Jump to content

காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?!

காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?!  

24 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • Replies 84
  • Created
  • Last Reply

வணக்கம் குருவிகளே,

காதலர் தினம் யாருக்கும் சொந்தமான ஒரு தினம் அல்ல. அது ஒரு புனிதத்தை வெளிப்படுத்த உகந்த நல்ல தினம். பலபேருக்குள் புதைந்து கிடக்கக் கூடிய உணர்வுகளை ஒருவர் இன்னொருவரிடம் எந்தவித தயக்கங்களும் இன்றி சொல்ல ஊக்கம் கொடுக்கின்றது. உலகிலே காதலொன்றே வேற்றுமைகள் பார்ப்பது இல்லை. எனவே இந்த இனிய பொன்னான நாளை அனைவரும் மகிழ்ட்சியுடன் கொண்டாடுவோம். காதலர் இல்லாதாரும் இந்த புதிய நாளில் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். சமூகத்துள் இருக்கும் வேற்றுமைகளை களைந்து ஒருவருக்கொருவர் அன்பு பகிர்வதற்காய்.

நான் யாரையும் காதலிக்கவில்லை, ஆனாலும் காதலர் தினத்தை காதலிக்கின்றேன்.

காதலர்தினம் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

காதல் புனிதம் ஆவதும் அசிங்கமாவதும் காதலர் தினம் கொண்டாடுவதால் அல்ல...தினம் தினம் உங்கள் உங்கள் மனம் எடுக்கும் நிலை சார்ந்ததே அது...!

பூக்கள் கொடுப்பதும் பரிசு கொடுப்பதும் பொது இடத்தில் முத்தம் கொடுப்பதும் கட்டிப்பிடிப்பதும் காதலைப் புனிதமாக்காது...அது காதலும் அல்ல..! காதல் அகத்தோடு இப்பது உடல் கூட அதை வெளிக்காட்டாத போது நீங்க ஏன் அதை கேளிக்கையாக்குகிறீர்கள்...! இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???! மேற்குலக வியாபாரிகளுக்கு ஜீவிய கால விளம்பரம் ஒட்ட கிடைத்த ஒன்றுதான் காதல்... தவறாமல் பிடித்துக்கொண்டுள்ளார்கள்...

Link to comment
Share on other sites

அவங்க கொண்டாடுறாங்க.. நாங்க காவியங்களிலேயும் காப்பியங்களிலேயும் பக்கம் பக்கமா எழுதி... இப்ப சினிமா பாடல்கள் என்று நேரக்கட்டுப்பாடின்றி இரசித்து... வாழ்க்கையையே வீணடித்துக் கொண்டிருக்கிறமே.. இதுக்கும் பார்க்க ஒரே ஒருநாள் கொண்டாடிட்டு.. பார்க்க வேண்டிய அலுவல்களை பார்ப்பது மிக மிக சிறந்ததுதானே.. ப்ளீசு.. கொண்டாட விடுங்கப்பா... :lol: :P

Link to comment
Share on other sites

காப்பியங்கள் கெளரவமாகச் சொன்னதையே கேவலமாக்கிய நீங்க....இப்ப சினிமாவைக் கேவலப்படுத்துற ஆக்கள்...காதலர் தினம் என்று ஒருநாளை வைச்சு காதலை கேவலத்திலும் கேவலம் ஆக்குறீங்க...!பாவம் வலன் அந்தாள் தான் பட்டதை உணர்வு பூர்வமா நினைவு கூறச் சொன்னா...நீங்க அந்த உணர்வையே சீரழிக்கிறீங்க...! காதல் சொக்கிலேட்டுக்குள்ளும் ரோசாச் செண்டுக்குள்ளும் வைன் புட்டிக்குள்ளும்...கருத்தடைச

Link to comment
Share on other sites

காதல் என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு. அது பல வடிவங்களில் இருக்கலாம். தாய் தந்தயிடம் மகனோ அல்ல மகளோ அன்பு செலுத்துவதும் காதலே. ஆனால் இன்றய இப் பொன்நாள் ஒரு காதலன் தன் காதலியிடமோ அல்ல காதலி தன் காதலனிடமோ தன் உணர்வை வெளிப்படுத்த உகந்த நன் நாள். அகத்தோடு மட்டும் நிற்பவை அல்ல காதல் உணர்வின் விளிப்பாடுகள். அகத்தில் தோன்றுகின்ற அன்பின் வெளிப்பாடு புறத்திலிம் எதிரொலிப்பதனை நாம் பல சந்தர்ப்பங்களில் காண்கின்றோம். சோகம் கூட ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அதன் எதிரொலியினை அழுகையின் வடிவில் நாம் புறத்தில் காண்கின்றோம்.

எனவே உணர்வுகள் அகத்தில் அடக்கி வைக்கப் படுபவை அல்ல அவை புறத்திலும் உணரப்படுபவை. சமத்துவத்தை வெளிப்படுட்த்தும் காதலர் தினம் புனிதமானதே. இப் புனித நாளை தமிழர்கள் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...ஒரு கணம் சிந்தியுங்கள்...காதலர் தினம் தமிழர் திருநாளா என்று....!!!!!!!!!!!!!

ஒரு கணம் ஏன் சிந்திக்க வேண்டும்..நிச்சயமாக இது ஒரு வியாபாரந்தான். எக்கட சனத்துக்கு இப்ப வெள்ளக்காரன் என்ன செய்தாலும் அது ஒரு பெரிய விசயந்தான். இதை முட்டாள்தனமென்பதா அல்லது வேறு ஏதாவது சொல்வதா????

காதலர் தினத்தை உருவாக்கியவர்களுக்கே ஒழுங்கான காதலுக்கு விளக்கம் இன்னும் தெரியவில்லை அதற்குள் (உங்களுக்கெல்லாருக்கும் தெரியுந்தானே அவங்கட காதலப்பற்றி)இதையறியாமல் எங்கடவையளுக்கும் ஒரு காதலர் தினமாம்.

இதில் இந்தியத்தமிழரின் லொல்லுத்தான்ப்பா சகிக்க முடியல..

Link to comment
Share on other sites

காதல் என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு. அது பல வடிவங்களில் இருக்கலாம். தாய் தந்தயிடம் மகனோ அல்ல மகளோ அன்பு செலுத்துவதும் காதலே. ஆனால் இன்றய இப் பொன்நாள் ஒரு காதலன் தன் காதலியிடமோ அல்ல காதலி தன் காதலனிடமோ தன் உணர்வை வெளிப்படுத்த உகந்த நன் நாள். அகத்தோடு மட்டும் நிற்பவை அல்ல காதல் உணர்வின் விளிப்பாடுகள். அகத்தில் தோன்றுகின்ற அன்பின் வெளிப்பாடு புறத்திலிம் எதிரொலிப்பதனை நாம் பல சந்தர்ப்பங்களில் காண்கின்றோம். சோகம் கூட ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அதன் எதிரொலியினை அழுகையின் வடிவில் நாம் புறத்தில் காண்கின்றோம்.

எனவே உணர்வுகள் அகத்தில் அடக்கி வைக்கப் படுபவை அல்ல அவை புறத்திலும் உணரப்படுபவை. சமத்துவத்தை வெளிப்படுட்த்தும் காதலர் தினம் புனிதமானதே. இப் புனித நாளை தமிழர்கள் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை.

ஆண் - பெண் காதலுக்கும் பாசம் கலந்த அப்பா அம்மா சகோதரங்கள் மீதான காதலுக்கும் இடையே உணர்வு ரீதியான தெளிவான வேறுபாடுண்டு...! காதலை வெளிப்படுத்த காதல் கொண்டவங்களுக்கு நாள் நட்சத்திரம் அவசியமில்லை...! காதல் ஒரு நாளுக்குரியதுமல்ல...அது வாழ்வின் எல்லை வரை தொடர வேண்டியது...! ஏன் புறத்தே வேசங்களால் வெளிக்காட்டாமலே காதலை அன்பால் காட்டிக் கொண்டே இருக்கலாம் அதுதான்...யதார்த்தமானது...உண்ம

Link to comment
Share on other sites

இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???!

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

காதலர் தினமானது காதலை அன்றுடன் முடித்துவிடுவது அண்று. அன்றய தினத்தில் அவர்களின் அன்பை பரிமாறும் பொளுது, அன்புன் ஊற்றும், உணர்வும் மேலோங்குகின்றது. கல்யாண சடங்குகளிலும் இனியது காதலர் தினம். வெள்ளைகாறனால் கொண்டுவரப்பட்டது என்பது வீண்விவாதம். அப்படி பார்த்தால் நாம் அறிவிலிகளாகவெ இருந்திருக்க வேண்டும். மனித சமூகம் தழைப்பதற்கு எது எது உகந்ததுவோ அவற்றை நாம் வரவேற்பதே சிறந்த பண்பாடாகும்.

காதலர் தினம் யாருக்கும் எதிரானதன்று. அதை சிலர் தங்களின் சுயனலத்திற்காக பயன் படுதினால். அது காதலர் தினத்தின் தவறாகாது. மருத்துவம் புனிதமானது அதனையும் தான் தவறாக பயன்படுத்துகின்றார்கள். காதல்ர் தினம் சமத்துவத்தின் நாள். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol::lol: சாதி மதம் மொழி இனம் நிறம். எல்லாவற்றைகும் தாண்டியது காதல் என்கிறாங்க.. இவங்க என்ன.. காதலை தமிழ்காதல் சிங்களக்காதல் என்கிறாங்க..??? :roll: :wink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்க கொண்டாடுறாங்க.. நாங்க காவியங்களிலேயும் காப்பியங்களிலேயும் பக்கம் பக்கமா எழுதி... இப்ப சினிமா பாடல்கள் என்று நேரக்கட்டுப்பாடின்றி இரசித்து... வாழ்க்கையையே வீணடித்துக் கொண்டிருக்கிறமே.. இதுக்கும் பார்க்க ஒரே ஒருநாள் கொண்டாடிட்டு.. பார்க்க வேண்டிய அலுவல்களை பார்ப்பது மிக மிக சிறந்ததுதானே.. ப்ளீசு.. கொண்டாட விடுங்கப்பா...

_________________

:lol::lol::lol:

நீங்களும் கொண்டாடுறியளா..?? :P

Link to comment
Share on other sites

ஒரு கணம் ஏன் சிந்திக்க வேண்டும்..நிச்சயமாக இது ஒரு வியாபாரந்தான். எக்கட சனத்துக்கு இப்ப வெள்ளக்காரன் என்ன செய்தாலும் அது ஒரு பெரிய விசயந்தான். இதை முட்டாள்தனமென்பதா அல்லது வேறு ஏதாவது சொல்வதா????

காதலர் தினத்தை உருவாக்கியவர்களுக்கே ஒழுங்கான காதலுக்கு விளக்கம் இன்னும் தெரியவில்லை அதற்குள் (உங்களுக்கெல்லாருக்கும் தெரியுந்தானே அவங்கட காதலப்பற்றி)இதையறியாமல் எங்கடவையளுக்கும் ஒரு காதலர் தினமாம்.

இதில் இந்தியத்தமிழரின் லொல்லுத்தான்ப்பா சகிக்க முடியல..

.......இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???! மேற்குலக வியாபாரிகளுக்கு ஜீவிய கால விளம்பரம் ஒட்ட கிடைத்த ஒன்றுதான் காதல்... தவறாமல் பிடித்துக்கொண்டுள்ளார்கள்...
Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol: சாதி மதம் மொழி இனம் நிறம். எல்லாவற்றைகும் தாண்டியது காதல் என்கிறாங்க.. இவங்க என்ன.. காதலை தமிழ்காதல் சிங்களக்காதல் என்கிறாங்க..??? :roll: :wink:

தமிழினி...காதலுக்குத்தான் பேதமில்ல..அது உணர்வால் பிறப்பது...காதலர் தினத்துக்கு தெளிவா இடத்துக்கிடம் பேதம் இருக்கு...அது ஆக்கள் தங்கள் தங்கள் விருப்பத்துக்கு வியாபாரத்துக்குப் ஏற்ப பிறப்பிப்பது...! :idea:

காதலுக்கு... அன்பைப் பொழிய ஏன் வைன் குடிக்கவேணும்...இல்ல பியர் அடிக்க வேணும்...இல்ல...இப்படிப் பலதும் பண்ண வேணும்... காதல் மகிழ்ச்சி என்பது அன்பைப் பரிமாறுவதால் உளத்தால் எழுவது...அதற்கேன் வெளிவேசம்....தேவையில்லாத வேடங்கள்...! :idea:

சிலர் இதே தினத்தை ஏதோ காதலுக்கு சுதந்திரம் தரும் தினமாகக் கருதி...பச்சை நிற ஆடைகள் அணிந்து கட்டாயக் காதல் வரவழைக்கினமாம்...இன்னும் சிலர் செய்ய வேண்டிய சேட்டைகளை செய்து போட்டு இது லவேர்ஸ் டே எதுக்காடி இருக்கு என்றாங்க...இதுதான் காதலர் தினம் தரும் விளைவுகளோ...இதுதான் புனித நாளின் பணிகளோ...!

இப்போ தியாகிகள் நாளை கூத்தும் கும்மாளமுமா அடிக்கச் சொன்னா அதை அங்கீகரிப்பீங்களோ... அதேபோற்தான் காதலுக்காய் தியாகம் பண்ணினவன் காதலுக்கு மரியாசை செய்யச் சொன்ன நாள் தான் இது...ஆனா...அதுவா நடக்குது...இதுதான் மரியாதை செய்யும் நடைமுறைகளோ...??!

இவர்களுக்கு முன்னரே தமிழர்கள் காதலுக்கு மரியாதை செய்யச் சொல்லி எத்தனையோ உதாரணங்களைக் காட்டியும் கடைப்பிடிக்க மறுப்பவர்கள்...வலண்டைன் டேக்கு முன்னுரிமை அளிப்பதாய் வேசம் போடுவது ஏன்...???! எல்லாம் நாசகாரியத்துக்குத்தான்...! காதலுக்காய் அல்ல...! :P :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமாய் நாங்க இது எல்லாம் செய்யல.. வாழ்த்தினதோட சரி.. செய்யுறவங்க சொல்லுங்க.. நமக்குத்தெரியாது.. :wink: :mrgreen:

Link to comment
Share on other sites

காதலர் தினம் மட்டுமல்ல தைப்பொங்கள், புதுவருடம், எழுச்சி தினங்கள் இன்னும் பிற தினங்கள் தேவையா என்று கேள்வி எழுப்பலாம். பண்டிகைகள் தினங்கள் மக்களை மகிழ்சியாக வைத்திருக்கவேண்டும் அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. அவை எந்த இனத்திற்கோ கலாச்சாரத்திற்கோ சொந்தமாக இருந்தாலும் அவற்றை உங்களால் ஏற்றுக்கொள்ளகூடியதாக இருந்தால் கொண்டாடுகள் ஆனந்த்மாக இருங்கள், இல்லையேல் அவற்றை விட்டுவிடுங்கள். தமிழராக இருந்தால் காதல்தினம் கொண்டாடலாமா என்று கேட்பது போல் கிறிஸ்மஸ் கொண்டாடலாமா என்றும் கேட்கலாம். அது தமிழர்கள் மதமல்லவே பின்பு புகுந்ததுதானே என்று வரலாறும் பேசலாம். என்னை பொறுத்தவரை பொங்கல், புது வருடம், கிறிஸ்மஸ், ஹஜ் தினம், காதலர் தினம், அன்னையர் தினம் எதுவும் கொண்டாடுவதில் தப்பில்லை. பண்டிகைகளின் இன, மத, மொழி வேறுபாடு பார்க்காதீர்கள்.

மற்றும் ஒரு விடயம் நாம் வாழ்நாள் முழுவதும் காதலிக்கிறோமே அதனை பெப் 14 ஒரு நாள் மட்டும் வெளியில் சொல்லி காட்டதேவையில்லை என்றும் சிலர் சொல்ல்லலாம். அன்பை மனதில் அடைத்து வைத்திருந்து பயனில்லை, அதனை வெளிப்படுத்துங்கள். நமக்கெல்லாம் வெளிச்சம் உட்பட இன்ன பல பயன் தரும் சூரியனை ஒரு நாள் மட்டும் தைப்பொங்கள் என்ற பெயரில் நன்றி சொல்லி கொண்டாடுகின்றோமே அது ஏன்? நமக்காக உயிர் துறந்தவர்களை குறிப்பிட்ட தினங்களில் நினைவு கூர்கின்றோமே அது ஏன்? அப்படி செய்வதால் நாம் இவற்றை எல்லாம் மற்றய தினங்களில் மறந்துவிட்டோம் என்று அர்த்தமாகுமா என்ன?

Link to comment
Share on other sites

மதன் உங்கள் கருத்தின் படி பார்த்தால்...மனித உணர்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் குறித்து விசேடமாக வெளிப்படுத்துவதைத்தான் விரும்புவீர்களோ...அப்ப எனி அழுகை நாள் என்று ஒரு நாள் வைத்து எல்லோரும் அழுங்கள்...சிரிக்கும் நாள் என்று வைத்து சிரிக்காதவர்களும் அன்று சிரித்து மகிழுங்கள்...குளிக்கும் நாள் என்று ஒன்று வைத்து அன்று விசேடமாகக் குளித்து மகிழுங்கள்...இப்படியே வருசம் 365 நாளையும் ஏதாவது ஒரு நாளாக்கிட்டியள் என்றா பிரச்சனை முடிஞ்சுது...ஒரே கொண்டாட்டம் தான்...தினமும் செய்ய வேண்டியதை மறக்கிற ஆக்களுக்கு உதுகள் உதவும்...பிசி ஆக்களல்லோ நீங்கள் எல்லோரும்...! :wink: :P :idea:

காதலுக்கு சூரியனுக்கும் வேற்பாடு புரியாம....காதல் உணர்ச்சி..உங்களோட கூட இருப்பது உங்கள் மனம் சார்ந்தது...இன்றைய தினம் மனம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் காதல் உணர்வை வெளிப்படுத்தாமல் போகலாம்...அதற்காக காதல் இல்லை என்பதாகிடுமா...ஏனைய்யா...அறிவி

Link to comment
Share on other sites

8) ஆனால் :? செய்யுறீர்கள் மதன்... :| :wink:

..

உங்கள் கேள்வி மற்றய அனைத்து பண்டிகைள் மற்றும் நினைவு தினங்களுக்கும் பொருந்துமா? :P

Link to comment
Share on other sites

8) ஆனால் :? செய்யுறீர்கள் மதன்... :| :wink:

புரியவில்லை அன்பகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவை இந்த தினத்தை எப்பிடியெல்லாம் கொண்டாடினம் எண்டு எனக்கு தெரியாது என்ரை முஞ்சையை ஓரு பெண்பிடிச்சிருக்கெண்டு ஒருகடதாசியிலை எழுதி ஒரு ரோசா மலரையும் வீட்டு வாசல்லை கட்டிபோட்டு போயிருக்கு அவரிற்கு தனது விருப்பத்தை சொல்ல இந்தநாள் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தபடியால் எனக்கு காதலர் தினம் தேவை : :lol::lol: மற்றபடி (halloowine )புனித ஆத்மாக்கள் தினத்தையும்தான் இப்ப இங்கு தண்ணியடிச்சு பேய்மாதிரி வேடம் போட்டு குடிச்சு கூத்தாடி கொண்டாடுறாங்கள்.இப்ப எல்லாமே வியாபாரம் தான்.கலை கலாச்சாரம் பாரம்பரியம் மனிதம் எல்லாம் இரண்டாம் படசம்

அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா.. நல்லம் :P

Link to comment
Share on other sites

உங்கள் கேள்வி மற்றய அனைத்து பண்டிகைள் மற்றும் நினைவு தினங்களுக்கும் பொருந்துமா? :P

மதன் உங்கள் கருத்தின் படி பார்த்தால்...மனித உணர்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் குறித்து விசேடமாக வெளிப்படுத்துவதைத்தான் விரும்புவீர்களோ...அப்ப எனி அழுகை நாள் என்று ஒரு நாள் வைத்து எல்லோரும் அழுங்கள்...சிரிக்கும் நாள் என்று வைத்து சிரிக்காதவர்களும் அன்று சிரித்து மகிழுங்கள்...குளிக்கும் நாள் என்று ஒன்று வைத்து அன்று விசேடமாகக் குளித்து மகிழுங்கள்...இப்படியே வருசம் 365 நாளையும் ஏதாவது ஒரு நாளாக்கிட்டியள் என்றா பிரச்சனை முடிஞ்சுது...ஒரே கொண்டாட்டம் தான்...தினமும் செய்ய வேண்டியதை மறக்கிற ஆக்களுக்கு உதுகள் உதவும்...பிசி ஆக்களல்லோ நீங்கள் எல்லோரும்...! :wink: :P :idea:

காதலுக்கு சூரியனுக்கும் வேற்பாடு புரியாம....காதல் உணர்ச்சி..உங்களோட கூட இருப்பது உங்கள் மனம் சார்ந்தது...இன்றைய தினம் மனம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் காதல் உணர்வை வெளிப்படுத்தாமல் போகலாம்...அதற்காக காதல் இல்லை என்பதாகிடுமா...ஏனைய்யா...அறிவி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.