Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப்  பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன்  வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு தொடுவாய் மனிதப் புதை குழி விவகாரம்; 45 வகையான சான்று பொருட்களை அடையாளம் காண உதவும் சட்டத்தரணி தற்பரன்

10 AUG, 2025 | 03:35 PM

image

முல்லைத்தீவு  மாவட்ட கொக்குத் தொடுவாய் மனித புதகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப்  பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வழக்கு இல: AR/804/23  முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனித புதைகுழி குறித்த விசாரணை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடத்தப்பட்டு வருகின்றது.

முதற்கட்ட தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த புதைகுழி 1994-1996 காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என  கூறுகிறது.

காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு அங்கமாகும்.

 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தல், நிருவகித்தல் மற்றும் கருமங்களை ஆற்றுதல்) சட்டத்தின் பிரிவு 12 (ஆ) இன் கீழ், OMP அதன் கடப்பாடுகளின்படி, மனிதப் புதைகுழி மீதான விசாரணையைக் கண்காணித்து வருகிறது.

புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்குத் துணைபுரியுமாறு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் முல்லைத்தீவு நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்கள் இருக்கலாம் என்பதை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நம்புகிறது. 

புதைகுழி அகழ்வின் போது  கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பில்  பொதுமக்கள் தகவல்களையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்த கொள்ள முடியும்.

எண்.3174 உள்ளாடைகள் எண்.3104 காற்சட்டை,1564 உள்ளாடை ,1018 உள்ளாடைகள் ,எண் 1204 கால்சட்டை X76  உள்ளாடை ,த.வி.பு.இ.1333 நாய் களுத்துப்பட்டி ,10546 முழு நீளக்காற் சட்டை, எண் 10555 உள்ளாடை ,எண் 1781 உள்ளாடை ,எண்.302 பிரேசியர் ,த.வி. பு .இ.1302, எண் 1124 உள்ளாடைகள் , எண்1124 காற்சட்டை மற்றும் உள்ளாடை ,எண் 777 உள்ளாடை ,எண்499 உள்ளாடைகள் , எண் 0043-நாய் களுத்துப்பட்டி ,குருதி O+, எண்306 உள்ளாடை ,உ101 77 ,X95 உள்ளாடை, இ 474 காற்சட்டை, இ 701 உள்ளாடைகள் ,இ225 உள்ளாடைகள், த.வி.பு.இ.225 ,இ 458 உள்ளாடைகள் ,ஈ 17 உள்ளாடை ,இ 453  மேற் சட்டைஎ 1778 பிராசியர்,எண் 760 உள்ளாடைகள், எ 599 உலோக வளையல். உ599 பிராசியர், எண்1907 ரீசேட், எண் 7907 பிராசியர்,த.வி.பு .ஒ நாய் கழுத்துப் பட்டி, எண் 3504 3503 உள்ளாடை , எண்  3471  மேற் சட்டை மற்றும் ஓ 3035 காற்சட்டை என்பனவற்றை அடையாளப்படுத்த உதவவும்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி சான்று பொருட்களை இனம்  கானும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களிகளிடமிருந்து புதைகுழியில் உள்ள எச்சங்கள் குறித்த சாத்தியமான அடையாளங்கள், அவற்றின் அம்சங்கள், உடைகள், முந்தைய காலங்கள் ஏற்பட்டிருந்த காயங்கள் போன்றவற்றை விவரிக்க முடியும்.

வழங்கும்  தகவலின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பயிற்சி பெற்ற அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களைக் கொண்ட சாத்தியமான உறவினர்கள், சாத்தியமான சாட்சிகள் தொடர்பில்  நேர்காணல் செய்வார்கள். 

அலுவலக சட்டத்தின் கீழ், இரகசியத்தன்மையை உறுதி செய்வதற்கும் (பிரிவு 12 (இ) (V)) சாட்சி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் (பிரிவு 13(1) (எ) மற்றும் 18) OMP கடமைப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல்கள் மூலம் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய  சாத்தியக்கூறுகள் குறித்தும் OMP அறிந்திருக்கிறது. இதனால் உளவியல் ரீதியான சேவைகளும் வழங்கப்படும்.

இது தொடர்பான தகவல்களை இலக்கம்  40 மூன்றாம் மாடி புத்கமுவ வீதி ராஜகிரிய, இல 54 தர்மாராம வீதி கோட்டை மாத்தறை, துணை அலுவலகம் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு, கோட்டை வீதி பழைய மாவட்ட செயலக கட்டிடம் மட்டக்களப்பு, மூன்றாம் மாடி புதிய கட்டிடம் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம், மாவட்ட செயலகம் மன்னர், A9 வீதி நீதிமன்றம் அருகாமை கிளிநொச்சி 

ஆகிய  அலுவலகங்களில்  05.08.2025 ஆந் திகதி முதல் 04.09.2025 ஆந் திகதி வரையில் வருகை தந்து தகவல்களை வழங்குமாறு அல்லது ராஜகிரிய 0112861431, மாத்த்றை 0412244684, முல்லைத்தீவு 0212286030, மட்டக்களப்பு 0652222229 , யாழ்ப்பாணம் 0212219400 மற்றும் மன்னார் 0232223929 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தகவல்களை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/222246

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் அடையாளம் காணப்பட்டனவா?

30 Aug, 2025 | 03:54 PM

image

துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மூடப்பட்ட, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழியான கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

மீட்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண்பதற்கான பத்திரிகை விளம்பரத்தை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) வெளியிட்டு மூன்று வாரங்கள் ஆவதாக, வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரண வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார். 

எனினும், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வந்ததாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என சட்டத்தரணி மேலும் தெரிவிக்கின்றார். 

"நபர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன. இதற்கு கால அவகாசம் போதுமானதல்ல என்பதால் OMP அலுவலகம் இன்று நீதிமன்றத்தில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக எங்களுக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை." 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால், அச்சமின்றி முன்வருமாறு அழைப்பு விடுத்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அவ்வாறு முன்வருபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் வலியுறுத்தினார்.

ஓகஸ்ட் 3ஆம் திகதி OMP அலுவலகம் பத்திரிகையில் வெளியிட்ட விளம்பரம் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா? என, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், பத்திரிகை விளம்பரம் உடனடியாக மக்களைச் சென்றடையவில்லை என சுட்டிக்காட்டினார். 

"இது மக்களைச் சென்றடைந்ததா என்பதை மக்களிடம் கேட்டுதான் அறிய முடியும். ஏனெனில் பத்திரிகை விளம்பரங்கள் உடனடியாக மக்களைச் சென்றடைவதில்லை."

தாம் பட்டியலிட்டுள்ள பிற பொருட்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள், 2025 செப்டம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாக தமது பிரதான காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களுக்கு வருமாறு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஓகஸ்ட் 3, 2025 அன்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.  

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 30 மனித எலும்புகளுடன் தொடர்புடைய பிற பொருட்களின் பட்டியல் விளம்பரத்தில் வெளியிடப்பட்டது.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 90களின் நடுப்பகுதியில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் 2024 மார்ச் மாதம் கையளித்த இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார்.

தடவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழு, மார்ச் 22, 2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் 1994 மற்றும் 1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை எனவும், சடலங்கள் முறையாக புதைக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொண்டிருந்ததாகவும் அறிக்கையின் அனுமானம் வெளியிடப்பட்டிருந்தது. 

ஜூலை 15, 2024 அன்று அகழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 52 உடல்களில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவவின் தனது அறிக்கையில் அனுமானம் வெளியிட்டிருந்தார்.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் வெளிப்பட்டன.

https://www.virakesari.lk/article/223783

  • மோகன் changed the title to கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப்  பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன்  வேண்டுகோள்
https://yarl.com/forum3/topic/304435-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%C2%A0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%C2%A0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.