Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 127 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

“யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதி யானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீகாண்பாய்” என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள் கண்ணகி. தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்; மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து [சுழன்று] தன் முலையை வட்டித்து எறிந்தாள் [வட்டித்துவிட்டா ளெறிந்தாள்: இதன் பொருள் "பிரதிக்கினை பண்ணி எறிந்தாள்" என்பதாகும். அதாவது, அவள் ஒரு உறுதிமொழியைச் சொல்லிவிட்டு, அதை நிறைவேற்றும் விதமாக ஏதாவது ஒன்றை எறிந்தாள் என்று அர்த்தம்.].

எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; “இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?” என்று கேட்டு நின்றது.

“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க” என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது. காலப்போக்கில், அவள் பத்தினி தெய்வமாக மாறினாள், மேலும் நோய்களைக் கட்டுப்படுத்துவதாகவும், நாட்டிற்கு செழிப்பை ஏற்படுத்தக் கூடியவள் என்றும் அவளை நம்பினர்.

கண்ணகி வானுலகம் செல்வதற்கு நின்றிருந்த மலை, சேர நாட்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் சேர நாட்டைச் சேரன் - செங்குட்டுவன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனுக்கு மகன் ஆவான்; இளங்கோ அடிகள் என்ற புலவர் பெருமானுக்கு அண்ணன் ஆவன். ஒருமுறை, துயரம் மிகுந்த கண்ணகி வரலாற்றைக் கேட்ட செங்குட்டுவன் பெருமூச்சு விட்டான்; “பொற்கொல்லன் பேச்சைக கேட்டதால் பாண்டியன் செங்கோல் வளைந்தது; ஆயின் அவன் தன் தவற்றை உணர்ந்தவுடனே இறந்ததால் வளைந்த செங்கோல் நிமிர்ந்தது" என்றான். பின்னர் அவன் தன் பட்டதரசியைப் பார்த்து, “நன்னுதால் கணவனுடன் இறந்த கோப்பெருந்தேவி போற்றத்தக்கவளா? தன் கணவன் குற்றவாளி அல்லன் என்பதை உணர்த்திப் பழிக்குப்பழி வாங்கிய கண்ணகி போறறத் தக்கவளா?” என்று கேட்டான். பட்டத்தரசி, ஐயனே, இருவரும் போறறத்தக்கவரே. ஒருத்தி அறக்கற்பு உடையவள்; மற்றவள மறக்கற்பு உடையவள். நாம், நமது நாடு அடைந்து துறக்கம் புகுந்து பத்தினிக் கடவுளைப் பரவுதல் வேண்டும். அவள் தெய்வமாகத் தொழத் தக்க தகுதியுடையவள்,” என்று பதில் அளித்தாள்.

எனவே, உடனே சேரர் பெருமான் பத்தினிக்குரிய கல்லைப் இமயத்திலிருந்து கொணர்ந்து கங்கையில் நீராட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், வட இந்திய மன்னர்களுக்கு எதிராகப் படையெடுத்து வடக்கு நோக்கிச் சென்று, இமயமலையிலிருந்து கற்களை தோற்கடிக்கப்பட்ட மன்னர்களின் தலையில் சுமப்பித்துக் கொண்டு வந்தான். அந்தக் கற்களைக் கொண்டு கண்ணகிக்கு ஒரு பத்தினி கோயில் கட்டினான். இலங்கை மன்னன் கஜபாகுவும் இந்த விழாவில் கலந்து கொண்டான். சேரன் செங்குட்டுவனின் பிறந்த நாளில் தான் நடத்தவிருந்த விழாவிற்கு பத்தினி தேவி வர வேண்டும் என்று அவன் வரம் கேட்டான். உடனே அதற்க்கு செவிசாய்த்து ஒரு குரல் கேட்டது. அந்த பாடல் அல்லது வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

"கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்"

‘தந்தேன் வரம்’ என்று எழுந்த குரலைக் கேட்டு மகிழ்ந்த கஜபாகு, கண்ணகியின் சக்தியை, அவள் பெருமையை நினைவுகூர்ந்து, அவளை கௌரவப் படுத்த தன்னுடைய நாட்டுக்குச்சென்று பத்தினிக்குக் கோட்டம் அமைத்து தானும் அங்கே விழா நடத்தினான் என்பது வரலாறு ஆகும். இதனால் அவனது இராச்சியம் ஒருபோதும் தவறாத மழையும், வளமான பயிர்களுமாக காணப்பட்டது. இந்த பத்தினி வழிபாட்டுப் பண்டிகை 1775ஆம் ஆண்டு வரை சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டதும் ஆகும். இந்த விழா தான் பின்னாளில் 'பெரகரா' ['Perahera'] விழாவாக மாறியது எனலாம்.

Part: 127 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

Kannaki wrenched her left breast, came right round the city three times, and threw it to burn the City of Madurai. She, in due course, became the Goddess Pattini, and believed to have control over disease and could cause prosperity to the country.

The king Kajavahu of Lanka heard of her power, and performed festival on her honour, and his kingdom became blest with never failing rain and abundant crops. This festival became the ‘Perahera’ festival.

The Chera king, Seng Kudduvan, went north on expedition against the north Indian kings, and brought stones from the mount Himalaya on the heads of the defeated kings. He made a temple for Kannaki, Pattini temple, with those stones. The king of Lanka, Kajavahu, too attended this festival. He requested a boon from the Goddess Pattini that she should come to the festival he intended to have on the day of the birthday of Cheran Seng Kudduvan. A voice ‘granted’ was heard. The verses related to this are given below.

"கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்"

The monarch of the world circumambulated the shrine thrice
and stood proffering his respects.
In front of him the Arya kings'’ released from prison,
kings removed from the central jail, the Kongu ruler of the Kudagxi,
the king of Malva and ’Kayavagu (Gajabhau), the king of sea girt Ceylon,
prayed reverentially to the deity thus:
Please grace our countries by your presence
just as have done this auspicious day,
a fete day of Imayavaramban’s sacrifice.
’ Then a voice from the welkin issued forth:
‘I have granted the boon.’

The Perahera festival is the continuation of this worship of the Goddess Pattini till about 1775 A. D.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 128 தொடரும் / Will follow

துளி/DROP: 2082 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127

https://www.facebook.com/groups/978753388866632/posts/34206389789009564/?

  • Replies 150
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் பு

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil &

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.