Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7yuuu.jpg?resize=507%2C332&ssl=1

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI

கொலம்பியா நாடாளுமன்ற தேர்தலில் AI போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மார்ச் 8 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் AI போட்டியிட உள்ளது.

கொலம்பியாவின் கரீபியன் கடற்கரையில் உள்ள ஜெனு சமூகத்தைச் சேர்ந்த கார்லோஸ் ரெடோண்டோ என்பவர் இந்த AI அவதாரை உருவாக்கி, Gaitana (கைடானா) என பெயரிட்டுள்ளார்.

கைடானா என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த பழங்குடி மக்களின் தலைவி ஆவார்.

இந்த கைடானா ரோபோவின் குரல் மற்றும் நீல நிற தோலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கைடானாவிற்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், வாக்குச்சீட்டில் “IA” என்ற பெயரை தேட வேண்டும். இது “Inteligencia Artificial” என்பதன் ஸ்பானிஷ் சுருக்கம் ஆகும்.

கொலம்பிய சட்டம் மனிதரல்லாத வேட்பாளரை முறையாகப் பதிவு செய்ய அனுமதிக்காததால், கைடானா வெற்றி பெற்றால், கைதானாவின் உத்தரவுகளின்படி செயல்படும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

உதாரணமாக, 200 பக்க மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால், கைடனா அதை முக்கிய தரவுகளைச் சுருக்கமாக மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் Info Graphics வடிவத்திற்கு மாற்றி, 10,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட தனது சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளும்.

பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை, “ஆம்” மற்றும் “இல்லை” என்ற நிலைப்பாடுகளாக வடிகட்டி கைடனா  அவற்றை எண்ணுவார். எந்தப் பக்கம் 50 சதவீதத்திற்கும்அதிகமான ஆதரவை பெறுகிறதோ அதுவே நாடாளுமன்றத்தில் அது எவ்வாறு வாக்களிக்கிறார் என்பதைத் தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

தரவு பாதுகாப்பு மற்றும் மாறுபட்ட கருத்துகளின் ஒருங்கிணைப்பு போன்ற பகுதிகளில் இந்த கைடானாவை இன்னும் மேம்படுத்த வேண்டியது உள்ளதாக அதை உருவாக்கிய ரெடோண்டோ ஒப்புக்கொள்கிறார்.

இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், ஜனநாயக நடைமுறையில் AIயின் நேரடி பங்களிப்பு அவசியமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://athavannews.com/2026/1466304

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.