Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்

13 Feb, 2026 | 04:47 PM

image

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NCU) உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

குறிப்பாக, "மக்கள் முன்னுள்ள அரசு பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு", "அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்" போன்ற கோரிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மக்கள் குழு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்காகவும் அதே போன்றதொரு கடுமையான சட்டத்தை மீண்டும் மறைமுகமாகக் கொண்டு வர முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் சாடினார். ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினால் உரிமைக்காகப் போராடியவர்கள் சிறையில் இருப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில், மீண்டும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்கனவே போதுமான குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது, இத்தகைய விசேட சட்டங்கள் தேவையற்றவை எனத் தெரிவித்த அவர், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பாதிக்கும் என எச்சரித்தார். 

குறிப்பாக, இது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மலையக மக்களின் வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மலையக மக்களின் பாரம்பரியத் தொடர்பாடல் முறையான 'பறை' அடித்து, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குத் தமது கலாசார ரீதியிலான எதிர்ப்பையும் போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

WhatsApp_Image_2026-02-13_at_16.34.10.jp

WhatsApp_Image_2026-02-13_at_16.34.11.jp

WhatsApp_Image_2026-02-13_at_16.34.11__2

WhatsApp_Image_2026-02-13_at_16.34.11__1

WhatsApp_Image_2026-02-13_at_16.34.13.jp

https://www.virakesari.lk/article/238588

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய சட்டத்தை முன்மொழிந்திருப்பது கவலையளிக்கிறது - அந்தனி ஜேசுதாஸன்

Published By: Vishnu

13 Feb, 2026 | 09:59 PM

image

(நா.தனுஜா)

1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்ட நிலையில், அதன்விளைவாக தற்போது ஆட்சிபீடத்தில் இருப்பவர்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தற்போது அவர்களே அச்சட்டத்துக்குப் பதிலீடாக அதனை விடவும் மோசமான 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்துக்கான வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும் என பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன் விசனம் வெளியிட்டுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டல் கூட்டங்கள், எதிர்ப்புப்போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.

அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாக சில சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி தொடர் கவனயீர்ப்புப்போராட்ட பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தன. அப்போராட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு உள்ளிட்ட மலையக சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (13) பி.ப 2.00 - 4.00 மணி வரை நீதியமைச்சுக்கு முன்பாக நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த செயற்பாட்டாளர்கள் 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கு', 'பயங்கரவாத, அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்', 'பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் வேண்டாம்', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிப்போம்', 'மக்கள் முன்னுள்ள அரச பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு', 'மக்கள் ஆட்சியா? பயங்கரவாத ஆட்சியா?', 'மக்கள் குரலுக்கு செவி கொடு', 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அத்தோடு 'அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்', 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தைக் கிழித்தெறிவோம்', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவுக்குத் தடைவிதிப்போம்', 'நீதிக்காகத் துணையிருப்போம்', 'உரிமைகளை வென்றெடுப்போம்', 'விடிவுக்காக செயற்படுவோம்', 'நமக்காகக் குரல்கொடுப்போம்' என்றவாறு பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாகப் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர்.

அதன்படி இத்தொடர் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், இதுபற்றி பொதுமக்கள் அவதானம் செலுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், '1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை மக்களை வெகுவாகப் பாதித்த பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. அவ்வேளையில் இச்சட்டம் தம்மைப் பாதிக்காது என பெரும்பான்மையின மக்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் காலப்போக்கில், குறிப்பாக 'அரகலய' போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் இச்சட்டம் அவர்களுக்கு எதிராகவே பிரயோகிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி 1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது. அதன்விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்கள், இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும்' எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஏற்கனவே பல தசாப்தகாலமாக கல்வி, சுகாதாரம், இருப்பிடம் என அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்து போராடிவரும் மலையக சமூகம், இவ்வாறான சட்டங்களினால் இன்னமும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவு வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238609

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.