Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடக்காதென்பார் நடந்துவிடும்!

Featured Replies

நடக்காதென்பார் நடந்துவிடும்

[ திங்கட்கிழமை, 02 யூன் 2008, 12:46.12 PM GMT +05:30 ]

juli_83_2.jpg

மற்றுமொரு எண்பத்துமூன்றுக்கு (83) இடமளிக்கப் போவதில்லை எனத் திரு.மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வாசஸ்தலத்திற்கு ஊடகங்களின் ஆசிரியர்களையும் பொறுப்பதிகாரிகளையும் அழைத்துக் காலை விருந்தளித்துப் பேசுகையிலேயே சிறீலங்கா ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கிறார்.

அத்தோடு எந்தவிதமான அழுத்தங்கள் வந்தாலும் யார் கூறினாலும் எத்தனை அழிவுகள் ஏற்பட்டாலும் யுத்தத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் சூளுரைக்கின்றார்.

பொதுமக்களை இலக்கு வைத்து அடிக்கடி நடத்தப்படுகின்ற குண்டுத் தாக்குதல்கள் மூலம் தெற்கிலே ஒரு கலவரத்தைத் தூண்டுவதற்குப் புலிகள் முயற்சித்து வருவதாக திரு.மகிந்த ராஜபக்ச அங்கு குற்றஞ்சாட்டினார். எனினும் தனது அரசாங்கம் அதற்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் வலியுறுத்தினார்.

இவ்வகையான இனக்கலவரம் இடம்பெற அனுமதிக்கப் போவதில்லை என்றவாறான கருத்துக்கள் கடந்த மாதங்களில் முன்னரும் சில தடவைகள் ஒலித்ததை வாசகர்கள் மறந்திருக்க நியாயமில்லை.

ஏன் இவ்வாறு அடிக்கடி பேசப்படுகின்றது?

பல மாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா நாடாளுமன்றில் த.தே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் யாழ்ப்பாணத்திலுள்ள நாற்பதாயிரம் படையினரும் தென்னிலங்கைக்குச் சவப்பெட்டியில் அனுப்பபப்படுவர் எனக் கூறியதற்குப் பதிலளித்த அமைச்சர் “தென்னிலங்கையில் உள்ள நான்கு லட்சம் தமிழர்களையும் கிளிநொச்சிக்கு சவப்பெட்டியில் அனுப்புவோம் “ என எச்சரித்திருந்தார்.

இந்தக் கூற்றை மேற்படி இடமளிக்கப் போவதில்லை என்ற கூற்றுடன் எவ்வாறு பொருத்திப் பார்க்க முடியும்?

இந்தக் கேள்விக்கான பதில் திட்டமிட்டுத் தூண்டுதல் என்பதாகும். அல்லது இந்தவிதமான பதிலளிப்புக்குத் தயாராக இருங்கள் என்பதாகும்.

juli_83_3.jpg

1958 மே மாதத்தின் கடைசி வாரத்தில் தமிழ்மக்கள் மீது தென்னிலங்கையிலும் வடக்கு கிழக்கின் சிங்களக் குடியேற்றப் பகுதிகளிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசாங்கத்தின் தலைவர்கள் வதந்திகளையும் வானொலி உரைகளையும் பாவித்துத் தூண்டி விளாசி எறியவிட்டதை இவ்விடத்தில் ஒப்பிட முடியும்.

juli_83_4.jpg

நுவரெலியா நகரத்தின் முன்னாள் மேயர் செனிவிரத்தின என்பவர் தமிழர்களாற் படுகொலை செய்யப்பட்டு விட்டார் என அப்போதையப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர் டீ. பண்டாரநாயக்கா வானொலியில் தெரிவித்தார். அவசர உரை என ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை மறுபடி மறுபடி ஒலிபரப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

இது தமக்கு விடுக்கப்படும் செய்தி என்பதை உணர்ந்த சிங்களக் குண்டர்கள் அரசியல் வழி நடத்தலுக்கேற்ப தென்னிலங்கையின் நகரங்கள் தோறும் பேயாட்டம் ஆடி இனச்சக்கரம் புரிந்தனர்.

juli_83_7.jpg

இவ்வகையான சம்பவமொன்று பதவியாவில் இடம்பெற்றது.

இப்பகுதியில் குடியேற்றப்பட்டு நீர்ப்பாசனத் திணைக்களம்; வீதி அபிவிருத்தித் திணைக்களம் என்பவற்றில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த சிங்களக் குற்றப் பின்னணி கொண்ட குடியேறிகள் கலவரத்தின் ஆரம்ப நாட்களில் தமிழர்களைத் தாக்குவதற்கு ஆயுதங்களை எங்கே பெறுவதெனக் கையைப் பிசைந்து கொண்டிருக்கையில் அமைச்சர் சீ. பீ. டீ. சில்வா ஒரு பத்திரிகைச் செய்தியினூடாக அவர்களுக்கு வழிகாட்டினார்.

கனரக வாகனங்கள்; வெடிமருந்துகள்; ஆயுதங்கள் ஆகியன தவறானவர்களின் பாவனைக்கு உள்ளாக்கி விடக்கூடாது என்பதற்காகப் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ளன என அவர் ஒரு சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய செய்தியில் காடையர்களுக்கான செய்தி இருந்தது.

களஞ்சிய சாலைகளை உடைத்து அவர்கள் ஆயுதங்களையும்; வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றியதோடு அங்கிருந்த வாகனங்களிலேயே கெப்பற்றிக்கொலாவ; வவுனியா ஊடாகப் பயணித்து;

அநுராதபுரத்திற்கு வந்து சேர்ந்திருந்த தென்னிலங்கைத் தமிழ் ஏதிலிகளைத் தாக்கச் சென்றனர். வவுனியா அரச அதிபரின் நடவடிக்கைகளால் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இதைவிட இடத்துக்கிடம் பரப்பப்பட்ட ஏராளமான வதந்திகள் கலவரத்தீயைப் பற்றியெரியச் செய்தன. சிங்களப் பெண்களின் மார்புகளைத் தமிழர்கள் வெட்டினர். யாழ்ப்பாணத்திலிருந்தும் திருகோணமலையிலிருந்தும் மீன் லொறிகளிற் சிங்களவர்களைக் கொன்று உடல்களை ஏற்றி அனுப்புகின்றனர். என்றவாறான பலப்பல வதந்திகள் அரச அமைச்சர்களாலேயே திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டன.

இதன் பேறாக வெகுண்டெழுந்த சிங்களக் காடையர்கள் தமிழர்களைக் கொன்று தீர்த்தனர்.

குழந்தைகள் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்படும் அளவுக்கு எட்டுப்பிள்ளைகளும் கட்டிய மனைவியும் பார்த்திருக்க கணவனின் வயிறு கிழிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்ட குடல் மனைவியின் கழுத்தில போடப்பட்டதோடு அவளின் மாங்கல்யமும் அகற்றப்படும் அளவுக்கு இந்தக் கொடூர; குரூர வன்முறைகள் பல்கிப் பெருகின.

juli_83_8.jpg

விளைவாக அகதிமுகாம்கள் உருவாக்கப்பட்டுத் தென்னிலங்கைத் தமிழர்கள் அங்கே தஞ்சம்புக வைக்கப்பட்டு அடுத்தபடியாகக் கப்பல்களிலே வடக்கு கிழக்குக்கு அனுப்பி வைக்கப்ட்டனர்.

இது நடந்து ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் திரு.மகிந்த ராஜபக்ச மற்றுமொரு எண்பத்து மூன்றுக்கு இடமளிக்கப்படமாட்டாது எனக் கூறுவதன் நோக்கம் என்ன?

1958, 1977, 1983 ஆகிய மூன்று இனக்கலவரங்ளிலும் மிக முக்கியமாகச் சிங்களப் பேரினவாதம் சாதித்தது என்னவெனில்

தென்னிலங்கையின் நகரங்கள் தோறும் காணப்பட்ட தமிழர்களின் இடுப்பை ஒத்தியெடுத்து அகற்றியமையாகும்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக அநுராதபுரம்; பொலநறுவை ஆகியவற்றைக் குறிப்பிடமுடியும்.

அநுராதபுரத்திலிருந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்டதுதான் கிளிநொச்சியிலுள்ள தருமபுரம் என்னும் கிராமம்.

juli_83_10.jpg

1958 ஐயும் 1977, 1983 ஐயும் கடந்து இன்னமும் கொழும்பிலே மட்டும் தமிழர்களின் வர்த்தக இருப்பும் பிடியும் இருக்கின்றன. இந்த இருப்பை அழிப்பதற்குப் பலப்பல முயற்சிகளை அரச ஆதரவோடு அவ்வப்போது பேரினவாதம் எடுத்தபோதும் திருப்திகரமான விளைவு அவர்களுக்குக் கிட்டவில்லை.

கடத்தல்; கப்பம்பெறுதல்; காணமற்போகச் செய்தல்; கூட்டாக வெளியேறச்செய்தல் போன்ற உத்திகள் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகக் காத்திருக்கிறது அது.

கொழும்பிலே தமிழர்கள் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைப்பதும்; கட்சிகளை அமைத்து சர்வதேசப் பிரபல்யத்தை தேடிக்கொள்வதும்; வர்த்தகம் ஊடாக மேலாதிக்கத்தைக் கொண்டிருப்பதும் பொறுக்கமுடியாத விடயங்கள் பேரினவாதத்திற்கு.

எனவே இந்தத் தமிழ்க் குடியிருப்புக்கள்; வர்த்தக நிலையங்கள்; நிறுவனங்கள்தான் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாயிருக்கின்றன என்றும்; இவற்றை அகற்றிவிட்டால் மக்கள் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் பாதிக்கப்படுவர் என்றும்; ஒரு நாசகாரப் பரப்புரையை அடிமட்டத்திலே நாசூக்காகப் பரப்பி வருகிறது அரசாங்கம்.

இந்தப் பின்னனியிலேயே திரு.மகிந்த ராஜபக்சவினது கூற்றுக்களை நாம் பார்க்க வேண்டும்

இன்னொரு புறம் தென்னிலங்கையில் நடத்தப்படும் தாக்குதல்கள் அங்கேயுள்ள தமிழர்களின் இருப்புக்கு உலைவைக்கும் என்பதான மிரட்டலாகவும் அவை அமைவதைக் கண்டு கொள்ள வேண்டும்.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதுவொன்று நடைபெறமாட்டாதெனக் கூறுகின்றார்களோ வலியுறுத்துகிறார்களோ அதை விரைவில் நிறைவேற்றப் போகின்றார்கள் என்பதே அர்த்தமாகும்.

- எஸ்.வில்லவன்-

http://www.tamilwin.com/view.php?2a36QVb4b...3g2hF0cc2tj0Cde

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.