Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

Mar 4, 2026 - 03:21 PM

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

யாழ்ப்பாணம், வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் எமது மீனவர்கள் குறித்த இரு மீனவர்களையும் தேடி கடலுக்குள் சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறான நிலையில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்துக்கும், கடற்கரையினருக்கும் மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் தகவல் தெரிவித்தோம் ஆனால் ஆறு நாட்களாகியும் இதுவரை எமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த திங்கட்கிழமை கச்சதீவுக்கு அருகாமையில் இந்திய எல்லைக்கு அருகில் குறித்த இரு மீனவர்களையும் கண்டதாகவும் அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கியதாக இந்தியா மீனவர்கள் எமது மீனவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள் என தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

Mar 5, 2026 - 06:18 AM

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை - ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடல் எல்லைக்குள் விட்டுச் சென்ற காணொளி வெளியாகியுள்ள போதிலும், இலங்கை கடற்படையினரால் அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஊரணிப் பகுதியிலிருந்து சிறிய படகில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள், இயந்திரக் கோளாறு அல்லது சீரற்ற காலநிலை காரணமாக திசைமாறி நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். பல நாட்களாக நடுக்கடலில் தவித்த இந்த மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

உடனடியாகச் செயற்பட்ட இந்திய மீனவர்கள், நடுக்கடலில் தவித்த ஈழத்து மீனவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி மனிதாபிமானத்துடன் உதவியுள்ளனர். அத்துடன், அவர்களின் படகினைப் பாதுகாப்பாக இழுத்து வந்து இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த முழுமையான நிகழ்வையும் இந்திய மீனவர்கள் காணொளியாகப் பதிவு செய்து உறவினர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

இந்திய மீனவர்களால் உணவு வழங்கி எல்லைக்குள் விடப்பட்ட காணொளி ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும், சம்பவம் நடைபெற்று ஆறு நாட்கள் கடந்தும் இலங்கை கடற்படையினரால் குறித்த இரண்டு மீனவர்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை எனவும், கிடைக்கப்பெற்றுள்ள காணொளி ஆதாரத்தின் அடிப்படையிலாவது கடற்படையினர் தமது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி, காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்டுத் தர வேண்டும் எனவும் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20260304-WA0007-scaled.jpg?resize=75

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்!

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற் பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது.

இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டு விட்டு சென்றனர்.

பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்கால் சென்ற நிலையில் இன்றைய தினம் ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கபட்டுள்ளது.

https://athavannews.com/2026/1467250

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.