Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோ - பசிபிக் பாதுகாப்பு முன்னுரிமை: கொழும்பில் சிறப்பு சைபர் பாதுகாப்பு பயிற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோ - பசிபிக் பாதுகாப்பு முன்னுரிமை: கொழும்பில் சிறப்பு சைபர் பாதுகாப்பு பயிற்சி

Published By: Priyatharshan

24 Feb, 2026 | 12:01 PM

image

( வீ. பிரியதர்சன் )

கடல்சார் பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த, சைபர் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது அவசியம் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் (British High Commission Colombo) தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் University of Plymouth நிபுணர்கள், இலங்கையின் கடல்சார் துறை நிபுணர்களுடன் இணைந்து, கொழும்பிலுள்ள Regional Centre for Maritime Studies மையத்தில் சைபர் பாதுகாப்பு தொடர்பான நடைமுறை திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொண்டனர்.

கடல்சார் துறையில் அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். துறைசார் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து, கடல்சார் தகவல் அமைப்புகள், துறைமுக முகாமைத்துவம் மற்றும் கடற்பாதுகாப்பு அமைப்புகளில் உருவாகக்கூடிய சைபர் அச்சுறுத்தல்களை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றிய நடைமுறை விளக்கங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இந்த பயிற்சி நிகழ்வு, பிரிட்டன் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) Foreign, Commonwealth & Development Office இந்தியப் பெருங்கடல் சார் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம், General Sir John Kotelawala Defence University உடன் கூட்டாண்மையில் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் “சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்” (Free and Open Indo-Pacific) கொள்கையை ஆதரிக்கும் வகையில், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவது முக்கிய முன்னுரிமையாகக் கருதப்படுகின்றது.

பிரிட்டன் மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய கட்டமாக இந்த பயிற்சி அமைகின்றது என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

640152110_1347744610724017_7821840243731

640335627_1347744640724014_6459030802997

640287521_1347744697390675_4909228301156

628641393_1347744650724013_1101410099506

641365828_1347744620724016_3534989539472

https://www.virakesari.lk/article/239441

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.