Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜப்பானின் நிலைப்பாட்டை எடுத்துக் கூற அகாஷி இன்று திடீர் வருகை!

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக முறிக்கும் இலங்கை அரசின் தீர்மானத்தையடுத்து, இலங்கை தொடர்பான ஜப்பான் கருத்து நிலைப்பாட்டை இலங்கைத் தலைவர்களுக்கு எடுத்து விளக்கும் நோக்குடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி இன்று திடீரென கொழும்புக்கு விஜயம் செய்கின்றார்.

கொழும்பில் மூன்று நாட்கள் மட்டும் தங்கியிருக்கும் அவர், இங்கு இலங்கை ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்த பின்னர் செவ்வாயன்று மாலையே ஜப்பான் திரும்புவார் எனத் தெரிகிறது.

விசேட தூதுவர் அகாஷி இன்று முதல் சுமார் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து சில பணிகளை மேற்கொள்ள முன்னர் திட்டமிட்டிருந்தார். வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசுவதும் அவரது முன்னைய திட்டதின் ஓர் அங்கமாகவே இருந்தது.

மஹிந்த அண்மையில் ஜப்பான் விஜயம் செய்திருந்த போது, ஜப்பானியப் பிரதமரைச் சந்தித்துப் பேசியிருந்தார். அச்சமயத்தில் தாம் தமது விசேட பிரதிநிதி அகஷியை ஜனவரியில் இலங்கைக்கு அனுப்புவார் என்றும், அவர் வன்னிக்குச் சென்று புலிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் மஹிந்தவிடம் ஜப்பான் பிரதமர் கோரியிருக்கிறார் எனத் தெரிகிறது. அதற்கான ஒழுங்குகளையும், ஏற்பாடுகளயும் தாம் செய்து கொடுப்பார் என அந்தச் சந்திப்பின் போது மஹிந்த ஜப்பானிய பிரதமரிடம் உறுதியளித்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

அகாஷியின் ஒரு வார கால இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடுகளை ஜப்பான் தரப்பு மேற்கொண்டு வந்தது.

ஆனால், யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்ததையடுத்து தூதுவர் அகாஷியின் உத்தேச இலங்கை விஜயம் ரத்தாகும் எனக் கூறப்பட்டது.

எனினும், யுத்த நிறுத்தத்திலிருந்து விலகும் இலங்கையின் முடிவு தொடர்பாக ஜப்பானின் கருத்து நிலைப்பாட்டை கொழும்புக்குத் தெளிவுபடுத்துவதற்காக அகாஷி இன்று இரவு கொழும்பு வருகிறார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரவித்தன.

நாளை மறுதினம் திங்கட்கிழமை மஹிந்தவையும், ரட்ணசிறி விக்ரமநாயக்காவையும், ஏனைய அரசுத் தலைவர்களையும், எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்கும் அவர், அடுத்த நாள் மாலையே கொழும்பிலிருந்து புறப்படுவார்.

கொழும்பிலிருந்து புறப்பட முன்னர் அன்றைய தினம் நண்பகலுக்கு முன்னர் அவர் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பனரையும் பின்னர் செய்தியாளர்களையும் சந்திப்பார் என்றும் தெரியவந்துள்ளது.

நன்றி சுடர் ஒளி

அக்காச்சி என்னாதான் கூறுவா? அடி புள்ள மகிந்தி, நீ எத வேணுமானாலும் செய். எங்கள கழட்டிப்புடாத. நான் பூசக் கட்டிக் கொண்டு அழுறன். அந்த அறுவான் விடுறானில்ல. உன்னட்ட கத கத எண்டு தள்ளிவிடுறான். இவங்கள் சீனாக் காரரை கூப்பிடப் போறியாம் உண்மையே?? பக்கத்து வீட்டுக்காரனும் கழுத்தறுக்கிறான். உவங்களும் கழுத்தறுக்கிற ஆக்கள்.

பன்னாட்டு உதவிகள் சிறீலங்காவுக்கு கிடைக்காமல் போகலாம்: அகாசி

இடது சாரி போக்குடைய ஜனதா விமுக்தி பெரமுனவுடன் இன்று பேச்சுவார்த்தை நடாத்திய யசூசி அகாசி அவர்கள், சிறீலங்காவில் தொடரும் இனப்பிரச்சனை காரணமாக பன்னாட்டு உதவிகளை இழக்கலாம் என எடுத்துரைத்துள்ளார்.

ஜனதா விமுக்தி பெரமுனவுடன் யசூசி அகாசி அவர்கள் ஒரு மணித்தியாலயம் பேச்சவார்த்தை நடத்தியதாக தெரிய வருகின்றது.

சிறீலங்காவுக்கு பெருமளவு நிதி மற்றும் கடன்களை வழங்கும் நாடுளில் யப்பான் நாடு முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சனவரி மாதம் தொடக்கம் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் யப்பான் சிறீலங்காவுக்கு 200 மில்லியன் டொலர் நிதியை வழங்கியிருப்பதாக சிறீலங்காவின் நிதி அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.net/

சிறிலங்காவிற்கான நிதி உதவிகள் நிறுத்தப்படும்: யசூசி அகாசி

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள், அதற்கான வெளிநாட்டு உதவிகளை நிறுத்துவதற்கு வழியேற்படுத்தும் என்று மூன்று நாள் பயணமாக சிறிலங்காவிற்கு சென்றிருக்கும் ஜப்பானின் அமைதிக்கான தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறிலங்காவிற்கான பெரும் தொகையான உதவிகள் பல நாடுகளினால் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஜப்பானும் அடங்கும். நாட்டின் தற்போதைய நிலமைகள் அந்த நிதிகள் நிறுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போர் நிறுத்தத்தில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியதனைத் தொடர்ந்து அமைதி முயற்சிகளின் தற்போதைய நிலை குறித்து சோமவன்ச அமரசிங்கவுடன் யசூசி அகாசி பேச்சுக்களை நடத்தியதாக சிறிலங்காவிற்கான ஜப்பானியத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் யசூசி அகாசி சந்தித்துப் பேசவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அகாசி நாளை நாடு திரும்பவுள்ளார்.

போர் நிறுத்தத்தில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியது, அமைதி முயற்சிகளை சீர்குலைப்பதுடன், பெரும் இரத்தக்களரிகளையும் ஏற்படுத்தும் என்று ஜப்பான் உள்ளிட்ட இணைத்தலைமை நாடுகள் தெரிவித்திருந்த நிலையில் யசூசி அகாசியின் இந்தப் பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.