Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_2d09932588.jpg?resize=750%2C375&ss

பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.
அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) உயிழந்துள்ளார்.

ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதுடன் ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433029

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-8.jpeg?resize=750%2C375&ssl=1

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டுவரப்பட்ட மறைந்த மாலினி பொன்சேகாவின் உடல்!

இலங்கை சினிமாவின் ராணியான மறைந்த மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (25) சற்றுமுன்னர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று (25) முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் உடல் வைக்கப்படுவதுடன், நாளை சுதந்திர சதுக்கத்திலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக நோய் நிலையால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை மாலினி பொன்சேகா, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(24)  அதிகாலை காலமானார்.

இந்நிலையில் , மலானி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு நாளை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433118

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

500169706_1119273326904305_8658993372630

499988978_1119272316904406_3710542307464

499960900_1119272646904373_2696348034207

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மாலினி பொன்சேகாவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு நேற்று (25) மாலை சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சக கலைஞர்களுடன் சுமூகமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கை சினிமாவின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் மறைவுக்காக கலைத்துறையில் உள்ள அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள்  பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

image_22de0fd6ca.jpgimage_8a35812276.jpgimage_24eba57b95.jpgimage_66c7c781f0.jpgimage_ef92f2c7db.jpg

https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மாலினி-பொன்சேகாவின்-பூதவுடலுக்கு-ஜனாதிபதி-அஞ்சலி/46-358018

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.