Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா காமனெயி, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,Reuters/Getty Images

படக்குறிப்பு,(இடமிருந்து வலம்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

கட்டுரை தகவல்

  • ஃபிராங்க் கார்ட்னர்

  • பிபிசி செய்தியாளர்

  • 17 மார்ச் 2026, 03:18 GMT

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

'எல்லோரும் விரும்புகிறார்கள்' என்று சொல்ல முடியாது, ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன.

அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நோக்கங்கள் சற்றே தெளிவற்றதாக உள்ளன. இரானின் அணுசக்தித் திட்டத்தை கட்டுப்படுத்துவது, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கோரிக்கைகள் அனைத்திற்கும் இரானை அடிபணிய வைப்பது அல்லது இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை முற்றிலும் வீழ்த்துவது ஆகியவற்றுக்கு இடையே அவர் மாறி மாறித் தள்ளாடுவதாகத் தோன்றுகிறது.

இதுவரை, இரான் அடிபணியவுமில்லை, வீழ்ந்துவிடவுமில்லை. ஆனால் 16 நாட்களாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல்களால் அதன் ராணுவம் கடுமையாக பலவீனமடைந்துள்ளது.

ஜெனீவாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஓமன் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள், அணுசக்தி விவகாரத்தில் முன்னேற்றம் கண்டு வந்தன.

இரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை என்ற கூற்றுக்கு ஓரளவு உறுதியளிக்கும் வகையில், பெரிய அளவிலான சலுகைகளை வழங்க இரான் தயாராக இருந்ததாக ஓமனியர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தை ரத்து செய்வது அல்லது ஏமனின் ஹூதிகள், லெபனானின் ஹெஸ்பொலா போன்ற குழுக்களுக்கான ஆதரவைக் குறைப்பது குறித்து விவாதிக்க தான் இரான் தயாராக இல்லை.

அமெரிக்காவுக்கும் அதன் பல கூட்டாளிகளுக்கும், 'இந்த போர் ஆயதுல்லாகளின் ஆட்சி வீழ்ச்சியடைய வேண்டும்; அதன் இடத்தில் அமைதியான, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அதன் மக்களுக்கோ அல்லது அண்டை நாடுகளுக்கோ இனி அச்சுறுத்தலாக இல்லாத ஓர் அரசாங்கம் விரைவாக அமைய வேண்டும்' என்பதே என்பதே ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் திங்கட்கிழமை (மார்ச் 16) நிலவரப்படி, அத்தகைய மாற்றத்திற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

அமெரிக்காவிற்கான அடுத்த சிறந்த முடிவு என்னவென்றால், கடுமையாகச் சேதமடைந்த இஸ்லாமியக் குடியரசு தனது நடத்தையை மாற்றிக்கொண்டு, தனது குடிமக்களைத் துன்புறுத்துவதை நிறுத்தி, பிராந்தியத்தில் உள்ள அடிப்படைவாத குழுக்களுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருக்கும்.

ஆனால், இரான் தனது புதிய அதி உயர் தலைவராக, அமெரிக்காவை அதிகம் எரிச்சலூட்டக்கூடிய ஒருவரை, மறைந்த ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயியை தேர்ந்தெடுத்த பிறகு இது நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஹோர்மூஸ் நீரிணையின் பகுதியளவிலான முடக்கம் மற்றும் அமெரிக்கா மீண்டும் ஒரு சிக்கலான மத்திய கிழக்கு மோதலில் சிக்கிக்கொள்கிறது என்ற உள்நாட்டு அதிருப்தி ஆகியவற்றால், இந்தப் போரை நிறுத்துமாறு அதிபர் டிரம்பிற்கு அழுத்தம் அதிகரிக்கும்.

ஆனால் இரான் ஆட்சியில் எவ்வித மாற்றமும் இன்றி, சவாலான போக்கு நீடித்தால், அது ஒரு தோல்வி என்பதைத் தவிர வேறொன்றாகச் சித்தரிப்பது டிரம்பிற்கு கடினமாக இருக்கும்.

இரான்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா காமனெயி, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானில் ஆயிரக்கணக்கான இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்று இரான் விரும்புகிறது, ஆனால் எதையும் தியாகம் செய்து அல்ல - அதாவது அமெரிக்காவின் அனைத்து கோரிக்கைகளுக்கும் அடிபணிவதாக அது அமையக் கூடாது.

இந்தப் போரில் டிரம்பை விட நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதற்குத் தேவையான 'ராஜிய ரீதியிலான பொறுமை' தன்னிடம் உள்ளது என்பதை அது அறிந்திருக்கிறது. புவியியல் நிலையும் அதற்குச் சாதகமாக உள்ளது.

வளைகுடா நாடுகளில் இரான் மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது; குறுகிய பாதையான ஹோர்மூஸ் நீரிணை வழியாக வழக்கமாக உலகின் 20% எண்ணெய் விநியோகத்தைக் கொண்டு செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு காலவரையின்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திறனும் அதற்கு உள்ளது.

இஸ்ரேலுடன் இணைந்து தான் தொடங்கிய ஒரு போரின் விளைவுகளைச் சமாளிக்க பிற நாடுகள் முன்வந்து உதவ வேண்டும் என்ற அமெரிக்க அதிபரின் அழைப்பு தயக்கத்துடனேயே எதிர்கொள்ளப்படுகிறது. பிரிட்டன், ஐரோப்பா மற்றும் பிற நாடுகள், தொடக்கத்திலிருந்தே இந்தப் போரை ஆதரிக்காத நிலையில், தங்கள் கடற்படைகளை ஆபத்தில் ஆழ்த்தி, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்கத் தயங்குகின்றன.

அதிகாரப்பூர்வமாக, இரான் மீண்டும் ஒருமுறை தாக்கப்படாது என்பதற்கான உறுதியான உத்தரவாதத்துடனும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட பில்லியன்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சேதங்களுக்கான இழப்பீட்டுடனும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று இரான் கூறுகிறது. இவை இரண்டும் கிடைக்காது என்பது அதற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இரானின் இஸ்லாமியக் குடியரசுத் தலைமையும் அதன் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் இந்த மோதலில் இருந்து தப்பிப் பிழைத்தாலே போதும், அதைத் தங்கள் மக்களுக்கும் உலகிற்கும் ஒரு வெற்றியாக அவர்களால் சித்தரிக்க முடியும்.

இஸ்ரேல்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் - போர் புரியும் இந்த மூன்று நாடுகளில், இஸ்ரேலியர்கள் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அவசரப்படவில்லை எனத் தோன்றுகிறது. இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைக் கையிருப்புகள், சேமிப்புக் கிடங்குகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஐஆர்ஜிசி தளங்கள் ஆகியவை முடிந்தவரை அழிக்கப்படுவதை அவர்கள் காண விரும்புகிறார்கள்.

போர் நிறுத்தப்பட்டவுடன் இவை அனைத்தையும் நிச்சயமாக மீண்டும் கட்டியெழுப்ப முடியும், எனவே அவ்வாறு செய்வதில் கடுமையான பாதிப்பு உள்ளது என்பதை இரான் புரிந்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது; அதாவது இஸ்ரேலிய விமானப்படை இன்னும் சில மாதங்களில் மீண்டும் வந்து அவற்றின் மீது தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது என்பதை உணர்த்த விரும்புகிறது.

இரானின் ஏவுகணைகள் மற்றும் அதன் சந்தேகத்திற்குரிய அணுசக்தித் திட்டத்தை இஸ்ரேல் தனது இருப்புக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.

இரானிடம் குறைந்தபட்சம் இந்தப் போர் தொடங்கும் வரை, மிகவும் வளர்ச்சியடைந்த உள்நாட்டு ஏவுகணை மற்றும் டிரோன் தொழில்துறை இருந்தது (யுக்ரேனைத் தாக்கிய ஷாஹெத் டிரோன்களை அது தனது கூட்டாளியான ரஷ்யாவிற்கு வழங்கியது).

இரான், யுரேனியத்தை 60% வரை செறிவூட்டி வருகிறது. இது சிவில் அணுசக்திக்குத் தேவையான அளவை விட அதிகம்.

இவை இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் இந்த இரட்டை அச்சுறுத்தல்களைத் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகக் கருதுகிறது.

வளைகுடா நாடுகளின் நிலை

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய வளைகுடா அரபு நாடுகள் இஸ்லாமிய குடியரசுடன் இணக்கமாக இருக்க முடியும் என்று நினைத்திருந்தன.

இந்தப் போரை ஆதரிக்க மறுத்துள்ள போதிலும், இரானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தங்களின் மீது கிட்டத்தட்ட தினசரி தாக்குதல் நடத்தப்படுவதால் அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

இந்தத் திங்கட்கிழமையின் முதல் சில மணி நேரத்தில் மட்டும், தனது எல்லைகளை நோக்கி ஏவப்பட்ட 60-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைத் தாங்கள் இடைமறித்ததாகச் சௌதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"அவர்கள் சிவப்புக்கோட்டை தாண்டிவிட்டார்கள்" என்று ஒரு வளைகுடா அதிகாரி எங்களிடம் கூறினார்.

"எங்களுக்கும் இரானுக்கும் இடையே பூஜ்ஜிய அளவிலான பரஸ்பர நம்பிக்கையே உள்ளது. இதற்குப் பிறகு அவர்களுடன் எங்களுக்கு ஒரு இயல்பான உறவு இருக்காது".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr5lgl5p10jo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.