Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 Nov, 2025 | 04:04 PM

image

பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் மும்முனை ரி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கையின் ரி20 அணித் தலைவர் சரித் அசலன்க ஓசையின்றி நீக்கப்பட்டபோது ஆரம்ப கிசுகிசுக்கள் சுகவீனம் என முணுமுணுத்தன. ஆனால், அதற்கு அப்பால் ஒரு கீறல் வீழ்ந்துள்ளதுடன் ஒரு வித்தியாசமான தோற்றம் வெளிப்படுகிறது.  

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின்போது அணித் தலைவர் வெளிப்படுத்திய அதிருப்தியானது விரிசல்கள் நிறைந்த ஆடுகளத்தில் ஒரு மோசமான எகிறிபாயும் பந்து போன்று அவரைத் திருப்பித் தாக்கியுள்ளது..

தாயகம் திரும்பத் துடித்த மற்றொரு பிரதான வீரரான வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோவும் இதே போன்ற ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளார்.

இவர்கள் இருவரின் கிரிக்கெட் பயணத்தைப் மீட்டுப்பார்த்தால் அவர்கள் இருவரும் மிக நீண்ட தூரம் ஒன்றாக பயணித்துள்ளதை அறிந்துகொள்ளலாம்.

முன்னாள் இலங்கை அணியின் உப தலைவர் ரோய் டயஸின் பயிற்றுவிப்பின் கீழ் அவர்கள் இருவரும் 19 வயதுக்குட்பட்ட அணியில் சகாக்களாக இருந்தவர்கள்.

ரோய் டயஸின் பயிற்றுவிப்பிலேயே சரித் அசலன்க தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 2016இல் நான்கு நாள் இளையோர் டெஸ்ட் தொடரிலும் (1 - 0) இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் (3 - 0) 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியை வெற்றிகொண்டிருந்தது. அந்த அணிகளில் அசித்த பெர்னாண்டோ விளையாடாதபோதிலும் குழாத்தில் இடம்பெற்றிருந்தார்.

இப்போது அவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் தாயகம் திரும்பிவிட்டனர். பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு தொடருக்கான குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த அவர்கள் இருவரும் இப்போது அதில் பங்குபற்றவில்லை.

ரிச்மண்ட் கல்லூரி அணியிலும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியிலும் ஒரு சிறந்த தலைவராக செயற்பட்ட அசலன்க, தலைமைத்துவத்திற்காக மிகக் கவனமாக வளர்க்கப்பட்டதுடன் அதற்காக மிக நீண்டகாலமாக காத்திருந்தார்.

காலி ரிச்மண்ட் கல்லூரி அணியை மிகுந்த துணிச்சலுடன் வழிநடத்திய அவர் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டபோது அந்த நற்சான்றிதழ்கள் மேலும் மெருகூட்டப்பட்டது.

தனது 23ஆவது வயதில் அவர் இலங்கை அணியில் அறிமுகமானபோது அவரது தோள்களில் தலைமைப்பதவி சுமத்தப்படும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக அப்போது இருந்தது.

சரித் அசலன்க அணித் தலைவரானபோது மஹேல ஜயவர்தனவின் அமைதியான சுபாவத்தைப் பிரதிபலிப்பதுபோல் அமைதியான மன உறுதியுடன் அணியை வழிநடத்தினார்.

அவரது தலைமையில் இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அவுஸ்திரேலியாவையும் இந்தியாவையும் இலங்கை வெற்றிகொண்டு உலக தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த வெற்றிகள் இலங்கைக்கு தெம்பூட்டுவதாக அமைந்தன.

கையில் துடுப்பை ஏந்தியவராக அசலன்க அமைதியாக போட்டிகளை வெற்றியுடன் முடித்துவைத்து புகழ்ச்சியைப் பெற்றார். பெரும்பாலும் கடினமான வெற்றி இலக்குகளை சாதுரியமாக கையாண்டு  அவற்றைக் கடக்கச் செய்ததுடன் கணிசமான மொத்த எண்ணிக்கைகளை அணி பெறுவதற்கும் பெரும் பங்காற்றி இருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஏழாவது இடத்திற்கு அவர் முன்னேறினார். அதனைடன் ஒரு தற்செயல் நிகழ்வு என்று கூறிவிட முடியாது.

ஆனால், டி20 கிரிக்கெட்டில் அவரது ஆட்டத் திறன் மன்னிக்க முடியாத தன்மையைக் காட்டியது. துடுப்பாட்டத்தில் அவரது திறமை வெகுவாக சரிவடைந்தது. மேலும் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாவது சுற்றில் இலங்கையினால் ஒரு வெற்றியைக்கூட பெறமுடியாமல் போனது. அத்துடன் அவரது சில பந்துவீச்சு மாற்றங்கள் ஆச்சரியம் அடையச் செய்தன.

அதிரடி வீரர் மொஹம்மத் நபி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது துனித் வெல்லாலகேவை கடைசி ஓவரை வீசுமாறு அசலன்க அழைத்தார். அந்த ஓவரில் இளம் வீரரின் 5 பந்துளை நபி சிக்ஸ்களாக விளாசினார். நல்லவேளை அந்தப் போட்டியில் இலங்கை தோல்வியிலிருந்து தப்பியதுடன் ஆப்கானிஸ்தானையும் வெளியேற்றியது.

ஆனால், அவரது மற்ற தவறுகளை அவ்வளவு எளிதில் மறைக்க முடியவில்லை. முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்கவை கருத்தில் கொள்ளாமால் ஒரு தீர்மானம் மிக்க ஓவரை கமிந்து மெண்டிஸிடம் ஒப்படைத்தபோது பங்களாதேஷ் அணி 169 ஓட்டங்களை கடினமான ஆடுகளத்தில விரட்டிக் கடப்பதை கமிந்துவின் இரண்டு கைகளின் பந்துவீசும்திறமைகளால் தடுக்க முடியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அசலன்க ஒரு களங்கமற்ற ஒழுக்கத்தை கடைப்பிடித்தார். அவர் தன்னை கண்ணியமாக நடத்திக்கொண்டதுடன் ஒருபோதும் ஆட்டத்தை களங்கப்படுத்தவில்லை.

ஆனால், அண்மையில் அணிக்குள் ஒரு சிறிய குழுவினர் - முக்கியமாக அவரது சகாக்கள் - பற்றிய முணுமுணுப்புகள் எழுந்தன. அணியின் ஹோட்டலில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இஸ்லாமாபாத்தில் குண்டுவெடிப்பு வரை அந்த முணுமுணுப்பு ஈசல்போல் தொடர்ந்தது.

பாகிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் திட்டங்கள் இருந்தபோதிலும், அசலன்க உட்பட ஒரு சிறிய குழுவினர் சுற்றுப்பயணத்தை கைவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 

ஸ்ரீலங்கா கிரிக்கெட நிறுவனம் மசியவில்லை. மாற்று வீரர்களைத் தயார்படுத்தத் தொடங்கியது. இரவு நேர வற்புறுத்தலுக்குப் பின்னர் வீரர்கள் இறுதியில் தங்க ஒப்புக்கொண்டனர். ஆனால், சேதம் ஏற்கனவே ஏற்படத்தப்பட்டுவிட்டது.

உயரிடத்திலிருந்து வந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது. போட்டியை விட யாரும் பெரியர்வர்கள் அல்லர் என்பது போல் அந்த செய்தி இருந்தது.  

இந் நிலையில் இலங்கை அணி ஒருநாள் தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இழந்தது. இறுதிப் போட்டியில் அசலன்க ஒரு ஓரமாக இருந்தார். முத்தரப்பு தொடர் தொடங்குவதற்கு முன்பு அவர் ஓசையின்றி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தசுன் ஷானக்கவை ரி20 உதவித் தலைவராக தேர்வாளர்கள் நியமித்தபோது எல்லாம் எழுதப்பட்டுவிட்டது போல் தோன்றியது. அசலன்க களநிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். இப்போது சொந்த மண்ணில் நடைபெறப் போகும் ரி20 உலகக் கிண்ணத்தில் அணித் தலைவர் பதவியை தசுன் ஷானக்க தக்கவைத்துக்கொள்வார் என்று தெரிகிறது. அசலன்கவைப் பொறுத்தமட்டில் திடீரென்று தலைமைக்காகப் போராடாமல் முதல் பதினொருவரில் தனது இடத்திற்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

வாழ்க்கையைப் போலவே, கிரிக்கெட்டில் தவறான அடி ஒரு போட்டியை தலைகீழாக மாற்றிவிடும். 

சரித் அசலன்கவைப் பொறுத்தவரை, இது அவர் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கடினமான இன்னிங்ஸாக அமையக்கூடும்.

(நன்றி: டெலிகொம் ஏசியா ஸ்போர்ட்)

https://www.virakesari.lk/article/230820

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரித் அசலன்கவை தலைவர் பதவியில் இருந்து நீக்க இன்னும் தீர்மானிக்கவில்லை என்கிறார் உப்புல் தரங்க

27 Nov, 2025 | 12:26 PM

image

(நெவில் அன்தனி)

இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் அணிகளின் தலைவராக இருக்கும் சரித் அசலன்கவை ரி20 அணித் தலைவர் பதவியிலிருந்து நீக்க இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் பாகிஸ்தான் தொடரின் பின்னர் அது குறித்து அலசி ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவுக்குழுத் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்தார்.

இதேவேளை, சரித் அசலன்கவுக்கு நம்பிக்கையை ஊட்டி அவரை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

upul_tharanga.png

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட இணையவழி ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர்கள் இருவரும் இந்த விடயங்களைத் தெரிவித்தனர்.

'எமது அணித் தலைவராக சரித் அசலன்க தான் இன்னமும் இருக்கிறார். அது குறித்து எமது திட்டத்தில் மாற்றம் இல்லை. 2026 உலகக் கிண்ணம் வரை சரித்தை தலைவராக வைத்திருக்கும் நோக்கத்துடனேயே அவரை நாங்கள் தலைவராக நியமித்தோம். ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்' என ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஓன்றுக்கு பதிலளிக்கையில் உப்புல் தரங்க பதிலளித்தார்.

அணித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா என எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், 'பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவில் அணிக்கு அவசியமான தீர்மானத்தை எடுப்போம். எமக்கு உள்ள தேர்வு எது என்பது குறித்து கூர்ந்து நோக்க வேண்டும்.

உலகக் கிண்ணம் நெருங்கி வரும்போது  பெரிய அளவில்  மாற்றங்களை   செய்ய முடியாது. இது குறித்து தேர்வாளர்களுடனும் பயிற்றநருடனும் கலந்துரையாடி எமக்கு எது அவசியமோ, அணிக்கு எது தேவையோ அதற்கான தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டி வரும். நாங்கள் இன்னும் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை.

ஆனால், ரி20 போட்டிகளில் அவரிடம் (சரித் அசலன்கவிடம்) ஓட்டங்கள் எடுப்பதில் நிலைத்தன்மை இருக்கவில்லை. உண்மையிலேயே வைரஸ் காய்ச்சல் காரணமாகவே அவர் இலங்கைக்கு வருகை தர நேரிட்டது. அவர் ஒரு சிறந்த வீரர். அனுபவசாலியான அவர் உலகக் கிண்ணத்தில் முக்கிய வீரராக இருப்பார். அவரை நாங்கள் மறக்கவில்லை. அவர் மத்திய வரிசையில் தனித்து போராடி வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார். அவர் எங்களது திட்டத்தில் இருக்கிறார்' என்றார்.

charith_and_sana..__2_.png

இதேவேளை, சரித் அசலன்கவுக்கு தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும் என சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

'சரித்திடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவரிடம் இருந்து அதிகபட்ச பங்களிப்பை பெறவேண்டும். ஒரு வீரர் பிரகாசிக்கத் தவறினால் பயிற்றுநர்கள், உயர் ஆற்றல் நிலைய அதிகாரிகள் அனைவரும் அவருடன் இணைந்து செயற்பட்டு அவரை மீண்டும் பிரகாசிக்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு வீரரும் சரிவை எதிர்கொள்வது சகஜம். அத்தகைய வீரரை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டு வர அவருக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். அவர் நம்பிக்கை அடைந்ததும் அவரை அணியில் இணைத்துக்கொள்ளலாம். சரித் அசலன்க ஒரு சகலதுறை வீரர். அவரை பந்துவீச்சிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு பயிற்றுநர் என்ற வகையில் அவரை சரிவிலிருந்து மீட்டெடுப்பது எமது கடமை என நான் கருதுகிறேன்' என்றார்.

https://www.virakesari.lk/article/231609

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.