Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 1

வன்னி வானம் போர் விமானங்களால் நிரப்பியிருந்தது. இரவுகள் பீரங்கிச் சத்தத்தால் மூழ்கியிருந்தது. அந்த கொழுந்துவிட்டு எரியும் உலகின் நடுவில் கவின் — கிளிநொச்சியைச் சேர்ந்த, யாழில் பாடசாலைக் கல்வி கற்ற, பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பொறியியல் மாணவன் நின்றான். மென்மையான பேச்சு, ஒழுங்குமிக்க சிந்தனை, கணிதத்தில் அதீத திறமை, புகைப்படக் கலையில் பேரன்பு என பலவற்றைக் தன்னகத்தே கொண்ட அவன் — இந்தப் போரின் பின்னர் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டவேண்டும் என்பதே அவனின் கனவாக இருந்தது.

'அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக-
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!'

நேரிலே கண்டவர்கள், தேவர்களைப் போல இமைக்காத விழிகளைக் கொண்டார்களாம். அத்தன்மை, பிறருக்கு வருவதற்கு அருமையான திருமேனியையுடைய கவினின் அழகின் சிறப்பால் உண்டானதா? இல்லை பொறுமையான மனத்தினால் வந்ததோ ?இந்த இரண்டில் பொருத்தமான காரணம் எதுவென நாம் அறிந்தோம் இல்லை. எது பொருத்தமானதோ, அதுவே காரணமாக இருக்கட்டும். யாருக்கும் அமையாத அற்புத வடிவம் கொண்டவன் இந்த கவின்.

உடையார்க்கட்டு (Udaiyaarkaddu) அருகே, உடுத்திய ஆடை கூட முழுமையில்லாத ஒரு அகதிகள் முகாமில், ஒரு உயரமான பனையடியில், அவன் முதன்முறையாக முல்லைதீவைச் சேர்ந்த, 21 வயது ஆசிரிய பயிற்சிப் பெண்ணான ஈஸ்வர்யாவைப் பார்த்தான்.

'அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!'

அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கடற்கரையில் கிடைக்கும் முத்துகளைப் போன்றவை அவளின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்தது போன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற இனிய சொற்களைப் பேசுவாள். இப்படி எல்லா அழகும் தன்னகத்தே கொண்டவள் தான் இந்த ஈஸ்வர்யா

அவள் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு, கிழிந்த கூரை, உடைந்த சுவர்கள் கொண்ட, ஒரு தற்காலிக பள்ளிக் கூடத்தில் கற்றுக் கொடுத்தாள். அது உண்மையில் பள்ளி என்று அழைக்க கூட தகுதியற்ற ஓர் இடமாக இருந்தது. ஆனாலும் அவளின் குரல் – நம்பிக்கையை நிரப்பியது.

ஒரு உடைந்த மேசையின் மீது சாய்ந்து, குழந்தைகளின் சிறிய, நடுங்கும் விரல்களைப் பிடித்து எழுத்துகளை வடிவமெடுக்கச் செய்துக் கொண்டிருந்தாள். வெளியே தொலைவில் பீரங்கி சத்தம் ஒரு இடிமுழக்கம் வந்தது. என்றாலும், புயலுக்குள் ஒரு தாலாட்டு போல, உள்ளே அவளின் குரல் மட்டும் தெளிவாய் ஒலித்தது.

ஒரு சிறுவனின் தலை மேல் கையை வைத்து பணிவாக, “அஞ்சாதே கண்ணா … உன் பேரை நீ எழுதிக் காட்டு. உன் புத்தகத்தை நான் காப்பாற்றுவேன்.” என்று, அவனுக்கு நம்பிக்கை கொடுத்துச் சொன்னாள்.

அதே நேரத்தில், தண்ணீர் மற்றும் மருந்துகள் வழங்கும் தொண்டராக, அங்கு தன் படிப்பை இரண்டாம் ஆண்டிற்குப் பின் நிறுத்திவிட்டு வந்திருந்த கவின், கதவின் வாயிலில் நின்று, போர் சூழலிலும் அவள் அமைதியாக படிப்பித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு திகைத்தான்.

“போரிலுமா?” என்று அவன் மெளனமாக அவன் அவளிடம் கேட்டான் - தானே படிப்பை இடையில் நிறுத்திவிட்டு இங்கு நிற்கிறேன் என்பதை சொல்லாமல் சொன்னான். அவள் தலை நிமிர்த்திப் பார்த்தாள் - களைப்புடன், ஆனால் உறுதியோடு ஒரு புன்னகையோடு.

“போரில்தான் … அது மிக அதிகமாக அவசியம், அவர்களுக்கு இங்கு விளையாட ஒன்றுமே இல்லை, ஏன் ஒழுங்காக சாப்பிடக்கூட , அதை மறக்க, தங்களுக்குள்ளாவது பேச .. ஒன்றில் கவனம் செலுத்துவது நல்லது தானே, அது எழுத்தாக இருக்கட்டுமே .. பிற்காலத்துக்கு உதவ, உண்மையை வெளிப்படுத்த ” என்றாள்.

அந்த தருணத்தில் இரண்டு நபர்களுக்கும் இடையே ஒரு ஆழமான, சொல்லப்படாத தொடர்பு தானாக உருவாகியது. இது ஒரு சக்திவாய்ந்த, ஒருவேளை ஆன்மீக அல்லது உணர்ச்சிபூர்வமான பிணைப்பாக அல்லது விதியாக இருக்கலாம்?

'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.'

இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி, ஒன்றை மற்றொன்று உண்ணவும், நிலை பெறாத உணர்வும் ஒன்றிட, கவினும் நோக்கினான்
ஈஸ்வர்யாவும் நோக்கினாள்.

அதன் பின் அவன் அவளிடம்: “உன் பெயர் என்ன?”
அவள்:“ஈஸ்வர்யா.”
அவன்: “அதன் அர்த்தம்?” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
அவள்: “அருள்… செல்வம்… ஆனாலும் இப்போதெல்லாம் ‘அலைந்து திரியும் குழந்தைகளுக்கான அலைந்து திரியும் ஆசிரியை’ என்றே வைத்துக் கொள்ளலாம்.”

அவன் சிரித்தான். பல மாதங்களுக்குப் பிறகு, அவனை இவ்வாறு சிரிக்க வைத்தது அவளின் அந்த வார்த்தை. அவனுக்கு, அவளின் துணிவு – உறைந்த பாலைவனத்தில் விழுந்த சூடான சூரியக்கதிர் போல தோன்றியது.

அன்று மாலையில், அவர்கள் ஏரியின் ஓரத்தில் நடந்து சென்றனர். வானம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் எரிந்து, காயமடைந்த சூரியனைப் போல தண்ணீரில் பிரதிபலித்தது.

"நீ எப்போதாவது ஒரு வித்தியாசமான உலகத்தை கற்பனை செய்து பார்க்கிறாயா?" என்று அவன் கேட்டான். அப்பொழுது அவள் ஒரு கல்லை எடுத்து நீரில் எறிந்து கொண்டு, "நான் ஒரு அமைதியான உலகத்தை கற்பனை செய்கிறேன்," என்று அவள் பதிலளித்தாள். "சோதனைச் சாவடிகள் இல்லாமல் .... பயம் இல்லாமல் .... குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து சிரிக்க ... நீங்கள் பாலங்களை கட்டிட ... ."
"அப்படி என்றாள் நீங்கள் அங்கே ... ?" அவன் அவளை நோக்கித் திரும்பிக் கேட்டான்.

அவள் தொலைதூர அடிவானத்தைப் பார்த்துக்கொண்டு, “ஒரு மாமர நிழலுக்கடியில் நான் கற்றுக் கொடுப்பேன் .... கூரை தேவையில்லை. ... மனமும் ஒளியும் இருந்தால் போதும்.” என்றாள். பின் வானத்தை பார்த்தபடி, அவள் வாய் ஒரு சங்க பாடலை முணுமுணுத்தது ........

'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை'

பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது என்கிறது இந்தப் பாடல்.

பாடலை முழுதாக முணுமுணுத்தபின் அவனை பார்த்து, 'இப்படி அறவழி கூறியபின் போரிடும் அந்த முறை, புத்தரை முழத்துக்கு முழம் சிலையாக்கி வழிபாடும் நாட்டில் இல்லையே என்பதே என் ஒரே கவலை' என்றாள் கண்ணீருடன்!

அவளின் மனதை புரிந்துகொண்ட அவன், அவளை ஆறுதல் படுத்த, மெளனமாகச் சிரித்தான். “போர் முடிந்ததும், பெரிய பள்ளி ஒன்றை நான் உனக்குக் கட்டித் தருவேன். உறுதியான சுவர்கள், பெரிய ஜன்னல்கள், இங்கு இப்பொழுது அபாயத்துக்கு மணி ஒலிப்பதுபோல் இல்லாமல், சந்தோசத்துக்காக மட்டும் அங்கு ஒலிக்கும் மணி .... ” என்றான்.

அவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனை நோக்கித் திரும்பினாள். “இல்லை, கவின்... இது முடிந்ததும்... நீ ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட மாட்டாய்.” என்றவள், பெரும் நம்பிக்கையுடன் அவன் கண்களை நேராகப் பார்த்து, “நீ ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவாய், கட்டிடங்களால் மட்டும் அல்ல, ஒழுக்கத்தாலும்” என்றாள்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 02 தொடரும்

THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01

The war had already crowded the skies with military aircraft, and the nights with the thunder of shells. Yet in the middle of that burning world stood Kavin — கவின், a twenty-four-year-old Tamil civil engineering undergraduate, originally from Kilinochchi and educated in the North. Soft-spoken, disciplined, and brilliant at mathematics, he loved photography and dreamed of one day rebuilding shattered homes after the war.

It was under the shade of a tall palmyrah tree in a refugee camp near Udaiyaarkaddu that he first saw Ishwarya — ஈஸ்வர்யா, a twenty-one-year-old teacher-trainee from Mullaitivu. She worked tirelessly, teaching displaced children inside a temporary shelter that barely deserved to be called a classroom. Yet she filled it with hope.

She was leaning over a broken desk, guiding small, trembling hands to form letters on a torn page. Outside, the wind carried the faint echo of distant shelling. Inside, her voice was calm — steady and gentle, like a lullaby in the middle of a storm.

She bent down to a frightened little boy and whispered,

“Don’t worry, kanna… write your name. I will protect your books.”

At that moment, Kavin — who had come as a volunteer to distribute drinking water and medicines — paused at the doorway. He watched her in silence, as if time itself had stopped.

“Even in a war?” he asked softly.

She looked up at him. Her smile was tired — but firm and unbreakable.

“Especially in a war.”

And in that quiet moment, something invisible… something unexplainable… stretched between them — a thread fate did not intend to break.

That afternoon, he finally spoke to her.

“What is your name?” he asked.

“Ishwarya,” she replied.

“Meaning?” he teased gently.

“Grace and prosperity,” she said, then added with a faint smile,
“Though these days, just call me a wandering teacher of wandering children.”

Kavin smiled.
No one had spoken to him like that in months.
Her courage felt like warmth in a frozen desert.

Later that evening, they walked along the edge of the lagoon. The sky burned orange and red, mirrored in the water like a wounded sun.

“Do you ever imagine a different world?” he asked.

She skipped a small stone across the surface of the water.

“I imagine a quiet one,” she replied. “No checkpoints. No fear. Just children laughing… and you building bridges.”

“And you?” he asked, turning towards her.

She looked at the distant horizon.

“I will teach beneath the shade of a mango tree. No roofs necessary. Just minds and light.”

He laughed softly.

“When this ends, I’ll build you a proper school. One with strong walls, wide windows, and a bell that rings only for joy.”

She stopped walking and turned to face him.

“No, Kavin… when this ends… you won’t just build a school.”

She looked into his eyes, with a hope that belonged to another world.

“You will rebuild a country.”

Thanks

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

Chapter 02 Will follow

துளி/DROP: 1912 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32532461203069106/?

Edited by kandiah Thillaivinayagalingam

  • kandiah Thillaivinayagalingam changed the title to கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 02 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 02

நாள்ப்பட நாள்ப்பட பொதுமக்கள் வாழும் வன்னி மற்றும் முல்லைத்தீவு நிலம் மெதுவாகச் சுருங்கியது. குடும்பங்கள் ஒரு பதுங்கு குழியிலிருந்து இன்னொரு பதுங்கு குழிக்கு ஓடினர். அதனால் அவர்களின் உலகமும் மேலும் பின்னிப் பிணைந்து, நெருக்கமாக, இறுக்கமாகச் சுருங்கியது. அந்த அவலத்திலும், கவின் தற்காலிக தங்குமிடங்களை சரிசெய்து ஓரளவு வசதியாக அமைத்தான். ஐஸ்வர்யா கிழிந்த கூடாரங்களின் கீழ் குழந்தைகளை மகிழ்வாக வைத்திருக்க ஆடிப்பாடி கற்பித்தாள்.

அவன் அவளுக்கு தப்பித்தவறி இருக்கும் புத்தகங்களையும் பென்சில்களையும், தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து கொடுத்தான். பீரங்கித் தாக்குதல்களுக்கு இடையில், நடப்பது என்னவென்று பெரிதாக தெரியாமல், எப்படியோ இன்னும் மகிழ்வாக இருக்கும் குழந்தைகள் இடமிருந்து சேகரிக்கப் பட்ட கதைகளை, அவள் அவனுடன் பகிர்ந்தாள். அது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கத் தவறவில்லை. பீரங்கிச் சத்தங்களுக்கும், நீருக்கான மற்றும் கஞ்சிக்கான வரிசைகளுக்கும் இடையில் – அவர்கள் நட்பு … மெளனமாக ஆழமடைந்தது.

ஒரு இரவு, விண்மீன்கள் கூட நொறுங்கியது போல பகுதியாக ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதன் கீழ், அவன் முறிந்த மரத்தின் அடியில் இருந்தவாறு, “நீ பயப்படுகிறாயா?” என்று அவளைக் கேட்டான்.
“ஒவ்வொரு நிமிடமும்.” என்று அவள் தலை ஆட்டினாள். “அப்புறம் ஏன் சிரிச்சுட்டு இருக்கீங்க?” என்று கவின் திருப்பி கேட்டான். ஈஸ்வர்யா அவன் பக்கம் திரும்பினாள். “ஏனென்றால் நான் சிரிக்கவில்லை என்றால், இந்தப் போர் இரண்டு முறை வெல்லும்.” என்றாள். அவன் அவள் விரல்களை மெதுவாகத் தொட்டான்.

இன்னும் ஒரு மாலை, நந்திக்கடல் காயலில் [lagoon] அவள் கேட்டாள்:
“கவின்… இந்தப் போர் முடிந்தால்… நீ என்ன செய்வாய்?”

“வீடுகள் கட்டுவேன்.”
“யாருக்காக?”
“நீ கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்.”

அவள் வெட்கத்தால் கண்களைத் தாழ்த்தினாள். அந்த நொடியிலேயே ஒரு அமைதியான காதல் மலர்ந்தது. ஆனால் அவர்கள், இந்த அவலச் சூழ்நிலையில், அதை ஒருபோதும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை.

ஈவிரக்கம் இன்றி பரவலான துன்பம் அல்லது வன்முறையால் ஆதிக்கம் செலுத்தும் போர் சூழலில், அன்பின் மென்மையான, மிகவும் நுணுக்கமான காதல் எனும் மொழியை நினைத்துப் பார்க்க அல்லது வெளிப்படுத்த முடியாது என்பது இருவருக்கும் நன்றாகத் தெரியும். எனவே காதலை தங்களுக்குள்ளேயே புதைத்து விட்டார்கள்.

2009 ஜனவரி அளவில் முள்ளிவாய்க்காலை நோக்கி மனிதப் பெருக்கு ஓடியது. மருத்துவமனை ஒன்றும் அங்கு ஓரளவாவது மருத்துவமனையாகக் கருதப்படும் நிலையில் இல்லை .. ஜன்னல்கள் நொறுங்கின ... படுக்கைகள் புரண்டன ... மருந்துகள் — பணம் போல மாறின. ஆனாலும் ஈஸ்வர்யா காயமடைந்தவர்களின் நடுவே ஒளி போல அசைந்தாள். ஒரு காயமடைந்த சிறுவன் அவளது கரத்தைப் பற்றினான்.

“அக்கா… நான் சாகுவேனா?” அவள் அவன் கன்னத்தில் விரல்கள் வைத்துச் சொன்னாள்: “இல்லை கண்ணா… இன்று எம தூதர்களுக்கு நேரமில்லை. உன்னை அழைத்துச் செல்ல அவர்களால் முடியாது. ஏனென்றால் ஈவிரக்கம் அற்ற படைகள், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் ஆயுதங்களையும் கண்மூடித்தனமாக பாவிக்கிறார்கள்”

கவின் அப்பொழுது உடைந்த கதவின் வழியே அதைப் பார்த்தான்.
“நீ ஒரு சிப்பாயைவிடவும் வலிமையானவள்,” என்றான். அவள் மெதுவாகச் சிரித்தாள். “இல்லை … நான் இறப்பைவிட அதிகப் பிடிவாதம் கொண்டவள்.” என்றாள். ஒவ்வொரு காலையும் அவன் அவளைத் தேடினான். ஒவ்வொரு மதியமும் அவள் அவனைத் தேடினாள். அவர்கள் பிஸ்கட்டுகளையும் கனவுகளையும் பயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

ஒருநாள், பயங்கர குண்டுவீச்சின் போது, இருவரும் ஒரே பங்கரில் மறைந்து இருந்தார்கள். முழு இருளின் நடுவே அவளது கைகள் நடுங்கின. அவன் கைகளை பிடித்தான். காதலர்களாக அல்ல -
ஆனால் பயம் அவர்களை விழுங்க மறுக்கும் இரண்டு மனிதர்களாக.

ஒருவாறு எறிகணை தாக்குதல் தணிந்ததும், அவள் கிசுகிசுத்தாள், "நாங்கள் இறந்தால் ... என்னை உன் அருகில் இறக்கவிடுங்கள்." கவின் எதுவும் பேசவில்லை. ஆனால் அவனது மௌனம் ஒரு சத்தியமாக அதை ஏற்றுக் கொண்டது

இன்று 2009 மே 14. ... வானமே சிதைந்தது .... முள்ளிவாய்க்காலில் இராணுவத்தின் மோசமான குண்டு வீச்சு தொடங்கியது .... நிலம் நடுங்கியது .... சுவர்கள் பிளந்தன .... காற்று கூட கத்தியது ... மக்கள் ஓடினார்கள் .... எந்தத் திசையும் பாதுகாப்பில்லை.

“ஈஸ்வர்யா!” என்று கவின் குண்டு வெடிப்புகளின் தூசுக்கும் தீயுக்கும் நடுவே கத்தினான் ... .காயல் அல்லது கடற்கழி ரத்தமாக மாறியது .... மக்கள் அலறினர் ... விழுந்தனர் ... காணாமல் போனார்கள்.

கவினும் ஐஸ்வர்யாவும் ஒரு தார்ப்பாய்க்கு [tarpaulin] அடியில் ஒரு தொகுதி குழந்தைகளை வழிநடத்திக் கொண்டிருந்த போது, ஒரு ஷெல் அருகில் விழுந்து பூமியை பிளந்தது. கவின் தன் தோளில் கடுமையான தீப்புண் வலி ஒன்றை உணர்ந்தான். என்றாலும் அவன் திரும்பி ஐஸ்வர்யாவை பார்த்தான். ஐஸ்வர்யா அங்கு நிற்கும் நிலையில் இருக்கவில்லை. அவள் தரையில் விழுந்து கிடந்தாள், வயிற்றைச் சுற்றி எங்கும் இரத்தம் — ஆனால் இன்னும் சுயநினைவுடன், இன்னும் மூச்சுக்கு போராடிக் கொண்டிருந்தாள்.

அவன் குனிந்து அவளைத் தூக்கினான். அவள் நடுங்கினாள். ஆனால் இன்னும் சிரித்தாள். “அழாதே … நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் …” என்றாள். உடனடியாக கவனமாக அவன் ஒரு பகுதி இடிந்து விழுந்த பதுங்கு குழிக்குள் [பங்கருக்குள் / bunker] அவளைச் சுமந்து சென்றான்.
அவளது மூச்சு திணறிக் கொண்டு இருந்தது. அவளது கண்கள் — மெதுவாய் அணைந்துகொண்டிருந்தன. என்றாலும் அவள் உறுதியாக இருந்தாள். நேரம் ஆகி இருள் சூழத் தொடங்க, அவன் அவளை வெளியே தூக்கி வந்து முறிந்த ஒரு பனை மரத்தின் அடியில் உட்கார்ந்தான்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 03 தொடரும்

THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 02

As the territory shrank, as families fled from one bunker to another, their world also shrank — closer, tighter, more intertwined.

Kavin repaired shelters.
Ishwarya taught under torn tents.

He brought her notebooks and pencils.
She brought him stories collected from children who somehow still laughed between artillery blasts.

Their friendship grew in stolen moments — between air-raid sirens and endless queues for water.

Some nights, they sat beneath broken stars.

“Are you afraid?” he asked her once.

She nodded. “Every single moment.”

“Then why do you keep smiling?”

She turned to him.

“Because if I don’t smile, this war wins twice.”

He gently touched her fingers.

Another evening, by the Nandikadal lagoon, she asked,

“Kavin… if this war ends… what will you do?”

“Build houses.”

“For whom?”

“For every child you teach.”

She lowered her eyes.

A quiet bloom of love spread between them.

But they never confessed.

There was no vocabulary for love in a land where death carried a megaphone.

By January 2009, the displaced population flooded towards Mullivaikkal.
The hospital was no longer a hospital.

Windows shattered.
Beds overturned.
Medicine became currency.

Yet Ishwarya moved among the wounded like light.

A wounded child clung to her arm.

“Akka, will I die?”

She brushed the boy’s hair away from his eyes.

“No, my precious. Angels are too busy today. They cannot take you.”

Kavin watched her from the doorway.

“You’re stronger than any soldier,” he said.

She smiled weakly.

“No. I’m just more stubborn than death.”

Kavin searched for her every morning.
She searched for him every lunchtime.

They shared biscuits, dreams, and fears.

Once, during a heavy aerial bombardment, they hid in the same bunker.

In the pitch darkness, her hand trembled.
He held it.

Not as lovers —
but as two humans refusing to let fear consume them.

When the shelling subsided, she whispered,

“If we die… let me die near you.”

Kavin said nothing.

His silence was a vow.

On May 14, 2009, the army shelled Mullivaikkal with unbearable ferocity.

The sky shattered.

The ground trembled.
Walls split open.

People ran in every direction — yet there was no safe direction.

“Ishwarya!” he shouted through dust and fire.

The lagoon turned red.
People screamed, fell, disappeared.

Kavin and Ishwarya were guiding a group of children under a tarpaulin when a shell landed nearby, splitting the earth and the world.

Kavin felt a burning pain tear through his shoulder.

He turned —

And Ishwarya was no longer standing.

She lay on the ground, blood pooling around her abdomen — still conscious, still fighting for breath.

He lifted her.

She trembled violently — yet she smiled.

“Don’t cry… I’m still here.”

He carried her into a partially collapsed bunker.
Her breathing was jagged.
Her eyes slowly losing focus.
But she was determined.

As time passed and darkness began to fall, he carried her outside and sat under a broken palm tree.

Thanks

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

Chapter 03 Will follow

துளி/DROP: 1914 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 02 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 02

https://www.facebook.com/groups/978753388866632/posts/32542349015413658/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 03 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 03] / In English & Tamil

அந்த இரவு மிக வித்தியாசமாக அமைதியாக இருந்தது. பீரங்கி சத்தமில்லை. பறவைகள் மிருகங்கள் கத்தும் சத்தமில்லை. கடலின் மெதுவான மூச்சுக் குரலும், காற்றில் சாயும் கிளைகளின் நடுங்கும் சத்தமுமே கேட்டன.

அவள் அவன் சட்டையைப் பற்றிக் கொண்டாள். “கவின்... கேள். இதை உடனடியாக எழுதி வை...” என்றாள். அவன் அங்கே நிலத்தில் இருந்த ஒரு பிஸ்கட் பெட்டியிலிருந்து ஒரு அட்டையைக் கிழித்தான். எரிந்த ஒரு மரக்கிளை குச்சியை எழுது கோலாகப் பாவித்து, அவள் கிசுகிசுத்தபடி அவன் எழுதத் தொடங்கினான். அவனது கைகள் சாம்பலால் நிறைந்திருந்தன. சட்டையின் கைப்பகுதி கிழிந்திருந்தது. ஆனால் அவன் எழுத்து மட்டும் இன்னும் நேர்த்தியாக, மென்மையாக இருந்தது

**“நான் இறந்தால்... நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்று உலகிற்குச் சொல்லுங்கள்.
நாங்கள் மனிதர்கள்.
எங்களுக்கு கனவுகள் இருந்தன.
எங்களுக்கு பெயர்கள் இருந்தன.
எங்களுக்கு அன்பு இருந்தது.
நான் குண்டுகளுக்கு அடியில் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தேன் என்று சொல்லுங்கள்...
அவர்கள் இந்த சூழலிலும் சிரித்துக்கொண்டு தான் இருந்தார்கள் .
இருட்டில் நீங்கள் என் கையைப் பிடித்திருந்தீர்கள், ஆனால் நான் பயப்படவில்லை. அங்கு ஒரு கட்டுப்பாடு ஒழுங்கு எந்த நிலையிலும் இருந்தது என்று சொல்லுங்கள் ...
முள்ளிவாய்க்கால் மரண இடம் அல்ல என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
நாங்கள் அனைவரும் உண்மையாக மாறிய இடம் அதுதான்.”**

அவள் உதடுகள் நடுங்கின. அவள் இறுதி மூச்சு ஒரு கிசுகிசுப்பாக இருந்தது: "எங்கள் இருவருக்காகவும் நீ வாழ வேண்டும்." அந்த இறுதி வார்த்தையுடன் அவள் கை சோர்ந்து விழுந்தது ... அவள் கண்கள் உறைந்தன - ஆனால் இன்னும் திறந்திருந்தன, அவள் ஒருபோதும் பார்க்காத எதிர்காலத்தைத் தேடிக்கொண்டிருந்தன. அவள் இறந்ததைக் கண்டு ,கவின் சத்தமாக கத்தவில்லை. அந்த ஒலி காற்றை கிழிக்கவில்லை ஆனால் அவன் ஆன்மாவைக் கிழித்து சென்றது.

கடிதம் எழுதப்பட்டது — அவளுக்காக. ஆனால் அவனுக்குள் ஏதோ ஒன்று சொன்னது: இந்தக் கடிதம் இன்று வாசிக்கப்படுவதற்கல்ல …
நாளைக்காக … என்றாலும் கடல் காற்று அந்தக் காகிதத்தின் ஓரத்தைத் தூக்கியபடி, வார்த்தைகளைப் படிக்க முயல்வதைப்போல் அசைந்தது.

அவன் கடிதத்தை மெதுவாக மடித்து கவனமாக தன் கால்சட்டை சட்டைப்பைக்குள் வைத்தான் — ஒரு வாழ்க்கைப் பக்கம் மூடப்படுவது போல…

இறுதி தாக்குதல் முடிந்த போது, மாதங்களாக அழுத வானம் திடீரென மௌனமானது, துப்பாக்கிகளும் குண்டுகளும் அசாதாரண அமைதியில் உறைந்தது, கவின் இன்னும் காயங்களுடன் இருந்தாலும் உயிருடன் இருந்தான். அவனைச் சுற்றி உடல்கள் கிடந்தன — சில அறிந்த முகங்கள், பல தெரியாத மனிதர்கள். உயிருடன் இருந்தவர்கள் நிழல்கள் போல நடுங்கிக் கொண்டு, குண்டுகளால் எரிந்தும் உணவு இன்மையால் தளர்ந்தும் இருந்தார்கள், அவர்கள் இராணுவத்தினரால் கூட்டமாக இழுத்துச் செல்லப்பட்டனர். சில காயங்களுக்கு துணி கட்டப்பட்டது; பல காயங்கள் புறக்கணிக்கப்பட்டன. பலர்
கருகிய மணலோடு மங்கிப் போயினர். ஆனால் கவினின் இறுகப் பிடித்த கைக்குள், இரத்தமும் மண்ணும் படிந்த விரல்களுக்கு நடுவே, ஒரு சிறிய கிழிந்த மட்டைத் துண்டு இருந்தது. அதன் ஓரங்கள் கருகியிருந்தன; எழுத்துக்கள் மங்கியிருந்தன; ஆனாலும் அது புனிதமான உண்மை — ஈஸ்வர்யாவின் இறுதி உண்மை.

மேலும் ஐக்கிய நாடுகள் சபை (2011 நிபுணர் குழு அறிக்கை): "நம்பகமான ஆதாரங்கள் 40,000 பொதுமக்கள் வரை இறந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளன" என்பதுடன், ஐக்கிய நாடுகள் சபை (உள் மதிப்பாய்வு குழு 2012): பின்னர் வந்த ஒரு உள் அறிக்கையின் படி , இந்த எண்ணிக்கை குறைந்தது 70,000 பேர் கணக்கில் வராதவர்கள் என்று கூறியது. அதேநேரம் உள்ளூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு: உள்ளூர் அரசு மற்றும் உலக வங்கி மக்கள்தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்ட புள்ளிவிவரங்களின் படி, போருக்குப் பிறகு மோதல் பகுதிகளில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கணக்கில் வராதவர்கள் என்பதைக் எடுத்துக் காட்டுகிறது.

2009 மே 18 அன்று கொழும்பில் கொண்டாட்டங்கள் நடந்தன; பட்டாசு, முழக்கம், கொடிகள் — “வெற்றி தினம்” என்று அதை அழைத்தனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் அந்த “வெற்றி” சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை — ஆண், பெண், குழந்தை, முதியோர் — இராணுவக் கட்டுப்பாட்டிலான முகாம்களுக்குள் அடைத்த நாடாகவே இருந்தது. அவற்றுள் மிகப்பெரியது மெனிக் பாம்; முள்ளுக் கம்பிகள், கண்காணிப்பு கோபுரங்கள், ஆயுதம் தூக்கி நிற்கும் சிப்பாய்கள், உணவே கைப்பிடி அளவு, நம்பிக்கை ஒரு மௌன கிசுகிசுப்பாக மட்டுமே இருந்தது. அங்கு கவின் ஒரு பெயர் அல்ல; ஒரு எண் மட்டுமே!

2009 டிசம்பரில் சில கம்பிகள் திறந்தன, 2012-ல் கடைசி முகாம்களும் மூடப்பட்டன; அவன் விடுவிக்கப்பட்ட கடைசி ஆண்களில் ஒருவன் — அவன் ஆபத்தானவன் என்பதாலோ அல்ல, நேரடி சாட்சியாக உண்மையைச் சுமந்தவன் என்பதாலே, இந்தக் கெடுபிடி!

பிறகு ஒரு எதிர்பாராத அதிசயம் நடந்தது: லண்டனில் இருந்த அவனுடைய பழைய பேராசிரியர் அவனை நினைவுகூர்ந்தார்; அவனின் பொறியியல் கல்வியின் திறமை அவரின் மனதில் இன்னும் இருந்தது. அவர் தான் இப்ப கற்பிக்கும் அதே பல்கலைக்கழகத்தில் அவனுக்கு ஒரு இடம், ஒரு கல்வியுதவியுடன், ஒரு ஆண்டு விலக்குடன் பெற்றுக் கொடுத்தார். கவினுக்கு அது ஒரு தற்காலிக மீட்ப்பாக இருந்தது. கவின் எந்தச் சாமானும் எடுத்துச் செல்லவில்லை; புகைப்படம் இல்லை; நினைவுப் பொருட்கள் இல்லை. அவனுடன் இருந்தது அந்தக் கிழிந்த காகிதத் துண்டு மட்டும் — அந்த உண்மை மட்டும்! நாளடைவில், லண்டனில் பகலில் சிவில் இன்ஜினியரிங் படித்து, இரவில் மனித உரிமைகள் குறித்து பேசும் குரலாக மாறினான். பல்கலைக்கழக அரங்கங்களிலும், நினைவேந்தல் கூட்டங்களிலும் அவன் முள்ளிவாய்க்காலைப் பற்றிப் பேசினான். அந்தச் சிறு மட்டையை உயர்த்தி, “இது ஈஸ்வர்யாவின் கடைசி கடிதம். இது முள்ளிவாய்க்காலின் உண்மை. குரல் இல்லாதவர்களின் குரல் இது” என்று கூற என்றும் தவறவில்லை. சிலர் அழுதார்கள், சிலர் உறைந்தனர், சிலர் வெளியேறினர் — ஆனால் கவின் ஒருபோதும் நிறுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே 18 மற்றும் நவம்பர் 27 அன்று அவன் இரண்டு தீபங்கள் ஏற்றினான்: ஒன்று அவளுக்காக, ஒன்று அவள் காப்பாற்றிய குழந்தைகளுக்காக. அவன் திருமணம் செய்யவில்லை. போரில் எரிந்த காதல் அவனுக்குள் இன்னும் அணையாத தீபமாக எரிந்துகொண்டிருந்தது.

2025-ஆம் ஆண்டு, பல ஆண்டுகளாக எடுத்துச் சென்ற சாட்சியத்துக்கும் போராட்டத்துக்கும் பிறகு, கவின் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினான். முள்ளிவாய்க்கால் கரையில் நின்றபோது, அலைகள் ஆவிகளின் குரல்கள் போல மெதுவாகக் கிசுகிசுத்தன. அவன் ஈஸ்வர்யாவின் கடைசிக் கடிதத்தை ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியில் வைத்து, ஒரு இளம் பனையடியின் அடியில் புதைக்கிறபோது, அவனுக்கு உலகமே நின்றுவிட்டது போல இருந்தது. அவன் மிகவும் மெதுவாக “இப்போது நீ வீட்டுக்குத் திரும்பிவிட்டாய்” என்று சத்தமில்லாமல் உரைத்தான். காற்று, அவள் பதில் சொல்வது போல, இலைகளை அன்போடும் பரிச்சயமான தொடுதலோடும் அசைத்தது. என்றும் கரையை நோக்கி திரும்பும் அந்தக் கடல், அவர்களுடைய காதலும் வலியும் நிறைந்த கதையை, காலம் கொண்டாடும் நித்தியத்துக்குள் [அழியாமைமைக்குள்] எடுத்துச் சென்றது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

முற்றிற்று

THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 03

That night was strangely quiet. There was no cannon fire. There was no sound of birds or animals screaming. All that could be heard was the gentle breathing of the sea and the trembling sound of branches swaying in the wind. She clutched his shirt. “Kavin… listen. Write this down…” she said. He tore a piece of cardboard from a biscuit box, that was on the ground there.Using a burnt twig as a writing utensil, he began to write as she whispered.His hands were covered in ashes. The sleeves of his shirt were torn. But his handwriting was still neat and smooth.

**“If I die… tell the world we were not terrorists.
We were people.
We had dreams.
We had names.
We had love.

Tell them I taught children under bombs…
and they still smiled.

Tell them you held my hand in the dark…
and I was not afraid.

Tell them Mullivaikkal is not a place of death.
It is where we all became truth.”**

Her lips trembled.

Her final breath was a whisper:

“Live… for both of us.”

Her hand fell.

Her eyes froze — still open, still searching for a future she would never see.

Kavin did not scream loudly.

The sound tore through his soul instead of the air.

When the final assault ended,
when the sky fell silent after months of screaming,
when the last echoes of artillery faded into an unnatural stillness —
Kavin was still alive.

Bodies surrounded him — some known, many unknown.

The living were herded like shadows: trembling, burnt, broken.
Wounds were wrapped or ignored.
Names were lost in ash.

But in his clenched fist, beneath blood and grime, he held something sacred:

A torn piece of cardboard.

Burnt edges.
Fading words.
Yet holy.

It was her truth.

May 18, 2009

In Colombo, the capital erupted in celebration.
Drums pounded.
Flags waved.
Fireworks split the sky.

“Victory Day,” they called it.

But in Mullivaikkal, victory looked like this:

Nearly 300,000 Tamil civilians were rounded up —
men, women, children, the elderly —
and confined in military-guarded detention camps.

The largest was Menik Farm, surrounded by barbed wire, watchtowers, armed soldiers, and silence.

No movement.
No voices.
Food in handfuls.
Hope in whispers.

Kavin became a number.
A body to be inspected.
A truth to be feared.

By December 2009, some gates opened.
By 2012, the last camps closed.

He was one of the final men released — not because he was dangerous, but because truth was.

An unexpected miracle followed.

From his forgotten past, a professor in London had remembered him.

A place awaited him.

A scholarship.

One year exemption.

It was not just admission — it was a lifeline.

He carried no suitcase.

No photographs.

Only that piece of cardboard.

Only that truth.

In London, by day he studied Civil Engineering.
By night, he became a voice.

University halls.
Human-rights forums.
Memorial gatherings.

He spoke of Mullivaikkal.

And he held up the cardboard and said:

“This is Ishwarya’s last letter.
This is Mullivaikkal’s truth.
This is the voice of the voiceless.”

Some cried.
Some froze.
Some walked out.

But he never stopped.

Every year, on May 18 and November 27, he lit two lamps:

One for her.
One for the children she saved.

He never married.

The love burned in war
continued to burn within him —

like an undying flame.

In 2025, after years of advocacy, Kavin returned to Sri Lanka.

He stood at Mullivaikkal shore,
where the waves whispered like ghosts.

He placed Ishwarya’s letter in a small glass box
and buried it beneath a young palmyrah sapling.

He whispered:

“Now you are home.”

The wind rustled the leaves —
soft, familiar, loving.

As if she answered.

And the sea, endlessly returning to the shore,
carried their story
towards eternity.

Thanks

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

Ended

துளி/DROP: 1915 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 03 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 03]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32553773044271255/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.