Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு விஜயம்

24 Feb, 2026 | 06:08 PM

image

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்தார்.

மன்னார் தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்தனர்.

சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

பின்னர் இக்குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு ஆலயத்தின் சுற்றுப்புறங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

634012671_1081400727487867_8282090644487

634698220_1829533691068630_5845198350786

635165599_921788683554398_76537511844281

635093733_901785902635023_18163051962402

638162926_1174778301195450_5616414623549

638170338_1418680959756658_7000307036162

638340901_931837836463729_66989893320668

https://www.virakesari.lk/article/239455

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு விஜயம் செய்தார் சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்

Published By: Digital Desk 3

24 Feb, 2026 | 05:02 PM

image

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள 'ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், இன்று செவ்வாய்க்கிழமை (24) மதியம் யாழ்ப்பாணத்துக்கு சென்றார்.

உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்றனர். அங்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதன்போது, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்ஜுக்கு பொன்னாடை போர்த்தி ஆளுநர், வடக்கு மாகாண சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் விசேடமாக வெளியிடப்பட்ட 'சிவன் யாத்திரைப் பாதை' மற்றும் 'இராமாயண யாத்திரைப் பாதை' ஆகிய நூல்களையும் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'சிவ யாத்திரைப் பாதையில்' உள்ளடங்கும் முக்கிய ஆலயங்களில் ஒன்றாக கீரிமலை நகுலேஸ்வரம் விளங்குவதுடன், ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்ட 'சிவன் யாத்திரை பாதை' நூலிலும் இவ்வாலயத்தின் சிறப்புகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற 2025ஆம் ஆண்டு மகா கும்பமேளாவின் தலைமை அமைப்பாளராகச் செயற்பட்ட சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜின் இந்தப் பயணமானது, இலங்கையின் இராமாயண மற்றும் சிவ யாத்திரைப் பாதைகளை மையப்படுத்திய ஆன்மீகச் சுற்றுலாவை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கும், இந்தியாவிலிருந்து அதிகளவான பக்தர்களை இலங்கையை நோக்கி ஈர்ப்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

IMG-20260224-WA0017.jpg

IMG-20260224-WA0019.jpg

https://www.virakesari.lk/article/239477

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.