Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகா சிவராத்திரி விரதம் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகா சிவராத்திரி விரதம் இன்று

Feb 15, 2026 - 06:15 AM

மகா சிவராத்திரி விரதம் இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது.

ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் அனுட்டிக்கப்படுகின்றது.

2026-ஆம் ஆண்டில், இவ்விரதமானது இன்று (15) நாடு முழுவதும் பக்திப் பெருக்குடன் அனுசரிக்கப்படுகிறது.

சிவராத்திரி கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன.

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் "யார் பெரியவர்?" என்ற போட்டி எழுந்தபோது, சிவன் ஒரு பெரும் ஜோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

அதன் அடி மற்றும் முடியைக் காண முடியாதபடி நின்ற அந்த நாளை 'சிவராத்திரி' என்கிறோம்.

அதேநேரம் சிவபெருமானும் அன்னை பார்வதியும் மணந்து கொண்ட புனிதமான இரவாகவும் இது கருதப்படுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 'ஆலகால' விஷத்தை, உலகைக் காக்க சிவன் உண்டார்.

அந்த விஷம் அவர் தொண்டையிலேயே தங்கிவிட, அவர் மயக்கமடையாமல் இருக்க தேவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து வழிபட்ட இரவே சிவராத்திரி என்றும் பல்வேறு புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றது.

"சிவராத்திரி" என்றால் "சிவனின் இரவு" என்று பொருள். இந்த நாளில் அடியவர்கள் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி, இறைச் சிந்தனையோடு விழித்திருப்பது ஆன்மீக முன்னேற்றத்தைத் தரும்.

"ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் இந்த ஒரு நாள் விரதத்தினால் நீங்கும்" என்பது ஐதீகம்.

உடல் தூய்மைக்காகவும் மன ஒருமைப்பாட்டிற்காகவும் உணவு உட்கொள்ளாமல் இருப்பது.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பது. இது அறியாமை எனும் உறக்கத்திலிருந்து விடுபட்டு ஞானம் பெறுவதைக் குறிக்கும்.

சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், நெய், இளநீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது.

இரவு முழுவதும் 'ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரிப்பது.

மகா சிவராத்திரி என்பது நம்முள்ளே இருக்கும் ஆன்மாவைத் தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்பு. சிவமே அன்பு, அன்பே சிவம் என்ற தத்துவத்தை உணர்ந்து, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடுத்து இறைவனிடம் சரணடைவதே இந்த நன்னாளின் உண்மையான நோக்கமாகும்.

இன்றைய தினம் இலங்கையில் உள்ள பல சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் சிவராத்திரி விரத விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmln0wmgf0001356ndg6bsfps

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறியாமையைத் தோற்கடிக்க அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து போராட வேண்டும்

Feb 15, 2026 - 04:15 PM

அறியாமையைத் தோற்கடிக்க அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து போராட வேண்டும்

இனம், மதம், குல வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து, அறியாமையைத் தோற்கடிப்பதற்காகப் போராட வேண்டிய தருணம் வந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். 

இன்றைய (15) மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானுக்காக பூஜை வழிபாடுகள் நடத்தும் மகா சிவராத்திரி தினம் இன்றாகும். 

இந்துக்களின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், தனது தேவி பார்வதியுடன் இணைவதையும், அவரது தெய்வீக நடனமான 'தாண்டவ நடனத்தை' ஆடுவதையும் மகா சிவராத்திரி குறிக்கின்றது. 

அறியாமை எனும் இருளை அகற்றி, வாழ்க்கையை வெற்றிக்கொள்வதைக் கொண்டாடுவதே மகா சிவராத்திரியின் நோக்கமாகும். 

அந்த உன்னத நோக்கத்தை மனதில் கொண்டு, இரவு முழுவதும் விழித்திருந்து, விரதம் அனுஷ்டித்து சிவபெருமானுக்கு பூஜை வழிபாடுகளை இந்து பக்தர்கள் இன்று மேற்கொள்கின்றனர். 

வரலாற்றில் முன்னெப்பொழுதையும் விட, ஒரு நாடாக நமது கண்களை மூடியுள்ள அறியாமை எனும் இருண்ட திரையை கிழித்தெறிய ஒரு தேசத்திற்கு ஞானம் தேவைப்படும் தருணம் இது. 

பொய், புரட்டு மற்றும் ஏமாற்று வேலைகள் ஆட்சி செய்யும் தருணம் இது. இந்த மண்ணில் வாழும் மக்களிடையேயும், கலாச்சாரங்களுக்கு இடையேயும் மிக சூட்சுமமாக பிளவுகள் விதைக்கப்பட்டுள்ள தருணம் இது. 

இனம், மதம், சாதி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து, அந்த அறியாமையைத் தோற்கடிக்கப் போராட வேண்டிய நேரம் இது. 

அந்த வகையில், மகா சிவராத்திரி வழங்கும் செய்தி நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். 

இன்று ஏற்றப்படும் தீபத்தின் ஒளியைப் போலவே, நம் இதயங்களிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் பிரகாசிக்கட்டும் என்றும், அறியாமை, பிளவுகள் மற்றும் வறுமை அகலட்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். 

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து இந்து சகோதர சகோதரிகளுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி, மகிழ்ச்சியும் அமைதியும் மலரும் இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது வாழ்த்துச் செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmlnmawji0002356nobgnjlbl

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்

Feb 15, 2026 - 06:10 PM

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார். 

இதன்போது பிரதமர், மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டார்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://adaderanatamil.lk/news/cmlnqg2mb0008356n143dpd71

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.