Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு

Published By: Digital Desk 1

22 Feb, 2026 | 03:04 PM

image

இந்திய கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'MILAN - 26' பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு ஆகியவற்றில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்தியக் கடற்கரைப் பகுதியில் இந்த பிரம்மாண்டமான சர்வதேச கடற்படை கண்காணிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை கடற்படைத் தளபதி இதில் பங்கேற்றார்.

அத்துடன், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 'சாகர' மற்றும் 'நந்திமித்ர' ஆகிய போர்க்கப்பல்கள் இந்த சர்வதேச அணிவகுப்பில் இணைந்துகொண்டன. இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட போர்க்கப்பல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இது பரஸ்பர புரிதலின் அடிப்படையில் பிற மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் கடல்சார் இலட்சியங்கள் மற்றும் சவால்களை முறியடிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. மேலும், இதுபோன்ற சர்வதேச கடல்சார் மற்றும் கடற்படைப் பயிற்சிகளில் பிரதிநிதித்துவம் செய்வது மற்ற கடல்சார் பங்குதாரர்களுடன் பரஸ்பர ஒத்துழைப்பையும், இயங்குதன்மையையும் மேம்படுத்தும்.

மேலும், கடல்சார் பாதுகாப்புக்கான கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவதில் அவசியமான புதிய அறிவு, மூலோபாய அணுகுமுறைகள் மற்றும் கடல்சார் செயல்பாடுகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது போன்ற பல நன்மைகளைப் பெற இலங்கை கடற்படைக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற இலங்கை கடற்படைத் தளபதி, பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகளுடன் இருதரப்பு சார்ந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றார், மேலும் இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து மூலோபாய அளவிலான கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2026-02-22_at_14.31.09.jpWhatsApp_Image_2026-02-22_at_14.31.15.jp

WhatsApp_Image_2026-02-22_at_14.31.17.jp

WhatsApp_Image_2026-02-22_at_14.31.17__1

WhatsApp_Image_2026-02-22_at_14.31.21.jp

WhatsApp_Image_2026-02-22_at_14.31.05.jp

WhatsApp_Image_2026-02-22_at_14.31.03.jp

WhatsApp_Image_2026-02-22_at_14.31.03__1

WhatsApp_Image_2026-02-22_at_14.31.00.jp

https://www.virakesari.lk/article/239303

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்படையின் ஏற்பாட்டிலான சர்வதேச கடற்படை மதிப்பாய்வு மற்றும் MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி நிறைவடைந்து 'சாகர', 'நந்திமித்திர' கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன

03 Mar, 2026 | 07:19 PM

image

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெற்ற MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல்சள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகிய கப்பல்கள், பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், பெப்ரவரி 27ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த இரண்டு கப்பல்களையும் கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

பிராந்திய மற்றும் உலகளாவிய பங்குதாரர்கள் பங்குபற்றிய (United Through Oceans) என்ற கருப்பொருளின் கீழ் நடைப்பெற்ற சர்வதேச கடற்படை கண்காணிப்பிலும், (Camaraderie Cohesion Collaboration) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற MILAN-26 பலதரப்பு கடற்படைப் பயிற்சியிலும் இலங்கை கடற்படை பங்கேற்றதன் மூலம், பரஸ்பர புரிதல் மூலம் கடல்சார் பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், கூட்டு அணுகுமுறை மூலம் கடல்சார் அபிலாஷைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் பதிலளிப்பதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பு பிரதிபலித்தது.

அதன்படி, துறைமுக அத்தியாயம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும், சர்வதேச கடல்சார் மாநாட்டில் பங்கேற்கவும் தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. 

சாகர மற்றும் நந்திமித்திர கப்பல்களின் அங்கத்துவ குழுவினர்கள், கலாச்சார நடவடிக்கைகள், தொழில்முறை தொடர்புகள், போர்க்கப்பல்களின் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்த கண்காணிப்பு சுற்றுப்பயணங்கள், சர்வதேச நகர அணிவகுப்பு மற்றும் உணவு கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். 

இந்தப் பயிற்சி, இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்பையும் மேலும் மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் நடனக் குழுவும் இந்த வண்ணமயமான நிகழ்விற்கு பங்களித்தன.

MILAN-26 பலதரப்பு கடற்படைப் பயிற்சியின் சமுத்திரஅத்தியாயம், கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளுக்கு இடையேயான இயங்குதன்மை மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், அறிவைப் பரிமாறிக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட சிக்கலான கடற்படைப் பயிற்சிகளைக் கொண்டிருந்ததுடன், நட்பு நாடுகளைச் சேர்ந்த 18 போர்க்கப்பல்கள் மற்றும் 29 விமானங்கள் உட்பட 42 நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற இந்தப் பயிற்சியில், போர் அமைப்புகளில் கப்பல்கள் நகருதல், துப்பாக்கிச் சூடு பயிற்சிகள், நீருக்கடியில் போர் பயிற்சிகள் மற்றும் கப்பல்களில் உலங்கு வானூர்திகளை தரையிறக்குதல் உள்ளிட்ட பல பயிற்சிகளும் இடம்பெற்றன.

மேலும், பல பிராந்திய மற்றும் உலகளாவிய கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படையினர் பங்கேற்கும் இத்தகைய கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய மற்றும் உலகளாவிய தரப்பினருடன் ஒரு கூட்டு அணுகுமுறையில் பணியாற்றுவதில் தேவையான பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பது, கடல்சார் செயல்பாடுகள் தொடர்பான புதிய அறிவு, திறன்கள், சிறந்த நடைமுறைகள், மூலோபாய உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது, புதிய சவால்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை கூட்டாகக் கண்டறிய முடிவது போன்ற பல நன்மைகள் உள்ளன.

9f4ed7d2-4d8e-401a-ad63-ba0d1eead789.jpg

003bcebb-c167-4e49-ba5f-cfe19a7e390f.jpg

42ebc785-5ee1-49da-9bd2-b88c03cda6b5.jpg

b8abe375-4412-4d0d-aa48-9d0e4f66d48e.jpg

7ef706fb-981b-4f37-a87d-0cf12b7d3cb7.jpg

1ad7508e-e651-455c-b946-b0e05108424d.jpg

இந்திய கடற்படையின் ஏற்பாட்டிலான சர்வதேச கடற்படை மதிப்பாய்வு

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQcRCMZbSax64vmRbUShL4

மத்திய கிழக்கில் பயங்கர சண்டை நடந்து கொண்டிருக்கு.

இவங்கள் வேறை... குறுக்க, மறுக்க ஓடிக் கொண்டு இருக்கிறாங்கள்.

குண்டு அடிபட்டு சாகப் போறீங்கள். போய்.. ஓரமா விளையாடுங்க(டா) 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.