Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து

'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' -  குவைத்தில் நடந்த தாக்குதல் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,குவைத் சிட்டி விமான நிலையம் அருகே நடந்த தாக்குதல்

கட்டுரை தகவல்

  • கேட்டி வாட்சன் & கோன்சே ஹபீபியாசாத்

  • பிபிசி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில், ஓர் இந்திய தொழிலாளர் உயிரிழந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வுகள் அங்குள்ள மக்களில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகள் இரானின் பதிலடி தாக்குதல்களை சந்தித்து வருகின்றன.

மத்திய கிழக்கின் இந்த பகுதி மிகவும் வறண்டது. இங்கு வாழ்வதற்காக மின் நிலையங்களும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களும் மிக அவசியமானவை.

குடிநீரின் சுமார் 90% சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரிலிருந்தே கிடைக்கிறது.

கடல் நீரை குடிநீராக்கும் செயல்முறை பாதிக்கப்பட்டால், வளைகுடா பகுதி விரைவில் வாழ முடியாத இடமாக மாறும் அபாயம் உள்ளது.

இதுவே அந்தப் பிராந்தியத் தலைவர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது.

நீண்ட காலமாக, இதுபோன்ற சிறிய நாடுகள் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களில் நேரடியாக ஈடுபடாமல் வளர்ச்சி அடைந்தன. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி வருகிறது.

குவைத் சிட்டி விமான நிலையம் அருகே ஏப்ரல் 1 அன்று நடந்த தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,குவைத்தில் ஏப்ரல் 1 அன்று நடந்த தாக்குதல்

மறுத்த இரான்

குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கு முன்பு, இந்த தாக்குதல்களுக்கு இரானே காரணம் என்று குவைத் தெரிவித்திருந்தது.

இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு தெரியாது என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

ஓர் அறிக்கையில் இத்தாக்குதலை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கண்டித்ததுடன், "அமைதியின்மை உருவாக்க, நிலை குலைக்க மற்றும் பிராந்தியத்தை அழிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முயற்சி செய்கின்றன" என்றும் மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அதே அறிக்கையில், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குறிப்பிடவில்லை.

இந்த வாரத்தின் தொடக்கத்திலும், குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இஸ்ரேல் குறிவைத்ததாக இரான் குற்றம் சாட்டியது.

ஐக்கிய அரசு எமிரேட்ஸில் மார்ச் மாதம் நடந்த தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

அபுதாபியில் என்ன நிலை?

வானில் தடுக்கப்பட்ட ஏவுகணை சிதிலங்கள் விழுந்ததால் அபுதாபி எரிவாயு நிலையத்தில் தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்ததையடுத்து, அவற்றின் சிதிலங்கள் ஹப்ஷான் எரிவாயு நிலையம் மீது விழுந்ததாக அபுதாபி மீடியா அலுவலகம் தெரிவித்துள்ளது.

தீ அணைக்கப்படும் வரை செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cew709nrw2jo

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா / இஸ்ரேல் ஈரானை அழிக்க முயல, அரபு / இஸ்ரேல் ஐ இரான் அழிக்கும், அதாவது அது யதார்த்தமாகும் சாத்திய கூறுகள் கூட

ஏனெனில், நீரில் ஈரானை விட இவை செயற்கை நீர் வசதிகளில் தங்கி இருப்பவை.

இங்கே சிலர் விடயம் அறியாமல் கதைப்பது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.