Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகாமுகம் சிறுகதைத் தொகுப்பு முன்னுரை

1000034535.jpg


இத்தொகுப்பிலுள்ள ஆறு சிறுகதைகளும் ஈழப்போருக்குப் பின்னைய காலத்தில் எழுதப்பட்டாலும் ஈழப்போரைப்பற்றிய கதைகள். உண்மைக்கதைகளை மையமாகக் கொண்ட சிறுகதைகள். ஒவ்வொரு கதையிலும் குறைந்தது ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் பாத்திரமாக வருகிறார். புலிகளின் தலைவர் பிரபாகரன், பிரதித்தலைவரான புலனாய்வுத் தளபதி பொட்டம்மான், புலிகளின் சிறந்த இராணுவத் தளபதியாக அறியப்பட்ட கருணா அம்மான், புலிகளில் முதல் கேணல் பட்டம்பெற்ற கிட்டு, புலிகளில் முதல் பிரிகேடியர் பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாத்திரங்களாக வருகிறார்கள்.

இது எப்படி நடந்திருக்க முடியும்? ஈழப்போரின் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். போர் என் தலைமுறையின் இளமையைக் காவு கொண்டது. விளையாட்டு வியூகங்களை விட போர் வியூகங்களையே எம் பள்ளிக்காலத்தில் கேட்டு வளர்ந்தோம். எங்களுக்கு துடுப்பு மட்டையையை விட கால்பந்தாட்ட பந்தை விட ஆடுகள மைதானங்களை விட ஏ.கே 47 துப்பாக்கி, கிரனேட், போர்க்களங்கள் பற்றியே அதிகம் தெரியும். விளையாட்டு வீரர்களை விட ஈழப்போராளிகளைப் பற்றியே அதிகம் தெரியும்.

ஈழ யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் நெப்போலியன் காலத்து யுத்தங்களைப்பற்றி லியோ ரோல்ஸ்ரோய் எழுதிய போரும் சமாதானமும் என்ற நாவல். அது என்னில் பெரிய உத்வேகமாகப் படிந்துவிட்டது. இக்கணம் இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கிறபோது நான் மேலே கேட்ட கேள்விக்கும் விடை கிடைக்கிறது. ரோல்ஸ்ரோய் நெப்போலிய யுத்தங்களை தன்னூலுக்கு பாடுபொருளாக்கியது போல நான் என் சிறுகதைகளுக்கு ஈழயுத்தத்தை பாடுபொருளாக்கியிருக்கிறேன்.ரோல்ஸ்ராயின் மாதிரியை நான் பின்பற்றத் தொடங்கியபின் என் பாதை இலகுவானது. கதைகளுக்கு குறைவிருக்கவில்லை. மழைபோலப் பொழியத்தொடங்கியது. எழுதினேன். இச்சிறுகதைத் தொகுதி சிறப்பாக வந்திருக்கிறதா என்பது வாசகர்களாகிய உங்களின் முடிவு. பாராட்டுக்களை விட விமர்சனங்களையே நான் அதிகம் விரும்புவது

என் சிறுகதைகளைப் படித்த சிலர் முகநூலில் உள்பெட்டியில் வந்து நீங்கள் உண்மையிலேயே விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தீர்களா? எவ்வளவு இவ்வளவு துல்லியமான விபரங்களை எழுதுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக அமைச்சர் கதிர்காமர் கொலைபற்றிய முகாமுகம் கதையைப்பற்றி.

 [போரைப்பற்றி போர்த்தளபாடங்களைப் பற்றிய ஆரம்ப அறிவில்லாதவரும் இன்றைய இணைய உலகில் முக்கியமான தகவல்களை இணையத்தில் பெறலாம். முகாமுகம் கதைக்காக குறிப்பாக குறிபார்த்துச்சுடும் துப்பாக்கிகளைப்பற்றி சிலமணிநேரம் நான் இணையத்தில்,செலவளித்தே இக்கதையை எழுதினேன்]

விடுதலைப் புலிகளில்,குறிப்பாக இரண்டாம் ஈழ யுத்தத்திற்குப் பிறகு போய்ச்சேர்ந்தவர்கள் பதினெட்டு வயதிற்கு குறைந்த சிறுவர்கள். குடும்பத்தாலோ சமூகத்தாலோ பாரபட்சம் காட்டப்பட்டு வஞ்சிக்கப்பட்டட உளச்சிக்கல்களின் பாதிப்பால் இயக்கத்தில் சேர்பவர்கள். ஐந்து வயதிலும் ஏழு வயதிலும் பெற்றோரை இழந்த நான் சட்டப்படி ஒரு அனாதை. ஆனால்,நான் கொடுத்து வைத்தவன். எனக்கு அற்புதமான தாத்தாவும் சின்னம்மாக்களும் தாய் மாமன்களும் இருந்தார்கள். அவர்களால் குறைகளின்றி வளர்க்கப்பட்டடவன் நான். ஒருபோதுமே நான் விடுதலைப்புலிகளின் உறுப்பினராக இருக்கவில்லை. என் முதல் கவிதை நூலை என் சின்னம்மாக்களுக்கு சமர்ப்பணம் செய்தேன். இந்நூல் என் தாய்மாமன்களுக்கு.

    - நட்சத்திரன் செவ்விந்தியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலிருக்கும் காலச்சுவடு பதிப்பகம் இந்த "முகாமுகம்" என்ற நூலை வெளியிடுகிறது. தலைவரையும் போராட்டத்தையும் மிக இழிவாகச் சித்தரித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

தயவுசெய்து தமிழகத்தில் வாழும் தமிழ்த்தேசியர்கள் இந்நூலை முடக்கவேண்டும்.

  • Ranjith Joseph

  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரன் செவ்விந்தியனின் “இவன் - யானைப்பாகன்” திசையில் படித்ததில் இருந்து எதையும் தவறவிட்டதில்லை.

சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாவற்றையும் இணையத்தில் படித்திருந்தாலும், தொகுப்பைக் கட்டாயம் வாங்குவேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தின் முதற் சிறுகதைத் தொகுப்பு வாசிப்பில் ஏமாற்றங்களை அளிக்கவில்லை என்பதே நிறைவானது.

நட்சத்திரன் செவ்விந்தியன் தனது ஒரு சிறுகதையை கனலிக்கு முன்பே அனுப்பியிருந்தார். அச்சிறுகதையில் விரவிப் படர்ந்திருந்த பாலியல் சொல்லாடல்களும் அதன் போக்குகளும் எனக்கு நிறைவைத் தரவில்லை என்பதால் அதை கனலியில் வெளியிடவில்லை. பின்னர் அச்சிறுகதை மற்றொரு தளத்தில் வெளியாகி அவருக்குக் கணிசமான கவனத்தையும் ஈர்ப்பையும் பெற்றுத் தந்தது.

வே.நி.சூர்யாவின் வழியாகவே எனக்கு நட்சத்திரன் செவ்விந்தியன் அறிமுகமானார் என்று நினைக்கிறேன். அவரது ஆரம்பகாலக் கவிதைகள் தமிழ்ச் சூழலில் ஓரளவு கவனத்தையும் ஈர்ப்பையும் பெற்றிருந்தன என்றே நம்புகிறேன். அதற்குப் பிறகு அவர் கவிதை எழுதுவதை விட்டுவிட்டார். தற்போது புனைவுகள் வழியாகத் தனக்குள் அமர்ந்திருக்கும் கவிஞனின் எல்லைகளை அவர் விரிவாக்கியிருக்கிறார்.

‘முகாமுகம்’ அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. மேலோட்டமாகப் பார்க்கும்போது தொகுப்பின் அனைத்துக் கதைகளும் புலிகளின் அரசியல், அவர்களின் விடுதலைப் போராட்டம், அதில் வெளிப்பட்ட பாசிசப் போக்குகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உரையாடுவது போலத் தோன்றினாலும், அதை மீறி ஒவ்வொரு கதையிலும் வெளிப்படும் வரம்புக்குள் அடங்க மறுக்கும் கலைத்தன்மைதான் தொகுப்பைக் கவனமாக வாசிக்க வைக்கிறது.

நட்சத்திரன் செவ்விந்தியன் தான் புலிகளின் கூண்டில் வாழாதவன் என்று கூறுகிறார். ஆனால் அக்கூண்டில் வாழாத ஒருவரால் எப்படி அச்சூழலில் வாழ்ந்து மடிந்த போராளிகளின் துயரங்களையும், சில சமயங்களில் அச்சூழல் வெளிப்படுத்தும் பாசிசப் போக்குகளையும் இவ்வளவு ஆழமாகவும் நுண்ணியமாகவும் எழுத முடிந்துள்ளது என்பது வியப்பூட்டும் விடயமாகவே உள்ளது.

தொகுப்பிலிருந்து மேலோட்டமாகப் படர்ந்திருக்கும் புலித்தோலை உரித்துவிட்டு, அதை இன்னும் கூர்ந்து வாசிக்கும்போது நமக்கு வெளிப்படுவது பல்வேறு மனிதர்களின் இயலாமைகள், போதை மீதும் காமம் மீதும் அவர்கள் கொள்ளும் மையல், தாங்களாகவே தேடிக்கொள்ளும் தனிமை, அதன் வழியே அவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் போன்றவைதான்.

இன வேறுபாட்டு அரசியலும் ஆயுதப் போராட்ட அரசியலும் மனிதர்களிடமிருந்து நிலத்தை மட்டுமல்ல, அவர்களின் வாழ்வியல் மீதான நம்பிக்கைகளையும் சிதைக்கின்றன. அச்சிதைவுகள் முதலில் அவர்களின் நம்பிக்கைகளை மறுக்கச் செய்கின்றன; பின்னர் உலகின் அனைத்துத் தொடர்புகளிலிருந்தும் ஒருவிதத் துண்டிப்பை ஏற்படுத்தி, அவர்களை இவ்வுலகின் அன்பிலிருந்தும் அரவணைப்பிலிருந்தும் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவோ அல்லது சிக்கலான மனிதர்களாகவோ மாற்றிவிடுகின்றன.

இத்தொகுப்பில் வெளிப்படும் அனைத்து மனிதர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவோ அல்லது சிக்கலான மனிதர்களாகவோதான் உள்ளனர். தாங்கள் நேசித்த அமைப்பையும் அதன் தலைவர்களையும், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் மறக்க அவர்களால் இயலவில்லை; அதே சமயம் இத்துன்பத்திலிருந்து தப்பித்து, பிழைத்து, வாழ்வை முன்னோக்கி நகர்த்தவும் அவர்களால் முடியவில்லை. உண்மையில் இத்தொகுப்பு தன் முழுமையான கலைத்தன்மையைப் பூர்த்தி செய்து நிவர்த்தி அடையும் இடங்கள் இவையே.

இவ்விடங்களில் வெளிப்படும் பகடியும், துயரமும், கயமையும் தொகுப்பைத் தொய்வின்றி எடுத்துச் செல்கின்றன.

சில குறைகளும் தொகுப்பில் ஆங்காங்கே தென்படுகின்றன. தேவையற்ற சில வார்த்தைகள் அல்லது காட்சி மீறல்கள் (உதாரணமாக “வேறு லெவல்” போன்ற சொற்கள்), கால அளவில் கதைகள் சிக்கிக்கொள்ளும் பிரச்சினைகளும்

காணப்படுகின்றன. நல்லொரு எடிட்டர் இருந்திருந்தால் தொகுப்பு இன்னும் மெருகேறியிருக்கும் என்றே தோன்றுகிறது.

இரண்டாவது குறை — நட்சத்திரன் செவ்விந்தியன் தன் ஆக்கங்களில் தொடர்ந்து பயன்படுத்தும் பாலியல் சொற்களும் அதற்கு அவர் அளிக்கும் உருவங்களும் சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டதாகவோ அல்லது கதையின் போக்குக்கு எவ்விதப் பயன்பாடும் இல்லாதவையாகவோ தோன்றுகின்றன. இது என் மற்றொரு விமரிசனம்.

ஆயினும், தனக்குள் உலவும் கவிஞனை அவர் இன்னும் மறக்கவில்லை என்பதற்கு ஒவ்வொரு கதையிலும் சில கணங்கள் சாட்சியாக உள்ளன. அந்தக் கணங்கள் வழியாகவே இத்தொகுப்பு தன் இலக்கியத் தடத்தை இன்னும் கூர்மையாகத் தேடிக் கண்டடைகிறது.

  • க. விக்னேஸ்வரன் (ஆசிரியர், கனலி இலக்கிய இதழ்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.