Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. -சஜித் பிரேமதாச.-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ttyyuu.jpg?resize=750%2C375&ssl=1

அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. -சஜித் பிரேமதாச.-

இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒரு புறத்தில் அபிவிருத்தியடையும் நாட்டில் இருக்கவேண்டிய சமூக ஒழுக்கம், நாகரிகம் மற்றும் பண்பாடு நாட்டில் மறைந்து வருகின்றன. வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்து பொறுப்புகள் வகிக்கும் அமைச்சர்கள் மதத் தலைவர்களை அவமதித்து, விலங்குகளின் பெயர்களைப் பயன்படுத்தி இழிவுபடுத்தி, அவர்களை தாக்கி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எல்லா மதங்கள், எல்லா மதத் தலைவர்களுக்கும் சமூகத்தில் தகுந்த மரியாதையை வழங்க வேண்டும். பொதுமக்களாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். புத்த சாசனத்தை பாதுகாத்து போஷிப்பது நம்மனைவரினதும் பொறுப்பாகும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதை நிறைவேற்றுவது குடிமக்களாகவும் அரசாங்கமாகவும் கடமை என்றும், மற்ற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கும் தகுந்த இடத்தை வழங்க வேண்டும் என்றும், இது தேசியக் கொள்கையாக இருந்ததால் ரணசிங்க பிரேமதாச அவர்கள் புத்த சாசன அமைச்சையும், சக மதங்களுக்கான இராஜாங்க அமைச்சுக்களையும் உருவாக்கினார். அனைத்து மதங்களையும் பாதுகாப்பது நாட்டின் பொறுப்பாக இருந்தாலும், இன்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் தேரர்களை கேடுகெட்டவன், என்று அழைக்கின்றனர். முகநூல் மூலம் மகா சங்கரத்னத்திற்கும் அருட்தந்தையர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களையும் அவமதித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இவ்வாறு அவமதிப்பவர்களின் நம்பிக்கை மதமற்றதாக இருக்கவேண்டும் என்பதாகும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தான் விரும்பும் எந்த மதத்தையும் நம்பி பின்பற்றும் உரிமை காணப்படுகின்றன. மதமற்றவராக இருப்பதற்கு மக்களுக்கு உரிமை இருந்தாலும் அதை வலுக்கட்டாயமாக பிறர் மீது திணிக்கக்கூடாது. இந்த அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரம் வழங்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேற்கு குப்பியாவத்தை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 700 பேருக்கு பாடசாலை பைகள் வழங்கி வைக்கும் முகமாக ருக்‌ஷான் பெரேரா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மகா சங்கரத்னத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறும், அனைத்து மதத் தலைவர்களையும் இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இழிவான சேறு பூசும் கீழ் தர நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். இவற்றை நிறுத்தி விட்டு நாடு முகம் கொடுத்து வரும் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள். இன்று நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றன. இது குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, அரசாங்கத்தின் பொறுப்பாளர்களின் கூற்றுப்படி அவ்வாறு தட்டுப்பாடு இல்லை என்று கூறினாலும், மக்கள் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இது தான் உண்மை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு காணப்படும் நிலையில், கண்ணுக்குத் தெரிகிற உண்மைகளை அறிந்தும் அரசாங்கம் இவ்வாறே நடந்து கொள்வது அரசாங்கத்தின் அகம்பாவத்தையும் இயலாமையையும் எதுவும் செய்ய முடியாத தன்மையையுமே காட்டுகின்றன. ரணசிங்க பிரேமதாச அவர்கள் ஆரம்பித்த 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஆடை தொழிற்சாலைகள் கூட இன்று மூடப்படும் நிலை உருவாகியிருக்கின்றன. MAS Holding நிறுவனத்தில் தற்சமயம் 96,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 26,000 பேர் தொழில்களை இழக்க இருக்கின்றனர். பணியாளர் எண்ணிக்கையை 70,000 ஆக குறைக்க அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகவே நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும், மக்களின் ஜீவனோபாயதைப் பாதிக்கும் இத்தகைய விடயங்களில் அரசாங்கம் கூடிய அவதானத்துடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த ஆடை தொழிற்சாலைகளை நிறுவியதால் உலகப் புகழ்பெற்ற ஆடை நாமங்கள் நமது நாட்டிலும் தைக்கப்பட்டாலும், இன்று இந்தத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை உருவாகியிருப்பது வருத்தமளிக்கும் விடயமாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை. தற்போதைய அரசாங்கத்தால் அமெரிக்க வரிகளை குறைக்க முடியாமல் போனமையே இதற்கு காரணமாகும். இந்த பேச்சுவார்த்தைகளை சரியாக நடத்த அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது. இன்று ஆட்சியில் இருப்பது தொழிற்சாலைகளை திறந்தவர்கள் அல்ல மாறாக தொழிற்சாலைகளை மூடி, அதற்கு தீயிட்டு தொழிலாளர்களை வீதிக்கு இறக்கியவர்களே ஆட்சிக் கதிரைகளில் இருக்கின்றனர். இவர்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த எந்த புரிதலும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியில் இன மத மோதல்கள் பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் ஆட்சி செய்யும் கொள்கையையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றன. இப்போதாவது இந்த பிற்போக்குவாதங்களை நிறுத்தி விட்டு, மக்களின் தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1466065

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.