Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

20 MAY, 2025 | 04:55 PM

image

கொழும்பு, ஹேவ்லாக் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் பெண்ணொருவர் ரி - 56 ரக துப்பாக்கியை கொண்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள தனது வீட்டுக்கு பெண்ணொருவர் ரி-56 ரக தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளார்.

இவர் துப்பாக்கியை வாகனத்தில் இருந்து எடுப்பதை அவதானித்த அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளவத்தை பொலிஸார் குறித்த வீட்டை பரிசோதனை செய்து பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது, பை ஒன்றில் இருந்த ரி-56 துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கியை வைத்திருந்த பெண் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பிற நபர்கள் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/215253

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிக்கு... தங்க முலாம் பூசி பாவிப்பதெல்லாம் ஸ்ரீலங்காவில்தான் நடக்கும். 😂

சந்தனம் மிஞ்சினால்.... 🤣

எல்லாம்... வக்கணையாக செய்தும், கடைசியில் சொதப்பி விட்டதே. 😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இரு பெண்கள் கைது

தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இரு பெண்கள் கைது

கொழும்பு, ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகளின் போது, அந்த துப்பாக்கி தங்கமுலாம் பூசப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.

https://thinakkural.lk/article/318237

கொழும்பில் ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி : இரு பெண்கள் கைது

Published By: DIGITAL DESK 3

21 MAY, 2025 | 11:52 AM

image

கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண்ணுடன் தொடர்புடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு, ஹெவ்லொக் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் ரி - 56 ரக துப்பாக்கியை எடுத்துச் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டார்.

ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் ரி - 56 ரக துப்பாக்கியுடன் பெண்ணொருவர் செல்வதற்கு முற்பட்டபோது அவர் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகளால் 119 அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்புக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய வெள்ளவத்தை பொலிஸாரால் நேற்று நண்பகல் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட துப்பாக்கி தங்க மூலாம் பூசப்பட்ட ரி - 56 ரக துப்பாக்கி என்பதுடன் குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வரும் 68 வயதுடைய பெண்ணொருவரால் துப்பாக்கி கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளவத்தை பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ளதுடன், அவர் வசம் இருந்த துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 40 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் இன்று புதன்கிழமை (20) தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 06 மற்றும் பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த இந்த இரு சந்தேக நபர்களும் இன்று (21) கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp_Image_2025-05-21_at_11.47.51_AM

WhatsApp_Image_2025-05-21_at_11.47.51_AM

https://www.virakesari.lk/article/215299

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை வீட்டுத்தொகுதியில் சிக்கிய அதிநவீன ஆயுதம் - விசாரணையில் வெளியான பரபரப்புத் தகவல்கள்

வெள்ளவத்தை - ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிகவும் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சரான இந்த அரசியல்வாதி, 6 மாதங்களுக்கு முன்பு தனது சமையல்காரர் மூலம் ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு இந்த துப்பாக்கியை அனுப்பி, அதை ஒழித்து வைக்குமாறு அறிவுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணிடம் இந்த ஆயுதத்தை கொண்டு வந்து ஒப்படைத்த முன்னாள் அமைச்சரின் சமையல்காரரை கைது செய்வதற்காக நேற்று மாலை ஒரு சிறப்பு பொலிஸ் குழு அவிசாவளை பகுதிக்கு சென்றிருந்தது.

பாதுகாப்பு அதிகாரிகள்

விசாரணைகளில் இந்த முன்னாள் அமைச்சர் ஹெவ்லொக் வீட்டுத்தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது.

வெள்ளவத்தை வீட்டுத்தொகுதியில் சிக்கிய அதிநவீன ஆயுதம் - விசாரணையில் வெளியான பரபரப்புத் தகவல்கள் | T 56 Belongs To A Slfp Former Minister

பையில் T-56 துப்பாக்கி இருப்பது தெரியாமல் ஆயுதம் அடங்கிய பையை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்தப் பை 6 மாதங்களாக அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தது, நேற்று முன்தினம், அந்தப் பெண்ணின் மகன்களில் ஒருவர் அந்தப் பையை சுற்றுலாவிற்கு எடுத்துச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், அந்தப் பெண் பையையும் துப்பாக்கியையும் தனது காரின் பின்புறத்தில் விட்டுச் சென்றிருந்தார்.

இந்த நேரத்தில்தான் வீட்டுத்தொகுதியின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஆயுதத்தை அவதானித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் வெள்ளவத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் வந்து ஆயுதத்தை ஆய்வு செய்தபோது, அது நவீன T-56 துப்பாக்கி என்பது தெரியவந்தது. அதற்கமைய, இந்த ஆயுதத்தை மறைத்து வைத்திருந்த 68 வயதுப் பெண்ணும் மற்றொரு பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பிரபல அரசியல்வாதி

அந்தப் பெண், அந்தப் பையை முன்னாள் அமைச்சரின் சமையல்காரர்களில் ஒருவர் தன்னிடம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளவத்தை வீட்டுத்தொகுதியில் சிக்கிய அதிநவீன ஆயுதம் - விசாரணையில் வெளியான பரபரப்புத் தகவல்கள் | T 56 Belongs To A Slfp Former Minister

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் கைது செய்யப்பட உள்ளார். வடமத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசியல்வாதியின் தந்தையும் ஒரு பலம்வாய்ந்த அரசியல்வாதியாக இருந்தார். தற்போது அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்த ஆயுதம் ஏன் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது, அந்த ஆயுதத்தால் என்ன குற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://tamilwin.com/article/t-56-belongs-to-a-slfp-former-minister-1747880928

  • கருத்துக்கள உறவுகள்

499682121_1117022403796064_9222103347745

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் : முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கைது

23 MAY, 2025 | 10:54 AM

image

வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திம்பிரிகஸ்யாயவில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு - வெள்ளவத்தை ஹவலொக் சிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பில் 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு - வெள்ளவத்தை ஹவலொக் சிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பெண்ணொருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

494356140_721283790580133_23809699514849

https://www.virakesari.lk/article/215474

  • கருத்துக்கள உறவுகள்

499671200_1144932330982957_1637235438585

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் சற்று முதல் கைது!

Vaanam.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

24 MAY, 2025 | 01:40 PM

image

தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/215574

  • கருத்துக்கள உறவுகள்

22-62a02ba81f337.jpg?resize=600%2C375&ss

துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து பொலிஸாரினால் T-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, நீதிமன்ற உத்தரவின்படி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(24) அவர் கல்கிஸ்ஸை பதில் நீதவான் சாந்த குமாரகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டிருந்தபோது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள், துமிந்த திசாநாயக்கவை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திப் பெற்றுக்கொண்ட மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால், அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

https://athavannews.com/2025/1433104

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-331.jpg?resize=750%2C375&ssl

துமிந்த திஸாநாயக்கவுக்கு ஜூன் 5 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளவத்தையில், ஹேவ்லொக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடந்த மே 23 அன்று கைது செய்யப்பட்ட துமிந்த திஸாநாயக்க கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதிவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தார்.

ஹேவ்லொக் டவுனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1433736

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கமுலாம் பூசப்பட்ட ரி - 56 ரக துப்பாக்கி விவகாரம்; சந்தேக நபரான பெண்ணுக்கு பிணை!

17 JUL, 2025 | 02:10 PM

image

தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மஞ்சுல திலகரத்ன இன்று வியாழக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கொழும்பு மேல்நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பெண்ணை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான்   உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து கைதுசெய்ய்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மே மாதம் 23 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (14) கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220219

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம்; வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் துமிந்த திசாநாயக்க

29 JUL, 2025 | 12:12 PM

image

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் வழக்கிலிருந்து விடுதலை செய்து கல்கிஸ்ஸை நீதவான் சத்துரிக்கா டி சில்வா இன்று செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான்  நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கின் சந்தேக நபராக குறிப்பிடப்படும் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மே மாதம் 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/221258

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.