Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

10 Oct, 2025 | 03:49 PM

image

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாகி சந்தித்துள்ளார்.

அமீர் கான் முத்தாகி ஒரு வார கால உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றடைந்துள்ளார். இந்தியாவில் 16 ஆம் திகதி வரை தங்கி இருப்பார்.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு செல்வது இதுவே முதல் தடவை ஆகும்.

டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தையை அவர் ஆரம்பித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆப்கன் அமைச்சர் முத்தாகி இன்று வெள்ளிக்கிழமை (10) கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இதில் உரையாற்றிய ஜெய்சங்கர்,

ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

எங்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு உங்கள் தேசிய வளர்ச்சிக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது.

அதை மேம்படுத்துவதற்காக, காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்ப பணியகத்தை இந்திய தூதரக அந்தஸ்துக்கு மேம்படுத்துவதை இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நீடித்த நட்பை உறுதிப்படுத்துவதிலும், நமது உறவுகளை முன்னேற்றுவதிலும் உங்கள் வருகை ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.

கடந்த மாதம் ஆப்கனில் பூகம்பம் ஏற்பட்ட க சில மணி நேரங்களுக்குள் போது இந்தியா நிவாரணப் பொருட்கள் பூகம்பம் ஏற்பட்ட இடங்களுக்கு வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம்.

இரு நாடுகளும் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலால் நமது வளர்ச்சி ஆபத்தில் உள்ளது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்த உங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எங்களுடன் நீங்கள் காட்டிய ஒற்றுமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் சுரங்க வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்களுக்கு நீங்கள் விடுத்த அழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் நாம் விவாதிப்போம். மேலும் காபூலுக்கும் புது டெல்லிக்கும் இடையே கூடுதல் விமானங்கள் தொடங்கப்பட்டதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/227425

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - ஆப்கானிஸ்தானின் நெருக்கத்தால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு என்ன?

ஆப்கானிஸ்தான், இந்தியா, தாலிபன், பாகிஸ்தான், சீனா, ஜெய்சங்கர், அமீர் கான் முத்தக்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

கட்டுரை தகவல்

  • அன்ஷுல் சிங்

  • பிபிசி நிருபர்

  • 11 அக்டோபர் 2025, 08:56 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நாட்டுடன் சீனா தனது தொடர்புகளை அதிகப்படுத்த தொடங்கியது. தற்போது இந்தியாவும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தாலிபனுடனான தொடர்புகளை இந்தியா அதிகரித்து வருகிறது, ஆனால் முதல் முறையாக தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி டெல்லிக்கு வந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் முத்தக்கியும் உள்ளார்.

வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனான உயர்மட்ட கூட்டத்தில் முத்தக்கி கலந்து கொண்டார்.

அதே நேரத்தில் காபூலில் உள்ள இந்தியாவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மிஷனை தூதரகமாக மாற்றுவதாக ஜெய்சங்கர் அறிவித்தார். 2021 ஆகஸ்டில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு காபூலில் இருந்த தூதரகத்தை மூடியது இந்தியா.

தற்போது வரை இந்தியாவும் மற்ற நாடுகளைப் போல தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ரஷ்யா மட்டுமே தாலிபன்களை அங்கீகரித்துள்ள ஒரே நாடாக உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளை "பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வலிமையை நோக்கியது" என ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை "நெருங்கிய நண்பர்" என அழைத்துள்ள முத்தக்கி இந்திய நிறுவனங்களை ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் பரஸ்பர நலன்கள்

1990களில் தாலிபன்கள் முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தபோது இந்தியா அவர்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.

ஆனால் 2021-இல் தாலிபன் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து ஆப்கானிஸ்தானின் நிலைமை முற்றிலுமாக மாறிய பிறகு இந்தியா நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு அளவான தொடர்பை மேற்கொண்டது. இன்று இந்தியா மற்றும் தாலிபன் நலன்கள் இணையும் பல்வேறு இடங்கள் உள்ளன.

இரு தரப்பும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் குறியாக இருப்பதாக இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களுடைய கூட்டறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, பிராந்தியம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்லாமிய அரசு கோரசான் (ISIS-K) அமைப்பை தாலிபன்கள் கருதுகின்றனர். பல்வேறு சர்வதேச மன்றங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா குரல் கொடுத்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தப்படாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய விரும்புகிறது. இதற்கிடையில், தாலிபன்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த ஐஎஸ்ஐஎஸ்-கே போன்ற அமைப்புகளை பலவீனப்படுத்த விரும்புகின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் ஓய்வு பெற்ற பேராசிரியரும் தலைவருமான அனுராதா சினோய், முத்தக்கியின் வருகையை இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளின் எதிர்காலத்திற்கு நேர்மறையான நகர்வாகப் பார்க்கிறார்.

பிபிசியிடம் ஹிந்தியிடம் பேசுகையில், "அமீர் கான் முத்தக்கியை வரவேற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நல்ல நகர்வை மேற்கொண்டுள்ளதாக நினைக்கிறேன். தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லையென்றால் இந்தப் பிராந்தியத்தில் (தெற்கு ஆசியா) நிலையற்றத்தன்மை அதிகரிக்கும், ஏனென்றால் பக்ரம் விமானப்படை தளத்தை திருப்பி எடுத்துக் கொள்ளப்போவதாக டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானும் இந்தியாவை ஆதரித்தது. எனவே இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பின் நலன்களும் உள்ளன." என்று தெரிவித்தார் அனுராதா சினோய்.

ஆப்கானிஸ்தான், இந்தியா, தாலிபன், பாகிஸ்தான், சீனா, ஜெய்சங்கர், அமீர் கான் முத்தக்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021-இல் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை தாலிபன் கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ளார் அதன் வெளியுறவு அமைச்சர்.

இருப்பினும், இந்தியாவிற்கும் தாலிபன்களுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதில் ஆப்கானிஸ்தானில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். தனது அதிருப்தியை எக்ஸ் ஊடகத்தில் பதிவு செய்த ஆப்கானிய பத்திரிகையாளர் ஹபீப் கான், "ஆப்கானிஸ்தான் குடிமகனாக, இந்தியாவை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் இந்தியா இங்கு நிறைய பணிகளைச் செய்துள்ளது. சல்மா அணை, பாராளுமன்றம் மற்றும் சாலைகளை இந்தியா கட்டியது. ஆனால், தாலிபன்களுடனான உறவை இயல்பாக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் எனக்கு ஏமாற்றம் அளிக்கின்றன. தாலிபன்கள் எங்கள் நாட்டை சட்டவிரோதமாக கைப்பற்றி ஆட்சி செய்துவருகின்றனர். அவர்கள் அதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு பதிவில், இந்தியர்கள் பாகிஸ்தானை வெறுக்கிறார்கள், ஆனால் இந்தியர்களைவிட ஆப்கானியர்கள் அதிகமாக பாகிஸ்தானை வெறுக்கிறார்கள். பாகிஸ்தானின் பினாமியாக செயல்பட்ட தாலிபன்கள், தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, பெண்களின் கல்வியைத் தடை செய்தவர்கள். தாலிபனை நண்பனாக இந்தியா நினைப்பது தவறான புரிதலைக் கொடுக்கிறது, இது வரலாற்றில் இந்தியாவை தவறான பக்கத்தில் நிறுத்துகிறது," என்று ஹபீப் கான் என்று தெரிவித்துள்ளார்.

தாலிபன்கள் நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வருகின்றனர். உலகளாவிய நிலையற்றத்தன்மையால் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பொருளாதார சவால்களைச் சந்தித்து வருகிறது.

2021-க்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அணைகள், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் போன்ற திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. அந்த கட்டமைப்புகளை பராமரிக்க தாலிபானுக்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுகிறது.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான 'ஆழமான கலாசார உறவுகள்' அதிகார மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று முன்னாள் இந்திய தூதர் அனில் திரிகுணாயத் நம்புகிறார்.

"இந்தியாவிற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. தாலிபனைச் சேர்ந்தவர்களும் இந்தியாவின் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் மாறியிருக்கலாம், ஆனால் பொது மக்களிடையே இந்தியா-ஆப்கானிஸ்தான் பிணைப்பு எப்போதும் வலுவாகவே இருந்து வருகிறது, இதுவே இந்தியாவின் உண்மையான பலம்" என்று அனில் திரிகுணாயத் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தற்போது தாலிபன்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளதாக அந்தப் பேட்டியில் குறிப்பிடும் அணில், "இந்தியாவின் முக்கியமான கவலை தாலிபன்கள் அல்ல, பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்கள் தான். அவர்கள் தரப்பிலிருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்கிற தெளிவான உத்திரவாதத்தை தாலிபன் அரசு வழங்கியுள்ளது. முன்பு இது போன்றதோரு சூழ்நிலை இல்லை. ஆனால் இப்போது அவர்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. புல்வாமா தாக்குதலையும் அவர்கள் கண்டித்துள்ளனர், மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்."

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) ஆப்கானிஸ்தானில் தனது எல்லையை விரிவுபடுத்துகிறது. சீனா அல்லது பாகிஸ்தானின் ஆதிக்கத்திற்குள் ஆப்கானிஸ்தான் முழுமையாக சென்றுவிடுவதை இந்தியா விரும்பவில்லை.

தாலிபன்களும், ஒரு நாட்டைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரிப்பதை விரும்பவில்லை, எனவே அதுவும் இந்தியா போன்ற மாற்று நட்பு நாடுகளைத் தேடுகிறது.

ஆப்கானிஸ்தான், இந்தியா, தாலிபன், பாகிஸ்தான், சீனா, ஜெய்சங்கர், அமீர் கான் முத்தக்கி

பட மூலாதாரம், Getty Images

'பாகிஸ்தானுக்கு அடி'

இந்தப் பயணம் 'பாகிஸ்தானுக்கு அடி' மற்றும் தாலிபன் அரசை மறைமுகமாக அங்கீகரிப்பதை நோக்கிய முக்கியமான படி என்று உத்தி சார்ந்த விவகாரங்கள் வல்லுநரான பிரம்மா செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"இது இந்தியா-தாலிபன் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக உள்ளது. இதில் ஒவ்வொரு தரப்பும் தங்களின் உத்தி சார்ந்த நலன்களை மேம்படுத்த நடைமுறை ஒத்துழைப்பை வலியுறுத்துகின்றன." என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணம் ஆப்கானிஸ்தானில் பிராந்திய அதிகார சமநிலையில் சாத்தியமான மாற்றத்தை குறிப்பதாகவும் செலானி தெரிவிக்கிறார்.

இந்தப் பயணம், இந்தியா-பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்-தாலிபன் இடையேயான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது.

பிபிசி ஹிந்தி நிகழ்வில் பேசிய அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஹர்ஷ் வி.பந்த், "பாகிஸ்தானுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள சரிவு, தாலிபன்களுக்கு தங்கள் விருப்பங்களைத் திறந்து வைத்துள்ளது. அவர்கள் இனிமேலும் பாகிஸ்தானைச் சார்ந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பாகிஸ்தானை அதிகமாகச் சார்ந்திருப்பதிலிருந்து விடுபட்டு, ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது" என்று அவர் கூறினார்.

தாலிபன்கள் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் "உத்தி சார்ந்த கூட்டாளிகள்" எனக் கருதப்பட்டனர், ஆனால் சமீப ஆண்டுங்களில் இரு தரப்புக்கும் இடைய உறவு இறுக்கமாகிவிட்டது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கு தாலிபன்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தெற்கு ஆசிய விவகாரங்களைக் கவனித்து வரும் வல்லுநர் மைக்கேல் கூகல்மேன் முத்தக்கியின் பயணத்தை இந்தியாவிற்கான வாய்ப்பாகப் பார்க்கிறார்.

"இந்தியா-தாலிபன் உறவுகள் சுமூகமாகி வருவது இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் நடைமுறை சார்ந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட அணுகுமுறை இருப்பதை பிரதிபலிக்கிறது. இது ஆப்கானிஸ்தானில் தனது நலன்களை மேலும் சிறப்பாக முன்னிறுத்த இந்தியாவை அனுமதிக்கிறது. பாகிஸ்தான் மற்றும் தாலிபன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை ராஜாங்க ரீதியாக பயன்படுத்திக் கொள்ளவும் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கிறது." என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார் மைக்கேல் கூகல்மேன்.

ஆப்கானிஸ்தான், இந்தியா, தாலிபன், பாகிஸ்தான், சீனா, ஜெய்சங்கர், அமீர் கான் முத்தக்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போது வரை ரஷ்யா மட்டுமே தாலிபனை அங்கீகரித்துள்ளது.

சவால்கள் என்ன?

சமீப ஆண்டுகளில் இந்தியா நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு தாலிபன் அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது, ஆனால் இந்த உறவுகளை வலுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

இந்தியாவிற்கு அரசியல், பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சர்வதேச அளவில் பிரச்னைகள் உருவாக்கக்கூடிய பல பெரிய சவால்கள் உள்ளன.

இந்தியா தற்போது வரை தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இந்தியா பேச்சுவார்த்தையை தொடர விரும்புகிறது. ஆனால் சர்வதேச அரங்கில் அதன் பிம்பம் பாதிக்கப்படாமல் இருக்க அங்கீகாரம் வழங்குவதை தவிர்த்து வருகிறது.

தாலிபன் ஆட்சியின் கீழ் மனித உரிமைகள், பெண்களின் கல்வி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் என்பது கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பெண்களின் உரிமைகளை மதிப்பதாகக் கூறும் தாலிபன் அரசு, அது ஆப்கன் கலாசாரம் மற்றும் இஸ்லாமிய சட்டம் பற்றிய தனது சொந்த புரிதலுக்கு உட்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கிறது.

மேற்கத்திய நாடுகளும் தாலிபன் அரசை எச்சரிக்கையுடனே பார்க்கின்றன. தாலிபன் உடன் இந்தியா மிகவும் நெருக்கமானால் சர்வதேச விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

தாலிபன்களை இந்தியா உடனடியாக அங்கீகரிக்காது எனக் கூறும் அனுராதா சினோய் பேச்சுவார்த்தைகளை நிறுத்த முடியாது என்கிறார்.

மேலும் அவர், "பெண்களின் உரிமைகளை தாலிபன்கள் மொத்தமாக பறித்துவிட்டார்கள் என்பது உண்மை தான். மேற்குலக நாடுகள் தொடர்ந்து தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன, ஆனால் அழுத்தம் கொடுப்பதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது என இந்தியாவிற்கு தெரியும். பெண்களின் சுதந்திரம் தொடர்பான கேள்விகளும் தற்போதும் உள்ளன. இந்த விவகாரங்கள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கப்பட முடியும் என்பது தெளிவாகிறது." என்றார்.

தி இந்து நாளிதழின் ராஜாங்க விவகாரங்களுக்கான ஆசிரியர் சுஹாசினி ஹைதர் தனது எக்ஸ் பதிவில், "தற்போது உள்ள மிகப்பெரிய கேள்வி, காபூலில் இந்தியா தூதரகத்தை திறந்தால், இந்தியாவிற்கு தாலிபன்கள் நியமித்த தூதரை அழைக்குமா? என்பது தான். ஆப்கன் குடியரசு கொடி இருந்த இடத்தில் தாலிபன்களின் கொடி பறக்குமா? தூதரக்த்தில் தாலிபன் அதிகாரிகள் வேலை செய்வார்களா? ரஷ்யாவைப் போல இந்தியாவும் தாலிபன் அரசை அங்கீகரிக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq5j5d4j19vo

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா….. ஆப்கானிஸ்தானை,

பாகிஸ்தானுடன் சண்டை பிடிக்கச் சொல்லி,

கொம்பு சீவி விடுகின்றார்கள் போலுள்ளது. 😂

ட்றம்புக்கு…. நோபல் பரிசு கொடுக்காத படியால்,

எக்கேடு ஆவது கெட்டுப் போங்கோ என்று….

அவரும் சமாதானம் பேச வர மாட்டார். 🤣

நமக்கென்ன…. இவங்கள் சண்டை பிடிக்கிறதை வேடிக்கை பார்ப்போம். 😁😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது…. பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது சர்ச்சை ஆகி உள்ளது.

இந்தியாவில் “தலிபான் விதிமுறைகளை” வகுக்க, பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை திணிக்க… ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று பெண்ணியவாதிகளும், சமூக செயல்பாட்டாளர்களும் அரசை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

பிற்குறிப்பு: தலிபான் அமைச்சருக்கு, வெளிநாட்டுக்குப் போனாலும்…. பெண்களை கண்டால் “அலர்ஜி” போலுள்ளது. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாலிபன் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு இல்லை - இந்திய அரசு கூறியது என்ன?

தாலிபன் வெளியுறவு அமைச்சர், டெல்லி, இருதரப்பு பேச்சுவார்த்தை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தாலிபன் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு, பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு, பத்திரிகையாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

11 அக்டோபர் 2025

புது தில்லியில் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி வெள்ளிக்கிழமையன்று (10 அக்டோபர் 2025) நடத்திய செய்தியாளர் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வியாழக்கிழமை இந்தியா வந்த முத்தக்கி, வெள்ளிக்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஆப்கன் அரசை சேர்ந்தவர்களுடன் இந்தியாவில் நடைபெற்ற முதல் உயர்மட்ட சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை புதுதில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்றது. இதில் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பலர் பதிவிட்டுள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுத் தொடர்பு இயக்குநர் ஹபீஸ் ஜியா அகமது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானை நிர்வகித்துவரும் தாலிபன் அரசாங்கம் மீது, மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்களின் கல்வி மீதான கட்டுப்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளது. பெண்களுக்கு கல்வி மற்றும் உரிமைகளை கொடுப்பது இஸ்லாமியத்திற்கு எதிரானது என தாலிபன்கள் கருதுகின்றனர்.

தாலிபன் வெளியுறவு அமைச்சர், டெல்லி, இருதரப்பு பேச்சுவார்த்தை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தாலிபன் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு, பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு, பத்திரிகையாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் இல்லாதது குறித்து இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி ப. சிதம்பரம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டப் பதிவில், "தாலிபன்களுடன் இணைந்து நாம் செயல்படவேண்டிய புவிசார் அரசியல் நிர்பந்தங்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் பாரபட்சமான மற்றும் பழமையான பழக்கவழக்கங்களை நாமும் ஏற்றுக்கொள்வது முற்றிலும் அபத்தமானது. தாலிபன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொள்ளாவிடாமல் பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது" என்று எழுதியுள்ளார். தனது பதிவில், கார்த்தி சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் டேக் செய்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "பெண் பத்திரிகையாளர்களை செய்தியாளர் சந்திப்பில் இருந்து விலக்கும் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் முத்தக்கியின் முடிவை நம் அரசாங்கம் எப்படி அனுமதித்தது? இந்திய மண்ணில்,அவர்கள் விருப்பப்படி நடக்க எப்படி அனுமதிக்கலாம்? இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு எப்படி ஒப்புக்கொண்டார்? இந்த செய்தியாளர் சந்திப்பில் முதுகெலும்பில்லாத நமது ஆண் பத்திரிகையாளர்கள் எப்படி கலந்துக் கொண்டார்கள்?" என்று எழுதியுள்ளார்.

இந்நிலையில், "ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை" என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாலிபன் வெளியுறவு அமைச்சர், டெல்லி, இருதரப்பு பேச்சுவார்த்தை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தாலிபன் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு, பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு, பத்திரிகையாளர்கள்

பட மூலாதாரம், @HafizZiaAhmad

படக்குறிப்பு, ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு

பெண் பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?

இதை, "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறும் பல பெண் பத்திரிகையாளர்கள், செய்தியாளர் சந்திப்பில் பாலின பாகுபாடு என்பது, நமது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்று கூறுகின்றனர்.

தாலிபன்கள் இந்தியாவில் பெண்களைப் புறக்கணிக்க முடியும் என்றால், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் குறித்த அவர்களின் சிந்தனையை தெள்ளத்தெளிவாக புரிந்துக் கொள்ளமுடியும் என்றும் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

வெளியுறவு விவகாரம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் பிரபலமான பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா சமூக ஊடக வலைத்தளமான X-இல், முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு எந்தப் பெண் பத்திரிகையாளரும் அழைக்கப்படவில்லை என்று பதிவிட்டார்.

"வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முத்தக்கிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண்களின் மோசமான நிலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை."

"பெண்களின் சாதனைகள் மற்றும் தலைமைத்துவத்தில் பெருமை கொள்ளும் ஒரு நாட்டில், நாட்டின் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, முத்தக்கிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதான் இன்றைய உலகளாவிய அரசியல்..."

ஸ்மிதா சர்மாவின் பதிவை மறுபதிவு செய்து பதிவிட்ட பத்திரிகையாளர் நிருபமா சுப்பிரமணியன், "சக பெண் ஊழியர்களைப் பிரித்துப் பார்ப்பது குறித்து ஆண்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார் .

ஆப்கானிஸ்தான், இந்தியா, தாலிபன், பாகிஸ்தான், சீனா, ஜெய்சங்கர், அமீர் கான் முத்தக்கி, தாலிபன் வெளியுறவு அமைச்சர், டெல்லி, இருதரப்பு பேச்சுவார்த்தை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தாலிபன் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு, பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு, பத்திரிகையாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

'பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களைச் சேர்க்க முயற்சித்தேன்'

"ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி, புதுதில்லி ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, இந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளர் கூட அனுமதிக்கப்படவில்லை. தூதரக வாயிலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் இந்தப் பிரச்னையை நான் எழுப்பினேன், ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை" என்று NDTV இன் மூத்த நிர்வாக ஆசிரியர் ஆதித்ய ராஜ் கெளல் பதிவிட்டுள்ளார்.

"பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று முயற்சித்த பத்திரிகையாளர்கள் இருவரில் ஆதித்ய ராஜ் கெளலும் ஒருவர். பெண்களை ஏன் அனுமதிக்க முடியாது என்று அவர் கேள்வி கேட்டார்! ஆடைக் குறியீட்டை மதித்து, அனைத்து பெண் பத்திரிகையாளர்களும் தங்களை முழுமையாக மூடிக்கொண்ட போதிலும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தாலிபன்களிடம் எதுவும் எடுபடவில்லை!" என்று கெளலுக்கு ஆதரவாக சுயாதீன பத்திரிகையாளர் அர்பண் எழுதினார்.

ஸ்மிதா சர்மாவின் பதிவை மறுபதிவு செய்த தி இந்து செய்தித்தாளின் ராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், "அதிகாரப்பூர்வ நெறிமுறைகளுடன் இந்திய அரசாங்கம் தாலிபன் தூதுக்குழுவை வரவேற்கிறது. இதிலும் மேலும் அபத்தமானது என்னவென்றால், பெண்களுக்கு எதிரான அவர்களின் வெறுக்கத்தக்க மற்றும் சட்டவிரோத பாகுபாட்டை இந்தியாவிற்கு கொண்டு வர தாலிபன் வெளியுறவு அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று எழுதினார்.

"ஆப்கானிஸ்தான் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை, இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது," என்று பத்திரிகையாளர் கீதா மோகன் எழுதினார்.

ஆப்கானிஸ்தான், இந்தியா, தாலிபன், பாகிஸ்தான், சீனா, ஜெய்சங்கர், அமீர் கான் முத்தக்கி, தாலிபன் வெளியுறவு அமைச்சர், டெல்லி, இருதரப்பு பேச்சுவார்த்தை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தாலிபன் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு, பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு, பத்திரிகையாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

"நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு செய்தி நிறுவனமாக, பெண் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு நாம் செய்தி சேகரிக்க செல்லக் கூடாது. டெல்லியில் தாலிபன் வெளியுறவு அமைச்சரின் கூட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடவோ ஒளிபரப்பவோ கூடாது" என்று இந்து குழுவின் இயக்குனர் மாலினி பார்த்தசாரதி கூறினார் .

"என் கருத்துப்படி, அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்," என்று தி இந்துவின் துணை ஆசிரியர் விஜேதா சிங் எழுதினார் .

"காட்டுமிராண்டித்தனமான தாலிபன்களை நம் நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் முதலில் இந்திய மண்ணை அவமதித்தீர்கள், பின்னர் கற்காலத்திலிருந்தே இந்தியாவில் நடைமுறையில் உள்ள பெண்களுக்கு எதிரான பாலின-பாகுபாடு சட்டங்களை அவர்கள் செயல்படுத்த மகிழ்ச்சியுடன் அனுமதிக்கிறீர்கள். இது நம்பமுடியாதது! செய்தியாளர் சந்திப்புகளில் பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்வதைத் தடுப்பதற்குப் பதிலாக, பாலின சமத்துவம் குறித்த பாடங்களை நீங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். நமது ஜனநாயக விழுமியங்களுக்காக எழுந்து நிற்க உங்களுக்கு தைரியம் இல்லையா?" என கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்வாதி சதுர்வேதி எழுதியுள்ளார்.

வரலாற்றாசிரியர் ருச்சிகா சர்மா இவ்வாறு கேள்வி கேட்கிறார்: "இது ஆப்கானிஸ்தான் அல்ல, இந்தியா! இந்திய மண்ணில் தாலிபன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள பெண்களை அனுமதிக்காததற்கு அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்? இந்திய அரசாங்கத்திற்கு என்ன ஆயிற்று?"

தாலிபன்கள் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு

2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய தாலிபான்கள் நாட்டை நிர்வகித்து வருகின்றனர். அவர்கள் ஆட்சி தொடங்கியதில் இருந்து பெண்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்துள்ளன.

முன்னதாக, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கல்வி தடை விதிக்கப்பட்டதிலிருந்து, வெளி உலகத்துடன் இணைவதற்கான ஒரே வழிமுறையாக இணையம் மாறிவிட்டது என்று ஆப்கானிஸ்தான் பெண்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு, பல்கலைக்கழகங்களிலிருந்து பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டன.

பள்ளிக்குச் செல்வதற்கான தடை,"கல்வி கற்கும் உரிமையை அப்பட்டமாக மீறுவதாக" ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் மையம் விவரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgjg158lezo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.