Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு

Published By: Digital Desk 1

14 Mar, 2026 | 11:51 AM

image

ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு, ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா காமேனி மற்றும் அந்நாட்டு இராணுவ பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தொடர்பான தகவல்களை பெறுவதற்காக வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, மொஜ்தபா காமேனி, துணை தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹுஜாசி, மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி ஆகியோரின் இருப்பிடத்தைப் பற்றிய நம்பகமான தகவல்களை வழங்குபவர்களுக்கு இந்த வெகுமதி வழங்கப்படும். உலகம் முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைத்து அவர்களின் புகைப்படங்களையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தெஹ்ரான் நகரில் நடைபெற்றதாக கூறப்படும் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் முன்னாள் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அவர் தற்போதைய தலைவர் மொஜ்தபா காமேனியின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னணியில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நொறுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 வீரர்களில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அந்த விமானம் தங்களது தாக்குதலால் வீழ்த்தப்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலால் ஏற்பட்டதல்ல என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் அமெரிக்க இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையில், ஈரானுக்கு எதிராக வரும் நாட்களில் மிகவும் கடுமையான இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபத டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/240933

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு!

Mar 14, 2026 - 06:11 AM

மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி வெகுமதி வழங்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

அதேபோல், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து முன்னெடுக்கும் போருக்காக மேலதிகப் படைகள், கரையோர பாதுகாப்பு சிப்பாய்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது. 

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கார்க் தீவில் உள்ள பல இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

https://adaderanatamil.lk/news/cmmplob8p0000356pu6bhlwsl

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் அதி உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை காட்டிக் கொடுத்தால்...

10 மில்லியன் டொலர் என்பது மிகவும் 👎 குறைந்த தொகை.

அந்தப் பிசாத்துக் காசை அமெரிக்காவே வைத்திருக்கட்டும். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.