Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

109 ஆவது பொன் அணிகளின் சமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி மோதும் பொன் அணிகளின் சமருக்கு டயலொக் அனுசரணை

Published By: Digital Desk 3

08 Mar, 2026 | 10:58 AM

image

இலங்கையின் வட பகுதியில் பிரசித்திபெற்ற பாடாசலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் அணிக்கும் வட்டுகோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமர் இம் மாதம் 12, 13, 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் முன்னணி இணைப்பு நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இப் போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்குவதுடன் இந்த வருடம் வட்டக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் பொன் அணிகளின் சமர் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட், டோக்கியோ சிமென்ட் நிறுவனம் ஆகியன இணை அனுசரணை வழங்குகின்றன.

இந்தப் போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பானது யாழ்ப்பாணம் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பலவிதமான இடையூறுகளுக்கும் மத்தியில் இந்த போட்டியினை தொடர்ச்சியாக நடாத்தி வருவதாகவும் இந்த இரண்டு பாடசாலைகளும் நட்பில் பிணைந்திருப்பதாகவும் கூறினர்.

பொன் அணிகளின் மாபெரும் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியம் ரி20 கிரிக்கெட் போட்டியும் நடைபெறும்.

இந்த போட்டியை கண்டுகளிப்பதற்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற இரண்டு பாடசாலைகளினதும் உறவுகளும் வருகைதந்து சிறப்பிக்கவுள்ளனர். எனவே அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க, வட பகுதியில் பொன் அணிகளின் சமருக்கு அனுசரணை வழங்குவதையிட்டு பெருமை அடைவதாக டயலொக் ஆசிஆட்டா பிரதிநிதி தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பின்போது அணிகள் அறிமுகம், வீரர்கள் அறிமுகம் மற்றும் வீரர்களுக்கான சீருடைகள் வழங்கல் என்பன இடம்பெற்றன.

20260306_174921.jpg

20260306_175232.jpg

IMG-20260307-WA0000.jpg

IMG-20260307-WA0007.jpg

IMG-20260307-WA0002.jpg

IMG-20260307-WA0005.jpg

20260306_181329.jpg

20260306_181329_2_.jpg

புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி மோதும் பொன் அணிகளின் சமருக்கு டயலொக் அனுசரணை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

109ஆவது பொன் அணிகளின் போர் கிரிக்கெட்டில் சென். பட்றிக்ஸ் - யாழ்ப்பாணம் கல்லூரி பலப்பரீட்சை

12 Mar, 2026 | 01:10 PM

image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் போர் வட்டுக்கொட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டி அருட்தந்தை ரி.எம்.எவ். லோங் அடிகளார் ஞாபகார்த்த சவால் கிண்ணத்துக்காக விளையாடப்படுகிறது.

1917இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டி, வட மாகாணத்தின் மிகவும் பழைமையான மற்றும் பெருமைக்குரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக விளங்குகிறது.

2025ஆம் ஆண்டுவரை நடைபெற்று முடிந்த 108 பொன் அணிகளின் போரில் சென். பட்றிக்ஸ் கல்லூரி 35 வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் யாழ்ப்பாணம் கல்லூரி 17 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 31 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது.

1973ஆம் ஆண்டு ஈட்டிய வெற்றிக்குப் பின்னர் அடுத்த வெற்றிக்காக 52 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் கல்லூரி கடந்த வருடம் அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

சிதம்பரலிங்கம் மதுசன் தலைமையில் யாழ்ப்பாணம் கல்லூரி 59 ஓட்டங்களால் கடந்த வருடம் வெற்றியைப் பதிவு செய்தது.

சென். பட்றிக்ஸ் கல்லூரி கடைசியாக 2023இல் சிவராசா கீர்த்தன் தலைமையில் வெற்றி பெற்றிருந்தது.

2025இலிருந்து இப் போட்டி மூன்று நாள் போட்டியாக நடத்தப்படுவது விசேட அம்சமாகும்.

இந்த வருடம் சென். பட்றிக்ஸ அணிக்கு பிரேமநாயகம் மதுசன் தலைவராகவும் யாழ்ப்பாணம் கல்லூரிக்கு ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் தலைவராகவும் விளையாடுகின்றனர்.

இரண்டு அணிளிலும் மிகச் சிறந்த வீரர்கள் இடம்பெறுவதால் இந்த வருடப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

மேலும் இப் போட்டியைக் கண்டுகளிக்கவென கனடா, ஐக்கிய இராச்சியம். நோர்வே, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பழைய மாணவர்கள் பெருமளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தத்தமது அணிகளுக்கு உற்சாகமூட்டுவதால் இப் போட்டி ஒரு கொண்டாட்ட விழாவாகவும் அமைகின்றது.

இது இவ்வாறிருக்க, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்துக்கான 32ஆவது 50 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இத் தொடரிலும் சென். பட்றிக்ஸ் கல்லூரி 24 - 7 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான 6ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும். இதில் சென் பட்றிக்ஸ் 4 வெற்றிகளையும் யாழ்ப்பாணம் கல்லூரி ஒரு வெற்றியையும் ஈட்டியுள்ளன.

இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்திலேயே நடைபெறும்.

பொன் அணிகளின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமம் அனுசரணை வழங்குவதுடன் வீரர்களுக்கான சீருடைகளை அந் நிறுவனம் வழங்கியுள்ளது.  

இப் போட்டிக்கு டோக்கியோ சிமென்ட் குழுமம் இணை அனுசரணை வழங்குகிறது.

download.jpg

அணிகள்

சென். பட்றிக்ஸ்: பிரேமநாயகம் மதுசன் (தலைவர்), சிவநாதன் ஷெகான் (உப தலைவர்), ரொபின்சன் பியர்லி டெனோவன், காம்டின் லிக்ஷன், விமலதாஸ் டெஃபானோ, செரெனஸ் நிஷாந்தன் ஹரின் ஏட்றியன், மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா, ஜெபின்சன் கெமிஷன், டைட்டஸ் ஜோயேஷ், செல்வகுமார் ஸ்மித் செனாரி, ஜெயராஜரூபன் டினுலக்சன், ஜீவராஜ் மேகவர்ஷிகன், மெரின் ஹில்மன் தனுஷன், ரொக்ஷான் வொட்சன் செர்வின், அருள்ராஜன் அஷோபின், பிரதீப் மெலோடியஸ் ரவின், சுரேஷ்குமார் ஜானுசன், தேவராசா சஜீன் ஜோபேர்ட், ரொபின்சன் தேவ்சன், ஹென்றிக் விகாயகுமார் கியூட்வெஸ்லன்.

யாழ்ப்பாணம் கல்லூரி: ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (தலைவர்), வாசுதேவன் விஷ்னுகோபால் (உப தலைவர்), திவாகரன் கார்த்திகன், சசிகரன் சங்கீத், அன்ரனி ரித்மன் அபிநாத், ஸ்டெலன் கருணைதாஸ் ஹமிஷ் ஹாமிஷன், கீதேஸ்வரன் ஹரிஷன், அனுஷாந்தன் ஹாமிஷன், சுரேஷ் கபிஷன், சுபீசன் தக்சிகன், கேதீஸ்வரன் திருக்குமரன், உதயராஜா கென்றிக்சன், பாலரூபன் கெவின், சசிகரன் அஷ்மின், சத்திவேல் சதுஜன், ரவிகுமார் சாருஜன், சசிகாந்த் கிரிஷான், ராசஜெயந்தன் அஷ்வின், தயாபரன் அக்சயன்.

download__1_.jpg

https://www.virakesari.lk/article/240784

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்; யாழ்ப்பாணம் கல்லூரி 176 - 10, சென் பட்றிக்ஸ் 40 - 0  

Published By: Vishnu

12 Mar, 2026 | 08:22 PM

image

(நெவில் அன்தனி)

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான சென். பட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணம் கல்லூரி அணிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் போர் மாபெரும் கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ்ப்பாணம் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் சென் பட்றிக்ஸ் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எஸ். நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 24 ஓட்டங்களுடனும் சிவநாதன் ஷெஹான் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

முன்னதாக யாழ்ப்பாணம் கல்லூரியின் ஆரம்பம் சிறப்பாக இருந்தபோதிலும் முதல் 4 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் கடைசி 6 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வீழ்ந்ததால் அவ்வணியினால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது.

ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (41), சுபீசன் தக்சிகன் (7) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தனர்.

ஆனால், 4 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் யாழ்ப்பாணம் கல்லூரி தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. (77 - 4 விக்.)

S._K._Hamish_Harmishan_jf_college..JPG

u_kenricksan_jf_college.JPG

இந்நிலையில், ஹமிஷ் ஹார்மிஷன், உதயராஜா கென்றிக்சன் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

ஹார்மிஷன் 5 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களையும் கென்றிக்சன் 31 ஓட்டங்களையும் பெற்றனர். 

அனுஷாந்தன் ஹார்மிஷன் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

steef_athithiya_st_patrick_s.jpg

japinson_kemishon_st_patrick_s.jpg

பந்துவீச்சில் மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 18 ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களையும் ஜெபின்சன் கெமிஷன் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 17 ஓவர்களில் 29 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டாம் நாள் ஆட்டம் நாளைக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

https://www.virakesari.lk/article/240826

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர் டினுலக்சன் அரைச் சதம் குவித்து கைகொடுத்தார்

Published By: Vishnu

13 Mar, 2026 | 09:00 PM

image

(நெவில் அன்தனி)

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமரில் சென். பட்றிக்ஸ் கடைநிலை வீரர் ஜெயராஜரூபன் டினுலக்சன் அரைச் சதம் குவித்து அணியை சிறப்பான நிலையில் இட்டார்.

கடைசி நாளான மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும் போது எதுவும் நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் யாழ்ப்பாணம் கல்லூரி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க யாழ்ப்பாணம் கல்லூரி 50 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

சசிகரன் அஷ்மின் 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் கேதீஸ்வரன் ஹெரிஷன் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

கடைசி நாள் ஆட்டத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தேநீர் இடைவேளைக்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்லூரி 200 ஓட்டங்கள் முன்னிலை அடைந்து டிக்ளயா செய்தால் போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்து சென். பட்றிக்ஸ் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

சிவநானதன் ஷெஹான் (45), நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் (42) ஆகிய இருவரும் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் 6 விக்கெட்கள் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. (129 - 6 விக்.)

இந் நிலையில் களம் புகுந்த 9ஆம் இலக்க வீரர் ஜெயராஜரூபன் டினுலக்சன் மிகவும் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு கைகொடுத்தார். அத்துடன் அடுத்த 3 விக்கெட்களில் அவர் 92  ஓட்டங்களைப்  பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார்.

டைட்டஸ் ஜோசப் 34 ஓட்டங்களையும் செல்வகுமார் ஸெனாரி 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வாசுதேவன் விஷ்னுகோபன் 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹாமிஷ் ஹாமிஷன் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் கைப்பற்றினர்.

யாழ்ப்பாணம் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

https://www.virakesari.lk/article/240907

Edited by ஏராளன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.