Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை ; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

Published By: Digital Desk 3

15 Feb, 2026 | 03:42 PM

image

ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி (Alexei Navalny), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு 'தவளை விஷமே' காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட 05 ஐரோப்பிய நாடுகள் அதிரடி ஆதாரங்களை வெளியிட்டுள்ளன.

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரிட்டன் வெளிவிவகார செயலர் யவெட் கூப்பர்,

நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் 'எபிபாடிடைன்' எனப்படும் மிக அரிதான நரம்பு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நச்சு தென்னமெரிக்காவின் காடுகளில் வாழும் ஒரு வகை விஷத் தவளைகளில் இருந்து எடுக்கப்படுபவை.

இது மார்ஃபினை விட 200 மடங்கு அதிக வீரியம் கொண்டது. இது உடலில் சென்றால் தசைப் பிடிப்பு, பக்கவாதம், சுவாச செயலிழப்பு ஏற்பட்டு மிக விரைவாக மரணம் நிகழும்.

பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்த அரிதான நச்சுத்தன்மை கொண்ட விஷம் ரஷ்யாவின் இயற்கையில் எங்கும் காணப்படுவதில்லை. நவால்னி சிறையில் இருந்தபோது அவருக்கு இந்த விஷத்தைச் செலுத்த ரஷ்ய அரசுக்கு மட்டுமே வாய்ப்பும், நோக்கமும் இருந்தது. எனவே அவரது மரணத்திற்கு கிரெம்ளின் மாளிகையே முழுப் பொறுப்பு."

தமது கணவர் கொல்லப்பட்டதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் கிடைத்துள்ளமை தொடர்பில் அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா,

"முதல் நாளிலிருந்தே என் கணவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தற்போது அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. புட்டின் ஒரு கொலைகாரர், அவர் இதற்காகப் பதில் சொல்லியே ஆகவேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா வழக்கம் போல மறுத்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் திட்டமிடப்பட்ட "தகவல் யுத்தம்" எனவும், தங்கள் நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பவே இத்தகைய பொய்களைப் பரப்புவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/238718

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் மகன் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் – நவால்னியின் தாய்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் விஷம் கொடுத்து நிகழ்த்தப்பட்டதாக வெளியான மதிப்பீடு, “என் மகன் கொலை செய்யப்பட்டார்” என்ற தனது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் மகனின் கல்லறையை அவரது மரணத்தின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் பார்வையிட்ட லியுட்மிலா நவால்னயா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு உயிரிழந்த நவால்னி, தவளை விஷத்திலிருந்து உருவாக்கப்பட்ட நச்சுப் பொருள் மூலம் கொல்லப்பட்டார் எனவும், “இந்த உயிர்க்கொல்லி நச்சை பயன்படுத்தும் திறன், நோக்கம் மற்றும் வாய்ப்பு ரஷ்ய அரசுக்கு மட்டுமே இருந்தது” எனவும் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

என் மகன் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் – நவால்னியின் தாய் | Navalny S Mother Says Knew He Was Murdered

ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு இது தெரியும் எனவும் தமது மகன் சிறையில் இயல்பாக இறக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தமக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா தீவிரமாக மறுத்துள்ளது. ரஷ்ய அரசாஙக்ப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் “இந்த குற்றச்சாட்டுகளை எங்களால் ஏற்க முடியாது.

அவை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளார். நாம் உண்மையை அடைந்துள்ளோம்; ஒருநாள் நீதியையும் பெறுவோம்,” என நவால்னியின் மனைவி யுலியா நவால்னயா சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

47 வயதான நவால்னி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/navalny-s-mother-says-knew-he-was-murdered-1771266916

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை கொல்ல இந்த 'விஷ தவளை' பயன்படுத்தப்பட்டதா?

விஷத்தன்மையுள்ள தவளை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு, விஷ டார்ட் தவளை தோலின் மீது சுரக்கக்கூடிய எபிபடிடின் விஷம்தான் அலெக்ஸி நவால்னியின் மரணத்திற்கு காரணம் என ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தென் அமெரிக்காவில் உள்ள 'விஷ டார்ட் தவளைகளில்' காணப்படும் ஒரு கொடிய நச்சைப் பயன்படுத்தி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டார் என்று பிரிட்டனும் அதன் சில ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன.

"நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எபிபடிடின் (epibatidine) தடயங்கள் கண்டறியப்பட்டன. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சைபீரிய சிறைச்சாலையில் அவரது மரணத்திற்கு காரணமாக அமைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது" என்று பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சை பிரயோகிப்பதற்கான "வழிமுறைகள், நோக்கம் மற்றும் வாய்ப்பு" ஆகியவை ரஷ்ய அரசிடம் மட்டுமே இருந்ததாக பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யா இந்த ஆய்வு முடிவை "ஒரு தகவல் பிரசாரம்" என்று நிராகரித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அந்த நச்சு எது?

எபிபடிடின் என்பது விஷ டார்ட் தவளையின் தோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு இயற்கை நியூரோடாக்ஸின் (neurotoxin) நச்சு என்று நச்சுயியல் நிபுணர் ஜில் ஜான்சன் கூறுகிறார்.

இது மார்ஃபினை விட "200 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது" என்று அவர் பிபிசி ரஷ்ய மொழி சேவையிடம் தெரிவித்தார்.

எபிபடிடின் இயற்கையாக தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் விஷ டார்ட் தவளைகளில் காணப்படுகிறது. இதனை, ஒரு ஆய்வகத்திலும் தயாரிக்கலாம்.

'பிடிக்கப்பட்ட விஷ டார்ட் தவளைகள் இந்த நச்சுத்தன்மையை உற்பத்தி செய்வதில்லை, இது ரஷ்யாவில் இயற்கையாகக் காணப்படுவதில்லை' என்று ஐரோப்பிய நாடுகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளன.

அந்தோணியின் விஷ டார்ட் தவளை மற்றும் பேண்டஸ்மல் விஷத் தவளை என அறியப்படும் இனங்கள் தங்களது தோலில் இந்த நச்சைச் சுரக்கும்.

வலி நிவாரணி மற்றும் நுரையீரல் அழற்சி நிலைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு எபிபடிடின் ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும், அதன் நச்சுத்தன்மை காரணமாக அது மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

அலெக்ஸி நவால்னி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அலெக்ஸி நவால்னி

தவளை விஷம் எப்படி வேலை செய்கிறது?

ஜான்சனின் கூற்றுப்படி, இந்த சக்தி வாய்ந்த ரசாயன கலவை நரம்பு மண்டலத்தில் உள்ள நிகோடினிக் ஏற்பிகளின் மீது செயல்படுகிறது.

ஏனெனில் இது இந்த நரம்பு ஏற்பிகளை அதிகப்படியாகத் தூண்டுகிறது, இது சரியான அளவில் செலுத்தப்பட்டால், தசை துடிப்பு, முடக்கம், வலிப்பு, குறைந்த இதயத் துடிப்பு, சுவாச செயலிழப்பு மற்றும் இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

பிஏ செய்தி முகமையிடம் லீட்ஸ் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் நச்சுயியல் பேராசிரியர் அலஸ்டெர் ஹே, ''இதன் விளைவுகள் சுவாசம் தடைபட வழிவகுக்கும். இந்த நஞ்சால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத் திணறலால் இறக்க நேரிடும்" என்று கூறினார்.

ஒருவரின் ரத்தத்தில் இந்த நச்சு காணப்படுவது "திட்டமிட்ட முறையில் அது செலுத்தப்பட்டதையே உணர்த்துகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

"சில பிற மருந்துகளுடன் சேர்த்துச் செலுத்துவதன் மூலம் எபிபடிடின் நச்சுத்தன்மை அதிகரிக்கப்படலாம், இந்த சேர்க்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன," என்று ஹே கூறினார்.

அலெக்ஸி நவால்னி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அலெக்ஸி நவால்னி சிறையில் இருந்தபோது

இந்த நச்சு எவ்வளவு அரிதானது?

எபிபடிடின் மிகவும் அரிதானது மற்றும் ஒரே ஒரு புவியியல் பிராந்தியத்தில் மட்டுமே மிகக் குறைந்த அளவில் காணப்படுகிறது என்று ஜான்சன் கூறினார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிறரால் குறிப்பிடப்பட்ட விஷத் தவளை, ஈக்வடார் மற்றும் பெருவைச் சேர்ந்த 'அந்தோணியின் விஷ டார்ட் தவளை' என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

எபிபடிடினை உருவாக்கும் ஆல்கலாய்டுகளை (ஒரு வகை கரிம கலவை) உற்பத்தி செய்யத் தேவையான சரியான உணவுகளை உண்பதன் மூலம் தவளைகள் இந்த ரசாயனத்தை (எபிபடிடின்) உற்பத்தி செய்து அதைத் தங்கள் தோலில் சேமிக்கின்றன.

தவளையின் உணவு மாறினால், அதன் எபிபடிடின் இருப்பு தீர்ந்துவிடும்.

''தேவையான ஆல்கலாய்டுகளை உருவாக்க சரியான உணவைத் துல்லியமாக உண்டு கொண்டிருக்கும் ஒரு காட்டு தவளையை சரியான இடத்தில் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட முடியாத விஷயம்'' என்று ஜான்சன் கூறினார்.

"இது மனிதர்களுக்கு விஷம் கொடுக்கும் ஒரு நம்பமுடியாத அரிதான முறையாகும். எனக்குத் தெரிந்த மற்ற எபிபடிடின் விஷ பாதிப்புகள் ஆய்வகத்தில் ஏற்பட்டவை என்பதுடன் அவை உயிரிழப்பை ஏற்படுத்தாதவை."

ரஷ்யா என்ன கூறியுள்ளது?

நவால்னி இந்த மர்மமான நச்சால் இறந்ததை ஐரோப்பிய ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் சனிக்கிழமை தெரிவித்தன.

நவால்னி இயற்கையான காரணங்களால் இறந்ததாக மாஸ்கோ முன்பு கூறியிருந்தது, இருப்பினும் நவால்னியின் மனைவி யூலியா நவால்னாயா தனது கணவர் விஷம் கொடுத்து "கொலை செய்யப்பட்டதாக" தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.

லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், நவால்னியின் மரணத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை மறுத்தது மற்றும் இந்த ஆய்வு முடிவுகளை "மேற்கத்திய கற்பனையாளர்களின் உயிரற்ற பிரசாரம்" என்று விவரித்தது.

ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ்ஸிடம்,"அனைத்துப் பேச்சுக்களும் அறிக்கைகளும் மேற்கின் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில் செய்யப்படும் ஒரு தகவல் பிரசாரமாகும்," என்று கூறினார்.

முன்னாள் பிரிட்டன் மற்றும் நேட்டோ மூத்த அதிகாரியும், ரசாயன ஆயுத நிபுணருமான ஹமிஷ் டி பிரெட்டன்-கோர்டன், நவால்னியின் மரணம் உட்பட ரஷ்யா எதைச் சொன்னாலும் அதை "சந்தேகத்துடன்தான்" மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அவர் பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் பேசுகையில், நேட்டோ நாடுகள் "நவால்னி அரசால் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் தங்களிடம் இருப்பதை நிரூபித்துள்ளன" என்று கூறினார்.

அவர் இறக்கும் போது, நவால்னி மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருந்திருந்தார்.

ரஷ்யாவின் கூற்றுப்படி, 47 வயதான அவர் ஒரு சிறிய நடைப்பயணம் மேற்கொண்டார், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார், பின்னர் சரிந்து விழுந்தவர் மீண்டும் சுயநினைவை பெறவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq6qyr3p596o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.