Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் இன்று ஆரம்பமாகும் உலகின் மிகப்பெரிய சனத்தொகை கணக்கெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இன்று ஆரம்பமாகும் உலகின் மிகப்பெரிய சனத்தொகை கணக்கெடுப்பு: 30 இலட்சம் அதிகாரிகள் களத்தில்

Published By: Digital Desk 3

01 Apr, 2026 | 10:51 AM

image

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடான இந்தியாவில், தசாப்தத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் மிகப்பெரிய சனத்தொகைகணக்கெடுப்பு இன்று புதன்கிழமை (ஏப் 01) முதல் ஆரம்பமாகிறது.

கொரோனா பெருந்தொற்றினால் 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த இத்திட்டம் தாமதமடைந்த நிலையில், தற்போது டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுமார் 30 இலட்சம் அரச அதிகாரிகள் இந்த ஒரு வருட காலப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஆரம்பத்தில் பொதுமக்கள் இணையவழியில் தாமாகவே முன்வந்து விபரங்களைப் பதிவு செய்ய குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று இரு கட்டங்களாக விபரங்களைச் சேகரிப்பார்கள்:

முதற்கட்டம்: வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த விபரங்கள்.

இரண்டாம்கட்டம்: தனிநபர்கள், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைகள் குறித்த விபரங்கள்.

இம்முறை கணக்கெடுப்பில் சாதி குறித்த விபரங்களும் சேகரிக்கப்படவுள்ளதாக கணக்கெடுப்பு ஆணையாளர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளைப் பெற இது உதவும் என ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

கடைசியாக 2011 இல் சாதி விபரங்கள் சேகரிக்கப்பட்ட போதிலும், தரவுத் துல்லியம் குறித்த அச்சம் காரணமாக அவை முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாக உருவெடுத்தது.

இந்தியாவின் பெரும்பான்மையான இளையோர் சக்தி, உலகளாவிய ரீதியில் வளர்ந்த நாடுகள் முதியோர் தொகை அதிகரிப்பால் திணறும் வேளையில், இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளன. முதன்முறையாக டிஜிட்டல் முறையில் விபரங்கள் சேகரிக்கப்படுவதால், முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/242464

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.