Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • யாரோஸ்லாவ் லுகிவ்

  • பிபிசி செய்திகள்

  • 49 நிமிடங்களுக்கு முன்னர்

முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த "மிகவும் ஆத்திரமூட்டும்" கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை "பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த" உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

"முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ நெறிமுறைகளின்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு நிலை நிறுத்தப்படுகின்றன என்பதை அதிபர் டிரம்ப் கூறவில்லை.

யுக்ரேனுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் மெட்வெடேவ் பேசியிருந்தார், அது அமெரிக்காவை அச்சுறுத்தும்விதமாக இருந்தது.

உலகிலேயே அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ரஷ்யாவும் அமெரிக்காவும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும் வைத்துள்ளன.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

வெள்ளிக்கிழமையன்று (2025, ஆகஸ்ட் 1) ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதிய பதிவில், "ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போது ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா அல்லது அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா என்பதை அமெரிக்க அதிபர் கூறவில்லை.

சமூக ஊடகத்தில் இந்த விஷயத்தை பதிவிட்ட சில மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, அது சரியானதாக எங்களுக்குத் தோன்றவில்லை. எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

"ரஷ்யாவின் முன்னாள் அதிபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, நமது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நான் இதைச் செய்கிறேன். நமது மக்களைப் பாதுகாக்க வேண்டும்."

இந்த விவகாரம் குறித்து ரஷ்யா இதுவரை எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் டிரம்பின் அறிக்கைகளைத் தொடர்ந்து அந்நாட்டின் பங்குச் சந்தை கடுமையான சரிவைக் கண்டது.

அமெரிக்காவின் இந்நாள் அதிபரும், ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் அண்மையில் சமூக ஊடகங்களில் பரஸ்பரம் தொடர்ச்சியான தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தற்போதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய காலக்கெடுவை நிர்ணயித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏனெனில், போர் நிறுத்தம் செய்வதற்கான எந்த விதமான முயற்சிகளையும் ரஷ்யா எடுக்கவில்லை.

இதற்கு முன்னதாக, திங்களன்று, டிரம்ப் "10 அல்லது 12" நாள் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தார். ஜூலை மாத தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் புடின் 50 நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை குறிவைத்து கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

டிமிட்ரி மெட்வெடேவ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 2008-12 ஆம் காலகட்டத்தில் ரஷ்யாவின் அதிபராக இருந்த டிமிட்ரி மெட்வெடேவ்

2008 முதல் 2012 வரை ரஷ்யாவின் அதிபராக இருந்த மெட்வெடேவ், இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் "ரஷ்யாவுடன் இறுதி எச்சரிக்கை விளையாட்டை" விளையாடுவதாகக் குற்றம் சாட்டினார்.

எக்ஸ் வலைதளத்தில் மெட்வெடேவ் வெளியிட்ட ஒரு பதிவில், "டிரம்பின் ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல் என்றும், போரை நோக்கிய ஒரு படி முன்னோக்கி செலுத்தும் செயல்" என்று கூறினார்.

ஜூலை மாத தொடக்கத்தில் டிரம்பின் இறுதி எச்சரிக்கையை விமர்சித்த அவர், அது "நாடக ரீதியாக" இருப்பதாகவும், "ரஷ்யா அதைப் பொருட்படுத்தவில்லை" என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து டெலிகிராமில் பதிவிட்ட மெட்வெடேவ், "டெட் ஹேண்ட்" அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தார். இது, குறிப்பாக ரஷ்யாவின் பழிவாங்கும் அணுசக்தி தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்பின் குறியீட்டுப் பெயர் என சில ராணுவ ஆய்வாளர்கள் புரிந்து கொண்டனர்.

மெட்வெடேவின் கருத்துக்களுக்கு டிரம்ப் பதிலளிப்பது இது முதல் முறை அல்ல. அவர் மெட்வெடேவை "ரஷ்யாவின் தோல்வியுற்ற முன்னாள் அதிபர், அவர் இன்னும் தன்னை நாட்டின் அதிபராகவே நினைக்கிறார்" என்று வியாழக்கிழமையன்று (2025 ஜூலை 31) விவரித்தார்.

மெட்வெடேவை "அவரது வார்த்தைகளைக் கவனியுங்கள்" என்றும், "அவர் மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறார்!" என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

2022ஆம் ஆண்டில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை மெட்வெடேவ் ஆதரிக்கிறார், மேலும் மேற்கத்திய நாடுகளை வெளிப்படையாக விமர்சிப்பதற்கும் அவர் தயங்குவதில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c754z1dp09eo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணுசக்தி நீர்மூழ்கி நகர்வு: அமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுத மோதலுக்கு வழிவகுக்குமா? ஓர் அலசல்

அமெரிக்கா - ரஷ்யா, அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், அணு ஆயுத மோதல், டிரம்ப் - புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் புதின்

கட்டுரை தகவல்

  • ஸ்டீவ் ரோசென்பெர்க்

  • ரஷ்ய ஆசிரியர், மாஸ்கோவிலிருந்து

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

சமூக ஊடகத்தில் நிகழ்ந்த ஒரு வாக்குவாதத்தால் அணு ஆயுத மோதல் தூண்டப்படுவது வரலாற்றில் இதுவே முதன்முறையா?

ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவின் சமூக வலைதள பதிவுகளால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவை நோக்கி நகர்த்த உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு ரஷ்யா எப்படி எதிர்வினையாற்றும்? அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான அணு ஆயுத மோதல் உடனடியாக நிகழக் கூடிய ஒன்றாக உள்ளதா? இது, 1962ம் ஆண்டில் நிகழ்ந்த கியூபா ஏவுகணை நெருக்கடியின் இணைய யுக வடிவமாக உள்ளதா?

ரஷ்யாவின் ஆரம்பக்கட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் நான் அவ்வாறு இல்லை என சந்தேகிக்கிறேன்.

டிரம்பின் அறிவிப்பை ரஷ்ய செய்தி ஊடகங்கள் நிராகரித்துள்ளன.

மாஸ்கோவ்ஸ்கி கோம்சோமோலெட்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் ராணுவ ஆய்வாளர் ஒருவர் டிரம்ப் "பிடிவாதம் காட்டுவதாக" கூறுகிறார்.

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கோமெர்சென்ட் (Kommersant) செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து பேசுவது, "அர்த்தமற்ற உளறல். அதன் மூலம் அவர் உற்சாகம் அடைகிறார்." என்றார்.

"டிரம்ப் (நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து) எந்த உத்தரவையும் வழங்கவில்லை என உறுதியாக கூறுகிறேன்," என ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் அதே செய்தித்தாளிடம் கூறினார்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

2017-ம் ஆண்டு, வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பியதாக டிரம்ப் கூறியதையும் அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்பின் சிறிது காலத்திலேயே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் டிரம்ப் சந்திப்பு நடத்தினார்.

நீர்மூழ்கிக் கப்பல்களை நகர்த்துவது குறித்த சமீபத்திய நிகழ்வுகள் அமெரிக்கா-ரஷ்யா உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இருக்குமா?

நான் அவ்வளவு தூரம் செல்ல மாட்டேன்.

ஆனால், ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து வரும் எதிர்வினைகள் சுவாரஸ்யமாக உள்ளது.

ரஷ்ய அதிபர் மாளிகையிடமிருந்தோ அல்லது வெளியுறவு அமைச்சகம் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்தோ இந்த கட்டுரையை எழுதும் வரை எவ்வித கருத்தும் வரவில்லை.

ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்காவுக்கு நெருக்கமாக நிறுத்தப்படுவது குறித்தும் நான் எவ்வித அறிவிப்பையும் பார்க்கவில்லை.

இது, ரஷ்யா இன்னும் இந்த சூழல் குறித்து ஆராய்ந்து வருகிறது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறது என கருதலாம், அல்லது எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கலாம்.

எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என ரஷ்யா நினைப்பதாகவே, முன்பு நான் குறிப்பிட்ட ரஷ்ய ஊடகங்களில் வெளியான எதிர்வினைகள் உணர்த்துகின்றன.

டொனால்ட் டிரம்ப், கிம் ஜாங் உன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் கருத்து மோதல்களுக்குப் பிறகு, கிம் ஜாங் உன்னும் டொனால்ட் டிரம்பும் பலமுறை சந்தித்தனர்.

டிரம்ப் - மெத்வதேவ் கருத்து மோதல்

டிரம்ப் கடந்த சில தினங்களாகவே சமூக ஊடகத்தில் மெத்வதேவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்.

யுக்ரேனுடனான போரை நிறுத்துவதற்கு தான் அளித்த 50 நாட்கள் காலக்கெடுவை டிரம்ப் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களாக மாற்றினார். இதையடுத்து, மெத்வதேவ் தன் சமூக வலைதள பக்கத்தில் "டிரம்ப் ரஷ்யாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து விளையாடுகிறார்… ஒவ்வொரு இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல், போரை நோக்கிய ஒரு நகர்வு" என தெரிவித்திருந்தார்.

டிரம்ப் அதற்கு, "தோல்வியடைந்த, தான் இன்னும் ஆட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவிடம், தன் பேச்சில் கவனமாக இருக்குமாறு கூறுங்கள். அவர் மிகவும் ஆபத்தான பிரதேசத்துக்குள் நுழைகிறார்" என தெரிவித்திருந்தார்.

விளாடிமிர் புதின், டிமிட்ரி மெட்வெடேவ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் (வலது) சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் டொனால்ட் டிரம்புடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்

இதற்கு மெத்வதேவ் தனது அடுத்த பதிவில், சோவியத் ஒன்றியத்தின் தயாரிப்பான தானியங்கி அணு ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பான "டெட் ஹேன்ட்" (Dead Hand) பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

2008 முதல் 2012 வரை ரஷ்ய அதிபராக மெத்வதேவ் இருந்தபோது, அவர் ஒப்பீட்டளவில் ஒரு தாராளவாத ஆளுமையாக பார்க்கப்பட்டார்.

"சுதந்திரம் இல்லாமல் இருப்பதை விட சுதந்திரம் சிறந்தது," என்பது அவருடைய பிரபலமான மேற்கோளாகும்.

ஆனால், நாளடைவில் அவர் ஆக்ரோஷமானவராக மாறிவருகிறார். குறிப்பாக, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்கு பிந்தைய கால கட்டத்தில் அதிரடியான, மேற்கு நாடுகளுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகளுக்காக அவர் அறியப்படுகிறார். ரஷ்ய அதிபர் மாளிகையின் குரலாக பார்க்கப்படாததால், அவரது பல கருத்துகள் கவனிக்கப்படாமல் இருந்தன.

அமெரிக்க அதிபரால் அவருடைய கருத்துகள் திடீரென கவனிக்கப்பட்டன.

கவனிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், டிரம்பின் எரிச்சலுக்கும் அவர் ஆளானார்.

சமூக ஊடக பதிவை ஒருவர் விரும்பாமல் இருப்பது வேறு விஷயம். நாம் எல்லோரும் அதில் இருக்கிறோம்.

ஆனால், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவது வரை செல்வது மிகையான ஒன்றாக உள்ளது.

டிரம்ப் ஏன் அப்படி செய்தார்?

ஆனால், டிரம்ப் ஏன் அவ்வாறு செய்தார்?

நியூஸ்மேக்ஸுக்கு டிரம்ப் இதுகுறித்து தன் விளக்கத்தை அளித்துள்ளார்: அதில், "மெத்வதேவ் அணு ஆயுதங்கள் குறித்து மோசமான சில விஷயங்களை பேசியுள்ளார். அணு ஆயுதம் உச்சபட்ச எச்சரிக்கையாக இருப்பதால், அந்த வார்த்தையை குறிப்பிடும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

ஆனால், சமூக ஊடகம் வாயிலாக அணு ஆயுத போருக்கு அச்சுறுத்துவதாக மெத்வதேவ் மீது நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படுகிறது. இது புதிதல்ல.

மெத்வதேவின் சமீபத்திய பதிவுகளை மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு டிரம்ப் எதிர்வினையாற்றியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

இதுவொரு வியூகமாகவும் இருக்கலாம். டிரம்பின் வணிகத்திலும் அரசியலிலும் அவர் காரியமாற்றும் விதத்தில், கணிக்க முடியாத தன்மை உள்ளது; பேச்சுவார்த்தைக்கு முன் அல்லது பேச்சுவார்த்தையின் போது போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளின் சமநிலையை குலைக்கக் கூடிய எதிர்பாராத முடிவுகளை எடுப்பது அவருடைய வியூகமாக உள்ளது.

யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது என்கிறது அவரது உறுதிமொழி ஓர் உதாரணமாகும்.

நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வு, இதன்கீழ் வரலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx294j42rd2o

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ட்ரம்பின் தவறான மற்றுமொரு அணுகுமுறை, எதிராளியின் மீதான தனது பிடியினை இழப்பதற்கு ஒப்பான செயல், உக்கிரேன் முன்னால் அதிபரும் தற்போத அவசரகால அதிபருமான செலன்ஸ்கியினை வெள்ளை மாளிகையில் வைத்து அவமானப்படுத்தியது போன்றதல்ல இந்த நடவடிக்கை, இரஸ்சியாவுடன் மறைமுகமான போரில் ஈடுபட்டிருக்கும் மேற்கு மற்றும் அமெரிக்காவிற்கு இரஸ்சியாவின் மீது இந்த அச்சுறுத்தல் எந்த புதிய அழுத்தத்தினையும் ஏற்படுத்த போவதில்லை.

மாறாக இரஸ்சியாவிற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடை, இராணுவ ரீதியான எதிர் நடவடிக்கைகளினால் இரஸ்சியாவினை விட குறித்த நாடுகளே அதிகளவில் பாதிப்பினை எதிர்கொள்ளுகின்றன, மீண்டும் அதிகரித்த பொருளாதார தடை இராணுவ அச்சுறுத்தல் என பிழைத்துப்போன நகர்வுகளை தொடர்ந்தும் தொடர்ந்தால் எந்த பிரஜோசனமும் இல்லை மாறாக அமைதிக்கான நடைமுறையான சாத்தியமான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.