Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

High-costs.jpg?resize=675%2C375&ssl=1

உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு வெசாக் தினத்தில் ஜனாதிபதி அழைப்பு!

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான ஞானம் பெற்றது, இந்த புனித வெசாக் தினத்தில் ஆகும்.

அவர் அனைத்து துன்பங்களையும் தாங்கி, ஆயுள் முழுவதும் தன்னலமற்ற பக்தி செயல்கள் மூலம் புரிந்து கொள்ளப்பட்ட தர்மம், உலகில் வசிக்கும் அனைத்து மக்களின் ஆன்மீக நல்வாழ்விற்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. மதச் சூழலுக்குள் மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பதே புத்த பெருமானின் முக்கிய செய்தியாகும்.மேலும், ஒரு ஆட்சியாளர் நல்ல ஆட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் பௌத்த தத்துவம் குறிப்பிடுகிறது.

“சப்பங் ரத்தங் சுகங் சேதி – ராஜாசே ஹோதி தம்மிகோ” ஒரு நாட்டின் முதல் குடிமகனாகிய ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று புத்த பெருமான் உபதேசித்துள்ளார்.

புத்தரின் போதனைகளின் பாதையை முன்மாதிரியாகக் கொண்டு,பொதுநலத்தில் சமத்துவம் மற்றும் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கி “வளமான நாடு – அழகான வாழ்க்கை” பற்றிய இந்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக நாம் இன்னும் உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு இந்த புனிதமான வெசாக் தினத்தில் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்

புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிப்பதோடு, அந்தப் போதனைகளை நடைமுறையில் புரிந்துகொண்டு, மெத்தா, கருணா, முதிதா, உபேக்ஷா ஆகிய நான்கு பிரஹ்ம விஹாரணங்களைப் பயன்படுத்தி செயல்படுவதன் மூலம், போரின் தீப்பிழம்புகளிலிருந்து விடுபட்ட அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் அவர் விடுத்துள்ள வாழ்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

https://athavannews.com/2025/1431654

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

496403406_1109008014597503_6478019728626

496408876_1108977844600520_4481208725688

495372072_1109009997930638_5376150010472

495368184_1109007161264255_6374731827944

497374844_1108979384600366_3019787605121

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

495374951_1109708084527496_7056162153186

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2025-05-13-at-16.54.13.jp

இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்!

கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும், ஜனாதிபதி அலுவலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடைபெறும் “வெசாக் பக்திப் பாடல் இசைத்தல் நிகழ்வு “, இரண்டாவது நாளாக நேற்று ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றிருந்தது

வெசாக் பக்திப் பாடல் இசை நிகழ்வின் இரண்டாவது நாளில், இலங்கை விமானப்படை இசைக்குழு, பிரபல பாடகர் இலியாஸ் பேக் மற்றும் இலங்கை விமானப்படை பக்திப் பாடல் குழுவுடன் இணைந்து நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கூடு கண்காட்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கங்காராம விகாராதிபதி கலாநிதி வண.கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

இந்த பக்தி பாடல் நிகழ்வு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறுவதோடு வெசாக் கொண்டாட்டங்களைக் காண கொழும்புக்கு வரும் மக்களுக்காக 16 ஆம் திகதி வரை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சிற்றுண்டி தானசாலை நடைபெறும்.

இதே வேளை ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தன்ஸல், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்று உயர் இராணுவ அதிகாரிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இதுதவிர, கங்காராம “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் மற்றும் “பௌத்தலோக” வெசாக் வலயம் ஆகியவற்றுடன் இணைந்ததாக, ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையுடன் அண்டிய பகுதிகளில் பல வெசாக் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்டியுள்ள கட்டிடங்கள் மற்றும் வீதிகளை மின் விளக்குகளால் அலங்கரித்தல், வெசாக் கூடு கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஜனாதிபதி பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன.

0d7c6e1f-def5-4310-9ffb-f85653a2e4ec-Cop

010c29dc-93e5-4ed1-acc2-6fa2ec9a4f9d-Cop

80d6d6c8-4906-4def-9e89-3285798260d0-Cop

60826b1f-33d4-4013-a0ec-73f4d491a430.jpg

b064a62c-fb17-4e40-aabe-6320c4199dcf-Cop

e10ad74e-0491-4f1e-89b1-5a182d12cf63.jpg

https://athavannews.com/2025/1431795

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2025 at 01:58, தமிழ் சிறி said:

சப்பங் ரத்தங் சுகங் சேதி – ராஜாசே ஹோதி தம்மிகோ” ஒரு நாட்டின் முதல் குடிமகனாகிய ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று புத்த பெருமான் உபதேசித்துள்ளார்.

ஒரு தரம் ஆனையிறவு உப்பளத்துக்கு விஜயம் செய்யுங்கள்.

மலையகத்துக்கு செல்லுங்கள். நாட்டுக்காக உழைப்பவர்கள் படும் துன்பத்தில் பங்கெடுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.