Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகப் பார்வை (பயம்)??¿

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமுதாயம் சில உளநம்பிக்கைகள் அல்லது பயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு முயலாமல் ஒன்றின் தார்ப்பரியத்தை கேள்விக்குட்படுத்தாமல் அல்லது அதனால் ஏற்பட்டுக் கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்காமல் அல்லது அதனையும் மீறிய சமுதாய பயம் காரணமாக பல தலைமுறைகளாக சிலவற்றை தலைமுழுகி விடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது அதிகாரத்தை பயன்படுத்திக்கூட தமது சந்ததியினரையும் அதனை பின்பற்றி நடக்க செய்து கொண்டு வருகிறது. அதிலும் பெண்பிள்ளைகள் சார்ந்து கேட்கவே தேவையில்லை.

இதனடிப்படையில் எமது தமிழ் பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் பயம் அல்லது சந்தேகம் அல்லது அடக்குமுறை சார்ந்த பதிவே இது.

பெண் பிள்ளைகள் சார்ந்த மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கால சுழற்சியில் மாற்றங்கள் நிகழும் போது அதன் விளைவுகள் அவர்களது அன்றாட வாழ்வில், மனதளவில், உடல் நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவர்களது எதிர்காலம் சார்ந்த எத்தனிப்புக்களை நாசமாக்கக்கூடியது என்பதை பெற்றோர்கள் அறிந்துள்ள போதும் அதற்கான மருந்தான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள எமது தமிழ் பெற்றோர்கள் மறுக்கின்றனர்.

28 நாட்களில் ஒழுங்காக வரவழைக்ககூடிய மாத்திரைகளை உடலுறவுக்கான பாதுகாப்பு மாத்திரைகள் என்று புரிந்து கொண்டு அதனை திருமணமாகாத கன்னிப் பெண்கள் பாவிப்பது அப்பெண் பிள்ளைகளின் கன்னித்தன்மை சார்ந்ததாக அல்லது அவர்களை சந்தேகிப்பதாக அல்லது தாமே அவர்களுக்கு பிழையான வழியை திறந்து விடுவதாக பார்க்கப்படுகிறது.

ஒரு சில பெற்றோர்களாவது இதை உணர இப்பதிவால் முடிந்தால்.....

நன்றி.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

மாதவிடாயை தடுக்க அல்லது பிற்போட ஊசி எடுப்பது மாத்திரை எடுப்பது பிள்ளைகளின் உடல்நலத்தை பாதிக்காதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.