Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images-2026-04-02T084316.027.jpg?resize=

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சால்,  இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட, 2016 ஏப்ரல் 29 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்குக் மேலதிகமாக, இந்தச் ளசுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படிஇ கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது என்றும்இ எந்த நிலையிலும் எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் விதிக்கப்படக்கூடாது என்றும், தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான விஷயங்களைக் கையாளும்போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1470694

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கினால் கடும் நடவடிக்கை - கல்வி அமைச்சு எச்சரிக்கை

02 Apr, 2026 | 04:37 PM

image

பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, மாணவர்களுக்கு எந்த விதமான உடல் ரீதியான தண்டனையையோ அல்லது மன ரீதியான பாதிப்பையோ கடுமையாகத் தடை செய்துள்ளது.

2016 ஏப்ரல் 29ஆம் திகதியிட்ட 12/2016 இலக்கச் சுற்றறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக, மாணவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் புதிய ஏற்பாடுகள், விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள சுற்றறிக்கையை செயற்படுத்தும்போது, வழக்கு எண் 461/2012 (FR) தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் 17வது பத்திக்கு விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த மாணவரும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டிய கல்வியாளர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளின் பொறுப்பை அந்தத் தீர்ப்பு தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, அனைத்து மட்டங்களிலும் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பில் “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கை பின்பற்றப்படவேண்டும் என்றும் இதை மீறும் எவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளில் ஒழுக்கமானது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் வன்முறையற்ற முறைகளின் மூலம் பேணப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்றும் மாணவர் ஒழுக்கத்தை கையாளும்போது உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு விசேட கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

https://www.virakesari.lk/article/242575

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.