Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம் - நேரலை தகவல்

உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம்,Getty Images

20 பிப்ரவரி 2026, 15:23 GMT

புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

(இச்செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை விதித்தது.

ஆகஸ்ட் 2025 இல், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது, ஆனால் அவை அமலில் இருக்க அனுமதிக்கப்பட்டன.

அந்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வெள்ளை மாளிகை கோரிக்கை வைத்ததால், விவகாரம் இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

நீதிபதிகள் கூறியது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

நீதிபதிகள் கூறியது என்ன?

அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், டிரம்ப் தனது அதிகாரங்களை மீறி தேசிய அவசரநிலைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியது.

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் வரிகளை விதிக்க அனுமதிக்கவில்லை என நீதிபதிகள் கூறினர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் வரி ரத்துக்கு ஆதரவாகவும், 3 பேர் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் இருந்தனர். ஆனால், பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவு இருந்ததால் வரி ரத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட வரி

ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பொருட்களுக்கு வரிகளை அறிவித்தார்.

இந்த வரிகள் மூலம், அரசுக்கு வரும் வரிவசூல் அதிகரிக்கும், அமெரிக்கர்கள் அதிகமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவார்கள், அமெரிக்காவில் முதலீடு அதிகரிக்கும் என டிரம்ப் கூறினார்.

ஆனால் விமர்சகர்கள், இதனால் பொருட்களின் விலை உயரக்கூடும் என்றும், உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறினர்.

பிற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க தான் விரும்புதாக டிரம்ப் கூறினார்.

டிரம்பால்அறிவிக்கப்பட்ட பல வரிகள் பின்னர் திருத்தப்பட்டன அல்லது தாமதப்படுத்தப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly1zx1nzgjo

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் வரி ரத்துக்கு ஆதரவாகவும், 3 பேர் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் இருந்தனர். ஆனால், பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவு இருந்ததால் வரி ரத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றின் 9 நீதிபதிகளில் 6 பேர் குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள்.

இதனால் ரம்பும் எதற்கெடுத்தாலும் தமக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவார்கள்

என்று எண்ணி எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்று செல்வார்.

இந்த தீர்ப்பு எல்லோருக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.