Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரெலியாவில் சுற்றுலா - பகுதி 1 பிரிஸ்பனும், சூழவுள்ள இடங்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு நன்றிகள் சுவை. எனக்கு ஸ்ரிவ் ஏர்வினைத் தாக்கிய மீனைப் பற்றி பெரிதாகத் தெரியாது.

  • Replies 172
  • Views 19k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

quote name='suvy' date='Aug 26 2008, 11:01 PM' post='440361']

ஸ்டீவ் இர்வின்.இவரது சாகச விவரணப் ( டாக்குமென்டரி) படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். கடைசியாக இர்வின்'த ஒஷன்ஸ் டெட்லியஸ்ட்" எனும் தனது விவரணப் படம் எடுக்கும்போதுதான் ஒரு மீனால்(ஷார்ட் டெய்ல் ஸடிங்ரே) தாக்கப் பட்டு இறந்துள்ளார். ஏன் அரவிந்தன் அந்த மீன் ஈழத்துக் கடற்புறங்களில் வாழும் குழுமுரல், வாழைமீன்கள் போன்று இருக்குமா?

உங்கள் கட்டுரை அருமை!!!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மீனை திருக்கை மீன் என்பார்கள் என நினக்கிறேன். ஊரில் இந்த மீனின் வாலை எடுத்து பதம் பன்னி வைத்து ,சண்டித்தனம் பண்னுவார்கல் ஒரு காலத்தில் :icon_idea::D

ஓம், திருக்கை மீன் எண்டு தான் நினைக்கிறேன். வீடியோல பார்க்கும் போது அப்பிடித்தான் தெரிஞ்சது.

அரவிந்தன், நிங்கள் எழுதும் முறையும் விளக்கங்களும் மிகவும் சுவாரசியமாக உள்ளது. வாழ்த்துகளும் நன்றிகளும்.

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியாவைக் கண்டு பிடித்த ஐரோப்பியர் கப்டன் குக்கே, முதன் முதலாக இந்த குன்றுகளைக் கண்ட ஐரோப்பியராவர். எல்லாக் குன்றுகளையும் ஒன்றாகப் பார்க்கும் போது கண்ணாடி வீடு போலத் தெரிவதினால் கப்டன் குக் இவ்விடத்தை Glass Glass House Mountains என்று அழைத்தார். எரிமலையினால் உருவான இக்குன்றுகளின் அமைவிடங்களுக்கு நடுவேயுள்ள அடையாளப் படுத்தப்பட்ட இடத்தில்(Glass House Mountain lookout ) இருந்து பார்த்தால் கண்ணாடி வீட்டினுள் இருப்பது போல நாங்கள் உணரலாம்.

dsc00914lr4.jpg

dsc00916qk8.jpg

dsc00917kr8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

ஓம், திருக்கை மீன் எண்டு தான் நினைக்கிறேன். வீடியோல பார்க்கும் போது அப்பிடித்தான் தெரிஞ்சது.

அரவிந்தன், நிங்கள் எழுதும் முறையும் விளக்கங்களும் மிகவும் சுவாரசியமாக உள்ளது. வாழ்த்துகளும் நன்றிகளும்.

திருக்கைமீன் என்றே தென்னிந்தியத்தமிழ் ஊடகங்களில் செய்திகள் வந்தன.

உங்களின் கருத்துகளுக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

sunshinecoastல் மேலும் பார்ப்பதற்கு இஞ்சித்தொழிற்சாலை, அன்னாசிப்பழத்தோட்டம், நீர்வாழ் உயிரினங்களின் இடம் ( UnderWater World ) என இருக்கின்றன. இவைபற்றி நான் பிறகு சொல்கிறேன்.தெற்கு பிரிஸ்பனில் இருந்து கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் பிரயாணித்தால் வருவது O'Reilly' என்ற இடம். இது Lamington National Park வில் இருக்கிறது. மேற்கு தங்கக்கடற்கரையில் (west Gold Coast) இருந்து 90 நிமிடங்கள் பயணிக்கும் போது இவ்விடத்திற்கு செல்லலாம். ஆனால் Lamington National Park க்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்களில் சென்றுவிடலாம். இங்கு Wine தோட்டங்கள் உட்பட சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடங்கள் இருக்கின்றன. பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் இங்கு விரும்பி செல்லும் இடம் O'Reilly Top Tree Walk. அதாவது மரங்களின் உட்சியில் அமைக்கப்பட்ட பாதைகளில் நடந்து செல்லலாம்.

13562131rf9.gif

147mapvv1.gif

மெல்பேர்ணில் உள்ளவர்கள் கிட்டத்தட்ட 3,4 மணித்தியாலம் பிரயாணம் செய்து இதே மாதிரியான Otway National Park -tree top walkல் உள்ள நடக்கலாம். சிட்னியில் உள்ளவர்கள் 2 மணித்தியாலம் பிரயாணம் செய்து புதிதாகக் கட்டப்பட்ட ILLAWARRA FLY TREE TOP WALK ற்கு செல்லலாம்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

பிரிஸ்பனில் தான் தமிழர்கள் வாழ்ந்தாலும், சுற்றுலாப் பயணிகள் விரும்பி தங்குமிடம் தங்கக்கடற்கரை(Gold Coast). நானும் O'Reilly'க்கு தங்கக்கடற்கரையில் இருந்தே பயணித்தேன். Nerangத் தாண்டி இடத்தை O'Reilly' நோக்கிப் பயணிக்கும் போது ,குறிப்பாக இலமிங்டன் தேசிய பூங்காவினுன் (Lamington National Park ) ஊடாகச் செல்லும் போது பல இயற்கைக்காட்சிகளைப் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

pa280274qu5.jpg

  • தொடங்கியவர்

செல்லும் போது O'Reilly's Canungra Valley Vineyards வழியாகச் செல்ல வேண்டும். திராட்சைப்பழத்தின் சாற்றில் இருந்து குடிவகை செய்யப்படும் இவ்விடத்தை விட மிகவும் பெரிய Vineyardsனை சிட்னியில் இருந்து 2 மணித்தியாலம் பிரயாணிக்கும் போது வரும் Hunter Valley Vineyardனைப் பார்த்திருக்கிறேன். அதனால் இங்கு நான் செல்லவில்லை.அத்துடன் அவுஸ்திரெலியாவில் பல இடங்களில் Vineyardளைப் பார்க்கலாம்.

pa280275ng5.jpg

imagevineyardssf1.jpg

  • தொடங்கியவர்

தொடர்ந்து பயணிக்கும் போது மலைப்பிரதேசங்கள் வருவதினால் அதனூடாகப் பயணிக்க வேண்டும். மலையின் குறிப்பிட்ட இடத்தின் மேல் சென்ற போது எனது தொலைபேசியில் உள்ள திசை காட்டி வேலை செய்யவில்லை. ஆனால் ஒரே ஒரு பாதை என்பதினால் தொடர்ந்து பயணித்தோம். மழை காலங்களில் கவனமாகப் பயணிக்க வேண்டும்.

pa280276px0.jpg

pa280278vk4.jpg

pa280279mj2.jpg

pa280280yq6.jpg

pa280284hp8.jpg

  • தொடங்கியவர்

தொடர்ந்து செல்ல, ஒரு சிறிய சிற்றுண்டிச்சாலையினைக் காணலாம். அதன் அருகிலே அல்பகா பண்ணை (Alpaca Farm) இருக்கிறது. அல்பகா என்ற மிருகம் ஈகுடா,பெரு,பொலிவியா,சிலி போன்ற தென் அமெரிக்கா நாடுகளில், கடல்மட்டத்தில் இருந்து 3500 தொடக்கம் 5000 மீற்றர் உயரமான இடங்களில் வாழ்கிறது. இதனை தென்னமெரிக்கா ஒட்டகம் என்றும் அழைப்பார்.

pa280285ca8.jpg

pa280281ds4.jpg

pa280282dc3.jpg

அருமையான இடங்கள்

  • தொடங்கியவர்

அருமையான இடங்கள்

இலமிங்டன் தேசிய பூங்காக்கு சென்றிருக்கிறீர்களா?

இல்லையே..

  • தொடங்கியவர்

அல்பகா பண்ணையில் இருந்து மீண்டும் பயணிக்கும் போது இருபக்கமும் அடர்ந்த மரங்கள் உள்ள பாதையினூடாகச் செல்லவேண்டும்.

pa280286fi8.jpg

  • தொடங்கியவர்

சில நிமிடப்பயணங்களின் முடிவில் O'Reilly's Guest House (விருந்தினர் வீட்டினை) அடையலாம். அருகில் கிளிகள் உட்பட பல பறவைகளைக் காணலாம். சுற்றுலாப்பயணிகள் அவ்விடத்தில் பறவைகளுக்கு உணவுகள் ஊட்டுவது வழக்கம். கிளிகள் பயணிகளின் தலை, தோள்பட்டை, கைகளில் வந்து நிற்கும்.

dsc00907jp6.jpg

407653494f69d3d3c3fjw6.jpg

pa280339yl1.jpg

birdspf8.jpg

imagebirdwalkum0.jpg

Edited by Aravinthan

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அல்பகா பண்ணையைப் பற்றி முதல் சொல்லி இருந்தேன். சிட்னியில் இருப்பவர்கள் கன்பராவுக்கு செல்லும் போது போகிற வழியில் அல்பகாக்களை பண்ணை ஒன்றில் காணலாம்.

O'Reilly விருந்தினர் வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 300 மீற்றர் தூரத்தில் Booyong பாதையினூடாகச் சென்றால் மரங்களின் மேல் நடக்கும் பாதை (Top Tree Walk) வரும். 180 மீற்றர் நீளமுள்ள இந்தப்பாதை 9 தொங்கு பாலத்தினால் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பாதை நிலமட்டத்தில் இருந்து 15 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நிலமட்டத்தில் இருந்து 30 மீற்றர் உயரமான அவதானிப்பு மேல்தளத்தினையும் இப்பாதையில் காணலாம்.

pa280293bu2.jpg

pa280294ak5.jpg

imagetreetopwalkim1.jpg

treetopwalkrdsmallix9.jpg

oreillys2uk8.jpg

sbrid2smallca9.jpg

oreillystreeae3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

152232279686927e2e14fn7.jpg

pa280304xq9.jpg

pa280305ex1.jpg

pa280309vs0.jpg

  • தொடங்கியவர்

அவதானிப்பு மேல்தளத்துக்கு செல்லும் வழி

pa280311kr1.jpg

pa280312fu6.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

ஒவ்வொரு பாலத்திலும் அதிகளவு 6 பேர் தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது.

pa280314da5.jpg

pa280316ug2.jpg

pa280317hw5.jpg

pa280318xv8.jpg

pa280320gd7.jpg

pa280323fm4.jpg

இந்த மரங்களின் மேல் நடக்கும் பாதைக்கு(Top Tree Walk) அருகில் ஒரு பூத்தோட்டமும் இருக்கிறது. மரங்களின் மேல் நடப்பதற்கு அல்லது இப்பகுதிக்கு வருவதற்கு எதுவித கட்டணமும் அறவிடப்படுவதில்லை. அதாவது அனுமதி இலவசம்.

நல்ல இடம் :)

  • தொடங்கியவர்

நல்ல இடம் :)

நீங்கள் சென்றிருக்கிறீர்களா?

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியாவில் அதிகளவு ஈழத்தமிழர்கள் சிட்னியிலும், மெல்பேர்ணிலும் தான் வசிக்கிறார்கள். பிரிஸ்பனில் சிட்னியையும், மெல்பேர்ணிலையும் விடக் மிகக்குறைவாகவும், மற்றைய முக்கிய இடங்களை விட அதிகமாகவும் இருக்கிறார்கள். இங்குள்ள ஈழத்து இந்துக்களினால் நடாத்தப்படும் செல்வ விநாயகர் கோவில் South Maclean என்ற இடத்தில் இருக்கிறது.

map2bu8.jpg

locationtc6.jpg

ஈழத்தில் இருக்கின்ற கோவில்களில் பெரும்பாலானவை சைவ ஆகம விதிப்படி கட்டப்பட்டிருக்கும். சைவசமயக் கடவுள்களையே காணலாம். (அண்மைக்காலங்களில் சில கோவில்களில் சைவசமயத்தில் இல்லாத கடவுள்களுக்கும் விக்கிரகங்கள் அமைத்திருக்கிறார்கள்). ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களின் கோவில்களில் பெரும்பாலானவை சைவ ஆகம விதிப்படி கட்டப்படுவது குறைவாகக் காணப்படுகிறது. சைவசமயத்தில் இல்லாத கடவுள்களினதும் விக்கிரகங்களை இக்கோவில்களில் காணலாம். பிரிஸ்பனில் உள்ள செல்வ விநாயகர் கோவிலும் சைவ ஆகமவிதிப்படி கட்டப்படவில்லை. ஈழத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இல்லாத பிரம்மாவுக்கும் இங்கு சிலை வைத்திருக்கிறார்கள்.

ssvk3fk5.jpg

copyofpa260146ql2.jpg

pc270067ig1.jpg

ssvk2cr3.jpg

கோவில் உள்ள இடம் நன்றாக உள்ளது

  • தொடங்கியவர்

பிரிஸ்பன் ஆற்றில் படகில் பயணித்தால் பிரிஸ்பனில் உள்ள அழகிய கட்டிடங்கள், பாலங்களைப் பார்க்கலாம். பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் இப்படகுச் சேவையில் சுற்றுலாப் பயணிகளும் அழகிய பிரிஸ்பனைக் காணப் பயணிப்பார்கள். குறிப்பாக Southbank என்ற இடத்தில் இருந்து பலர் பயணிப்பதுண்டு.

mapofbrisbanehotelsaj0.png

கீழே உள்ள படங்கள் உள்ள இடம் தான் Southbank.

muchbetterweatherhereatxv8.jpg

arbourdayshot400vq2.jpg

325ar5.jpg

southbank2wideweb430x24td2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில எந்த கோயில் சைவ ஆகமபடி கட்டியிருக்கிறார்கள்..அரவிந்

தன்....வருமான ஆகமபடிதான் கட்டியிருக்கிறார்கள்.....தொடரட

்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.