Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன?

ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி ஓ.பன்னீர் செல்வம் கூறியது என்ன?

பட மூலாதாரம்,ANI

20 பிப்ரவரி 2026, 10:01 GMT

புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப்ரவரி 20) தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

அந்தச் சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" எனக் கூறினார்.

அதற்கு முன்னதாக, இன்று சட்டப்பேரவையில் பேசிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன், "எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியோடு, ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் மீண்டும் முதல்வராக வேண்டும்" எனக் கூறினார்.

அப்போது ஓ.பன்னீர் செல்வமும் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம், திமுக

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன்

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்எல்ஏ பேசியது என்ன?

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதிலுரை வழங்கினார்.

அதிமுக உறுப்பினர்கள், அன்புமணி தலைமையிலான பாமக உறுப்பினர்கள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இந்தப் பதிலுரையை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன், "முதல்வரின் காலை உணவு திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் ஏற்படுத்தப்பட்ட திட்டம். ஆரம்பப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தாயாக இருந்து முதலமைச்சர் உணவு வழங்கி வருகிறார். காலை உணவு திட்டத்துக்காக தமிழ் சமுதாயம் இருக்கும் வரை முதலமைச்சரை பாராட்டிக் கொண்டிருப்பார்கள்." என்று கூறினார்.

மேலும், "வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆசியோடும், புரட்சி தலைவி அம்மா ஆசியோடும், மீண்டும் மீண்டும் வரவேண்டுமென இந்த நேரத்தில் அவரை வாழ்த்துகிறேன். என் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் பேசியதைக் கேட்டு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வமும் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம், திமுக

பட மூலாதாரம்,@Udhaystalin/X

படக்குறிப்பு,கடந்தாண்டு ஜூலை மாதம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் (கோப்புப் படம்)

'திமுகவில் இணைவா?'

சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர், முதலமைச்சரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான ஆட்சிக்கு, முதலமைச்சரை சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்." எனக் கூறினார்.

அப்போது உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "தமிழக மக்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அதை அவர் சொல்லியிருக்கிறார்" என்று கூறினார்.

"அது பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை, ஆட்சியின் நிலை, 5 ஆண்டுகள் திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் பதிந்திருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் கூறினார்.

திமுகவில் இணையப்போகிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "பொறுத்திருந்து பாருங்கள்" என்று மட்டும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce8n2v3rp2eo

  • கருத்துக்கள உறவுகள்

கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன?

தமிழ்நாட்டு அரசியல் என்பது ஒரு வகை வியாபாரம். பணச்சலவைகள் மிகுந்த இடம்.

பாலைவனம் போன்ற பூமியில் பூங்காவனம் அமைத்து காட்டுவது போல் ஒரு பிரமையை உருவாக்கி காட்டுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஸ்டாலின் அனைவரையும் அரவணைக்கிறார், எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி' - திமுகவில் இணைந்தபின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் - என்ன நடக்கிறது?

27 பிப்ரவரி 2026, 04:37 GMT

புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வருபவருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 27) சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

"அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் வெள்ளிக்கிழமை திமுகவில் இணையக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பனும் திமுகவில் இணைந்தார்.

அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

அதன்பிறகு, தலைமைச் செயலகம் சென்ற பன்னீர்செல்வம், தனது போடிநாயாக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினாதார். அவருடன் அய்யப்பனும் தனது உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் - என்ன நடக்கிறது?

ஓ.பன்னீர் செல்வம் கூறியது என்ன?

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்" என்று கூறினார்.

"தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அனைவரும் மீண்டும் இந்த ஆட்சியையே விரும்புகிறார்கள். உறுதியாக, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கும்" என்றும் அவர் கூறினார்.

"அரசியலில் ஒரு சர்வாதிகாரியாக, ஆணவப் போக்குடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளார்" என்று கூறினார்.

"இன்றைக்கு அரசியலில் அண்ணா காட்டிய வழியிலும், கலைஞர் (கருணாநிதி) காட்டிய வழியிலும் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியலை முதலமைச்சர் மேற்கொள்கிறார் என்பதை உணர்ந்து தான் நான் திமுகவில் இணைந்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

"திராவிட இயக்கத்தின் நூற்றாண்டில், அதை அழிப்பதற்கான பல முயற்சிகள் எந்தச் சூழலில், எப்படி ஏற்பட்டாலும் அதை தடுத்து, திராவிட இயக்கத்தை கட்டிக் காப்பதில், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் நின்று, திராவிட சித்தாந்தத்தை காப்பதில் முதலமைச்சர் முன்னிலையில் உள்ளார்." என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

"அதிமுகவில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியில் சர்வாதிகாரத்தோடு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் அந்தப் பதவியில் அமர்ந்த பிறகு, அதிமுகவை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றுகொண்டிருக்கிறார். இதை நினைத்து தான் பல அதிமுக தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்கிறார்கள். தென்மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் பழனிசாமி கவனத்துடன் இருக்கிறார்" என்று அவர் கூறினார்.

"திராவிட இயக்கத்தை காக்க, திராவிட கொள்கையைக் காக்க, தமிழ்நாட்டைக் காப்பதற்கும், வளர்ச்சிக்கும் ஒரு தலைசிறந்த இயக்கமாக திமுக விளங்கி வருகிறது என்பதை உணர்ந்து தான், நான் இன்று திமுகவில் இணைந்துள்ளேன். என்னை அரவணைத்துக் கொண்ட முதல்வருக்கு நன்றி. நான் ஒரு தொண்டனாகவே இணைந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், "வரும் சட்டப்பேரவை தேர்தலில், தளபதி ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது என்ன?

"முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர். அவரது வரவு நல்வரவாகட்டும்" என்றும் தனது பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg8ky3zmy2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.