Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screen-Shot-2025-05-24-at-3.45.08-AM.png

ஜேர்மனியின் நான்காவது சாம்ராஜ்ய ஆரம்பம்?

சிவதாசன்

இரண்டாம் உலக யுத்தத்தில் தோல்வியடைந்து ஏறத்தாழச் ‘சிறைப்படுத்தப்பட்டுக் கிடந்த’ இரண்டு நாடுகளான யப்பானுக்கும் ஜேர்மனிக்கும் விடுதலை கிடைத்துவிட்டது. இதில் முரண்நகை என்னவென்றால் இரண்டாம் போரில் இந்நாடுகளைத் தோற்கடித்து சிறைப்படுவதற்குக காரணமான சோவியத் குடியரசின் பதாங்கமான ரஸ்யாவே அவற்றுக்கு இந்த இந்த விடுதலையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஹிட்லரின் விஸ்தரிப்பைத் தடுத்து மேற்கைக் காப்பாற்றுவதற்காக சேர்ச்சில் வைத்த பொறியில் வீழ்ந்த ஸ்டாலின் இதற்காக காவு கொடுத்தது 9 மில்லியன் சோவியத் படைகளையும் 18 -19 மில்லியன் பொதுமக்களையும். மீண்டுமொரு தடவை கோர்பச்சேவ் வடிவத்தில் மேற்கின் பொறியில் சோவியத் வீழ்ந்து தன்னையே சிதலம் செய்து இன்று பலமிழந்த ரஸ்யாவாக மேற்கின் படையெடுப்பை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த தடவை மேற்கின் படையெடுப்பிற்கு தலைமை தாங்குவதன் மூலம் ஜேர்மனி ரஸ்யாவைப் பழிவாங்கப் போகிறதா? பட்சி அப்படித்தான் சொல்கிறது.

ஹிட்லரின் ஜேர்மனியை (ஜனவரி 30, 1933 – மே 8, 1945) ‘மூன்றாம் இராச்சியம்’ (Third Reich) என்பார்கள். முதலாவது ரோம் சாம்ராஜ்யமும் அதற்குப் பின்னர் ஜேர்மன் சாம்ராஜ்யம் இரண்டாவதாகவும் இருந்தன. தற்போது ஜேர்மனியின் அதிபராக வந்துள்ள ஃப்றைடிக் மேர்ஸ் வந்ததும் வராததுமாக உலக நீதிமன்றத்தினால் கைதாணை விடுக்கப்பட்ட இஸ்ரேலின் நெட்டன்யாஹுவைத் தனது விருந்தாளியாக அழைத்து உலக அபிப்பிராயம் எனக்குத் தேவையில்ல்லை என்பதுபோல அவரை உலக நாயகனாக அங்கீகரித்தமை ஹிட்லரின் மீள்வருகைக்குக் கட்டியம் கூறியமை போல இருந்தது. ஜேர்மனி நான்காவது சாம்ராஜ்யமாக உருவாகுவது இவரது காலதில் தான் ஆரம்பமாகும் என்பது எனது கணிப்பு.


லிதுவேனியா முன்பு சோவியத் குடியரசில் இருந்து கோர்பச்சேவ் புண்ணியத்தில் பிரிந்துபோன ரஸ்யாவின் எல்லை நாடு. அதன் சனத் தொகை 2.87 மில்லியன் மட்டுமே. கோர்பச்சேவுடனான ஒப்பந்தத்தின்படி பேர்லினைத் தாண்டி நேட்டோ ஒரு அங்குலமும் நகராது என்ற சத்தியத்தையும் மீறி நேட்டோ இப்போது லிதுவேனியா, ஃபின்லாந்து உட்பட பல ரஸ்ய எல்லை நாடுகளில் நிரந்தரமாகத் தளங்கள் அமைத்து விட்டது. ரஸ்யாவின் கலினின்கிராட் நகரினதும், ரஸ்யாவின் நடு நாடான பெலாறுஸ் நாட்டிநதும் எல்லைகளில் இருக்கிறது லிதுவேனியா. யூக்கிரெய்னிலும் இதே உத்தியை நேட்டோ கையாள முற்பட புட்டின் அதற்கு மறுத்தான் போட்டதன் விளைவே இன்றைய ரஸ்ய – யூக்கிரெய்ன் போர். இப்போரை நிறுத்தி ரஸ்யாவுக்கு ஒரு இடைவேளை வாங்கித்தர ட்றம்ப் முயற்சித்தமை நேட்டோவின் தலைமையை அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியம் பிடுங்கிக்கொள்ள வாய்ப்பாகி விட்டது. அத்தோடு கனடா போன்ற நேட்டோ நாட்டுடனான தீர்வைச் சண்டையும் ஐரோப்பிய தலைமையை ஊக்குவிக்கும் கார்ணியின் தலைமையும் உலகின் அடுத்த அதிகார மையமாக ஐரோப்பாவைவையே முந்தள்ளி விட்டிருக்கிறது. எனவே ரஸ்ய – யூக்கிரெய்ன் போர் விரைவில் உக்கிரமடையும் இதில் நேட்டோ உறுப்பினர் என்ற வகையில் ஜேர்மனி தலைமையை எடுக்கும் என உறுதியாக நம்பலாம். இதற்கு காரணம் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற பலமான நாடுகளை விட ரஸ்ய எல்லைக்கு மிக நெருக்கமான நாடு ஜேர்மனி மட்டுமே என்பது தான்.

இதை உறுதிப்படுவதுபோல், கடந்த வியாழனன்று (மே 22) லிதுவேனியாவில் ஜேர்மனியின் 45 ஆவது கவசப் படையணியை வரவேற்று தலைநகர் வில்னியஸில் லிதுவேனியா கொண்டாடியிருக்கிறது. இது ஒரு நீண்டகால நிலைகொள்ளல் எனவும் ரஸ்யாவிடமிருந்து ஐரோப்பாவையும் நேட்டோவையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. யூக்கிரெய்னை ரஸ்யா வெற்றி கொண்டால் அது அத்தோடு நிற்காமல் மீதமுள்ள சிறிய நாடுகளையும் கபளீகரம் செய்துவிடுமென்ற காரணத்தினால் தான் இந்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.

லிதுவேனியாவை நோக்கிய இந்த ஜேர்மானிய படை நகர்வு இவ்விரு நாடுகளும் தம்மிடையே மேற்கொண்ட இணக்கப்பட்டின் விளைவு இதில் இதர நேட்டோ நாடுகளின் பங்கு என்ன என்பது இன்னமும் தெரியவில்லை என்கிறார்கள்.

இரண்டாம் போரில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டபோது நேச நாடுகளால் அதன் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் முக்கியமானவை மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பலம், உற்பத்தித்துறை ஆகியவையாகும். இருப்பினும் ரஸ்ய – யூக்கிரெய்ன் போர் ஆரம்பித்ததும் (2022) ஜேர்மனியின் இராணுவ விஸ்தரிப்பின் மீதான கட்டுப்பாட்டை நேட்டோ தளர்த்தியிருந்தது. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஃப்றைட்றிக் மேர்ஸ் “ஜேர்மனியின் இராணுவத்தை ஐரோப்பாவின் பலமான இராணுவமாக மாற்றுவேன்” எனச் சபதமெடுத்தது மட்டுமல்லாது அதற்காக மிதமான செலவீனத்தையும் ஒதுக்கியிருக்கிறார்.

லிதுவேனியாவில் தற்போது 500 ஜேர்மன் இராணுவம் நிலைகொண்டுள்ளது. 2027 இல் இதை 5,000 இராணுவத்தினரும் சிவிலியன்களும் சேர்ந்த பலமான படையொன்றாக உருவாக்கவிருப்பதாகவும் கேர்மனி தரப்பில் கூறப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் அமெரிக்க படைகளும் நிலைகொண்டுள்ளனரெனினும் ட்றம்ப் நிர்வாகத்தில் அவர்கள் ஐரோப்பிய சகாக்களிடமிருந்து விலகியே இருப்பதாகவும் இதன் காரணமாகவே லிதுவேனியா ஜேர்மனியின் உதவியை நாடியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

தனது எல்லையில் இருக்கும் லிதுவேனியாவில் நேட்டோ வந்தமர்ந்தபோதோ அல்லது கடந்த சில ஆண்டுகளில் ஃபின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோவில் இணைந்தபோதோ புட்டின் எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்காது யூக்கிரெய்னில் மட்டும் தனது எதிர்ப்பைக் காட்டியதற்கு முக்கிய காரணம் யூக்கிரெய்னில் வாழும் கணிசமான ரஸ்ய மொழி பேசும் மக்கள் மீது யூக்கிரெய்ன் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட வன்முறை எனபதும் கிரீமியா உடபட யூக்கிரெய்னில் அடங்கும் பல பிரதேசங்கள் ஒரு காலத்தில் ரஸ்யாவினால் தானமாக வழங்கப்பட்டமை என்பதுமே காரணம்.

யாவில் ஜேர்மனி படைகள் நிலைகொள்வது விரைவில் நேட்டோ ரரஸ்ஸ்யா மீது பாரிய போரொன்றுக்குத் தயாராகுவதாகவே அவதானிகள் கருதுகின்றனர். பொருளாதாரத் தடகள் மூலம் பலமிழந்திருக்கும் நிலையில் ரஸ்யா நேட்டோவின் உக்கிரமான தாக்குதலை எதிர்கொள்ள இயலாத பட்சத்தில் அது தனது அணுவாயுதங்களைப் பாவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இரண்டாம் உலகப் போரிலும் ஐரோப்பிய நேசநாடுகளுக்கு உதவியாகக் களமிறங்க அமெரிக்கா தயங்கியபோது சேர்ச்சில் தான் தனது தந்திரத்தால் அதைச் சாதித்தார். இப்போது ட்றம்பின் ஆட்சியில் அவர் நடுநிலையாக இருப்பாரானால் ரஸ்யா ஓரளவு தாக்குப் பிடிக்க வாய்ப்புண்டு.

மறுபக்கத்தில் ட்றம்பின் இறக்குமதித் தீர்வை விவகாரத்தால் குழம்பிப்போயிருக்கும் உலக பொருளாதாரம் யப்பான், தென் கொரியா, சீனா போன்ற எதிரி நாடுகளிடையே ஒரு இணக்கப்பாட்டைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

உலக மீளொழுக்கிற்கான காலம் நெருங்கி விட்டது. போரொன்றே அதைச் சாத்தியமாக்கும் போலிருக்கிறது.

https://marumoli.com/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nunavilan said:

இந்த தடவை மேற்கின் படையெடுப்பிற்கு தலைமை தாங்குவதன் மூலம் ஜேர்மனி ரஸ்யாவைப் பழிவாங்கப் போகிறதா? பட்சி அப்படித்தான் சொல்கிறது.

உக்ரேன் போர் ஆரம்பிக்கும் போது யாழ்களத்தில் நான் இந்த கருத்தை தெரிவித்திருந்தேன்.ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் ராட்சியம் மிகப்பெரியது. அடுத்தது நேட்டோவில் முதன்மை வகிக்கப்போகின்றார்கள்.உள ரீதியாக ரஷ்யாவை ஆக்கிரமிக்காமல் விட்டாலும் இவர்களின் செயற்பாடு அதை ஒத்ததாகவே இருக்கின்றது.

தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பது போல....

6 hours ago, nunavilan said:

லிதுவேனியா முன்பு சோவியத் குடியரசில் இருந்து கோர்பச்சேவ் புண்ணியத்தில் பிரிந்துபோன ரஸ்யாவின் எல்லை நாடு. அதன் சனத் தொகை 2.87 மில்லியன் மட்டுமே. கோர்பச்சேவுடனான ஒப்பந்தத்தின்படி பேர்லினைத் தாண்டி நேட்டோ ஒரு அங்குலமும் நகராது என்ற சத்தியத்தையும் மீறி நேட்டோ இப்போது லிதுவேனியா, ஃபின்லாந்து உட்பட பல ரஸ்ய எல்லை நாடுகளில் நிரந்தரமாகத் தளங்கள் அமைத்து விட்டது.

உண்மை நிலவரங்களை இணைத்தமைக்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.