Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்

By Admin

May 10, 2025

battinewsmideafile.jpg

யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.
இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (8) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற வேளையில் அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது.

இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிஸாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போதும் கிடுகு ஓலைகள் முழுவதும் எரிந்ததுடன், மேற்கூரை மரங்கள், இலத்திரனியல் பொருள்கள், கதிரைகள் உள்ளிட்ட தளபாடங்களும் பகுதியளவில் தீயினால் சேதமடைந்தன.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைக்காக பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தினரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

ஆலயங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் வான வேடிக்கைகள் நிகழ்த்துபவர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பண்பாட்டு மலச்சிக் கூடத்தில் பல்வேறு சமூக செயற்பாட்டு நிகழ்வுகளும், அரங்க செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2025/05/blog-post_276.html

  • கருத்துக்கள உறவுகள்

தினவு எடுத்த.... கோவில் திருவிழாக் காரர்களால்.... மக்களுக்கு எவ்வளவு துன்பம்.

சென்ற கிழமை தாவடி கோவிலில் வெடி கொழுத்தும் போது.... தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை மிரண்டு... பொதுமக்களை தாக்கியதில் சிலர் காயமடைந்து, ஒரு பெண்ணிற்கு கால் அகற்ற வேண்டிய நிலை.

இப்போ.... கோவில் திருவிழாவிற்கு... வான வேடிக்கை காட்டியதில் சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் எரிந்து நாசமாகி உள்ளது.

எமது சமூகம் முட்டாள் வேலைகள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது.

இந்தக் காசுகளை வைத்து... சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்யப் பாருங்கள். கல்வி கொடுக்கலாம், நோயாளர்களை, முதியோர்களை பார்மரிக்கலாம் என்று எத்தனையோ வேலைகள் உள்ளது. அதை விட்டுட்டு... லூசு வேலைகள் செய்து கொண்டு இருக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வானவேடிக்கையால் பண்பாட்டு மலர்ச்சிக்கூடம் சிறுவர் அரங்கு தீயில்.

495212652_9231528376951134_8522854594816

495575592_9231534196950552_5366727382964

காணொளி: 👉 https://www.facebook.com/kiru.kirupan/videos/1316207322820085 👈

08.05.2025. அன்று, அருகில் உள்ள ஆலயத் திருவிழாவின் போதான வான வேடிக்கை கொண்டாட்டத்தில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள எமது "பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் " தீப்பற்றி எரிவதற்கு காரணமான வான வேடிக்கை.

2009 இறுதி யுத்தத்தின் போது தமிழ்த் தேசத்தில் இராணுவத்தினால் ஏவப்பட்ட கொத்துக் குண்டுகளுக்கு ஒப்பான அனுபவத்தை தந்தது.

ஒன்றின் விலை 25.000 (இருபத்தைந்து ஆயிரம் என தெரிவிக்கப்படுகின்றது. )

யாழ்.தர்மினி

12.05.2025

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

497511539_23937035629254662_344365223719

497502709_23937036202587938_650470904329

497495063_23937036022587956_810427899079

495373903_23937036335921258_108873579186

495679725_23937035802587978_787198190598

497572248_23937036482587910_712966909835

08.05.2025. அன்று, அருகில் உள்ள ஆலயத் திருவிழாவின் போதான வான வேடிக்கை கொண்டாட்டத்தில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள எமது "பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் " தீப்பற்றி எரிவதற்கு முன்னான படங்கள்.

யாழ்.தர்மினி

12.05.2025

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

497512185_23937818225843069_783377505855

"தீ " சுமந்த மாதம், "மே"

497463533_23937790689179156_369194744984 496327738_23937790525845839_429425495650

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.