின் மக்களுக்கு கடந்த 22 ஆம் நாள் ஒவ்வொரு வினாடியும் மரண பயத்தையே கொடுத்தது.

அனுராதபுர மக்கள் இத்தகைய ஒரு நிலைக்கு கடைசியாக 22 வருடங்களுக்கு முன்னரே முகம் கொடுத்திருந்தனர். அது 1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாளாகும். கடத்தப்பட்ட சிறிலங்கா போக்குவரத்துச் சபை பேரூந்தில் வந்த கெரில்லாக்கள் ஆயுதங்களுடன் அநுராதபுரத்திற்கு வந்தனர். அவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். 285 பேர் காயமடைந்தனர். சிறிமகா போதியை வணங்க வந்தவர்களுக்கே இந்நிலை ஏற்பட்டது.

அனுராதபுரத்தின் பாதுகாப்பு அதிகரிப்புகள்

இச்சம்பவத்தின் பின்னர் அனுராதபுர நகரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். வணக்க ஸ்தலத்திற்கு உள்ளிட்ட பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், முட்கம்பிகள் அதிகரிக்கப்பட்டன.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈழப் போர் வேகமாக பரவி வந்த காலப்பகுதியில் அனுராதபுரத்தில் நாளுக்கு நாள் இராணுவ முகாம்கள் அதிகரித்தன. இதற்குக் காரணம் வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் இருந்த பாதுகாப்புப் பிரதேசமான அனுராதபுரம் இராணுவத்தினரின் மாற்றீட்டு இடமாக இருந்தமையாகும்.

யாழ். - கண்டி வீதியான ஏ-9 பாதையைப் பிடிப்பதற்காக 1997ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஜெயசிகுறு இராணுவ நடவடிக்கைகளின் தொடக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெற்றன.

இதனால் அனுராதபுர நகரை அண்டியிருக்கும் வான் படைத்தளத்திற்கும் பணிகள் அதிகரித்தன. வவுனியாவில் இருக்கும் வான் படைத்தளத்திற்கும் கெரில்லாக்களின் அச்சுறுத்தல் அதிகரித்தமையினால் அநேக பணிகள் அனுராதபுரம் வான் படைத்தளத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டன.

600 ஏக்கர் பிரதேசத்தில் அமைந்துள்ள வான் படைத்தளத்தின் ஒரு பக்கத்தில் இருப்பது நுவர வாவியாகும். இதனால் வான் படைத்தளத்திற்கு வரும் வானூர்திகளும் முகாமிலிருந்து புறப்படும் வானூர்திகளும் நுவர வாவிக்கு மேலாகவே தமது பயணங்களை மேற்கொள்கின்றன.

அத்துடன் சிறிலங்கா வான் படையின் வானோடிகளுக்குப் பயிற்சியளிக்கும் பிரதான நிலையமும் அனுராதபுரம் வான் படைத்தளத்திலேயே உள்ளது. இந்த மார்ச் முதலாம் நாள் அனுராதபுரத்தில் உடைந்து விழுந்ததும் பயிற்சியளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பீரி-6 ரக வானூர்தியாகும். அதன்போது பயிற்சி ஆலோசகரும் கடெட் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். இராணுவத்தினரின் விக்டரி மருத்துவமனை அனுராதபுரத்தில் இருப்பதாலும் அனுராதபுரம் மருத்துவமனையின் வசதிகள் நல்ல நிலையில் இருப்பதாலும் காயமடையும் அநேகமான படையினர் வானூர்தி மூலம் அனுராதபுரத்திற்கே கொண்டு வரப்படுகின்றனர்.

கடந்த மாதத்தில் இருமுறை அநுராதபுரம் நகரத்தின் பாதுகாப்பை இரண்டு, மூன்று மடங்காக அதிகரிக்க உயர்பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இராணுவத்தின் 58 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கடந்த 6 ஆம் நாள் அனுராதபுரத்திற்கு வந்தபோது முதல் முறையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரண்டாவது முறையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, அனுராதபுரம் சாலியபுரத்தில் அமைந்துள்ள கஜபா ரெஜிமென்டின் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற கஜபா சுப்பர் கோஸ் மோட்டார் வாகன மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெற்ற கடந்த 21ஆம் நாளாகும். இந்த போட்டியைக் கண்டுகளிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் அநுராதபுரத்திற்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் அனுராதபுரம் வான்படை முகாமின் நடவடிக்கைகள் வழமை போல இடம்பெற்று வந்தன. வான் படைத்தளத்தின் பாதுகாப்பிற்காக நாற்புறமும் கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அந்த கம்பி வேலிகளுக்கு பின்புறம் பதுங்கு குழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுதம் தாங்கிய வான் படையினர் அந்த பதுங்குகுழிகளில் காவல் புரிந்தனர். எனினும் வான் படையினரின் கண்களுக்குத் தெரியாமல் கெரில்லாக்கள் முகாமிற்குள் புகும் நடவடிக்கைகளை 22 ஆம் நாள் அதிகாலை தொடங்கினர்.

கரும்புலிகள் யார்?

அவர்கள் சாதாரண விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்ல. அவர்கள் கரும்புலிகள். கரும்புலி என்பது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் விடுதலைப் புலிகளிடம் இருக்கும் மரண ஆயுதமாகும். சிறப்பு இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கே கரும்புலிகளைப் பிரபாகரன் பயன்படுத்துவார். முக்கிய பிரமுகர்கள், பொருளாதார மையங்கள், முக்கிய இடத்தை வகிக்கும் இராணுவ முகாம்களின் மீது தாக்குதல் நடத்தவும் இராணுவத் தாக்குதல்களை முறியடிக்கவுமே கரும்புலிகளைப் பிரபாகரன் பயன்படுத்துவார்.

வழமையாக சிறப்பு இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் கரும்புலிகளுக்கு அதற்காக சுமார் 4 மாதகால சிறப்புப் பயிற்சியளிக்கப்படும். அத்துடன் ஏனைய போராளிகளைப் போலன்றி அவர்களுக்கு 3 வேளையும் நல்ல உணவுப் பொருட்கள் கிடைப்பதுடன் விடுதலைப் புலிகளின் வீர செயற்பாடுகளைக் கொண்ட படங்களைப் பார்ப்பதற்கும் மத சடங்குகளில் கலந்துகொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கும். தற்கொலைத் தாக்குதலுக்கு என வன்னியிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கரும்புலிகளுக்கு சிறப்பு வரப்பிரசாதம் கிடைக்கும். தமது தலைவரான பிரபாகரனுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். சில நேரங்களில் பிரபாகரனுடன் இறுதியாக புகைப்படம் எடுக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

கட்டுநாயக்க தாக்குதல்

சுதந்திரத்திற்குப் பின்னர் சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்திய கட்டுநாயக்க தாக்குதல் கரும்புலிகளின் தாக்குதலுக்கு ஒரு உதாரணமாகும். 2001 ஜூலை 24 ஆம் நாள் அதிகாலை 3:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலில் கிபீர் தாக்குதல் ஜெட்கள் 2, எம்ஐ-17 ரக உலங்கு வானூர்தி - 02, மிக்-27 தாக்குதல் ஜெட் - 01, கே-8 ரக வானூர்திகள் - 03, எயார்லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான 03 எயார் பேரூந்துகள் தாக்கியழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்காக வந்த 13 கரும்புலிகளும் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். புலிகளின் தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டனர்.

காட்டில் ஊடுருவிய புலிகள்

இம்முறை கரும்புலிகளின் இலக்காக இருந்தது குறைந்த பாதுகாப்பின் கீழ் இருந்ததாகக் கூறப்படும் அனுராதபுரம் தளமாகும். நுவர வாவி பக்கத்திலிருக்கும் கம்பி வேலிகளை வெட்டி, விடுதலைப் புலிகள் வான் படைத்தளத்திற்குள் நுழைந்திருப்பதாக இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த இடத்திற்கும் நுவரவாவிக்கும் இடையிலிருப்பது காடாகும். இந்த காட்டுப் பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பிரதேசவாசிகள் தோட்டச் செய்கைகளை மேற்கொள்கின்றனர்.

அனுராதபுரம், அசோகபுரம் கன்னட்டியில் வசிக்கும் ஹங்வெல்லகே டேனியல் அப்பு என்பவர் தோட்டச் செய்கையில் ஈடுபடும் ஒருவராவார். கடந்த 20 ஆம் நாள் தோட்டத்திற்குச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தலையில்லாத அவரது சடலம் மறுநாள் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தைச் சோதனையிட்ட படையினர் டேனியல் அப்புவின் தலை அனுபவமுள்ள கொலைக்காரனாலேயே வெட்டப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

கூரிய ஆயுதமொன்றாலேயே அவரின் தலை வெட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு நடவடிக்கைகளுக்குச் செல்லும் கெரில்லாக்கள், கொமாண்டோக்கள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ரம்போ எனப்படும் கத்தியைப் பயன்படுத்துகின்றனர். அது ஏனையவர்களுக்குத் தெரியாமல் விரோதியின் சத்தத்தை மூடுவதற்காகும்.

"அந்த நபரின் கழுத்தை வெட்டியது வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு வந்த விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்று எங்களுக்குச் சந்தேகம் நிலவுகிறது. சிலவேளை அந்த நபர் காட்டிற்குச் சென்றபோது அவர் விடுதலைப் புலிகளைக் கண்டிருக்கலாம். அதனால் இரகசியத்தைக் காக்க விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம்." என்று பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவி;த்துள்ளார்.

சினைப்பர் தாக்குதல்

வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது டேனியல் அப்புவின் தலை 23 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கம்பி வேலிகளை வெட்டி முகாமிற்குள் வந்த கரும்புலிகள் முதலில் பதுங்குழிகளில் இருந்த வான் படையினரை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் சினைப்பர்களைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. சுடும் போது சத்தம் எழுப்பாத ஆயுதத்தையே சினைப்பர் என்பர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரை கொலை செய்வதற்கும் சினைப்பர் துப்பாக்கியையே பயன்படுத்தினர். மிகத் தொலைவில் இருக்கும் இலக்கையும் எட்டக்கூடியதாயிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

சுடும்போது சத்தம் வெளியேறாமையினால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதனை ஏனைய வான் ப்படையினர் அறியாது இருந்திருக்கலாம். இதனால் விடுதலைப் புலிகள் சினைப்பரைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி 6 பதுங்குழிகளை கைப்பற்றியுள்ளனர். பின்னர் எஞ்சிய விடுதலைப் புலிகள் 3 பிரிவுகளாக பிரிந்துள்ளனர். வான் படையினரின் சீருடையை ஒத்த உடையையே அவர்களும் அணிந்திருந்தனர். சிலர் தளத்திலிருந்து ஆயுதக் களஞ்சியசாலைக்குச் செல்ல முயற்சித்துள்ளனர்.

எனினும் அந்த முயற்சியை முறியடித்துள்ளனர். வானூர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் ஒரு பிரிவினரின் இலக்காகியது. அந்த கரும்புலிகளுக்கு முன்னால் செல்ல இடமளித்து மற்றைய பிரிவு இடத்திற்கு இடமிருந்து வான் படையினரை நோக்கி ஆர்.பி.ஜி. தாக்குதலை நடத்தினர்.

அப்போது கரும்புலிகள் சிலர் வான் படைத்தளத்திலிருந்த வானூர்தி எதிர்ப்புக் கருவிகளை கைப்பற்றினர். பின்னர் அந்த ஆயுதங்களைக் கொண்டு வானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தினர்.

இந்த வெடிச் சத்தங்களால் அனுராதபுரம் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். அவர்களுக்கு காணக் கிடைத்தது ஒன்றேயொன்றுதான். வான் படைத்தளத்திற்குள் நிகழ்ந்த வாண வேடிக்கை மட்டுமே அது. சில வேளைகளில் நெருப்புப் பந்தைப் போன்ற ஒன்று முகாமை நோக்கிச் சென்றதை நகரவாசிகள் கண்டுள்ளனர். அது கரும்புலிகள் மேற்கொண்ட ஆர்.பி.ஜி. தாக்குதல் ஆகும். தமது சகாக்கள் வழங்கிய ஆர்.பி.ஜி. தாக்குதல் துணையுடன் வானூர்தி தளத்திற்குள் நுழைந்த கரும்புலிகள் ஆர்.பி.ஜி. தாக்குதல் நடத்தி எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் இரண்டை அழித்தனர்.

இத்தாக்குதல்களால் அச்சமடைந்த நுவரவாவிக்கு அண்மையிலிருந்த மக்கள் நுவரவாவிக்கு மேலாக அதிகாலை 3:20 மணியளவில் உழவு இயந்திரத்தின் ஓசையைப் போன்ற சத்தமொன்றைக் கேட்டுள்ளனர். விடுதலைப் புலிகளிடமிருக்கும் இரு ஸ்லின் இசெட்-143 வானூர்திகளிலிருந்தே அந்த சத்தம் எழுந்துள்ளது.

விளக்குகளை அணைத்துவிட்டு தென்னை மரத்தின் உயரத்தில் பறந்த அந்த வானூர்திகள் வான் படைத்தளத்தை நோக்கிப் பறந்ததை நகரவாசிகள் கண்டுள்ளனர். வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டிருந்தமையினா

தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா.

என்றான் பாரதி அன்று. புரடசிக் கவிஞன் அது அவனது விடுதலை உணர்வின் வெளிப்பாடு.

இன்று,

தமிழனென்றரல் அவன் தலைகுனியாது

தமிழீழமென்றால் அவன்நிலை தளராதுது.

என்பது இன்றைய செயற்பாடு.

தலைவரிடம் நம்பிக்கை, தலைவன் போராளிகளிடம் வைத்த நம்பிக்கை, இவைகளெல்லாம் எவ்வாறு நடைபெறுகின்றன என்று, உலகம் தமிழீழத்தின் மீது வைக்கப் போகும் நம்பிக்கை. இந்த யதார்த்தங்களையெல்லாம் செயலில் காட்டும் வீரப் பண்பு, உலகத் தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கின்றது. வெற்றியின் உச்சக்கட்டம் எது? என்கின்ற கேள்விகளை கேட்டுக் கேட்டு அதை அநுபவிக்கின்ற தமிழர்கள் எல்லோரும் இந்த வீர மறவர் புகழ்பாடக் கடமைப்பட்டவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.