Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் முழுவதும் எரிவாயு, எரிபொருட்கள் தட்டுப்பாடா?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் சீனாவும் எத்தனை நாட்களுக்குத் தேவையான எண்ணெயை சேமித்து வைத்துள்ளன?

இரான் போர் -  எண்ணெய் கிடைக்குமா என்பதை விட பெரிய கவலை இந்தியாவுக்கு உள்ளதா?

பட மூலாதாரம்,Getty Images

10 மார்ச் 2026

புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரின் பொருளாதார தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிய தொடங்கியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையும், வளைகுடா எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களும் கச்சா எண்ணெய் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

சனிக்கிழமை இரவு இரானிய தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

எண்ணெய் விலையில் ஏற்படும் குறுகிய கால உயர்வு என்பது, உலக அமைதிக்கு செலுத்தப்பட வேண்டிய ஒரு சிறிய விலையே என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு 30 நாள் அனுமதியை டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் வழங்கியது.

ஆனால் தீவிரமடைந்து வரும் மோதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது.

உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்கிறது

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்கிறது.

தாக்கம் என்ன?

தற்போதைய சூழலில் எண்ணெய் விலை உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என பிபிசி ஹிந்தியின் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள வெளிநாட்டு கொள்கை நிபுணர் ஹர்ஷ் வி. பந்த், உலகின் பெரிய பொருளாதாரங்களுக்குக் கூட சிரமங்கள் உருவாகும் எனவும் பலவீனமான பொருளாதாரங்கள் அதிக அழுத்தத்தை சந்திக்கும் எனவும் கூறுகிறார்.

"இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை பல்வேறு நாடுகளிலிருந்து பெறும் வகையில் மாற்றியுள்ளது. யுக்ரேன் போர் தொடங்கியபோது இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கத் தொடங்கியது. மத்திய கிழக்கு உலக எண்ணெய் சந்தையின் முக்கிய மையமாக இருப்பதால் அங்கு ஏற்பட்ட மோதல்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என பந்த் குறிப்பிடுகிறார்.

இந்தியா தனது உள்நாட்டு எண்ணெய் நுகர்வில் 90 சதவீதத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.

பட மூலாதாரம்,Getty Images

இந்தியாவில் எவ்வளவு எண்ணெய் இருப்பு உள்ளது?

தற்போது அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் அனுமதி அளித்திருந்தாலும், முன்னதாக அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக, இந்தியாவிற்கு வரும் ரஷ்ய எண்ணெய் வரத்து குறைந்தது.

எரிசக்தி நிபுணர்கள் இந்தியாவின் எண்ணெய் இருப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.

''ஹோர்முஸ் நீரிணை வழியாக தினமும் 137 கப்பல்கள் சென்ற நிலையில், கடந்த சில நாட்களில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மட்டுமே செல்ல முடிந்ததாக" பிபிசி நிகழ்ச்சியில் ஆற்றல் நிபுணர் நரேந்திர தனேஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தெற்காசிய நாடுகள் இந்தப் பகுதியில் இருந்து வரும் எண்ணெயை அதிகம் சார்ந்துள்ள நிலையில், தற்போது இங்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளதாக குறிப்பிடும் அவர், கடந்த ஓர் ஆண்டாக சீனா தினமும் சுமார் 10 லட்சம் பீப்பாய் எண்ணெயை இரானில் இருந்து வாங்கி தனது கையிருப்புகளில் சேமித்துள்ளதாக விவரிக்கிறார்.

"கடந்த 365 நாட்களில் அவர்கள் சேமித்துள்ள எண்ணெய், அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவர்களுக்கு கவலைப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தாது," என்கிறார் அவர்.

இந்தியா தனது உள்நாட்டு எண்ணெய் நுகர்வில் 90 சதவீதத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.

பட மூலாதாரம்,Getty Images

இந்தியாவின் எண்ணெய் கையிருப்பைப் பற்றி நரேந்திர தனேஜா கூறும் போது, இந்தியா உலகம் முழுவதும் 41 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும், தற்போது நிலத்தடியில் உள்ள இந்தியாவின் வியூக ரீதியான கையிருப்பு சுமார் 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என குறிப்பிடுகிறார்.

"இதற்கு மேலாக சேமிப்பு தொட்டிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வணிக கையிருப்புகளை சேர்த்தால் சுமார் 50 நாட்களுக்கு போதுமான எண்ணெய் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் அனைத்து தொட்டிகளையும் முழுவதுமாக காலி செய்ய முடியாததால், நடைமுறையில் சுமார் 40 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் உள்ளது," என நரேந்திர தனேஜா கூறுகிறார்.

எதிர்கால விளைவு

பட மூலாதாரம்,Getty Images

எதிர்கால விளைவு

இப்போது பீதியடையத் தேவையில்லை என்று நரேந்திர தனேஜா கூறுகிறார்.

''உண்மையில், நமது கவலை எண்ணெய் கிடைக்குமா என்பது அல்ல, மாறாக அதன் விலை என்னவாக இருக்கும் என்பதுதான். இரான் போர் தொடங்கியபோது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 65 டாலராக இருந்தது, ஆனால் இப்போது அது உயர்ந்துள்ளது.'' என்கிறார் அவர்.

''இதுவரை அரசு எரிபொருள் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் போர் நீண்ட காலம் தொடர்ந்தால், அரசு எப்போதும் விலைகளை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஒரு கட்டத்தில் அரசு மற்றும் நிறுவனங்கள் விலையை குறைவாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டால், 'இனி அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்', 'நுகர்வோருக்கு என்ன செய்தி வரும்' போன்ற கேள்விகள் எழும்'' என்கிறார் அவர்

குண்டுகள் விழுவது நின்றுவிடலாம், ஆனால் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் வயல்களுக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பல மாதங்கள் ஆகும் என்று சர்வதேச விவகார நிபுணர் பிரம்மா செல்லனி கூறியுள்ளார்.

"இரானில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மற்றும் பொது பகுதிகள் மீது குண்டுவீசித் தாக்குவதன் மூலம், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதேபோன்ற பதிலடியை தூண்டுகின்றன. மேலும் ஆழமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன," என்று பிரம்மா செல்லனி எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

மேலும், "வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பு ஏற்கெனவே சேதமடைந்துள்ளது. இதில் ஏவுகணைகளைத் தடுக்கும் முயற்சிகளால் ஏற்பட்ட சேதங்களும் அடங்கும். உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், தளங்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் விநியோக அமைப்புகளின் மீதான அழுத்தம் ஆகியவை குண்டுவீச்சு நின்ற பிறகும் பல மாதங்களுக்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கும்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq8g1183n1go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

Mar 10, 2026 - 05:20 PM

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும், அதன் விலைகள் அதிகரித்துள்ளதாலும், எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் அந்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ஆரம்பித்துள்ள போர்ச் சூழலினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுள் வியட்நாமும் உள்ளடங்குகிறது. 

வியட்நாம் தனது எரிசக்தித் தேவைகளுக்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளிலேயே தங்கியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.  

வியட்நாமின் முன்னணி எரிபொருள் வர்த்தக நிறுவனமான பெட்ரோலிமெக்ஸ் (Petrolimex) தரவுகளின்படி, கடந்த மாத இறுதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் விலைகள் பின்வருமாறு அதிகரித்துள்ளன: 

பெற்றோல் - 32%

டீசல் - 56% 

மண்ணெண்ணெய் - 80% 

விலை அதிகரிப்பு மற்றும் விநியோகக் கட்டுப்பாடு காரணமாக தலைநகர் ஹனோயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் நீண்ட வரிசைகளை இன்று (10) காணக்கூடியதாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

https://adaderanatamil.lk/news/cmmkjqksd000y356pdr5e3tco

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.