"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 124
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 124 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"
தீபவம்சம், மகாவம்சம் மற்றும் இராசாவலிய போன்ற இலங்கையின் வரலாற்றுக் நாளாகமம்களில் உள்ள சில புராணக்கதைகள் மற்றும் இலங்கைக்கு புத்த மதத்தின் வருகை ஆகியவை தமிழ்நாட்டுடன் அதிக அளவிலும், கேரளா மற்றும் ஆந்திராவுடன் குறைந்த அளவிலும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன என்பதைக் காண்கிறோம். புவியியல் காரணமாக கட்டாயம் ஆந்திரா கேரளாவை விட பெரிய பங்கைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதேபோல, பழங்கால சிங்கள மக்கள், பொதுவாக, தங்கள் வடக்கு அண்டை நாடுகளுடன் மிகவும் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருந்திருக்க வேண்டும். வரலாற்றுக் குறிப்புகளில் தமிழ் நாட்டுப்புறக் கதைகளின் செல்வாக்கையும், இலங்கைக்கு பௌத்தம் பரவியதையும் காட்ட, இரண்டு முன்னணி தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை பற்றிய மிகச் சுருக்கமான விவரிப்பைக் கொடுக்க வேண்டியது இன்று அவசியம் ஆகிறது. சிலப்பதிகாரம் மத ரீதியாக நடுநிலையானதாகக் கருதப்பட்டாலும், மணிமேகலை காவியம் ஒரு முழுமையான பௌத்தக் கதை ஆகும்.
சிலப்பதிகார காவியத்தின் முன்னுரையில், கடலால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் கஜபாகு (Gajabahu) ஆடித் திங்கலில் (கிறிஸ்தவ நாட்காட்டியில் ஜூலை - ஆகஸ்ட்) பத்தினி தேவியின் (கண்ணகி) கதையைக் கேள்விப்பட்டு, காணிக்கைகளை வழங்கி, பத்தினி தேவியை கௌரவிக்கும் வகையில் விழாக்களை நடத்தினார் என்றும் இதனால், நல்ல மழை பெய்து, இலங்கை செழிப்பாக மாறியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் பெரகரா விழா மற்றும் ஆடிவேல் விழாவின் [Perahera festival and the Aadivel festival] மிகப் பழைய வடிவமாக அல்லது அதன் பண்டைய விழாவாக இருக்க வேண்டும். மன்னன் கஜபாகு, ஒரு வெற்றி பெற்ற மன்னராகக் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்தக் காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த தென்னிந்திய மன்னரான சேரன் செங்குட்டுவனுடன் நட்புறவைக் கொண்ட இலங்கையின் சுதந்திர மன்னராகக் குறிப்பிடப்படுகிறார். ஒரு காலத்தில் பரந்து விரிந்த சேர இராச்சியத்தின் எச்சம் இன்றைய கேரளம் ஆகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, முன்னுரையில் உள்ள வசனங்கள் தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அர்த்தத்தின் சுருக்கம் ஏற்கனவே மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
"அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு
என்பான் நங்கைக்கு நாள் பலி பீடிகைக்
கோட்டம் முந்துறுத்து, ஆங்கு, ‘அரந்தை
கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள்
அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை
எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி,
பிழையா விளையுள் நாடு ஆயிற்று"
அதனைக் கேட்டு, கடலை அகழாகவுடைய [கடலால் சூழ்ந்த] இலங்கையிலுள்ள கயவாகு என்னும் அரசன், அவ்விடத்தே நங்கைக்கு நாடோறும் பலி கொள்ளும் பலி பீடத்தை முற்படச் செய்து பின்பு கோட்டமும் அமைத்து, துன்பங்களைக் கெடுத்து நமக்கு வேண்டும் வரங்களை இவள் தருமென்று துணிந்து, ஆடித் திங்களிலே, தனது நகரின்கண் விழாச் செய்தலை, ஆண்டு தோறும் நிகழ்த்தா நிற்க, மழை குறை வின்றி நிலைபெறுதலானே, பல வளங்களும் நிறைந்து, பொய்யாத விளை வினையுடைய நாடாயிற்று அவனது நாடு என்கிறது மேலே உள்ள இந்தப் பாடல்.
சிலப்பதிகாரக் காவியத்தின் முதன்மை நாயகி கண்ணகியாக இருந்தாலும், ஒரு நேர்த்தியான நடன அழகியான மாதவி, ஒரு நடன பெண் குலத்தைச் சேர்ந்தவராக, ஒரு கணிகை மகளாக [nautch] இருந்தாலும், சமமான தகுதி கொண்ட நாயகியாகவும் கருதப்படலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக வாழ்ந்தவள். கரிகால சோழனின் சபையில் மாதவி நாட்டியமாடிய போது கோவலன் எனும் வணிகனுக்கு மாதவியின் அறிமுகம் கிடைத்தது. கண்ணகியின் கணவரான கோவலன், மன்னனின் முன் மாதவியின் முதல் நடன அறிமுகவிழா நாளில், மாதவியின் அழகில் மயங்கி, அவள் மேல் காதல் கொண்ட கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் தங்கி, தனது செல்வம் அனைத்தையும் மாதவியின் தாயாரிடம் இழந்தார். பின்னர் மாதவியுடன் ஏற்பட்ட ஒரு அற்பமான பிரச்சினையில், கோவலன் கண்ணகியின் வீட்டிற்குத் திரும்பினான். நடனமும் நடன சமூகமும் அந்த காலத்தில் சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன என்பது வரலாறு. கண்ணகி ஒரு பணக்கார வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதுடன், சிலப்பதிகார காவியத்தின் ஆசிரியர் அவளுடைய செழிப்பான வாழ்க்கையை 'பூமாதேவி கண்ணகியின் சிறிய அழகான கால்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.' என்று விவரிப்பதில் இருந்து இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
Part: 124 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"
The chronicles of Ceylon; the Dipavamsa, the Mahavamsa, and the Rajavaliya, indicate that the some of the legends in the chronicles, and the arrival of Buddhism to Lanka have close connection with the Tamil Nadu to a greater extent and to Kerala and Andhra to a lesser extent. Andhra should have played a larger role than Kerala because of the geography. Sinhalese people of yore, in general, must have had a very healthy relationship with their northern neighbours. It is necessary to give a very brief account of the two foremost Tamil Epics Silappathikaram and Mannimeghalai to show the influence of Tamil folklores in the chronicles and the spread of Buddhism to Lanka. The Epic Silappathikaram can be considered religiously neutral, but the Epic Mannimeghalai is a fully fledged Buddhist narrative.
Silappathikaram: It is mentioned in the prologue, kind of introductory summary at the beginning, of this epic that the king Kajavahu (Gajabahu) of Lanka (Illanagai in Tamil) which is surrounded by sea heard of the story of the Goddess Pattini (Kannaki) and gave offerings and took festivals on her honour in the month of July, (July-August in the Christian Calendar) and it rained well and Lanka became prosperous. This must be the ancient most record of the Perahera festival and the Aadivel festival that take place usually about or during the months of July-August each year in Ceylon. The king Kajavahu is mentioned not as a conquered king, but as an independent king of Lanka with amicable relationship with the most powerful South Indian king of that time, Cheran Seng Kudduvan. The remnant of the once extensive Chera Kingdom is the present day Kerala. The verses in the prologue, as mentioned above, are given below in Tamil. The summary of the meaning is already given above.
"அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு
என்பான் நங்கைக்கு நாள் பலி பீடிகைக்
கோட்டம் முந்துறுத்து, ஆங்கு, ‘அரந்தை
கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள்
அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை
எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி,
பிழையா விளையுள் நாடு ஆயிற்று"
"On hearing this Gajabahu of Ceylon encircled by sea,
built a shrine for the Lady of Chastity where daily sacrifices were performed.
Thinking that she would remove the distress [ of his land],
He also instructed annual festivals commencing with the month Adi [July - August];
Then the rain came to stay, and increased the fertility of the land,
So as to produce unfailing crops"
[The Silappathikaram, Transilation by V R Ramachandra Dikshitar, M. A., 1939]
The prime heroine of the Epic Silappathikaram is Kannaki, but Madhavi, who is an accomplished elegant dancing beauty, can also be considered a heroine of equal merit though born a nautch. Kovalan, the husband of Kannaki, got entranced with Madhavi on the day of her first dancing inauguration in front of the king. He stayed with Madhavi, and lost all his wealth to Madhavi’s mother. Then on a trivial issue with Madhavi, Kovalan returned home to Kannaki. The dancing and the dancing community were then an integral part of the community. Kannaki was from a wealthy merchant family, and the author of the epic describes her opulent life thus; the lady earth never knew Kannaki’s small beautiful feet.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 125 தொடரும் / Will follow
துளி/DROP: 2076 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 124
https://www.facebook.com/groups/978753388866632/posts/34156313217350555/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.