Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்டியில் குண்டு வெடிப்பு

Featured Replies

கண்டியில் குண்டுவெடிப்பாமே பஸ் ஒன்றில் :)

Edited by வெண்ணிலா

பொல்கொல்ல கல்வி நிலையத்திற்கு கண்டியில் குண்டு வெடிப்பு

பேருந்து ஒன்றினுள் வெடித்துள்ளது.

கண்டி பொல்கொல்லவில் மாத்தளையிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் ஒன்றினுள் பின்பகுதியில் கல்வியியல் கல்லுாரிக்கருகில் இக்குண்டு வெடித்துள்ளது. 6பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன

Edited by Janarthanan

கண்டி பொல்ஹொல்ல என்ற இடத்தில் சற்றுமுன்னர் பஸ் ஒன்றினுள் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸிலேயே இக்குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனை மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் கிங்ஸ்லி எக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

Tamilwin

At least 2 dead, 12 injured in bus blast in Polgolla

At least two people have been killed and 12 others wounded in a blast inside a passenger bus at Polgolla in Kandy around 3.50 this afternoon (June 06th).

The explosion occurred on a bus that was on its way from Matale to Kandy.

http://www.lankadissent.com/allnews/2008_06_06_10_news.htm

இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்திருப்பதாகவும் கண்டி வைத்தியசாலை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது பேருந்தில் 50 பேருக்கு மேல் பயணிகள் இருந்ததாக அறிய வருகிறது.

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்நெட்டில் வந்த செய்தி

2 killed, 12 wounded in bus bomb in Kandy

[TamilNet, Friday, 06 June 2008, 10:53 GMT]

At least 2 persons were killed and 12 wounded in a bus bomb at Polgolla in Kandy around 4:10 p.m. Friday, initial reports said. The wounded were being rushed to Kandy hospital.

The explosion has taken place near Mahaweli National College of Education. The bus was on its way to Kandy from Wattegama.

  • தொடங்கியவர்
:) 20 பேர் காயம். அநேகர் ஆண்கள்

2ம் இணைப்பு)கண்டியில் பேருந்துக்குள் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி- 20 பேர் காயம்

[வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 04:40 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் கண்டி மாவட்டத்தில் உள்ள பொல்கெல பகுதியில் பேருந்துக்குள் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

வத்தேகமுவவில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த எச்.ஈ. 7503 என்ற இலக்கமுடைய பேருந்துக்குள்ளேயே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:50 மணியளவில் இக்குண்டு வெடித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 20 பேர் கண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது பேருந்துக்குள் குண்டு வெடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் பதற்றம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குண்டுவெடிப்பு இடம்பெற்ற பேருந்து சிறியது என்றும் அதில் 25 பேரே பயணித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு விரைந்துள்ள காவல்துறையினரும் படையினரும் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்துகின்றனர்.

இத்தேடுதலின்போது மேற்படி குண்டுவெடிப்பின் சூத்திரதாரி எனக்கருதப்படும் ஒருவரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொறட்டுவவில் இன்று காலை பேருந்தினை இலக்கு வைத்து கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 9 மணி நேரத்தில் கண்டி பொல்கொல்லவில் பேருந்துக்குள் குண்டுவெடித்திருப்பதால் சிறிலங்காவின் தென்பகுதியில் பதற்றமான நிலை நிலவுகின்றது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.