Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

ஐந்தாமவன் பாதஞ்சலன்

உயிர் ஆகாயம்போல அருவப்பொருள் என்கிறான் அவன். ஆகாயம் அவிகாரமு மாகும். அதுவும் அவன் மதம். அப்படியானால் உயிரும் அவிகாரியாதல் வேண்டும். அப்போதுதான் அ·து ஆகாயத்தை நிகர்க்கும். ஆனால் அதற்கு அறிவு இச்சை செயல்கள் உள. அதனால் அ·துடம்பிற் பொருந்திச் சஞ்சரிக்கிறது. பிறகு அது சாகிறது, மீண்டும் பிறக்கிறது, நிற்கிறது, இருக்கிறது, கிடக்கிறது, புரளுகிறது, இன்னும் பலவற்றைச் செய்கிறது. அவையெல்லாம் விகாரங்க ளில்லையா? ஆம். ஆகலின் உயிர் விகாரியே. அதனால் அ·தருவப்பொரு ளன்று. இங்கே அருவமென்றது சூக்கும அதிசூக்கும உருவப் பொருள்களையன்று உருவமில்லாத பொருளை யென்க.

  • தொடங்கியவர்

ஆறாமவன் வைசேடிகன்

உயிர்க்கு இயற்கையில் அறிவில்லை. அது சடம் ஆயினும் அ·தறிந்துவருகிறது. அதற்குக் காரணமுண்டு, அவ்வுயிர் மனத்தோடு கூடிச் சித்தாகிறது; பிறகு அறிகிறது. அப்படி வாதிக்கிறானவன். சடப்பொருள் என்றுஞ் சடமே. அது கடவுளோடு கூடினாலுஞ் சித்தாக மாட்டாது. சித்துப்பொருளும் எத்துணை யிழிவை யடைந்தாலுஞ் சடமாய் மாத்திரம் மாறாது. சடப்பொருளுக்குச் சடத்தன்மையும், சித்துப்பொருளுக்குச் சித்துத் தன்மையும் இயற்கை. அப்படியிருக்க, உயிரைச் சடமெனின் அது மற்றொரு சடமாகிய மனத்தோடு கூடினும் அறிவைப் பெறாது. ஆனால் அ·தறிகிறது. ஆகலின் அது சடமன்று என்பதே சித்தம். சடமும் அசித்தும் ஒன்றே.

ஏழாமவன் சைவருள் ஒருவகையான்

சித்து அசித்து என்கிற இரண்டு தன்மையது உயிர் என்கிறான் அவன். அவ்விரண்டும் தம்முள் மாறுபட்டன. அவை ஒருபொருளின் தன்மைகளாகக் கூடி நில்லா. ஆகலின் உயிர் அவ்விரு தன்மைய தாகாது.

எட்டாமவன் பட்டாசாரியன்

உயிர் கருவிகளோடு கூடாமலேயே அறிகிற சித்துப் பொருள் என்கிறான் அவன். சித்துப்பொருள் அறிவதற்குக் கருவிகளின் துணை வேண்டாம். உயிரோ இந்திரிய அந்தக் கரண சகாயத்தால் அறிகிறது. அச் சகாயம் ஒழிந்தால் அதற்கு அறிவில்லை. ஆகலின் அது அவன் கூறுகிறப்படி சித்துப் பொருளன்று.

  • தொடங்கியவர்

ஒன்பதாமவன் பாஞ்சராத்திரி

அவன் வைணவ னெனவும் படுவான். உயிர் ஒருடம்பை விடுகிறது. மற்றோருடம்பை யெடுக்கிறது. அ·து ஒருடம்பி லிருக்கும் போதே சாக்கிர சொப்பன சுழுத்திதுரிய துரியாதீதங்களில் மாறி மாறிப் பிரயாணஞ் செய்வதும் பிரத்தியக்ஷம். அது வியாபகப் பொருளாயின் அப்போக்குவரவு அசாத்தியம். சிவாகமங்களுக்கும் அ·தணுவென்பதே சம்மதம். இருதய கமலத்தில் அது புல்நுனிச் சிறுதுளி வடிவினதாயிருக்கு மென்கின்றன அவை. வேதக் கருத்தும் அதுவே. ஆகலின் உயிர் அணுவடிவினது, அ·தோ ரணு வென்பதே உண்மை. அப்படி வாதிக்கிறானவன். உடம்பு பல துவாரங்களை யுடையது. அவற்றுள் ஒன்பது விசாலமாயுள்ளன. மேலும் அவ்வுடம்பு பல துன்பங்களுக் கிருப்பிடம். அது பெருஞ் சுமைகளையுந் தாங்குகிறது. அதனுள் ளிருக்கும் உயிருக்கு அவற்றையெல்லாஞ் சகிக்கவேண்டு மென்கிற நிர்பந்தம் ஏன்? ஏதாவதொரு துவாரத்தின் வழியாக அது நழுவி யோடலாம். அ·தணுவாயின் அப்படி யோடுவது திண்ணம். ஆனால் அதனால் ஓடமுடியவில்லை. அன்றியும் அணு எல்லாப் பொருள்களையும் விடச் சின்னது. அதனைத் துவாரங்களுள்ள உடம்பாற் கட்டிப்போட முடியாது. ஆகையால் உயிர் அணுவன்று.

மேலும் அணுக்களெல்லாஞ் சடம். உயிராகிய சித்தணுக்களும் உள, பெளதிக அணுக்களும் உள என்னின, அவை தம்முள் வேறாவன என்பதைக் காட்ட அடையாளமுமில்லை. ஆகலின் உயிரும் அணுவாயின் பெளதிக அணுக்களில் ஒன்றாகும். பெளதிக அணுக்கள் அழியும். உயிரும் அழியும்.

இன்னும் அணுக்களெல்லாம் அவயவ முடையன. அவயவமுடைமை அழிவுடைமைக்கு ஹேது. உயிரும் அணுவாயின் அவயவமுடைய தெனப்பட்டு நாச மெய்தும். உயிர் நாசமாகாப் பொருள், ஆகலின் அணுவன்று.

உயிருக்குப் பெத்தம் முத்தியென இரண்டு நிலைகளுள. உடலோடு கூடிய நிலை பெத்தம். அப்போது அதற்குச் சூக்கும வுடலென வொன்று மிருக்கும். அ·து அணுவடிவினது. உயிர் அதனைப் பற்றி கொண்டே வேறு வேறு உடலங்களிற் புக்குப் பிரயாணஞ் செய்யும். அ·து ஒவ்வோரவத்தையிலும் புகுவதும் அச்சூக்கும வுடலின் துணை கொண்டே யாம். அணுவடிவிற்றாகிய அச்சூக்கும வுடலைப் பற்றிக்கொண்டிருப்பதால் உயிரும் அணுவெனப்பட்டது. அ·ததற்குச் செயற்கை நிலையாம். அதனாலேயே உயிரை அணுவென்றன வேத சிவாகமங்கள். வியாபகமே உயிரின் இயற்கை நிலை. அதுவே அந்நூல்களின் உட்கோள். உயிருக்கு ஆன்மா வென்பது மற்றொரு பெயர். வியாபகமென்பதே அச்சொற்குப் பொருள்.

  • தொடங்கியவர்

பத்தாமவன் ஸ்மார்த்தன்

புல்நுனிப் பனித்துளி யளவினதே உயிர், அ·து இதயத்தானத்தி லிருக்கிறது. ஆகலின் ஏகதேசியே என்கிறானவன். ஓரிடத்தி லிருப்பது பல விடங்களில் நிகழ்வனவற்றை அறிய மாட்டாது. காலில் முள் தைக்கிறது. அது துன்பம். கழுத்தில் முத்துமாலை விழுகிறது. அ·து இன்பம். உயிர் அவ்விரண்டையும் அங்கு மிங்குமா யறிகிறது. அ·து ஏகதேசியாயின் அங்ஙனம் உடம் பெங்குமாய் அறிதல் சாத்தியமன்று.

அதற்கொரு சமாதானஞ் சொல்லுகிறனவன். என்னை? விளக்கு ஓரிடத்தி லிருக்கிறது. அதன் குணம் ஒளி. அ·து எங்கும் வீசுகிறது. அப்படியே உயிரும் ஏகதேசிதான். அதன் குணம் அறிவு. அ·து உடம்பெங்கும் வியாபித் தற்கிறது. அதுவே அச்சமாதானம். ஒரு பொருளின் குணம் அப்பொருளைவிட்டு அப்பாற் செல்லாது. அப்பொருளளவிலேயே அது வியாபிக்கும், விளக்கினொளி விளக்கின் குணமன்று. அதுவும் விளக்கே. சூடே விளக்கின் குணம். விளக்கெனப்படுவது தூல விளக்கு. அதனொளி யெனப்படுவது சூக்கும விளக்கு. இரண்டும் பொருள்களே; குணிகுணங்க ளல்ல. விளக்கின் அவயவமாகிய ஒளியோடு அதன் குணமாகிய வெப்பம் பிற விடங்களிற் பரவும். அங்ஙனமே நீரின் அவயவத்தொடு அதன் குணமாகிய தட்பமுமாம். பூவின் மணத்துக்குச் சஞ்சாரமும் அவ்விதமே. அத்தட்பமும், மணமும் காற்றால் உந்தப்படுவன. ஆனால் உயிராகிய பொருளுக்கு அதனறிவு குணம். அவ்வவயவங்கள்போல் அது திரவிய மன்று. குணம் குணியளவிற்றான் வியாபிக்கும். உயிர் அணுவாயின் அதன் குணமாகிய அறிவும் அந்த அளவிலேயே அமைந்துவிடும். ஆகவே விளக்கொளி யுவமை உயிரறிவின் வியாபகத்துக்குப் பொருந்தாது. உயிர் இதயத்திலிருக்கும், அதனறிவு உடலெங்கும் வியாபிக்கும். அதற் கப்பாலுஞ் சென்று துருவ மண்டல மாதியவற்றையுங்கூட அறியும் என்பது குணகுணிகளின் இயல்பறியாக் குற்றமே யாம்.

விளக்கை யேற்று. பல துவாரங்களுள்ள ஒரு குடத்தை அதன்மேற் கவி. விளக்கொளி அத்துவாரங்கள் தோறும் வெளிவரும். அதுபோல் உயிரினறிவு இந்திரியத் துவாரங்களால் வெளிவந்து விடயங்களை யறியும். அப்படி அவன் மேலுஞ் சொல்லுகிறான். விளக்கொளி ஏககாலத்தின் எல்லாத் துவாரங்களின் வழியாய் வெளிவருகிறது. அப்படியே உயிரினறிவும் ஏககாலத்தில் இந்திரியங்கள் ஐந்தையும் பற்றிநின்று அறியவேண்டும். ஆனால் ஓரிந்திரியம் அறியும்போது இன்னோ ரிந்திரியம் அறியாது. கண் காணும்போது காது கேட்குமா? ஆகலின் அவ்வுவமையுஞ் சரியன்று. ஆகலின் உயிர் ஏகதேசி யில்லை.

ஏகதேசி, உருவம், அணு என்பன அநேகமாய் ஒன்றே. ஆதலால் பெளராணிகனுக்கும், பாஞ்சராத்திரிக்கும் சொன்ன மறுப்பையும் இவனுக்கும், இவனுக்குச் சொன்ன மறுப்பையும் அவருக்குங் கூறிக்கொள்க.

  • தொடங்கியவர்

பதினோராமவன் நையாயிகன்

உயிர் குணி. அறிவு அதன் குணம். ஆனால் உயிர் போல் அதனறிவும் வியாபிக்கு மென்ப தில்லை. குணி கெடாமலே குணங் கெடலாம். ஆகாயம் ஒரு பொருள். சத்தம் அதன் குணம். ஆகாயம் வியாபகம். சத்தம் அப்படியா? அன்று. அது தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிறது. அங்ஙனமே உயிரின் குணமும். அதுவும் ஏகதேசிதான், தோன்றி யழிவது தான். அவன் வாதம் அது. ஒரு வீடு இருள் நிறைந்தது. அங்கே ஒரு குடமிருக்கிறது. இருளில் அது தெரிவதில்லை. விளக்கி னுதவி யிருந்தால் அதனைக் காணலாம். இருளில் அதனைக் காணாதபோது குடம் அங்கு இல்லாத பொருள் என்னலாமா? விளக்கொளியில் அதனைக் கண்டபோது குடம் அங்குப் புதிதாக முளைத்துவிட்டது என்னலாமா? இரண்டுமே ஆகா. அது இருளில் விளங்கித் தோன்றவில்லை; விளக்கொளியில் விளங்கித் தோன்றியது அவ்வளவே. அவ்விரண்டு சந்தர்பங்களிலும் அ·தங்கு உள்பொருளே யாம். அப்படியே ஆகாயத்திலும் சத்தம் கேளாத போதும், கேட்கும்போதும் உள்ளதே யாம். தடிகொண்டு பேரிகையை அடித்தால் சத்தம் வெளிப்பட்டுக் கேட்கும். குடம் புலனாதற்கு விளக்கொளி காரணமாதல்போலச் சத்தம் வெளிப்படுதற்கு அவ்வடித்தல் காரணமாகும். அக்காரணம் நிகழாவிடில் அச்சத்தமுங் கேளாது. அவ்வளவே. ஆகலின் அதனைத் தோன்றி யழிந்த தென்றல் தவறு. உயிரினறிவும் அத்தகையதே. அது விளங்குவதால் தோன்றிற் றென்றலும், விளங்காம லிருப்பதால் அழிந்த தென்றலும் குற்றம். அதுவும் உயிர்போல நித்த வியாபகம். ஆயினும் அ·தொரு காலத்தில் விளங்குகிறது, பிறிதொரு காலத்தில் விளங்கவில்லை; ஓரிடத்தில் விளங்குகிறது, பிறிதோ ரிடத்தில் விளங்கவில்லை, அப்படியிருப்பதுதான் அதன் ஏகதேசத் தன்மையாகும். அத்தன்மை அதற்கு இயற்கை யன்று, வேறொன்றன் சம்பந்தத்தால் உளதாயிற்று. அவ் வேறொன்று தான் ஆணவமல மென்பது. அது தனித்து ஆராயப்படும்.

நீர்குளிர்ச்சியையுடையது. குளிர்ச்சி அதன் இயற்கை. அந்நீர் வெந்நீராத லுண்டு. வெந்நீரில் அக்குளிர்ச்சியெங்கே? அ·தழிந்துவிட்டதா? அன்று. நெருப்பு அந்நீரோடு சையோகித்தது. அதனால் அக்குளிர்ச்சி மடங்கிற்று. அச்சையோகம் நீங்கட்டும். வெந்நீரை மீண்டுந் தண்ணீராக்க முயற்சி வேண்டாம். அவ்வெப்பம் போய்விடுகிறது. மடங்கிக்கிடந்த தட்பம் விளக்க மாய்விடுகிறது. வெந்நீரில் தட்பம் அழிந்திருக்கு மாயின் வெப்பம் போனபின் முயற்சி செய்தாலும் தட்பம் மீளத் தோன்றாது. அதனால் தெரிவ தென்னை? நீர்ன் இயற்கையாகிய தட்பம் வெந்நீரில் அழியவில்லை யென்பதே. எப்பொருளையும் ஆராய்க. குணியிருக்கும்போது குணம் அழியாது என்ற சித்தாந்தமே கிடைக்கும். அப்படியிருக்க வியாபகமும் நித்தமுமாய உயிரின் குணமாகிய ஞானமாத்திரம் எப்படி யழியும்? அ·தழியாது.

பேரிகையை யடித்தலால் சத்தம் விளங்கித் தோன்றும், இன்றேல் விளங்கித் தோன்றாது என்பதை உடன்பட்டு அதற்கேற்ப உயிரினறிவும் விளக்கும் பொருள் விளக்கலால் விளங்கித் தோன்றும், இன்றேல் விளங்கித் தோன்றாது என்பதையும் உடன்பட்டதனால் அவ்வறிவின் ஏகதேசத்தன்மை அங்கீகார மாயிற்று. வியாபக வுயிரின் குணமாகிய அறிவு ஏகதேச மாதல் கூடாது. கூடுமெனின் அ·தழியும். அப்படி அவன் மேலும் வாதிக்கிறான். சத்தத்தை விளக்குவது பேரிகையின் அடி. அது சில விடங்களிற்றான், சில காலங்களிற்றான் நிகழும். அக்கருவி ஏகதேசப்பொருளே. ஆகலின் சத்தமும் ஏகதேசத்திற்றான் விளங்கும். ஆனால் உயிரினறிவை விளக்குவது சிவசக்தி. அ·து ஏகதேசமன்று, வியாபகம். அதனால் விளங்கும் உயிரினறிவும் ஏகதேசமா யிராது, வியாபகமாகவே விளங்கற்பாலது, உயிராகிய குணிமுழுவதிலும் அவ்வறிவு விளங்குதற் கிருப்பது. அங்ஙனம் விளங்கிய அறிவே உயிருக்கு இயற்கை.

இன்னொன்றுந் தெரிக ஆகாய குணமாகிய சத்தம் விளங்காம லிருப்பது ஏதேனு மொரு காரணத்தா லன்று. விளங்குதற்கே பேரிகை முதலிய காரணங்கள் வேண்டும். ஆனால் உயிரிக்குணமாகிய அறிவு விளங்காமலிருப்பது ஒரு காரணத்தாலாம். சிவசத்தி அக்காரணத்தைச் சிறிது சிறிதாக நீக்க வேண்டும். அக் காரணத்தின் செயலால் அவ்வறிவு மடங்கும். சிவசத்தியின் செயலால் அது விளங்கும். அ·தொரு போராட்டம். அதில் வெற்றி சிவசக்திக்கேயாம். அதனால் உயிரி னறிவு காலந்தோறும் விளக்கமே பெறும். சோபான முறையிற்றான் அது விளங்கக் கூடியது. ஆகலின் அது வியாபகம், அழியாதது என்பதிற் சந்தேகமில்லை.

உடம்பின் அளவுக்குத் தக உயிர் வியாபித்தறியும் என்கிறானவன். உயிர் உறங்குகிறது. அவ் வுறக்கத்தில் சொப்பன, சுழுத்தி யவத்தைகள் உளவாகின்றன. அப்போது தூலவுடலில் அறிவில்லை. அந்நிலை வரலாமா? அப்போது இந்திரியங்கள் ஒடுங்கின, அதனால் அவ்வுடலில் அறிவு உண்டாகவில்லை என்பது அவன் கூறுஞ் சமாதானம். தூலவுடல் தொழிற்படும் அவத்தை சாக்கிரம். அதில் இந்திரியங்கள் ஒடுங்கா. ஆனால் ஏககாலத்தில் அவை அறிகின்றனவா? காது கேட்கும்போது கண் காணாது. அதனால் உயிர் ஓரிந்திரியத்தில் வியாபித்து நின்று அறியும்போது மற்றை யிந்திரியங்களில் வியாபித்த லில்லை யென்பது சித்தம். அ·தாகுமா? இன்னும் உயிர் உடம்பளவுக்கு வியாபித் தறியுமாயின் பேருடம் பெடுத்த யானைக்கு அதிக அறிவும், சிற்றுடம் பெடுத்த மனிதனுக்கு அதனிற் குறைந்த அறிவும் உளவாதல் வேண்டும். தேகம் மெலிவது முண்டு, தடிப்பது முண்டு. மெலிதல் - சங்கோசம். தடித்தல் - விகாசம். உயிரும் சங்கோச விகாசங்களை யுடைய தெனப்பட்டு மெலிந்தவனிடங் குறைந்த அறிவும், தடித்தவனிடம் மிகுந்த அறிவும் உள வென்றாகிவிடும். காலொடிந்தவன் கை முறிந்தவன் முதலிய அங்கவீனரும் உளர். அவரிடம் அவ்வக் குறைவினளவுக்கு அறிவுங் குறைந்திருக்க வேண்டும். அதுவுமில்லை. மேலும் மனிதன் துருவ மண்டலத்தை யறிகிறான், சூரிய சந்திர மண்டலங்களை யறிகிறான். அவனுடம்பளவில் அவனறிவு வியாபிப்ப துண்டாயின் அவ்வறிவு அம்மண்டலங்களை அறிய வல்லதா? ஆகலின் உடம்பளவில் உயிர் வியாபித் தறியு மென்பது தவறென்க.

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

பதினோராமவன் நையாயிகன்

உயிர் குணி. அறிவு அதன் குணம். ஆனால் உயிர் போல் அதனறிவும் வியாபிக்கு மென்ப தில்லை. குணி கெடாமலே குணங் கெடலாம். ஆகாயம் ஒரு பொருள். சத்தம் அதன் குணம். ஆகாயம் வியாபகம். சத்தம் அப்படியா? அன்று. அது தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிறது. அங்ஙனமே உயிரின் குணமும். அதுவும் ஏகதேசிதான், தோன்றி யழிவது தான். அவன் வாதம் அது. ஒரு வீடு இருள் நிறைந்தது. அங்கே ஒரு குடமிருக்கிறது. இருளில் அது தெரிவதில்லை. விளக்கி னுதவி யிருந்தால் அதனைக் காணலாம். இருளில் அதனைக் காணாதபோது குடம் அங்கு இல்லாத பொருள் என்னலாமா? விளக்கொளியில் அதனைக் கண்டபோது குடம் அங்குப் புதிதாக முளைத்துவிட்டது என்னலாமா? இரண்டுமே ஆகா. அது இருளில் விளங்கித் தோன்றவில்லை; விளக்கொளியில் விளங்கித் தோன்றியது அவ்வளவே. அவ்விரண்டு சந்தர்பங்களிலும் அ·தங்கு உள்பொருளே யாம். அப்படியே ஆகாயத்திலும் சத்தம் கேளாத போதும், கேட்கும்போதும் உள்ளதே யாம். தடிகொண்டு பேரிகையை அடித்தால் சத்தம் வெளிப்பட்டுக் கேட்கும். குடம் புலனாதற்கு விளக்கொளி காரணமாதல்போலச் சத்தம் வெளிப்படுதற்கு அவ்வடித்தல் காரணமாகும். அக்காரணம் நிகழாவிடில் அச்சத்தமுங் கேளாது. அவ்வளவே. ஆகலின் அதனைத் தோன்றி யழிந்த தென்றல் தவறு. உயிரினறிவும் அத்தகையதே. அது விளங்குவதால் தோன்றிற் றென்றலும், விளங்காம லிருப்பதால் அழிந்த தென்றலும் குற்றம். அதுவும் உயிர்போல நித்த வியாபகம். ஆயினும் அ·தொரு காலத்தில் விளங்குகிறது, பிறிதொரு காலத்தில் விளங்கவில்லை; ஓரிடத்தில் விளங்குகிறது, பிறிதோ ரிடத்தில் விளங்கவில்லை, அப்படியிருப்பதுதான் அதன் ஏகதேசத் தன்மையாகும். அத்தன்மை அதற்கு இயற்கை யன்று, வேறொன்றன் சம்பந்தத்தால் உளதாயிற்று. அவ் வேறொன்று தான் ஆணவமல மென்பது. அது தனித்து ஆராயப்படும்.

நீர்குளிர்ச்சியையுடையது. குளிர்ச்சி அதன் இயற்கை. அந்நீர் வெந்நீராத லுண்டு. வெந்நீரில் அக்குளிர்ச்சியெங்கே? அ·தழிந்துவிட்டதா? அன்று. நெருப்பு அந்நீரோடு சையோகித்தது. அதனால் அக்குளிர்ச்சி மடங்கிற்று. அச்சையோகம் நீங்கட்டும். வெந்நீரை மீண்டுந் தண்ணீராக்க முயற்சி வேண்டாம். அவ்வெப்பம் போய்விடுகிறது. மடங்கிக்கிடந்த தட்பம் விளக்க மாய்விடுகிறது. வெந்நீரில் தட்பம் அழிந்திருக்கு மாயின் வெப்பம் போனபின் முயற்சி செய்தாலும் தட்பம் மீளத் தோன்றாது. அதனால் தெரிவ தென்னை? நீர்ன் இயற்கையாகிய தட்பம் வெந்நீரில் அழியவில்லை யென்பதே. எப்பொருளையும் ஆராய்க. குணியிருக்கும்போது குணம் அழியாது என்ற சித்தாந்தமே கிடைக்கும். அப்படியிருக்க வியாபகமும் நித்தமுமாய உயிரின் குணமாகிய ஞானமாத்திரம் எப்படி யழியும்? அ·தழியாது.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

பதின்மூன்றாமவன் ஐக்கியவாதி

இச்சமயவாதி கழுத்தில் சிவலிங்கத்தைக் கட்டித் தொங்கவிட்டுக் கொள்ளும் பழக்கமுடையவர். பரமசிவன் போல் உயிரும் வியாபகமாய்நின்று அறியும் என்பது அவர் கொள்கை. சாத்தன்ஓரூரி லிருக்கும் போது இன்னோரூரிலிருப்பதில்லை. அதுவே ஏகதேச மெனப்படும். உயிர் வியாபகமாயின் அதற்கு அவ்வேகதேசத்தன்மை கூடாது. அ·து உடலிலும் ஐந்து அவத்தைகளிற் போய் வருகிறது. அதுவும் அவ்வியாபகத்துக்கு மாறானது. சாக்கிரத்திற்போல் அதீதாவத்தையில் அதனிடம் அறிவு காணப்படவில்லை. அறிவு வியாபகமாயின் அவ்வாறு ஒழியாது. சாக்கிரத்திலும் ஓரிந்திரியம் அறியும் போது பிற விந்திரியங்கள் சும்மா கிடக்கும். அவ்வறிவு வியாபகமாத லெப்படி? மேலும் வியாபக வுயிருக்குப் பிறப்பு இறப்புக்கள் கூடுமா?

உடல் மாயாகாரியம், ஞானத்தைத் தடை செய்வது, உயிர் ஏகதேசிபாவதற்குக் காரணம் உடலே என்கிறனவன். உடலிற்றான் இந்திரியாதிகள் உள. அவற்றைக் கொண்டே உயிர் அறிந்துவருகிறது. உடல் ஞானத்தைத் தடைசெய்வதாயின் அதில் அவ்விந்திரிபாதிகள் இருக்கலாமா?

தேகத் தடைக்குமுன் உயிர் சுத்த வியாபக ஞானப் பொருளாம். அவன் சொல்வது அது. அங்ஙனமாயின் அத்தடை போனதும் அந்த ஞானம் திரும்பவேண்டும். அதுவே உயிருக்கு முத்தியுமாம். அப்போது செத்தவரெல்லாம் முத்தியடைந்தன ரென்பதே முடிவு. அப்படித்தானா? மாயாவாதமும் அப்படியே சொல்கிறது.

உயிரினிடம் முதலில் சுத்த வியாபகமா யிருந்த ஞானத்தைத் தேகம் இடைக் காலத்தில் மறைத்த தென்றால் அதற்குக் காரணம் என்னை? காரணங் கிடையாது. அ·தாயின் அம்மறைப்பு முத்திபெற்ற ஆன்மாக்களுக்கும் வரலாம். மோக்ஷம் நித்தமென்பதும் பொய்யாய்விடும். உயிர் தேகத் தடைக்குமுன் சுத்த வியாபக ஞானமாய் நின்ற நிலையும், முத்தியில் அவ்வாறே நிற்கும் நிலையும் ஒன்றே. ஆகலின் உயிர் முதலிலிருந்தே பந்தப்படாமல் முத்தனாய் விளங்கலாம். உடல் தடைசெய்த தென்பது வெறுஞ் சொல். உயிர் வியாபகமாய் நின்று அறியு மென்பதும் அங்ஙனமே.

உருவப்பொருள்களைத்திலுங் கலப்பதே வியாபகம், அப்பொருள்களனைத்தையும் அறிவதே முற்றுணர்வு என்பதும் அவன் கொள்கை. அ·தாயின், உருவப்பொருள்களெல்லாம் அழியும். பிறகு வியாபகம் ஏது? முற்றுணர்வு ஏது? ஆகலின் உயிரும் இல்பொருளாய்ப் போம் என்க.

பரிணாம வாதிமுதல் ஐக்கியவாதி யீறாக வுள்ள அப்பதின்மூன்று மதவாதிகளும் உயிர் உண்டெனக் கொண்டு ஆணவ மலத்துண்மையை அங்கீகரியார். அதனால் உயிரைப் பிரமத்தின் பரிணாம மெனவும், குணிப்பொருளன்று தனித்த அறிவு மாத்திரையா யிருப்ப தெனவும், உருவப்பொருள் சூக்கும வுருவப் பொருள் அதிசூக்கும வுருவப் பொருளெனவும், அருவுருவப் பொரு ளெனவும், அருவப் பொரு ளெனவும், சடப்பொரு ளெனவும், சித்தசித்துப் பொருளெனவும், சித்துப் பொருளெனவும், அணுப் பொருளெனவும், ஏகதேசப்பொருளெனவும், தோன்றி யழியுங் குணமுடைய பொருளெனவும், உடம்பளவில் வியாபித்தறியும் பொருளெனவும், சுத்த வியாபக ஞானப் பொருளெனவும் உயிருக்கு வேறு வேறு இலக்கணங்களை அவர் கூறலாயினர். அவை யெல்லாம் பிழையென இதுவரை காட்டப்பட்டன.

இனிச் சைவசித்தாந்தத்துக்கு வரலாம். அதில் உயிருக்கு இலக்கணம் என்னை? வியாபகம் இரண்டு விதம். அவற்றுள் ஒன்று பூரணம். அது எள்ளினுள் நெய் போலிருத்தலென்ற ஒளபச்சிலேஷிக வியாபக மெனப்படும். சிவனொருவனே அப்பூரண வியாபி. அதனால் அவன் அதிசூக்கும சித்தாவன். இன்னொன்று அதுவதுவாய் வசிப்புண்ணும் வியாபகம். அது வசித்தட வரும் வியாபகமெனப்படும். அது ஏகதேச வியாபகம். உயிர் அவ் வசித்திடவரும் வியாபி. அதனால் உயிர் தூல சித்தாயிற்று. உயிர் எந்தப் பொருளைச் சார்ந்ததோ அந்தப் பொருளின் வண்ணமாய் நிற்கும். அப்படி நிற்றல் அதற்குரிய விசேட வியல்பு. அது அவத்தைதோறும் கருவிகளை அதிட்டித்துக்கொண்டே அறியும். (அதிட்டித்தல் - நிலைக்களமாகக் கொள்ளுதல்) அது தான் வசித்திட வருதல் என்பது. அவ்வுயிர் அக் கருவிகளை நிலைக்களமாகக் கொள்ளும்போது அவற்றின் வண்ணமாகிவிடும். அதுதான் உயிர் அதுவதுவாக வசிப்புண்ணல் என்பது. பிறகு அவ்வுயிர் அவற்றைச் செலுத்தும். அச்செலுத்துதலே அதன் வியாபகமென்பது. அப்போது அவ்வுயிரின் குணங்களாகிய அறிவிச்சை செயல்கள் அக்கருவிகளின் அளவாக விளங்கும். அக்கருவிகளோடு கூடுமுன் அக்குணங்கள் ஆணவமலத்திற் கட்டுப்பட்டுக் கிடக்கும். கருவிகளென்று மிடத்திற் கோசங்களென்பதும் பொருந்தும்.

உயிருக்குக் கேவலம் சகலம் சுத்தம் என மூன்று நிலைகளுள. அவையும் அவத்தையெனப்படும். இது வேறு, முன் வசித்திட வரும் வியாபியென்ற விடத்துச் சொன்ன அவத்தை வேறு. கேவலமாவது உயிர் ஆணவ மலத்தோடு மாத்திரங் கூடிக் கிடந்த நிலை. உயிருக்கு அந்நிலையில் இல்லாத காரியங்கள் பத்து. பிறகு அவ்வுயிர் சகலத்துக்கு வருகிறது. சகலமாவது யாது? கேவலத்திற் கிடந்த வுயிரைத் தனுகரணாதியவற்றோடு கூட்டி அதன் அறிவு இச்சை செயல்களைச் சிறிதே விளக்குகிறான் பரமசிவன். அவ்விளக்குகிற நிலையே அதற்குச் சகலம். உயிரினிடத்துக் கேவலத்தில் இல்லாதிருந்தனவெனச் சொல்லப்பட்ட அப் பத்துக் காரியங்களும் சகலத்தில் உளவாகும். அவ்வின்மையாவது அப்பத்துக் காரியங்களின் முன்னின்மை. முன்னின்மை - பிராகபாவம்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

அப்பத்தும் எவை?

1. உடம்பினைக் கொள்ளுதல்.

2. கலை முதலிய போக காண்டத்தோடு கூடுதல்.

3. புத்திகுண பாவமாகிய தருமம் ஞானம் வைராக்கியம் ஐசுவரியம் அதருமம் அஞ்ஞானம், அவைராக்கியம் அனைசுவரியம் என்ற எட்டுப் போக்கியங்கள்.

4. இச்சை.

5. வாக்குக்களோடு கூடிய அறிவு.

6. செயல்.

7. சத்தாதி விடயங்களை விரும்புவதாகிய கர்த்திருத்தவம். (சுதந்திரம்)

8. சத்தாதி விடயங்களை நுகர்தல்.

9. சரீரந் தோன்றுதலும், அழிதலும் (பிறப்பிறப்புட்படுதல்)

10. சரீர மில்லாமையால் ஏகதேசியாதல் என்பனவாம். உயிருக்கு அவை கேவலத்திலில்லை, சகலத்திலுள.

சகலத்தில் உயிர் ஐந்துவகை யுடம்புகளையெய்தும். அவை காரணம், கஞ்சுகம், குணம், சூக்குமம், தூலம் என்பன. உயிர் காரணசரீரத்தைப் பொருந்தும். அதன் அறிவு இச்சை செயல்கள் சமட்டியாய் விளங்கும். சமட்டி - பொதுமை. அது கஞ்சுகசரீரத்தைப் பொருந்தும்.. அவ்வறிவு முதலியன வியட்டியாய் விளங்கும். வியட்டி - சிறப்பு. அது குணசரீரத்தைப் பொருந்தும். 46அவ்வறிவாதியன சூக்கும தூல சரீரங்களிடமாக வரும் விடயங்களில் வியாபரிக்கும். அது சூக்கும தேகத்தைப் பொருந்திச் சூக்கும வினைகளை யீட்டிச் சூக்குமப்பயன்களை நுகரும். அது தூலதேகத்தைப் பொருந்தும். அங்கே அது தூல வினைகளைச் செய்து அப்பயன்களை நுகரும்.

காரண முதலிய சரீரங்கள் ஐந்தும் முறையே ஆனந்தமய முதலிய கோசங்களாகும். உயிர் அன்னமயகோசத்திலிருப்பது சாக்கிரம். அதை விட்டுப் பிராணமய கோசத்திலிருப்பது சொப்பனம். அவ்விரண்டையும் விட்டு மனோமய கோசத்தி லிருப்பது சுழுத்தி, அம்மூன்றையும் விட்டு விஞ்ஞானமய கோசத்திலிருப்பது துரியம், ஆனந்தமயகோசத்திலிருப்பது துரியாதீதம். அதிலிருக்கும்போது உயிர் அன்ன, பிராண, மனோமய கோசங்களை விடும். கஞ்சுக சரீரமாகிய விஞ்ஞானமய கோசமோ ஆனந்தமய கோசத்தை விட்டுப் பிரியாது. கஞ்சுக சரீரம் காரண சரீரத்தோடு ஒற்றித்து அதீதத்தில் நிற்கும்.

47சாக்கிரத்துக்குத் தானம் புருவ நடு. தொழிற்படுங் கருவிகள் 35. 48சொப்பனத்துக்குத் தானம் கண்டம். தொழிற்படுங் கருவிகள் 25. 49சுழுத்திக்குத் தானம் இதயம். தொழிற்படுங் கருவிகள் 3. 50துரியத்துக்குத் தானம் நாபி. தொழிற்படுங் கருவிகள் 2. 51துரியாதீதத்துக்குத் தானம் மூலம். தொழிற்படும் கருவி 1.

கலாதிகளை அதீதத்திற் சிவதத்துவமும், துரியத்திற் சிவ, சக்தி தத்துவங்களும் சுழுத்தியிற் சிவ, சத்தி, சதாசிவ தத்துவங்களும், சொப்பனத்தில் சிவ, சத்தி, சதாசிவ, ஈசுர தத்துவங்களும், சாக்கிரத்திற் சிவ, சத்தி, சதாசிவ, ஈசுர, சுத்த வித்தியா தத்துவங்களும் பிரேரிக்கும்.

மூன்றாவது அவத்தை சுத்தம் என்பது. சகலாவத்தையில் உயிர் பிறவிதோறும் ஈட்டிய புண்ணியம் மிகும். அதனால் அவ்வுயிருக்கு இருவினை யொப்பு வரும். வரவே சத்திநிபாதமும் எய்தும். அதனால் ஆசான் அனுக்கிரகமும் கூடும். அதனால் ஞான சாதனத்திற் பிரவேசமுண்டு. அதனால் மும்மலங்களும் விலகும், சிவஞானமும் பெருகும்.

உயிருக்குக் கேவலத்தில் இல்லாதனவும், சகலத்தில் உள்ளனவும் ஆகிய அப்பத்துக் காரியங்களும் சுத்ததில் நீங்கிவிடும். எப்படி?

ஆசானிடம் அவ்வுயிர் தன் உடலைத் தானஞ் செய்து விட்டபடியால் அவனருளால் அவ்வுயிரின் 1 உடம்பு நீங்கும்.

சத்திநிபாதத்தால் 2 கலைமுதலிய போக காண்டமும், 3 புத்திகுண பாவமாகிய தரும முதலிய போக்கியங்கள் எட்டும் நீங்கும்.

சிவஞானம் பெருகுவதால் 4 இச்சை 5 அறிவு 6 செயல்கள் நீங்கும்.

இருவினை யொப்பால் 7 சத்தாதி விடயங்களை விரும்புவதாகிய கர்த்திருத்துவம் நீங்கும்.

வாதனாமல நீக்கத்தால் 8 சத்தாதி விடயங்களை நுகர்தல் நீங்கும்.

ஞானசாதனத்தால் 9 பிறப் பிறப்புக்கள் நீங்கும்.

மும்மலமும் விடுவதால் 10 ஏகதேசத்துவம் நீங்கும்.

அங்ஙனம் அப்பத்தும் நீங்கிய நிலையே சுத்தாவத்தையென்பது. அவ்வுயிர் அச்சுத்தத்தில் ஸ்ரீ பரசிவப் பிரபுவின் திருவடி நிழலை யெய்தி இறவாத பேரின்ப பெருவாழ்வில் திளைத்துக் கொண்டிருக்கும்.

'நான்'

முற்றிற்று

ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா , ஆறுமுகநாவலரே ,

கலி , முத்தப்போகுதோ ?

அல்லது முத்தி விட்டதோ ?

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஆமாம் நண்பரே!

  • 1 year later...
  • தொடங்கியவர்

siva2-ey9m36iv.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.