Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 Sep, 2025 | 04:43 PM

image

திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடாத்துவது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இச்சத்தியக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் இதுவரை தீர்வு வழங்கவில்லை. இது போன்று சம்பூரிலும் காணிகளை அபகரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

IMG-20250922-WA0047.jpg

IMG-20250922-WA0046.jpg

IMG-20250922-WA0045.jpg

https://www.virakesari.lk/article/225771

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்து நகர் காணி அபகரிப்பு: எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதி

Published By: Vishnu

25 Sep, 2025 | 10:31 PM

image

(செ.சுபதர்ஷனி)

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.

புதன்கிழமை அன்று சுமார் 12 மணித்தியாலங்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள் அன்றைய தினம் இரவு பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுமார் 800 ஏக்கர் விவசாய காணி சூரிய மின்சக்தி திட்டத்துக்காக அரசாங்கத்தால் இந்திய தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விளை நிலங்களை தமக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் புதன்கிழமை (24) முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10.30 மணியளவில் ஒன்று கூடிய ஆர்பாட்டக்காரர்கள் அன்றைய தினம் இரவு வரை உரிமைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்களை அழைத்து கலந்துறையாடியிருந்ததுடன், விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்துள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

போராட்டத்துக்காக 2 பேருந்துகளில் பொதுமக்கள் வருகைத் தந்திருந்ததுடன், சுமார் 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் அம்மக்கள் முத்து நகர் நோக்கி பயணமானார்கள். விவசாயிகளிடமிருந்த காணியை அரசாங்கம் பறித்து வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய காணியை அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளதோடு மாற்றுக் காணிகளை வழங்காது விவசாயத்துக்கு பயண்படுத்தப்பட்ட குளங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முத்துநகர் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/226089

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்து நகர் விவசாயிகள் 14ஆவது நாளாக தொடரும் போராட்டம்

30 Sep, 2025 | 06:03 PM

image

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தருமாறு கோரி 14ஆவது நாளாகவும் இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சத்யாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“பொய் வேண்டாம்”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “விவசாயிகளை இப்படியா நடத்துவது”, “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு” மற்றும் “அரசே எங்களுக்கு சோறு போடும் நிலத்தை மீட்டுத் தா” போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில், 

352 விவசாயிகளின் காணிகளை சூரையாடியுள்ளனர். அவற்றைப் பெற தொடர்ச்சியாக 14 நாட்களை தாண்டியும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இது தொடர்பில் எங்களுக்காக அரச தரப்பில் இருந்தோ அரசியல்வாதிகளோ குரல் கொடுக்க முன்வரவில்லை. பிரதமர் பத்து நாட்களுக்குள் முடிவு தருவதாக கூறியுள்ளார். அந்த நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் என்றார்கள்.

IMG-20250930-WA0035.jpg

IMG-20250930-WA0038.jpg

https://www.virakesari.lk/article/226517

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் 26 ஆவது நாளாக தொடர் போராட்டம்

12 Oct, 2025 | 04:45 PM

image

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12) 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

அகில இலங்கை விவசாய சம்மேளனம்,மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகேவும் விசேடமாக குறித்த விவசாயிகளுக்காக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்றும் அவர்கள் இவ் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

பிரதமரினால் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட தீர்வுக்காக இன்னும் 08 நாட்களே உள்ளனவு எனவும் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே வேலை முத்து நகர் பகுதியில் சூரிய மின்சாரத்துக்கு அபகரிக்கப்பட்ட காணியை விடுத்து அண்மையில் உள்ள காணிக்குள் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 09 விவசாயிகளை சீனக்குடா பொலிஸார் நேற்று (11) மாலை கைது செய்துள்ளனர். இதனால் இம் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் தொடர்ந்தும் போராட்டங்களுடனேயை செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் தங்களது காணியை பெற்றுத்தரக்கோரிய போராட்டங்களை நடாத்திய போதிலும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸாரினால் இதற்கு முன்னர் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் சுமார் 14 நாட்கள் அடைக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட செயலத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது முன்னுக்கு பின்னுக்கு முரணான கருச்தாக சூரிய மின் சக்திக்காக தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை விடுவிப்பதா இல்லையா தொடர்பான கருத்துக்களையே ஆளும் தரப்பு எம்.பிக்கள் கூறுவருவதாகவும் தெரிவிக்கின்றனர். சுமார் 800 ஏக்கரில் தற்போது வரைக்கும் 200 ஏக்கரளவில் சூரிய மின் சக்தி திட்டத்துக்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அப் பகுதியில் உள்ள இரு குளங்களை மூடி இதனை முன்னெடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20251012-WA0102.jpg

IMG-20251012-WA0103.jpg

https://www.virakesari.lk/article/227548

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் 38ஆவது நாளாக கனமழையிலும் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்

Published By: Digital Desk 1

24 Oct, 2025 | 02:14 PM

image

திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் கனமழையிலும் இன்று (24) 38ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த விவசாயிகள் தங்களது விவசாய நிலம், சூரியமின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதையடுத்து, அதனை மீள பெற்றுத்தரக்கோரி சத்தியாக் கிரகப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இதுதொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில்,

மழை காலங்களில் நனைந்து போராடுவதை நடப்பு கால அரசாங்கம் ரசிக்கிறதா? எங்களுக்கான தீர்வை இப்படி தான் தருவோம் என்பதை எழுத்து மூலமாக அறிவித்தால் என்ன. இதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவ்வளவு அதிகாரிகளுக்குள்ளும் சொல்லப்படும் விடயங்கள் சாத்தியமில்லை.அரசாங்கத்தை நம்பியே இங்கு மழையில் நனைந்து தீர்வு கேட்கிறோம். 

எமது கஷ்டத்தை உணருங்கள் ஜனாதிபதி கூறுகிறார்"ஓடும் ரயிலில் அதே நிலையில் கைக்குழந்தையுடன் பெற்றோர்கள் வறுமையில் வாடுகின்றனர். அரசியலுக்காக அல்ல விவசாய பட்டியலை உரிய திணைக்களத்தில் பெற்று தீர்வினை பெற்றுத்தருவீர்கள் என காத்திருக்கிறோம் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

IMG-20251024-WA0009.jpg

IMG-20251024-WA0012.jpg

IMG-20251024-WA0015.jpg

IMG-20251024-WA0016.jpg

https://www.virakesari.lk/article/228557

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.