Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன?

தியான்ஜின் நகரில் மாநாடு நடைபெறும் அரங்கு

பட மூலாதாரம், Getty Images

28 நிமிடங்களுக்கு முன்னர்

நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு முந்தைய மாநாடுகளைவிட அதிக பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும்.

சீனாவின் வடக்கு கடலோர நகரமான தியான்ஜினில் செப்டம்பர் 31 முதல் செப்டம்பர் 1 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டை நடத்தும்.

23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடக்கும் பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இது எஸ்சிஓவின் வரலாற்றில் 'இதுவரை இல்லாத மிகப்பெரிய' உச்சி மாநாடு என்று விவரிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஓ உச்சி மாநாட்டை சீனா நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். சீனா கடைசியாக 2018 ஜூன் மாதம் கிங்தாவில் இந்த நிகழ்வை நடத்தியது.

எஸ்சிஓ உச்சி மாநாடு "இந்த ஆண்டு சீனாவில் நடைபெறும் மிக முக்கியமான தேச தலைவர்கள் சந்திப்பு மற்றும் தூதரக நிகழ்வுகளில் ஒன்று", என சீனா கூறியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் அரசு தலைவர்கள் கவுன்சிலின் 25-வது கூட்டம் மற்றும் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் உரையாற்றுவார். எஸ்சிஓ விரிவாக்கப்பட்ட வடிவத்தில் இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது.


ஷி ஜின்பிங் என்ன கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது?

"ஷாங்காய் உணர்வை முன்னெடுப்பதற்கும், காலத்தின் பணியை ஏற்பதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் எஸ்சிஓ-விற்கான சீனாவின் புதிய தொலைநோக்கையும், முன்மொழிவுகளையும் ஷி ஜின்பிங் விரிவாக எடுத்துரைப்பார்", என ஆகஸ்ட் 22 அன்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் "எஸ்சிஓ-வின் உயர்தர வளர்ச்சி மற்றும் முழுமையான ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் அறிவிப்பார்" மற்றும் "இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்கவும், உலகளாவிய ஆளுகை முறையை மேம்படுத்தவும் எஸ்சிஓ-விற்கு புதிய வழிகளையும் முறைகளையும் முன்மொழிவார்".

எஸ்சிஓ உறுப்பு நாடுகள் இணைந்து தியான்ஜின் பிரகடனத்தை வெளியிடுவார்கள், அடுத்த பத்தாண்டு எஸ்சிஓ வளர்ச்சி உத்தியை அங்கீகரிப்பார்கள், மற்றும் "உலக பாசிச எதிர்ப்பு போரின்" 80-வது வெற்றி ஆண்டு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 80-வது நிறுவன ஆண்டு நினைவு அறிக்கைகளை வெளியிடுவார்கள். பாதுகாப்பு, பொருளாதாரம், மக்கள் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஆவணங்களின் தொகுப்பு வெளியிடப்படும்.

ஷாங்காயைச் சேர்ந்த ஜீஃபாங் டெய்லி, ஆகஸ்ட் 26 அன்று வெளியிட்ட செய்தியில், 10 ஆண்டு வளர்ச்சி உத்தி "இந்த உச்சி மாநாட்டில் வெளியிடப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டது. இது எஸ்சிஓ-வின் "முன்னுரிமை ஒத்துழைப்பு திசையை" நிறுவும், இது அமைப்பின் "நிலையான வளர்ச்சி" மற்றும் "சுய கட்டமைப்புக்கு" முக்கியமானது எனக் கூறியது.

யார் கலந்துகொள்கிறார்கள்?

எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்கவுள்ள தலைவர்கள்

பட மூலாதாரம், Xinhua News Agency

படக்குறிப்பு, இந்த முறை எஸ்சிஓ மாநாட்டில் முன்பெப்போதையும் விட அதிக நாடுகள் பங்கேற்கும்

2001-இல் சீனா, ரஷ்யா, கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட எஸ்சிஓ, இப்போது 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. 2017 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டன, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரானும் பெலாரஸும் இணைந்தன.

10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள், பார்வையாளராக மங்கோலியாவும், அமைப்பின் 14 பேச்சுவார்த்தைகளின் கூட்டாளிகளில் எட்டு நாடுகளான அஜர்பைஜான், ஆர்மீனியா, கம்போடியா, மாலத்தீவுகள், நேபாளம், துருக்கி, எகிப்து மற்றும் மியான்மரும் பங்கேற்கும்.

தென்கிழக்கு ஆசியாவுக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்படும், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகியவையும் நட்பு நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன. இவர்கள் துர்க்மெனிஸ்தானுடன் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

2024 இல், விருந்தினர் நாடான துர்க்மெனிஸ்தான், பேச்சுவார்த்தை கூட்டாளிகளான அஜர்பைஜான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியுடன் இணைந்து, கசாக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் முதல் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் பங்கேற்றது.

உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பு விருந்து அளிப்பார், மேலும் சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உச்சி மாநாட்டின் ஒரு அங்கமாக எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த அமைப்பில் சீனாவுக்கு இணையான மிக முக்கியமான நாடுகளின் தலைவர்களான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான ஷி ஜின்பிங்கின் சந்திப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

புதின் கடைசியாக 2024 மே மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், கடந்த ஓராண்டில் இரு நாடுகள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோதி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சீனாவுக்கு செல்கிறார்.

ஆகஸ்ட் 28 அன்றைய ஊடக அறிக்கைகளின்படி, எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 22 வெளிநாட்டுத் தலைவர்களில் 18 பேர் செப்டம்பர் 3 அன்று பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள்.

சீனா வழங்கிய பங்கேற்பாளர்களின் பட்டியலின் அடிப்படையில் பார்க்கையில், 2021 ஆகஸ்டில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் உயர்மட்ட பிரதிநிதியை அனுப்பாத ஆப்கானிஸ்தான், இம்முறையும் கலந்துகொள்ளவில்லை.

ஆப்கானிஸ்தான் 2012 இல் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது, ஜூலையில் ரஷ்யாவிடமிருந்து தூதரக அங்கீகாரம் பெற்றது, மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு, வெளியுறவு அமைச்சர் வாங் யி காபூலுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார். நட்பு அணுகுமுறைகள் இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தான் இல்லாதது, தாலிபானின் பங்கேற்பு குறித்து எஸ்சிஓவுக்குள் இன்னும் எதிர்ப்பு குரல்கள் இருப்பதைக் குறிக்கிறது.

ஆகஸ்ட் 28 வெளியான ஊடக செய்திகளின்படி, எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 22 வெளிநாட்டுத் தலைவர்களில் 18 பேர், செப்டம்பர் 3 அன்று பெய்ஜிங்கில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள்.

ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, சீன ஊடகங்கள் இப்போது "உலக மக்கள்தொகையின் கிட்டத்தட்ட பாதியையும், உலக நிலப்பரப்பின் கால் பகுதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது", என எஸ்சிஓ அமைப்பின் வளர்ச்சியைப் புகழ்ந்தன.

2024 இல் சீனாவின் மற்ற எஸ்சிஓ உறுப்பு நாடுகளுடனான வர்த்தகம் 512.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்து, "புதிய உச்சத்தை" எட்டியது என வணிக அமைச்சகம் ஆகஸ்ட் 27 அன்று தெரிவித்தது.

அரசு நடத்தும் நாளிதழான குளோபல் டைம்ஸ், சீன சமூக அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளரை மேற்கோள் காட்டி, எஸ்சிஓ-வின் உலக பொருளாதாரம் மற்றும் அரசியலில் வலுவான செல்வாக்கு "பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும்" எனக் கூறியது.

"எஸ்சிஓ புதிய வகை சர்வதேச உறவுகளுக்கும், பிராந்திய ஒத்துழைப்புக்கும் முன்மாதிரியாக உள்ளது, மேலும் குறிப்பிடத்தக்க சர்வதேச செல்வாக்குடன் உருவாக்கும் சக்தியாக விளங்குகிறது," என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி, ஆகஸ்ட் 23 அன்று ஒரு கருத்துரையில் தெரிவித்தது.

எஸ்சிஓ "வரலாற்றின் சரியான பக்கத்தில்" மற்றும் "நீதியும் நியாயமும் உள்ள பக்கத்தில்" நிற்கிறது, என்று அது மேலும் தெரிவித்தது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் அமைப்பின் ஒருங்கிணைந்த குரல், "உலக ஆளுகையை மிகவும் நியாயமான மற்றும் பகுத்தறிவான திசையில் முன்னெடுக்கும், உலக தெற்கை ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கு பகிர்ந்த எதிர்காலத்த்தை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு வழிநடத்தும்". என்றும் அது கூறியது.

பல கட்டுரைகள், அமைப்பினுள் ஒத்துழைப்பை நெறிப்படுத்தும்,"பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனை, பல்வேறு நாகரிகங்களுக்கு மரியாதை, மற்றும் பொது வளர்ச்சிக்காக உழைப்பது" ஆகிய கொள்கைகளை கொண்ட "ஷாங்காய் உணர்வு" பற்றி குறிப்பிட்டன.

"காலம் மாறும்போது, இதன் சமகால மதிப்பு மேலும் தெளிவாகிறது, தற்போதைய உலக ஆளுகை இக்கட்டைத் தீர்க்கவும், சர்வதேச வேறுபாடுகளை களையவும், மனிதகுலத்திற்கு பகிர்ந்த எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு சித்தாந்த உத்வேகத்தை வழங்குகிறது," என்று சின்ஹுவா ஆகஸ்ட் 23 அன்று தெரிவித்தது.

எஸ்சிஓ-வில் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு பொறுப்பான தூதர் ஃபான் சியான்ரோங், "சாங்காய் உணர்வு" எஸ்சிஓ-வின் "வேர் மற்றும் ஆன்மா" என்று விவரித்தார். இது "நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான எஸ்சிஓ நாடுகளின் தேவைகளை முழுமையாக எதிரொலிக்கிறது" மற்றும் "பனிப்போர் மனநிலை, நாகரிகங்களின் மோதல் போன்ற காலாவதியான கருத்துக்களை கடந்து நிற்கிறது" என்று சின்ஹுவா அறிவித்தது.

அமைப்பின் உலகளாவிய செல்வாக்கு மற்றும் ஈர்ப்பு குறித்த பேச்சுகளுக்கு அப்பால், இணைப்பு, பெரிய தரவு, ஆற்றல் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றில் அமைப்பினுள் ஒத்துழைப்பு சாதனைகளை ஊடகங்கள் எடுத்துக்காட்டின. 2025-ஐ "எஸ்சிஓ நிலையான வளர்ச்சி ஆண்டு" என்று அவர்கள் குறிப்பிட்டனர், மேலும் நிலையான வளர்ச்சிக்கு தேவையான "பரஸ்பர சாதக அம்சங்கள்" மற்றும் "பெரும் திறன்" உள்ளதாக சுட்டிக்காட்டினர்.

இந்தக் கருப்பொருளுக்கு ஏற்ப, எண்ணெய், வாயு, உற்பத்தி, பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் எஸ்சிஓ கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த முயற்சிகள் "தொழில்துறை மாற்றத்தை ஊக்குவித்து, எஸ்சிஓ உறுப்பினர்களிடையே தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலி உறவுகளை மேலும் நெருக்கமாக்கும்" என்று வணிகத் துணை அமைச்சர் லிங் ஜி-யை மேற்கோள் காட்டி சின்ஹுவா தெரிவித்தது.

சீனாவின் கவனம் எஸ்சிஓ-வா அல்லது பிரிக்ஸா?

மத்திய ஆசியா பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு நடைமுறையாக தொடங்கிய எஸ்சிஓ, இப்போது மூன்று கண்டங்களில் உள்ள நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது.

இந்த விரிவாக்கம், உலக தெற்கின் தேவைகளை பூர்த்தி செய்வது, "உண்மையான பன்முகவாதத்தை" பாதுகாப்பது மற்றும் "ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு" ஆகிய வாதங்கள், இந்த அமைப்பை சீனா தலைமையிலான மற்றொரு சர்வதேச அமைப்பான பிரிக்ஸைப் போல விரைவாக மாற்றுகிறது.

26 எஸ்சிஓ உறுப்பினர்கள், கூட்டாளிகள் மற்றும் பார்வையாளர் நாடுகளில் 9 நாடுகள் பிரிக்ஸிலும் தொடர்புடையவர்கள். இது 10 உறுப்பினர்களையும் 10 பேச்சுவார்த்தை கூட்டாளிகளையும் கொண்டுள்ளது, சமீப ஆண்டுகளில் உலக தெற்கு நாடுகளை ஈர்க்க விரிவாக்கப்பட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரிக்ஸ் அமைப்பின் செல்வாக்கு மற்றும் ஒற்றுமை குறைந்திருக்கலாம் என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஜூலையில் பிரேசிலில் நடைபெற்ற "பலவீனமடைந்த" பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் லி கியாங் கலந்துகொண்டதால், ஷி ஜின்பிங் பிரிக்ஸ்-க்கு பெரிதாக முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

ஷி ஜின்பிங் அதிபராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு எஸ்சிஓ உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார், மேலும் "சீனா எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான தூதரக உறவுகளில் எஸ்சிஓ-விற்கு முன்னுரிமை அளித்து வருகிறது" என்றும், இந்த அமைப்பை "மேலும் உறுதியானதாகவும் வலிமையானதாகவும்" மாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

பெய்ஜிங் உண்மையிலேயே எஸ்சிஓ-விற்கு முன்னுரிமை அளிக்கிறதா என்பது இன்னும் தெளிவாக வேண்டும், ஆனால் தற்போதைக்கு, இந்த இரு அமைப்புகளும் பாதுகாப்புவாதத்திற்கு எதிர்ப்பு, ஒருதலைபட்சம், "ஆதிக்கம்" மற்றும் "அடக்குமுறை" ஆகியவற்றை நிராகரித்தல், உலக தெற்கிற்கு ஆதரவாகவும், மிகவும் நியாயமான சர்வதேச ஒழுங்கிற்காகவும் நிற்பது போன்ற செய்திகளை முன்னெடுக்க ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

எஸ்சிஓ-வில் அதிக உறுப்பினர்களையும் கூட்டாளிகளையும் சேர்ப்பது, மிக முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அமைப்பை பயனற்றதாக ஆக்கலாமா, மற்றும் "சில நாடுகள் தன்னிச்சையாக கூடுதல் வரிகளை விதிக்கும்" "உலகளாவிய கொந்தளிப்புக்கு" மத்தியில் இது ஒற்றுமையின் தோற்றமாக மாறலாமா என்பது வழக்கம்போல, ஊடக செய்திகளில் குறிப்பிடப்படவைல்லை.

"எஸ்சிஓ தனது கதவுகளைத் தொடர்ந்து திறந்து வைத்து, ஷாங்காய் உணர்வை ஏற்கும் நாடுகளை பெரிய எஸ்சிஓ குடும்பத்தில் இணைய வரவேற்கும்," என சின்ஹுவாவுடனான நேர்காணலில், தூதர் ஃபான் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93dr9qy6nwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஸ்சிஓ உச்சி மாநாட்டுக்காக ஒன்று கூடிய தலைவர்கள் - 10 புகைப்படங்கள்

சீன அதிபர் ஷி ஜின்பிங் நடத்திய இரவு விருந்துக்கு முன்னதாக ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள்.

பட மூலாதாரம், Mehmet Ali Ozcan /Anadolu via Getty Images

படக்குறிப்பு,சீன அதிபர் ஷி ஜின்பிங் நடத்திய இரவு விருந்துக்கு முன்னதாக ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டத்தில் யூரேசியா பிராந்தியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு கால்வான் மோதலுக்குப் பிறகு, 7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இதற்கு முன்னர், 2018ஆம் ஆண்டு மோதி சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்தார்.

தியான்ஜினில் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்ட சிவப்புக்கம்பள வரவேற்பு

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, தியான்ஜினில் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்ட சிவப்புக்கம்பள வரவேற்பு

எஸ்.சி.ஓ. மாநாட்டுக்கு வந்த தலைவர்களை வரவேற்கும் விதமாக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகள்

பட மூலாதாரம், Mehmet Ali Ozcan /Anadolu via Getty Images

படக்குறிப்பு, எஸ்.சி.ஓ. மாநாட்டுக்கு வந்த தலைவர்களை வரவேற்கும் விதமாக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகள்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வரவேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அருகில் சீன அதிபரின் மனைவி பெங் லியுவான் இருக்கிறார்.  Russia's President Vladimir Putin, Chinese President Xi Jinping and his wife Peng Liyuan attend a welcoming ceremony

பட மூலாதாரம், Photo by SERGEI BOBYLYOV/POOL/AFP via Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வரவேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அருகில் சீன அதிபரின் மனைவி பெங் லியுவான் இருக்கிறார்.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் உரையாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி  Belarus' President Alexander Lukashenko and India's Prime Minister Narendra Modi interact during a family photo of the Shanghai Cooperation Organization

பட மூலாதாரம், Photo by ALEXANDER KAZAKOV/POOL/AFP via Getty Images

படக்குறிப்பு, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் உரையாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

மியான்மர் குடியரசின் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி  India's Prime Minister Narendra Modi (R) meets Min Aung Hlaing, Senior General of the Republic of the Union of Myanmar (L)

பட மூலாதாரம், Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு, மியான்மர் குடியரசின் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

மாநாட்டு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பேச்சுக்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம் 'Xi Jinping: The Governance of China'

பட மூலாதாரம், Qilai Shen/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, மாநாட்டு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பேச்சுக்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம் 'Xi Jinping: The Governance of China'

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறும் இடத்தின் முகப்புக்காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள தியான்ஜின் ரயில் நிலையம்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக மின்னொளியில் ஜொலிக்கும் தியான்ஜின் நகரம்

பட மூலாதாரம், Photo by Ma Di/VCG via Getty Images

படக்குறிப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக மின்னொளியில் ஜொலிக்கும் தியான்ஜின் நகரம்

மாநாடு நடைபெறும் அரங்கத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாநாடு நடைபெறும் அரங்கத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8x50vp5j1ro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.