Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு கதை - 205 / ஒட்டாவாவில் இருந்து மேலோக பயணம்! [கலையின் பல்லும் தாத்தாவின் ரகசியப் பயணமும்!]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 205 / ஒட்டாவாவில் இருந்து மேலோக பயணம்! [கலையின் பல்லும் தாத்தாவின் ரகசியப் பயணமும்!]

பிப்ரவரி 01, 2026

ஒரு நாள், ஆறு அகவை, 'கலை'. தன் பாடசாலை நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும் போது அவர்கள் பல்லுத் தேவதைப் பற்றி பேசி கொண்டிருந்தார்கள். ஒருவன் கேட்டான், அவங்க என்ன பண்ணுவாங்கடா.. இன்னொருவன் ' உனக்கு அவங்கள பத்தி தெரியாதடா' அவங்கதான் நம்ம பல்லு விழும் போது அதுக்கு பதிலா காசு குடுக்கக் கூடியவங்க.. அதெப்படி , 'கலை' இடை மறித்தான். அந்த பையன் எடுத்து கூறினான், அதாவது இப்போ உனக்கு பல்லு விழுதுன்னு என்று வச்சிப்போம், நீ அதை எடுத்து உன்னோட தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் தேவதை வருவாங்க. அவங்க உன்னோட பல்லை எடுத்துக்கிட்டு உனக்கு காசு கொடுத்திட்டு போய்டுவாங்க. கலை ஆர்வமானான். அந்த காச வச்சி நமக்கு என்ன தேவையோ அந்த பொருட்களை வாங்கிக்கலாம் என்றான் அந்தப் பையன்.

அதன் பிறகு கலை, அவனது அம்மாவை விடவில்லை. அம்மா எனக்கு எப்போ பல்லு விழும் என்று சொல்லுங்க என தினமும் நச்சரித்தான். அதே சமயத்தில் அவன் வகுப்பு நண்பர்கள் அந்த காசுகளை வைத்து பொருட்களை வாங்கி வந்தனர். ஒருவழியாக முதல் முறை கலைக்கு பல் விழுந்தது. அவன் குஷியில் துள்ளிக் குதித்தான்.

பிப்ரவரி 28, 2026 - இரவு 11:45

பல்லொன்று விழுந்ததடா - நம் கலைக்கு
பக்குவமாய் பையினில் வைத்தானடா!
மெத்தைக்கு அடியினில் ஒழித்து வைத்தான் - அங்கே
தேவதை வருமெனக் காத்திருந்தான்!

அக்கா 'ஜெயா' ஜொலிக்கும் ஜனவரி மகள்
தம்பி 'இசை' மார்ச்சில் மலர்ந்த பூ!
மே மாதம் பிறந்த அழகன் 'கலை'
இன்று தேவதை ஆசிபெறத் தூங்குகிறான்!

தாத்தாவும் பேரனும் ஒரே அறையில் - இன்று
இருவரும் உறங்கினர் மகிழ்ச்சிக் கடலில்!
ஒட்டாவா மண்ணில் அழகிய இரவு - என்றும்
ஒப்பற்ற காவியமாய் இனி நிலைத்திருக்குமே!

கனடாவின் ஒட்டாவா நகரில் இன்று கடும் குளிர். ஜன்னலுக்கு வெளியே பனித்துளிகள் வெண் சர்க்கரைப் பொடி போலத் தூவிக்கிடந்தன. உள்ளே, மென்மையான போர்வைகளுக்கு நடுவே 'கலை' ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனது மேல் வரிசைப் பல் இரண்டு அன்று காலை விழுந்திருந்தது. "தேவதை வருவாள்" என்ற நம்பிக்கையில், அந்தப் பல்லை ஒரு சிறிய பட்டுப் பையில் போட்டு மெத்தைக்கு அடியிலே ஒளித்து வைத்திருந்தான். பக்கத்து கட்டிலில், அத்தியடியிலிருந்து பேரப் பிள்ளைகளைப் பார்க்க வந்திருந்த தாத்தா 'கந்தையா தில்லை' அவர்கள், "யாழ்ப்பாணத்து பனைமரம் போல நிமிர்ந்து நிக்க வேண்டியவன், இந்த 'பல் தேவதை' மேல வைச்சிருக்கும் நம்பிக்கையைப் பாரு" என வியந்தபடி கண்ணயர்ந்தார்.

சரியாக நள்ளிரவு 12 மணி. ஜன்னல் வழியாக ஒரு மின்னல் போன்ற வெளிச்சம்! ஒரு ஒற்றைக் கொம்புடன் இளஞ்சிவப்பு நிறச் சிறகுகளை அசைத்துக் கொண்டு ஒரு குட்டிக் குதிரை பறந்து வந்தது. அதன் மேல் வண்ண மலர்களைச் சூடிய 'மேப்பிள் இலை' வடிவிலான தேவதை தேவதை ஒன்று அமர்ந்திருந்தது. அதன் பற்களில் இருந்து பளீரிடும் ஒளி வெளிப்பட்டது. அது, அவர்கள் படுத்து இருந்த அறையின் காற்றோட்ட துவாரத்தினூடாக, தன்னை மாயாஜாலத்தால் சிறிதாக்கி உள்ளே நுழைந்தது. கலையின் பல்லுப் பையை எடுக்க அது குனிந்தபோது, தாத்தாவின் 'அத்தியடி ஸ்பெஷல்' குறட்டை சத்தம் (அது ஒரு லாரி ஹார்ன் போல இருந்தது!) தேவதையை அதிர வைத்தது. பயந்துபோன தேவதை நிலைதடுமாறி மந்திரக்கோலைத் தட்ட, அடுத்த நொடி... தாத்தாவும் கலையும் சுருங்கி ஒரு 'ஐஸ் ஹாக்கி பந்து' அளவில் அந்தப் பைக்குள்ளேயே இழுக்கப்பட்டனர்! பனிப்புகை போல அதே துவாரத்தின் வழியாக அவர்கள் விண்வெளிக்கு ஏவப்பட்டனர்.

அவர்கள் கண்ணைத் திறந்தபோது ஒரு பெரிய மேகக் கூட்டத்தில் நின்றனர். அங்கே சித்திரகுப்தன் ஒரு 'கனடா கூஸ்' ஜாக்கெட் (Canada Goose Jacket) அணிந்து, கையில் ஐபேடுடன் (iPad) நின்று கொண்டிருந்தார். சித்திரகுப்தன்: "நிறுத்துங்க! இது 'பல்லு' வர்ற கோட்டா (Quota). இதுல எதுக்கு ஒரு வெள்ளை வேட்டி கட்டின தாத்தாவும், ஒரு ஒட்டாவா பையனும் வந்திருக்கீங்க? உங்க விசா எங்கே?" என்று அதட்டினார்.

தாத்தா கந்தையா தில்லை: (கண்ணாடியைத் துடைத்தபடி) "தம்பி சித்திரகுப்தா, நான் விசிட்டர் விசால கனடா வந்தவன். என் பொண்ணு - அதாவது கலை மகனோட அம்மா - பையனைப் பத்திரமா பாத்துக்கச் சொன்னா. அவனோட பல்லுக்கு முறையான ரசீது தராம பல்லை எடுத்து செல்ல விட முடியாது!" என்றார் கடும் கோபத்தில்.

கலை: "ஆமா சார்! ஜனவரில என் அக்கா ஜெயா பர்த்டே [Birthday] கொண்டாடிட்டா. மார்ச் 13, என் தம்பி இசைக்கு அகவை நாள். மே மாசம் பொறந்த எனக்கு, இந்தத் தேவதை ஆசி கிடைச்சாதான் நான் கீழ போவேன்!" என்றான் பிடிவாதமாக.

தேவர்கள் அனைவரும் கலையின் பல்லை ஒரு மைக்ரோஸ்கோப்பில் பார்த்தனர். பிரம்மா: "இந்தப்பல்லு ஏன் இவ்வளவு ஒட்டாவா மேப்பிள் சிரப் (Maple syrup) வாசனை அடிக்குது?" என்று முறைத்துப் பார்த்து கலையைக் கேட்டார்.

எமதர்மன்: "சார், 'இன்டெக்ரிட்டி' (Integrity) அல்காரிதம் (Algorithm) செக் [check] பண்ணிட்டேன். இந்தப் பையன் கலை ரொம்ப சமத்து. ஜனவரி மாசம் ஜெயா அக்காவை ரொம்ப வம்புக்கு இழுக்கல, தம்பி இசை கூட விளையாட்டுக் சாமான்களைப் பகிர்ந்துக்கிட்டான். அதனால இவனுக்கு 'ஸ்பெஷல் பிளெஸ்ஸிங்' ("Special Blessing) உண்டு!" என்றான்.

விடியற்காலை 5:30 மணி. மார்ச் 1-ஆம் தேதியின் முதல் சூரிய ஒளி கனடா பாராளுமன்றக் கட்டிடத்தைத் தொடுவதற்கு முன், தேவதை இவர்களை மீண்டும் ஒட்டாவா வீட்டுக்குக் கூட்டி வந்து, ஒரு ரகசிய லேண்டிங் [secret landing] செய்தது. "தாத்தா, சீக்கிரம் இறங்குங்க! அம்மா முழிச்சா நம்மளக் கண்டுபிடிச்சுடுவா!" என்று கலை பதறினான். அவர்கள் கட்டிலில் வந்து விழுந்த அடுத்த நிமிடம், தாத்தாவின் மகள் (கலையின் தாய்) தேநீருடன் உள்ளே நுழைந்தாள்.

மகள்: "என்னப்பா... இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா முழிச்சிட்டீங்க? உங்க தலை ஏன் 'நெபுலா'வுல ( விண்மீன் படலம் / Nebula) சுத்திட்டு வந்த மாதிரி தலையிருக்கு? ஒட்டாவா குளிர் உங்க மண்டைக்கு ஏறிடுச்சா?" என்று கேட்டாள்.

தாத்தா கந்தையா தில்லை: (தேநீரைப் பருகியபடி நிதானமாக) "இல்லம்மா... அது வந்து... ஹீட்டர் (Heater) வேலை செய்யுதான்னு செக் பண்ணினேன். கனடா குளிர் மனுஷனை என்னவெல்லாம் செய்யுது பாரு!" எனச் சமாளித்தார்.

கனடா விடியலில் மார்ச் முதல் நாள் - நம்
கலைக்குக் கிடைத்ததே மெத்தைக்குள் பொன்னாள்!
அக்கா ஜெயாவும் தம்பி இசையும் - தூக்கத்தில்
அறியாரே தாத்தாவின் விந்தைப் பயணம்!

மகளிடம் சொல்லாதே மேலோக ரகசியம் - சொன்னால்
மனநல மருத்துவமனைக்கே நடக்கும் ஊர்வலம்!
கந்தையா தில்லை - தன் புன்னகையால் சமாளித்து
மகளிடம் இருந்து மறைத்தே தேநீரைப் பருகினார்!

தலையணைக்கு கீழே இரண்டு 'டூனி' (Toonie) - கலை
பார்த்துச் சிரித்தான் மார்ச் காலையில்!
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான் கலை
கையில் காசு துள்ளிக் குதித்தது!

[டூனி என்பது கனடாவின் இரண்டு டொலர் நாணயத்தை குறிக்கும்.]

தாத்தாவின் ரகசியக் குறிப்பு:

பரிசு: மகள் வெளியே சென்றதும் மெத்தைக்கு அடியில் பார்த்தார். பல்லுக்குப் பதில் ஒரு பளபளப்பான கனடிய நாணயம் (Toonie) அங்கே ஜாஸ்மின் (Jasmine) வாசனை அடித்துக்கொண்டிருந்தது!

முக்கிய எச்சரிக்கை: மேலோகத்தில் எமதர்மனுடன் 'பல்லு மாற்று விகிதம்' (Exchange rate) பற்றி விவாதித்ததை மட்டும் மகளிடம் சொல்லவே கூடாது! சொன்னால், தாத்தாவுக்கு குளிர் ஏறிடுச்சுன்னு அத்தியடிக்கே பார்சல் பண்ணிடுவா!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 2105 [சிறு கதை - 205 / ஒட்டாவாவில் இருந்து மேலோக பயணம்! [கலையின் பல்லும் தாத்தாவின் ரகசியப் பயணமும்!

https://www.facebook.com/groups/978753388866632/posts/34427841220197752/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.