Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை கடற்படை சுட்டு ராமேஸ்வரம் மீனவர் பலி - ஒருவர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே இன்று ராமேஸ்வரம் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 262 படகுகளில் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் வந்தனர்.

தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த கடற்படையினர், குயின்ராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில், இருந்த அக்காள் மடம் கிறிஸ்டி (30), அந்தோணி ராயப்பன், மரியகுவிட்டன், மரியபிச்சை ஆகியோரை துப்பாக்கி முனையில், நிறுத்தினர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்களை கையை உயர்த்தியபடி நிற்க வைத்த சிங்களப் படையினர் பின்னர் திரும்பிச் செல்லுமாறு உத்தரவிட்டனர். அதன்படி தமிழக மீனவர்கள் திரும்பிச் சென்றபோது, பின்னாலிருந்து கோழைத்தனமாக துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

இதில் கிறிஸ்டியின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். மற்றவர்கள் சட்டென படகில் படுத்திக் கொண்டதால் துப்பாக்கிக் குண்டு படாமல் தப்பினர்.

வெறித்தனமாக சுட்ட பின்னர் சிங்களப் படையினர் திரும்பிச் சென்றனர். வேகமாக படகை கரைக்கு செலுத்திய மீனவர்கள் மாலையில், மண்டபம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கிறிஸ்டியைக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட கிறிஸ்டிக்கு தர்மசீலி என்ற மனைவியும், ஸ்டீவ் வாக், ஸ்டெடி வாக் என்ற இரு மகன்களும், ஸ்டெனி என்ற மகளும் உள்ளனர்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் வேகமாக கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது படகு பழுதானது. இதை சரி செய்ய 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. இந்த தாமதத்தால்தான் கிறிஸ்டியை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதாக மீனவர்கள் வருத்தத்துடன் கூறியது சோகமாக இருந்தது.

இன்னொரு சம்பவத்தில் ஒருவர் படு காயம்

இந்த நிலையில் நேற்று நடந்த இன்னொரு கடற்படை வெறியாட்டத்தில் பிரான்சிஸ் என்ற மீனவர் படுகாயமடைந்தார்.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நெப்போலியன் என்பவரது படகில் பிரான்சிஸ், ராஜன், தாதேயூஸ், செல்வம் ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதில் பிரான்சிஸ் முதுகில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து பிரான்சிஸுடன் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு போய் சேர்த்தனர்.

நேற்று ஒரே நாளில் ஒரு மீனவர் உயிரிழந்ததும், ஒரு மீனவர் படுகாயமடைந்ததும் ராமேஸ்வரம், மண்டபம்,தங்கச்சி மடம் பகுதிகளில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/03...ankan-navy.html

அட இந்த செய்திகளை பார்த்து பார்த்து அலுத்து போட்டுது. பார்த்து அனுதாபம்தான் படலாம். இதை இந்திய கடற்படை செய்தால் சிங்களவன் பார்த்துட்டு சும்மா இருப்பானோ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படை சுட்டு ராமேஸ்வரம் மீனவர் பலி - ஒருவர் படுகாயம்

வியாழக்கிழமை, மார்ச் 6, 2008

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே இன்று ராமேஸ்வரம் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 262 படகுகளில் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் வந்தனர்.

தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த கடற்படையினர், குயின்ராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில், இருந்த அக்காள் மடம் கிறிஸ்டி (30), அந்தோணி ராயப்பன், மரியகுவிட்டன், மரியபிச்சை ஆகியோரை துப்பாக்கி முனையில், நிறுத்தினர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்களை கையை உயர்த்தியபடி நிற்க வைத்த சிங்களப் படையினர் பின்னர் திரும்பிச் செல்லுமாறு உத்தரவிட்டனர். அதன்படி தமிழக மீனவர்கள் திரும்பிச் சென்றபோது, பின்னாலிருந்து கோழைத்தனமாக துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

இதில் கிறிஸ்டியின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். மற்றவர்கள் சட்டென படகில் படுத்திக் கொண்டதால் துப்பாக்கிக் குண்டு படாமல் தப்பினர்.

வெறித்தனமாக சுட்ட பின்னர் சிங்களப் படையினர் திரும்பிச் சென்றனர். வேகமாக படகை கரைக்கு செலுத்திய மீனவர்கள் மாலையில், மண்டபம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கிறிஸ்டியைக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட கிறிஸ்டிக்கு தர்மசீலி என்ற மனைவியும், ஸ்டீவ் வாக், ஸ்டெடி வாக் என்ற இரு மகன்களும், ஸ்டெனி என்ற மகளும் உள்ளனர்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் வேகமாக கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது படகு பழுதானது. இதை சரி செய்ய 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. இந்த தாமதத்தால்தான் கிறிஸ்டியை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதாக மீனவர்கள் வருத்தத்துடன் கூறியது சோகமாக இருந்தது.

இன்னொரு சம்பவத்தில் ஒருவர் படு காயம்

இந்த நிலையில் நேற்று நடந்த இன்னொரு கடற்படை வெறியாட்டத்தில் பிரான்சிஸ் என்ற மீனவர் படுகாயமடைந்தார்.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நெப்போலியன் என்பவரது படகில் பிரான்சிஸ், ராஜன், தாதேயூஸ், செல்வம் ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதில் பிரான்சிஸ் முதுகில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து பிரான்சிஸுடன் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு போய் சேர்த்தனர்.

நேற்று ஒரே நாளில் ஒரு மீனவர் உயிரிழந்ததும், ஒரு மீனவர் படுகாயமடைந்ததும் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம் பகுதிகளில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/03...ankan-navy.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த செய்திகளை பார்த்து பார்த்து அலுத்து போட்டுது. பார்த்து அனுதாபம்தான் படலாம். இதை இந்திய கடற்படை செய்தால் சிங்களவன் பார்த்துட்டு சும்மா இருப்பானோ?

தமிழக மக்களின் விடிவெள்ளிகள்.. சென்னைல அரசாளும் போது தானே உதுகள் நடக்குது. அவையே மெளனமா இருக்கேக்க... இந்திய அரசுக்கு என்ன வந்திச்சு. சிங்களவனுக்கு ஏன் உசார் வராது..! சோனியாவுக்கு தமிழக மீனவர்கள் அடிவாங்கனும் என்றது விருப்பம்.தமிழக கலைஞர் அதை மறைமுகமா செய்விக்கிறார் கதிரையில மூட்டைப் பூச்சியாட்டம் ஒட்டிக்க.

அதற்குப் பரிகாரமாத்தானே தமிழகத்தில புத்த பிக்குகள் விகாரை கட்ட விட்டிருக்கு..! :D:lol:

புலிக்கு வாழ்த்துப்பாடினா ஆட்சியைக் கலை என்றவை சொந்தத் தொகுதி குடிமகன் சாகிறதை இட்டு அரசைக் கேள்வியே கேட்கினம் இல்லை என்றா.. பாருங்களன்.. தமிழக அரசியல்வாதிகளிடம் மக்கள் அபிமானத்தை..! :lol:

அதுமட்டுமல்ல.. அந்த நாடே இப்படி செய்திகளைப் பரப்பி.. சிறீலங்கா செய்யுறதுக்கு நியாயம் தேடும் போது எப்படி அப்பாவி தமிழகத் தமிழனின் வேதனை... புரியப்படும்..??! :lol:

-----------------

புலிகளுக்காக கேரளாவில் கட்டப்பட்டு வந்த படகு பறிமுதல்

கொச்சி: விடுதலைப் புலிகளுக்காக கேரளாவில் கட்டப்பட்டு வந்த பெரிய இயந்திரப் படகை தமிழக கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சமீபத்தில் திருச்சியில் இலங்கைத் தமிழரான பிரேம்ராஜ் உள்ளிட்ட இருவர் பிடிபட்டனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் இருவருக்கும் கடற்புலிகள் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பரத்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள முனம்பம் என்ற இடத்திற்கு விரைந்தது.

அங்கு சுதா படகு கட்டும் இடத்திற்குச் சென்ற தமிழக போலீஸ் குழு அங்கு கட்டப்பட்டு வந்த படகைப் பறிமுதல் செய்தது. இந்தப் படகு விடுதலைப் புலிகளுக்காக கட்டப்பட்டு வந்ததாகும்.

படகு என்று கூறப்பட்டாலும் கூட இது சிறிய கப்பல் போல பிரமாண்டமாக உள்ளது. கட்டப்பட்டு முடியும் தருவாயில் அந்தப் படகு இருந்தது.

இந்தப் படகு கட்டும் நிறுவனத்தை இஸ்மாயில், கோயா, முரளி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஊழியரான ஜோசப் பென்னி என்பவர் இதுகுறித்துக் கூறுகையில் கோயா, முரளி சொல்லித்தான் இந்தப் படகை கட்டி வந்தோம். இது விடுதலைப் புலிகளுக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது என்றார் அவர்.

இந்தப் படகை கட்டுவதற்காக ரூ. 50 ஆயிரம் (சன் ரிவி செய்தியில் இதை உல்டா பண்ணி 12 இலட்சம் என்று சொன்னார்கள் என்றா பார்த்துக்குங்களேன்.. இந்தச் செய்தி வெளியிடப்படுவதன் நோக்கத்தை) முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

படகைக் கைப்பற்றிய தமிழக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடும் கெடுபிடிகள் நிலவுவதால், தங்களது செயல்பாடுகளை கேரளாவுக்கு புலிகள் மாற்றி விட்டதாக சமீப காலமாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் இதை கேரள அரசு மறுத்து வந்தது. ஆனால் தற்போது பெரிய அளவிலான படகு ஒன்று புலிகளுக்காக கட்டப்பட்டு வந்துள்ள தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/03...at-for-ltt.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையின் தாக்குதல்களால் தமிழக மீனவரின் வாழ்க்கை கேள்விக்குறி

[07 - March - 2008]

* ஜெயலலிதா கண்டனம்

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாக கடுமையாகக் கண்டித்துள்ள அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா இதனைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்படையின் நடவடிக்கையினால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. தி.மு.க.ஆட்சியில் இந்தியா வசம் இருந்த கச்சதீவு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசால் இலங்கை நாட்டிற்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை சர்வதேச அளவில் பறிபோய் விட்டது.

நான் முதலமைச்சராக இருந்தபோது, கச்ச தீவை `நிரந்தர குத்தகைக்கு' எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தியுள்ளேன். ஆனால், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.

சர்வதேச பிரச்சினை, அண்டை மாநிலங்களுடனான பிரச்சினை, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஆகியவை குறித்து மத்திய அரசிடம் பல முறை எடுத்துச்சொல்லியும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்ளும் ஆர்வத்தில் பாதி கூட தமிழக மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதில் காட்டவில்லை.

http://www.thinakkural.com/news/2008/3/7/i...s_page47111.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.