Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நடிகையின் சோகக்கதை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nisha1pw8.jpg

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்!'' _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.

clip1fy5.jpg

'இளமை இதோ இதோ', 'முயலுக்கு மூனுகால்,' 'மானாமதுரை மல்லி', 'எனக்காகக் காத்திரு' போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை நிஷா தான் அந்த பெண். தகவல் அறிந்த குமுதம் ரிப்போர்ட்டர் நிஷா இருந்த மருத்துவமனைக்கு சென்று அவரிடம் பேசினர். குமுதம் ரிப்போர்ட்டர் நிஷா சூழல் குறித்து பேசும் போது...

நாம் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வருகிறோம் என்றதும் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்ட அவர், ''சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கனும்!'' என்று கதறினார். சினிமா ஸ்பாட் லைட்களின் ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது நம்மை உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார்.

''எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன்.

நடிகர் கமலோடு 'டிக்...டிக்....டிக்', ரஜினி சாரோட 'ஸ்ரீராகவேந்திரர்', பாலசந்தர் சாரோட 'கல்யாண அகதிகள்' இன்னும் விசு சார், சந்திரசேகர் சார் டைரக்ஷனில் கூட நடிச்சிருக்கேன்'' என்றவர் தொடர்ந்தார்.''அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். 'உனக்குசினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே'ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பி விட்டார். நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!'' என்றார் கண்ணீருடன்.

'உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?' என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ''நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். என் பெரியப்பா அப்துல் ஹமீதுவின் மகள் நிக்காவின்போது, தாலிக்கு நான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதை அவர்கள் மறந்து விட்டார்கள். சொந்த ஊரில்... பெற்ற தந்தையின் கண் முன்பே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது' என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.

அதன் பிறகு, ''சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடனும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!'' என்று கெஞ்சினார். நம்முடன் வந்திருந்த நண்பரொருவர் ஓடிச்சென்று அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். நிஷா, சென்னை பல்லாவரத்தில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மா என்பவரிடம் அலிபாய், ரபீர் என்பவர்கள் மூலமாக நகை மற்றும் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பதாகவும், நகையை அடகு வைத்து அந்தப் பணத்தில் வாடகைக் கார் பிடித்து அலிபாய் மூலம்தான் நாகூர் வந்து சேர்ந்ததாகவும் நிஷா நம்மிடம் விவரித்தார்.

தந்தை மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், நாகூர் தர்கா அருகே அவர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார். நடிகை நிஷாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோது, நர்ஸ் ஒருவர் விடுவிடென்று வந்து நம்மை, அப்பால் அழைத்துச் சென்றார். ''அந்தம்மாவுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்!'' என்றார் இரக்கக் குரலில்.

நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. நாகூரில் வசிக்கும் நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைச் சந்தித்தோம். ''நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணி திருமணம் செய்ததால், பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. 'கொஞ்ச நாள் பொறு'ன்னு நான் சொன்னதைக் கேட்காமல், குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. அதன் பிறகு, பேபியைத் தேடியலைஞ்சு கோடம்பாக்கத்தில் கண்டுபிடித்தேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. தான் ஜலீல்னு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச் சொன்னாள். நிஷாவை என் கண்ணில் காட்டாமல் மறைச்சிட்டாள். பேபிக்கு பல பேரோட தவறான தொடர்பிருந்தது.

நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. அதனால், ''உனக்கு ஊரில் பல பொம்பிளைகளோடு தொடர்பிருக்கு. இனிமே இங்கே வராதேன்னு என்னை விரட்டிட்டா'' என்றார். 'உங்களுக்கு எத்தனை மனைவிகள்?' என்று ஜப்பாரிடம் கேட்டோம். ''மனைவி என்றால் அது பேபி மட்டும்தான். ஆனால் நாலைந்து பெண்களோடு தொடர்பு உண்டு. எனக்கும் ஓர் இந்துப் பெண்னுக்கும் பிறந்த பையனை முஸ்லிமாக மாத்தி ஷாகுல் அமீதுன்னு பெயர் வைத்து வளர்க்கிறேன்'' என்றார். மீண்டும் தொடர்ந்த அவர், ''பேபி இறந்தபோது எனக்கு தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே போனபோது, 'எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் பெரியப்பா எதுக்கு?'ன்னு கேட்டு, நிஷா அவரை விரட்டியிருக்கா. இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்கள்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்?'' என்றார் அப்துல் ஜப்பார். நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீதைச் சந்தித்தோம்.

''சென்னை சாந்தோமில் மலாக்கா சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக்கும் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது' என்றார் போட்டோவுக்கு மறுத்தபடி. நாகூர் ஜமாத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீனுடன் பேசினோம். ''ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார். அடுத்து நாகை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகியும், பொதுநல ஆர்வலருமான நாகூர் பாரி, ''நலிந்த கலைஞர்களுக்குக் கிடைக்கும் உதவி நிஷாவுக்குக் கிடைத்தால் நல்லது! திரையுலகைச் சேர்ந்தவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்'' என்றார்.

'சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டோம். ''அந்தப் பொண்னும், அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தபோது உதவினோம். நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு உதவப்போய் இப்போது எங்களுக்குக் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா, அவரது நகை ஒன்றை அடகு வைத்தார். அந்தப் பணத்தில்தான் கார் ஒன்றை வைத்து அவரைக் கொண்டு போய் நாகூரில் விட்டுவரச் சொல்லி ஏற்பாடு செய்தோம். நிஷாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததால், நாகூர் தர்காவில் தன்னை விடச்சொல்லி நிஷாவே சொன்னதால்தான் அங்கே விட்டு விட்டு வந்தோம். நிஷா பல்லாவரத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மாவிடம்தான் மீதி நகைகளைக்கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்' என்றவர், அதைத் தொடர்ந்து நாம் கேட்ட சில கேள்விகளால் கோபமடைந்து மிரட்டலுடன் போன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.

அடுத்த சில மணி நேரத்தில் முகமது அலியின் செல்போன் மூலம் மகியம்மா என்பவர் நம்மிடம் பேசினார்.''என்னிடம் மொத்தம் மூனு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டேன். நகைக்கு அது சரியாப் போச்சு. நிஷா இருபத்து நான்கு புடைவை கொடுத்தார். அதில் இருபது புடைவைகளை தலா நூறு ரூபாய்க்கு விற்று அவரிடம் காசு கொடுத்துவிட்டேன். மீதமிருப்பது நான்கு புடைவைகள்தான்'' என்றார். ''முகமது அலிக்கும் நிஷாவுக்கும் நீண்டகாலமாகத் தொடர்புண்டு' என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அந்த செல்போனைப் பிடுங்கிய முகமது அலி, ''நிஷா இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான் அவரை எனக்குத் தெரியும். அவரோடு எனக்கு முப்பது வருஷப் பழக்கம் என்பதெல்லாம் பொய்!'' என்றார் கோபத்தோடு.

குமுதம் ரிப்போர்ட்டர் சொல்லி முடித்த போது அபலைப் பெண்ணின் பின்னணிச் சூழ்ச்சிகள் தெளிவாகவே அம்பலத்திற்கு வந்தது. எங்கோ நாகூர் தர்க்காவின் முன்பு யாருமற்ற அனாதையாக கிடந்த நிஷாவின் கோரமும், எயிட்ஸால் பாதிக்கப்பட்டு தன் வாழ்க்கையையும், உடல்நிலையையும் சீர்குலைத்துக் கொண்ட நிஷாவின் வாழ்க்கை சினிமா மோகம் கொண்டு அலையும் இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை நிகழ்வு என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. இளமை இருந்த வரையிலும் ஆண்டு அனுபவித்த ஆண்களும், தன் அழகை வைத்து பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கும் பெண்களுக்கும் சொல்லிக் கொள்வதெல்லாம் பணம் மட்டும் வாழ்க்கையில் முக்கியமல்ல. தவறாக சுழல்களில் வாழ்க்கை திசை திரும்பும் போது அதை ஏற்றுக் கொள்வதும், அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், சுகமும், பணமும் ஆபத்தானவை என்பதை உணர வேண்டும். அழகு இருக்கும் வரைதான் பெண்களை அனுபவித்து சின்னாபின்னமாக்கி விடும் சமூகத்திற்கு இன்னும் நிறைய அழகுப் பதுமைகள் வந்துக் கொண்டே இருப்பார்கள். நிஷாவின் கதையும் இப்படித்தான் முடிந்திருக்கின்றது.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அப்துல் ஜப்பாரின் மகன் ஷாகுல்அமீது, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்ததாக குமுதம் ரிப்போர்ட்டர் சொல்கிறார்.

நிஷா குறித்து ஃபிலிம்நியூஸ் ஆனந்தனிடம் பேசினோம். அவரது நிலை பற்றி மிகவும் வருத்தப்பட்ட அவர், ''அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீஸ§க்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படியரு நிலைமை?'' என்றார் நிஜமான வருத்தத்தோடு.

http://chittarkottai.com

கதையை வாசிச்சன். இரத்தக் கண்ணீர்தான் வருகிது. என்ன இருந்தாலும், யாராக இருந்தாலும் ஒரு சகோதரி போன்றவருக்கு இப்படி நடந்து இருப்பது கொடுமை.

இன்று கமல், ரஜனி எங்கோ போய்விட்டார்கள். ஆனால் இவர்களுடன் நடனமாடிய இந்தப்பெண்ணுக்கு இப்படி நடந்து இருப்பது கொடுமை.

அனுதாபங்கள்.

எங்களுக்கு எண்டு சில சுயகட்டுப்பாடுகள் வாழ்க்கையில அவசியம். அது மீறப்பட்டால் எல்லாமே ஆபத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே!! "...வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும் பூக்களின் கதைதான் பூமியில் உனக்கும்"...

நடிகைகள் உண்மையிலேயே மிகப்பரிதாபத்திற்குரியவர்க

இன்னொரு அவலம்...

இன்னும் வெளிலவராததுகள் எத்தனையோ?... முரளி கடைசீல சொன்ன சுயகட்டுப்பாடு மிக முக்கியமானது... வளிதவறினா வாழ்க்கை போயிடும்.. சமுதாயமோ உலகமோ எங்களுக்காக நிக்காது.

குமுதத்தில் இவ்வாக்கத்தை சென்ற வருடம் படித்தேன். இப்பதான் யாழிலை வருகிறது. போகிற போக்கைப் பார்த்தால் சூரியா ஜோதிகா கல்யாணச்செய்தியும் இனிமேல் தான் யாழிலை வரும் போல கிடக்கிறது.

இந்தச்செய்தி எமக்கோ மக்களுக்கோ அவ்வளவு முக்கியமில்லை எண்டதாலையோ என்னவோ இவ்வளவுகாலமா யாழ்களத்தில போடேல்ல.

அதுசரி சூரியாவும் சோதிகாவும் எப்ப கல்யாணம் கட்டினவை?

இவரின் இந்த நிலைக்கு இவரேதான் காரணம். ஆகவே, இவர் மீது எனக்குப் பரிதாபம் தோன்றவில்லை. பரிதாபப்படவேண்டியவர்களுக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.