Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை (warning): ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் நினைவுச்சின்னங்களின் விடுபட்டுள்ள பெயர்களை தெரிவித்துதவுமாறு வாசகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்"


large.arumporul.jpg.263056be8e02d7e56493

'ஆனையிறவில் இடிவாருவக காப்பூர்தி மேல் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் பதாகை'

இதற்குள் தமிழர்களுக்கு சிங்கள மற்றும் முஸ்லிம் இனவெறியர்களால் செய்யப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும் அதற்கு எதிராகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தும் 1948 முதல் 2009 மே மாதம் வரை நிறுவப்பட்ட/கட்டப்பட்ட பல்வகையான நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் தொடர்பான படிமங்கள் பதிவிடப்படும். கீழ்க்கண்ட யாவையும் இதற்குள் அடங்கும்:

  • உருவச்சிலை

  • நினைவுத்தூண்

  • நினைவுக்கல்

  • வெற்றித்தூண்

  • நினைவாலயம்

  • வீரவணக்க நினைவாலயம்

  • மாவீரர் நினைவாலயம்

  • மாவீரர் நிழலுருப்படம்

  • மாவீரர் நினைவு மண்டம்

  • மாவீரர் பொது நினைவாலயம்

  • மாவீரர் துயிலுமில்லம்

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

https://yarl.com/forum3/clubs/10-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88/

Edited by நன்னிச் சோழன்

  • Replies 87
  • Views 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பில் அமைந்திருந்த கல்வெட்டு     நடுவில் உள்ள வட்டத்தினுள் புலிச்சின்னம் இருந்தது.   நடுவில் உள்ள கல்வெட்டின் அண்மைப்பட்ட படிமம்:

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். செல்லக்கிளி எ சந்திரன் எ அம்மானின் நினைவுக்கல் அஞ்சல் நிலையச் சந்தி, திருநெல்வேலி, யாழ்     23 சூலை 2004 அன்று திறந்துவைக்கப்பட்டது.                              

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மாவீரர் பொது நினைவாலயம் யாழ் பல்கலைக்கழகம்   புலிகளின் காலத்திலேயே இது கட்டப்பட்டுவிட்டது.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் துயிலுமில்லம்

முதல் பெட்டியினை மாவீரர்களுக்கு ஒதுக்கியுள்ளேன். இதற்குள் மாவீரர் துயிலுமில்லங்களின் படிமங்கள் உள்ளன. மட்டுமின்றி இந்தியாவில் கட்டப்பட்ட மாவீரர் கல்லறைகளும் இதற்குள் உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இனப்படுகொலை தொடர்பான நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள்

இதற்குள் தமிழீழத்திற்குள்ளும் உலகின் பல்வேறு நாடுகளிலும் 2009இற்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ள இனப்படுகொலை தொடர்பான சிலைகளின் படிமங்கள் உள்ளன. இந்தத் தகவல் இத்திரியோடு தொடர்பில்லையாதலால் வேறொரு திரியில் பதிந்து, அத்திரியின் கொழுவி (link) கீழே தரப்பட்டுள்ளது.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

4வது உலகத் தமிழாராச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலயம்

முற்றவெளி, யாழ்ப்பாணம்

தமிழீழத்தில் ஒரு படுகொலைக்கென்று நாட்டப்பட்ட முதலாவது நினைவுச்சின்னம் இந்த நினைவுத்தூணின் முதல் விருத்தேயாகும் (version). இந்நினைவுத்தூணானது 1974இல் நடந்த 4ஆவது உலகத்தமிழாராச்சி மாநாட்டின் பத்தாவது நாளில் (சனவரி 10) சிங்களவரால் கொல்லப்பட்ட தமிழர் பதினொருவருக்கு கட்டப்பட்டது. இது மொத்தம் நான்கு தடவைகள் சிங்கள இனவெறியர்களாலும் அவர்தம் ஏவலாளித் தமிழர்களாலும் உடைத்தெறியப்பட்டுள்ளது.

கீழ்வரும் தகவல்கள் யாவும் என். செல்வராஜா அவர்களால் எழுதப்பட்ட "நினைவுகளே எங்கள் கேடயம்" என்ற நூலின் 138,139வது பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். படிமங்கள் இந்நூலிருந்தும் வேறிடங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டவையாகும்.

விருத்து 1

இதன் முதல் விருத்தினை 10.1.1975 அன்று மக்களும் அரசியல்கட்சி தொண்டர்களும் கட்டுவித்தனர். இது பதினொரு சிறு தூண்கள் கொண்ட நினைவுத்தூணாகும்.

செதுக்கிய மரக் கட்டைகளை மன்னாரிலிருந்தும் "தமிழர் நினைவு நடுகல்" என எழுதிய நடுகல்லை கொழும்பிலிருந்தும் பைஞ்சுதை, கல், மண் மற்றும் தொண்டர்களை யாழ்ப்பாணத்திலிருந்தும் தருவித்து கட்டினர். 10.1.1975 அதிகாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. பற்சமய வழிபாடும் நடந்தது.

large.nadukal.jpg.f915e55ddfec1806d70a84

large.firstversion.jpg.b462882630e0341f8

அது சில கிழமைகளின் பின்னர் சிங்கள ஆதரவாளர்களால் உடைத்தெறியப்பட்டுவிட்டது.

large.Picture226.jpg.34d5f58688ee73c9d8b


விருத்து 2

பின்னர் மீண்டும் 10.1.1976 காலையில் 11 அடி உயரத்தில் நினைவுத்தூணொன்று எழுப்பப்பட்டது. அதுவும் சிங்கள ஆதரவாளர்களால் உடைத்தெறியப்பட்டுவிட்டது. கட்டும் போதே இதை மேலும் பல அடிக்கு உயர்த்தக்கூடிய வகையிலேயே கட்டியிருந்தனர்.

large.2ndversion.jpg.894d1b6f9be63a1f81e

large.2ndversion.jpg.c77a358a725554ee173

large.SecondVersion.jpg.083797ef702477fc

"தந்தை" செல்வா மலர்வணக்கம் செய்கிறார்


விருத்து 3

பேந்து மூன்றாவது தடவையாக 10.1.1977இல் ஒன்பது நடுத்தர தூண்களும் ஒரு பெரிய தூணும் கொண்ட நினைவுத்தூணொன்று எழுப்பப்பட்டது. இதன் சிறிய தூண்களின் அடிப்பகுதியில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இதற்கு புதிய நினைவு நடுகல்லும் பதிக்கப்பட்டது.

 விருத்து 3இன் தொடக்க வடிவம்:

large.Picture227.jpg.4c2eeff8bc1993d0b08

இதன் பெரிய தூணும் பின்னர் இடிக்கப்பட்டது:

large.Picture230.jpg.344c172a0ff87422231

large.memorial.jpg.14632aa589da0a8c0362a

விருத்து 3.1

பின்னாளில் இடிக்கப்பட்ட நினைவுத்தூண் மீளவும் கட்டப்பட்டது, முன்னரிருந்தது போன்றே.

20774_1109412715820_7786475_n.jpg

விருத்து 3.2

பல ஆண்டுகளின் பின்னர் அந்நினைவுத்தூணானது நினைவாலயமாக மாற்றம் பெற்றது; சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பெயர்ப்பலகையும் நாட்டப்பட்டது. இதுவே இன்று நீங்கள் காணும் விருத்தாகும்.

tamil eelam (1).jpg

'2003'

tt8.jpg

large.sadsa.jpg.950846702606ea4ea75e234f 

IMG-9459.jpg 

tt1.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் நீத்த தியாகி

பொன் சிவகுமாரனிற்கான உருவச்சிலை

தமிழீழ மண்ணில் அமைக்கப்பட்ட இரண்டாவது நினைவுச்சின்னம் இதுவாகும். இது இனத்தின் விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்திய "தனிக்குழு மாவீரர்" பொன் சிவகுமாரனின் நினைவாக அமைக்கப்பட்ட உருவச்சிலையாகும். இது ஆகக்குறைந்தது மொத்தம் 3 தடவைகளானும் சிங்கள இனவெறியர்களாலும் அவர்தம் ஏவலாளித் தமிழர்களாலும் உடைத்தெறியப்பட்டுள்ளது.

இவ்வுருவச்சிலையின் முதல் விருத்தானது சூன் 5, 1975 அன்று "மாமனிதர்" காசி ஆனந்தன் தலைமையில் "சிறை மீண்ட இளைஞன்" தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. உது தொடர்பில் ஒரு நடுகல்லும் அங்கு நாட்டப்பட்டது.

பின்னர் அது உடைத்தெறியப்பட்டது சிங்களவரால்.

large.Picture232.jpg.dd80cbaaa6c5403845e

large.M0EHObnlRjQJK9UPTW87.jpg.ee93011aa

இவ்வாறு பல தடவைகள் செய்யப்பட்டது. பேந்து 1990ம் ஆண்டு சூன் மாதம் ஐந்தாம் திகதி புலிகளால் இவரிற்கு ஒரு சிலை திறந்துவைக்கப்பட்டது.

large.5suun1990sivakumaaran.jpg.dcbdc47d

இவ்வுருவச்சிலையும் புலிகள் யாழை விட்டு பின்வாங்க உடைத்தெறியப்பட்டது.

பேந்து யாழ் பல்கலைக்கழகத்தினுள் இவருக்காக உருவச்சிலையொன்று அமைக்கப்பட்டது, ஜெனீவா உடன்படிக்கை காலத்தில்.

large.88531825_Ponsivakumaransmom.jpg.86

'சிலையிற்கான திறப்பு விழாவில் அன்னாரின் தாயார் குத்துவிளக்கேற்றுகிறார்.'

(இனந்தெரியாக காரணங்களால்) மேம்படுத்தப்பட்ட பின்னர்:

large.1109865075_.jpg.afaafaad91ac4fae5f

போருக்குப் பின்னரும் இவ்வுருவச்சிலை சிங்களவரால் உடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இனிமேல் வருபவை யாவும் காலவொழுங்கில் வராது.

முன்னர் போன்று பெரும் தகவல்களும் இராது. வெறுமனே படிமங்களும் திகதிகளுமே இடம்பெறும்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மே 15, 1985 அன்று குமுதினிப் படகில் படுகொலையானோரின் நினைவுத்தூண்

 நெடுந்தீவு இறங்குதுறை

 

96151893_253481142727622_5200138688788430848_o.jpg

 

109508902_1029766664145254_7484338813192515743_o.jpg

large_scs.jpg.e27c75f1a898e8adbf6903d23d

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மண்டைதீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாலயம்

 

மண்டைதீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுதினம்.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீரமுனைப் படுகொலை நினைவாலயம்

 12/08/1990

இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர்.

இந்த நினைவுத்தூணானது அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு தைக்கிறது என்றும் அதனால் இதனை உடைத்தெறிய வேண்டும் என்று பள்ளிவாசல் ஒன்றில் சிற்றிசன் கொமிற்றி, சமாதான அமைப்பு போன்ற ஒன்று, ஏற்படுத்தப்பட்ட கூட்டத்தில் முஸ்லிம்கள் விடுத்த கோரிக்கையினை தமிழர்கள் புறந்தள்ளினர். தமது தலைமுறைகள் இந்த வரலாற்றை அறியவேண்டும் என்று முஸ்லிம்களிடத்தில் ஆணித்தரமாக கூறி மறுத்தனர்.

முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவான நினைவுச்சின்னங்களில் முஸ்லிம் கடையர்/ஊர்காவல்படையினர் தான் செய்தார்கள் என்று ஏன் எமது இனம் எழுத தயங்குகிறது என்பது எனக்குப் புரியவில்லை!ஆனால் முஸ்லிம்களோ காலத்திற்குக் காலம் இது அது என்று எல்லாவற்றிலும் தவிபு செய்தார்கள் என்று எழுதுகின்றனர்.

Veeramunai Massacre by SLA and Muslim Home Guards memorial

படிமப்புரவு: வீரகேசரி வலைத்தளம்

afad.jpeg

படிமப்புரவு: Arangam

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சவுக்கடி படுகொலை நினைவுத்தூண்

 

 

20.09.1990 திகதி காலை 8.30 மணியளவில் இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர்.

ibc.jpg

படிமப்புரவு: IBC தமிழ்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திருக்கோவில் காஞ்சூரன்குடா படுகொலை நினைவாலயம்

2002/10/09 

 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கோட்டத்திலுள்ள காஞ்சூரன்குடா பகுதியில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அதிரடிப்படையினரால் 7 பாடசாலை இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவ்வேழு இளைஞர்களினதும் சடலங்கள் இவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளன.

Kaanjchuurankudaa.jpg

large.kanjurankudamassacrememorialinnerv

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலை நினைவுத்தூண்

 

1987 அன்று 86 தமிழர்கள் சிங்கள படைவெறியர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

 

1987 kokkattichchoolai 86 tamils were killed by singala state terrorist.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

உருத்திரபுரம் கூழாவடிச்சந்தி படுகொலை நினைவாலயம்
04 பெப்பிரவரி 1991

 

uruththirapuram kuuzhavadi junction massacre.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நவாலிப் படுகொலை நினைவாலயம்

 1995/07/09

IMG_6363.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூண்

 1990-9-9

 

அன்று சிங்களப் படைவெறியர்களாலும் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் சத்துருக்கொண்டானில் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 184 தமிழர்களின் நினைவாக மட்டக்களப்பில் எழுப்பப்பட்ட நினைவுத்தூண்.

  

saththurukkondaan padukolai by - SLA and Muslim home guards - 1990-9-9 - Total tamils killed- 184.. Womes were raped by Singhala army and muslim home gurds.png 

saththurukkondaan.png

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

 

adsa.jpg

படிமப்புரவு: BBC தமிழ்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு. புதுக்குடியிருப்பு படுகொலை நினைவுத்தூண்

 1990/09/21

 

இப்படுகொலையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஈடுபட்டனர்.

Massacre by Muslim home guards - Puthukkudiyiruppu massacre memorial  (1).jpeg

Massacre by Muslim home guards - Puthukkudiyiruppu massacre memorial  (2).jpeg

படிமப்புரவு: maddunews

 

puthukkudiyiruppu massacre.jpg

மேலுள்ள படிமத்தின் வலது கைப் பக்கத்திலுள்ளது போன்றே இடது கைப் பக்கத்திலும் ஒரு சிட்டியின் படிமம் இருந்தது. | படிமப்புரவு: வேசுபுக்கு

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நினைவுத்தூண்

இதுவே வரலாற்றில் மாவீரர்களுக்கென எழுப்பப்பட்ட முதலாவது பொதுவான நினைவுத்தூணாகும்.

 

  • இருந்தவிடம்: பத்திரகாளி கோவிலடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

  • உயரம்: 28 அடி

  • செய்தோர்: திர்சிகா கலைக்கூடம்

  • உதவியோர்: பத்திரகாளி கோவிலடி இளைஞர்கள்

  • எழுப்பப்பட்டது: மாவீரர் வாரம், 1990

  • வடிவ விரிப்பு: உச்சியில் வகை-56 துமுக்கியினையும் அடியில் நான்கு வாசல்களையும் உடைய இதன் தூணின் நான்கு பக்கங்களிலும் ஈழப்போர் தொடர்பான பல காட்சிகள் சட்டப்படங்களாக காட்சிப்பட்டிருந்தன. திராவிடக் கட்டிடக்கலையில் இத்தூண் அமைக்கப்பட்டிருந்தது.

  • அழிக்கப்பட்டது: யாழை 'சூரியகதிர்-1' நடவடிக்கை மூலம் சிங்களவர் கைப்பற்றிய போது

 

Maaveerar Memorial stone - Jaffna 1990.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மேஜர் பிறேமச்சந்திரன் மற்றும் மேஜர் திலீப் ஆகியோருக்கான வீரவணக்க நினைவாலயம்

தலைநகர்

"திருமலை எங்களின் தலைநகர் என்பது எழுதிய விடையமடா! - புலி

பெரும்படை ஆகியே வருமொரு நாளிலே விடுதலையடையுமடா!"

 

388914_131032293671486_845054555_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகளின் நினைவுத்தூண்

தலைநகர்

28/03/2004

 

 

தலைநகரின் தம்பலகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட கரும்புலி மறவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட தூண் இதுவாகும்.

Mini Pongu Tamil -  Mr.Sampanthan paying homage to LTTE Maaveerar Black Tiger Captain Subash at the end of procession.jpg

தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள். இஞ்சால் தெரிவது திருமலை துறைமுகத்தினுள் ஊடுருவித் தாக்கிய கடற்கரும்புலி மேஜர் மதுசாவின் திருவுருவப்படமாகும். 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிலாவெளி நினைவுத்தூண்

கோபாலபுரம் சந்திப்பு, நிலாவெளி, கிண்ணியா, தலைநகர்

 

 

ஜமாலியாவிலிருந்த தேச வஞ்சகர்களான ENDLFஇன் முகாமை அழித்துவிட்டு திரும்பிய போது திருமலைக் கடலில் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் 22 போராளிகள் நீரில் மூழ்கி வீரச்சாவடைந்தனர். அவர்களின் நினைவாய் எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இதுவாகும்.

1990இல் சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்ட இது 2003இல் மீளவும் திறக்கப்பட்டது. எனினும் இதன் முழுப் படம் (நினைவாலயத்துடனான) எனக்கு கிடைக்கப்பெறவில்லை. வெறும் தூணின் படமே கிடைத்துள்ளது.

gopalapuram_ltte_war_memorial_070203.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைநகரின் சம்பூர் பரப்பில் தவிபுவினரால் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீரவணக்க நினைவாலயம்

 

(இதன் பெயர் அறிந்தவர்கள் ஆவணப்படுத்த தெரியப்படுத்துங்கள்)

 

sampoor.jpg 2.jpg

 

sampoor.jpg

 

sampoor g.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் | Monuments and Memorials
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் வீரவணக்க நினைவாலயம்

சம்பூர், திருகோணமலை

திருமலை மாவட்ட கரும்புலிகளுக்கான வீரவணக்க நினைவாலயம் தலைநகர் திருகோணமலையின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு எழிலன் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது (5-6-2006).

 

05_06_07_elilan_140.jpg

 

05_06_07_sampoor கல்லறைமாடம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வவுணதீவு வெற்றி விழாவின் போது

தரவை

06/03/2003

 

 

 

06_03_03 - lt. col. mathana.jpg

'லெப். கேணல் மதனாவின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்யப்படுகிறது. சுற்றிவர பின்னாளில் வஞ்சகம் இழைத்தவர்கள் நிற்கின்றனர்'

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.