Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-13.jpg?resize=750%2C375&ssl=

மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!

ஜெருசலேமின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க சர்வதேச உதவியை நாடு கோரியுள்ளது.

அனர்த்தத்தினால் இதுவரை குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேலில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவு தினத்தன்று இந்த மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

ஜெருசலேம் முதல் டெல் அவிவ் வரையிலான பிரதான நெடுஞ்சாலையில் தீ எரிவதையும், சுற்றியுள்ள மலை உச்சிகளில் அடர்ந்த புகை பரவுவதையும் சமூக ஊடகங்களில் காணொளிகள் மற்றும் படங்கள் காட்டுகின்றன.

பலர் தங்கள் வாகனங்களை கைவிட்டு தீப்பரவலிலிருந்து தப்பி ஓடுவதைக் காண முடிந்தது.

இஸ்ரேலிய ஊடகங்களின்படி, 160 க்கும் மேற்பட்ட மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

பல விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்க முயற்சி செய்கின்றன.

மேலும் நாட்டின் இராணுவமும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன என்று அது கூறியது.

இருப்பினும், வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று தீயை கட்டுப்படுத்துவதில் சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

c0qrdj18_wildfires_625x300_01_May_25.jpg

https://athavannews.com/2025/1430229

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

495640822_1129204355889088_7983935169348

494689093_1129204372555753_1172742520144

495050389_1129204409222416_4185670337758

494907569_1129211762555014_5205624782337

495146164_1129211699221687_1188595605679

எரியும் இஸ்ரேல், 39Km தூர இட இஸ்ரேல் மக்கள் அவதி!

இஸ்ரேலின், ஜெருசேலம் - தெல் அவிவ் அதிவேக பாதையை அண்மித்த காட்டுப்பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் காட்டுத்தீ சடுதியாக பரவ ஆரம்பித்து, பல இடங்களுக்கும் மிக வேகமாக பரவியது, இதன் காரணமாக ஏறத்தாள 39 கிலோமீற்றர் தூர பாதையை அண்மித்த மக்கள் பெரும் அவதி அடைந்ததோடு, காட்டுத்தீயானது கட்டிடங்கள் மற்றும் மக்களின் இருப்பிடங்களுக்கும் பரவியமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் அரசாங்கமானது விஷேட ‘National Emergency’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, தீயை அணைக்கும் பணியில் பல அயல் நாடுகளின் உதவியோடு தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலில் பாரிய காட்டுத் தீ : பெரும்பகுதி நிலப்பரப்பு நாசம்!

02 MAY, 2025 | 06:33 PM

image

இஸ்ரேலில் கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய கட்டுத் தீயால் பெரும்பகுதி நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு அருகில் மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் பரவத் தொடங்கிய காட்டுத்தீயானது வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி சுமாா் 20 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது.

தற்போது தீ வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், காற்று அவ்வப்போது திசை மாறி வீசுவதால் அணைக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் தீ பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். தீயணைப்பு நடவடிக்கையில் சுமார் 10 தீயணைப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

5f2a5267-db78-48cb-9a99-db5f92a743b8.jpg

இந்தக் காட்டுத் தீயில் குடியிருப்பு வீடுகள் எதுவும் சேதமடையவில்லை என்றாலும், பூங்காக்கள் போன்ற பொது இடங்களைத் தவிா்க்க வேண்டும் எனவும், பொதுவெளியில் தீ மூட்டி சமைக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

இந்தக் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இத்தாலி, குரோஷியா, ஸ்பெயின், பிரான்ஸ், உக்ரைன், ருமேனியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு விமானங்களை அனுப்பியுள்ளன.

இதேவேளை, இஸ்ரேலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயில் 12,000 ஏக்கா் நிலப்பரப்பு நாசமானதுடன் 44 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

b7a9eb02-3013-4b7f-98dc-c58347337379.jpg

https://www.virakesari.lk/article/213546

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.