Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாகப பரவி வரும் இணையவழி மோசடி மையங்கள் (Cyber-enabled fraud compounds), மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது.

கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இத்தகைய மையங்கள் ஒரு "தன்னிறைவு பெற்ற நகரங்கள்" போலச் செயல்படுவதாகவும், அங்கு சுமார் 3 இலட்சம் பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விளம்பரங்கள்

குறிப்பாக மேகாங் (Mekong) பிராந்தியத்தில் மட்டும் இந்த மோசடித் தொழில் ஆண்டுக்கு சுமார் $43.8 பில்லியன் டொலர் மதிப்பிலான வருவாயை ஈட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை | Cyber Fraud Hubs In Southeast Asia Un Report

இங்கு பணிபுரியும் நபர்கள் பெரும்பாலும் அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, ஆள் கடத்தல் முறையில் உள்ளே கொண்டு வரப்படுகின்றனர்.

அங்கு அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, கம்பிவேலிகளால் சூழப்பட்ட வளாகங்களுக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

இலக்குகளை எட்டத் தவறுபவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும், மின்சார அதிர்ச்சி, பாலியல் வன்கொடுமை மற்றும் பட்டினி போன்ற சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றவியல் மாநாட்டை

குறிப்பாக, சமூக ஊடகங்கள் மூலம் நபர்களைக் கண்டறியவும், போலி உரையாடல்களை உருவாக்கவும் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இந்தக் குற்றக் கும்பல்கள் பயன்படுத்துவது கவலையளிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை | Cyber Fraud Hubs In Southeast Asia Un Report

இந்த மோசடி மையங்கள் அரசு அதிகாரிகளின் பின்னணியுடன் செயல்படுவதால், சட்ட அமுலாக்கத் துறையினரால் இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

தவிர்க்க மேற்கொள்ளப்படும் பல சோதனைகள் வெறும் "கண் துடைப்பு" நடவடிக்கைகளாகவே முடிந்துவிடுகின்றன.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் குற்றவியல் மாநாட்டை (UN Crime Congress) முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்குப் தீர்வு காண வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் அவர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

https://tamilwin.com/article/cyber-fraud-hubs-in-southeast-asia-un-report-1771740898

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்கிழக்காசியாவில் செயல்படும் மோசடி கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – எஃப்.பி.ஐ. எச்சரிக்கை

Published By: Priyatharshan

25 Feb, 2026 | 05:06 PM

image

தென்கிழக்காசியாவில் தொழில்துறை அளவில் செயல்படும் சர்வதேச மோசடி கும்பல்களுக்கு எதிராக அமெரிக்காவின் கூட்டாட்சி விசாரணைப் பணியகம் (FBI) கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதென அந்த அமைப்பின் துணை உதவி பணிப்பாளர் ஸ்கொட் ஷெல்பிள் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க வெளியுறவுத்துறையின் Asia Pacific Media Hub ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய அவர், சமீபத்தில் தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தென்கிழக்காசியாவில் சீன அமைப்பு சார்ந்த குற்றச்செயல் கும்பல்கள் நடத்தும் மோசடி மையங்கள் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருவதாகவும், அவை தினமும் அமெரிக்கர்களை குறிவைத்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“இவை தனிப்பட்ட அல்லது சிறிய குற்றச்செயல்கள் அல்ல. நவீன தொழில்நுட்பம், எல்லை தாண்டிய அமைப்பு மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட பல கூறுகளை பயன்படுத்தி, மிகப்பெரிய லாபம் ஈட்டும் அமைப்புகளாக செயல்படுகின்றன” என அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டில் மட்டும், எஃப்பிஐயின் Internet Crime Complaint Center (IC3) மூலம் 80,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும், மொத்த நிதி இழப்பு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மோசடி மையங்களில் பணிபுரிபவர்களில் பலர் மனித கடத்தலுக்குள்ளானவர்களாக இருப்பதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவை வெறும் இணைய மோசடிகள் அல்ல; இது அமைப்புசார்ந்த குற்றச்செயல். மனித கடத்தல், பணமோசடி மற்றும் ஊழல் அனைத்தும் இதில் கலந்துள்ளன,” என அவர் தெரிவித்தார்.

கம்போடியா, தாய்லாந்து அல்லது வியட்நாம் போன்ற நாடுகளில் மட்டும் இந்த பிரச்சினை இருப்பதாக கருத முடியாது என்றும், இது முழு பிராந்தியத்தையும் பாதிக்கும் ஒரு சிக்கலாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு நாட்டில் அழுத்தம் அதிகரித்தால், இந்த கும்பல்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. எனவே, எல்லை தாண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கையே முக்கியம்,” என அவர் தெரிவித்தார்.

தாய்லாந்து பொலிஸ், கம்போடிய தேசிய பொலிஸ் மற்றும் வியட்நாம் பொது பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் எஃப்பிஐ நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும், கூட்டு விசாரணை அணிகள் மூலம் பல வெற்றிகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்கர்களை குறிவைக்கும் “Pig Butchering” என அழைக்கப்படும் முதலீட்டு மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக, அறிமுகமற்ற நபர்களின் முதலீட்டு வாய்ப்புகளை சரிபார்க்காமல் நம்ப வேண்டாம், உண்மையான நிதி நிறுவனங்களைப் போல தோற்றமளிக்கும் போலி இணையதள முகவரிகளை கவனிக்கவும், சந்தேகமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், “அதிக லாபம்” வாக்குறுதி அளிக்கும் திட்டங்களை எச்சரிக்கையுடன் அணுகவும், “உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு நல்லதாகத் தோன்றினால், அது மோசடியாக இருக்க வாய்ப்பே அதிகம்” என அவர் எச்சரித்தார்.

குற்றவாளிகள் புவியியல் எல்லைகள் தங்களை பாதுகாக்கும் என நினைக்கக் கூடாது எனவும், அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது எஃப்பிஐ மட்டும் செய்யக்கூடிய வேலை அல்ல. சர்வதேச ஒத்துழைப்பே வெற்றியின் விசை,” என அவர் நிறைவுரையில் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/239574

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.