Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குசேலன் திரைப்படம் - குமுதம் விமர்சனம்

Featured Replies

குசேலன் திரைப்படம் - குமுதம் விமர்சனம்

kuselanwn1.png

ஜினிக்கு முதலில் கை குலுக்க வேண்டும். ஆக்ஷன், அதிரடி, மசாலா படங்களிலிருந்து விலகிக் கதைக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்ததற்கு. அதை ரசிக்கும்படி செய்ததற்குக் கூடவே ஒரு கொசுறு கை குலுக்கல்.

மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட `கத பறயும் போள்' கதை. இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவில் சிறந்து சூப்பர் ஸ்டாராகிறான். இன்னொருவன் உடைந்து போன நாற்காலியுடன் முடி திருத்தகம் நடத்துகிறான். இருவரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்தச் சின்னப் பொறியை வைத்துத் திரைக்கதை செய்திருக்கிறார்கள், ரஜினிக்காக அதிகம் மாற்றாமல்.

சூப்பர் ஸ்டாரை, சூப்பர் ஸ்டாராகவே பார்ப்பது தமிழுக்குப் புதுசு. ரஜினியும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். அத்துடன் ரசிகர்களின் ஆர்வமான பல நாள் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்,

° அரசியலில் சேருவேன் என்று சொல்லிவிட்டு சும்மா டபாய்க்கிறீர்களே ஏன்?

° நீங்கள், கமல் எல்லாம் ரொம்ப பந்தா பண்ணுகிறீர்களே?

° அடிக்கடி இமயமலை போகிறீர்களே. இங்கே இல்லாத எது அங்கே உங்களுக்குக் கிடைக்கிறது? இப்படி சுவாரசியமான கேள்விகள். பதில்களை வெள்ளித்திரையில் காண்க.

ரஜினி அழுவதைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. `ஆறிலிருந்து அறுபது வரை'யை ஞாபகப்படுத்தும் நடிப்புத் திறமை இத்தனை மசாலா, ஃபார்முலாக்களைத் தாண்டி வந்தும் அவரிடம் அப்படியே இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் அவர் கண் கலங்கும்போது நம் கண்களும் கலங்குகின்றன.

ரஜினியின் படத்தில் அவரைத் தவிர வேறு யாரும் கண்ணில் தெரியமாட்டார்கள். ஆனால், அதையும்மீறி மனதோடு, மண் மணத்தோடு ஒட்டிக் கொள்கிறார் பசுபதி. சூப்பர் ஸ்டாரின் நண்பர் என்று மற்றவரெல்லாம் மதிக்கும்போதும், புகழும்போதும் வெட்கமும் ஏக்கமும் கலந்து இயலாமையாய்ப் பார்க்கும் அவரது அழுத்தமான பார்வைக்கு ஆயிரம் பாராட்டுக்களைத் தரலாம்.

நயன்தாரா `நெய்'ந்தாரா. வழுக்கும் உடலில் வழுக்கும் உடைகளில் இதயங்களை வழுக்கி விழ வைக்கிறார். அவர் நடை, உடை பாவனைகைளப் பார்க்கும்போது கூடிய விரைவில் ஹாலிவுட் படங்களில் அரங்கேறுவார் என்று பட்சி சொல்லுகிறது.

மீனாவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று. அப்படியே இருக்கீங்க அம்மணி!

கஸ்டமர் கிடைக்காததால், முடி வளர்ந்தவர்களைக் கடத்திக் கொண்டு வந்து `கட்டிங்' செய்யும் பார்பராக வந்து கலகலக்க வைக்கிறார் வடிவேலு. அவரின் மனைவியாக வரும் சோனா... செமை சால்னா!

முதல் பாதியில் ரஜினி எப்போது வருவார் என்று பார்த்துப் பார்த்து கொஞ்சம் அலுப்பு வருவது திரைக்கதையின் பலவீனம். ஆனால், அந்தக் குறையை கடைசி அரைமணி நேரத்தில் மனதைக் கரைத்து மறக்கடித்துவிடுகிறார் இயக்குநர். ரஜினி போன்ற ஆக்ஷன் சூப்பர் ஸ்டாரை வைத்துக் கொண்டு, இது போன்ற அழுத்தமான படங்களை எடுப்பது சற்று சிரமமான காரியம். கெட்டியாகச் செய்திருக்கிறார் பி.வாசு. சபாஷ்.

லிவிங்ஸ்டன், சின்னிஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், டி.பி.கஜேந்திரன் என்று காமெடி பட்டாளமே களம் இறங்கி சிரிப்பு மூட்ட முயற்சிக்கிறது.

ஜி.வி. பிரகாஷின் இசையில் `தலைவா' பாடல் தாளம் போட வைக்கிறது. வாலியின் வரிகள் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாக கொஞ்ச காலத்திற்கு இருக்கும். இவர் வாத்தியங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது, அவருக்கும் கேட்பவர்களின் காதுகளுக்கும்.

அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா குசேலனை, குபேரனாக்கியிருக்கிறது. தோட்டாதரணியின் செட்டிங்ஸும் பிரமாண்டம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒவ்வொரு ரசிகரின் வீட்டுக்குள்ளும் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது படம். ரஜினி ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

குசேலன் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி, டைரக்டர் பி.வாசுவிடம் சொன்ன கமெண்ட் இதுதான். ``படம் 25 வாரம் ஓடும்.''

உண்மைதான். ரஜினி ரசிகர்கள் ஓட வைத்துவிடுவார்கள்..

நன்றி குமுதம்

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது வலைப்பதிவுகளுக்கூடாகத்தான் சுயாதீனமான கருத்துகள் பதிவாகின்றன. பெரும் பத்திரிகைகளில் விளம்பரங்களைத்தான் பார்ப்பதாகிவிட்டது.

யாழில் நன்கு அறியப்பட்ட நண்பர் லக்கிலுக் அவர்களது விமர்சனதின் ஒரு பகுதியை இதில் இணைக்கிறேன்.

இனிமேல் ஏதாவது பேசினால் உதைப்பேன் என்று ரஜினி எச்சரிக்கிறார். உண்மையில் இந்தப் படம் பார்த்தவர்களை தான் ரஜினி உதைக்க வேண்டும். குருவி எடுத்தவர்களை கோயில் கட்டி கும்பிடலாம்!

பாராட்டுவது என்பது ஒரு கலை. ஒரு சின்ன விஷயத்தை கூட பெரிதுபடுத்தி பாராட்டுவதால் பாராட்டப்படுபவர்களுக்கும் மகிழ்ச்சி, பாராட்டியவர்களுக்கும் மனநிறைவு! - நான் வாழ்க்கையில் கடைப்பிடிக்க எனது குருநாதர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் இது! Appreciation is an art என்பதை அடிக்கடி வலியுறுத்துவார். பெரிய போராட்டத்துக்கு பிறகு டிக்கெட் வாங்கி என்னோடு நேற்று சத்யம் சினிமாஸில் ஸ்க்ரீனுக்கு முன்பாக இரண்டாவது ரோவில் சிரமப்பட்டு விஐபி ஷோ பார்த்த அவரும் கூட குசேலனை பாராட்ட ஒரு காரணத்தையாவது பூதக்கண்ணாடி வைத்து தேடிக்கொண்டிருக்கிறார்.

ஃபேமிலி உப்புமா கிண்டும் இயக்குனர் வி.சேகர் எடுத்த முதல் படம் ‘நீங்களும் ஹீரோதான்!' என்ற மொக்கைப்படம். குசேலன் படத்தின் காட்சிகள் சில அந்தப் படத்தை நினைவுபடுத்துகிறது. குசேலனை ஒப்பிடும்போது அது ஆயிரம் மடங்கு தரமான படம். ‘சினிமா சினிமா' என்றொரு பாடல் சூப்பர் ஸ்டாரின் ஓபனிங் சாங். பாடல் தொடங்கும்போது 'தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றுக்கு சமர்ப்பணம்' என்று போடுகிறார்கள். இப்படி ஒரு பாடல் கம்போஸ் செய்யப்பட்டு படமாக்கப்பட்டதே தமிழ் சினிமாவின் வரலாற்றை கேவலப்படுத்துவது போல் இருக்கிறது.

இயக்குனர் சுந்தர்ராஜன் கேட்கும் கேள்விகள் ரஜினியை மட்டுமன்றி படம் பார்ப்பவர்களையும் எரிச்சலுக்குள்ளாக்குகிறது. இமயமலைக்கு நிம்மதிக்காக போகிறேன், கமல் ஒரு பெரிய நடிகர், அரசியலுக்கு வருவதாக டயலாக் தான் எழுதுகிறார்கள் என்றெல்லாம் ரஜினி சுந்தர்ராஜனுக்கு சொல்லும் பதில்கள் மட்டும் சுவாரஸ்யம். இனிமேல் ஏதாவது பேசினால் உதைப்பேன் என்று ரஜினி எச்சரிக்கிறார். உண்மையில் இந்தப் படம் பார்த்தவர்களை தான் ரஜினி உதைக்க வேண்டும். குருவி எடுத்தவர்களை கோயில் கட்டி கும்பிடலாம்!

thanks:

http://madippakkam.blogspot.com/2008/08/blog-post.html

நடிப்பு- ரஜினிகாந்த், பசுபதி, வடிவேலு, மீனா, நயன்தாரா, லிவிங்ஸ்டன், பிரபு

ஒளிப்பதிவு-அரவிந்த் கிருஷ்ணா

இசை-ஜி.வி.பிரகாஷ் குமார்

திரைக்கதை, வசனம், இயக்கம் – பி.வாசு

தயாரிப்பு-ஜி.பி. விஜயகுமார், புஷ்பா கந்தசாமி

நல்ல சினிமா விரும்பிகளுக்காகவும் தன்னால் ஒரு படம் கொடுக்க முடியும் என சூப்பர்ஸ்டார் ரஜினி நிரூபித்திருக்கும் படம் குசேலன்.

ரஜினியின் தரமான படங்கள் எனப் பட்டியல் போடுபவர்கள் தாராளமாய் இந்தப் படத்துக்கு முதலிடம் கொடுக்கலாம்.

மலையாள ரீமேக்காக இருந்தாலும், குசேலனை தன் சிறந்த படமாகச் சொல்லி மார்த் தட்டிக் கொள்ளலாம் இயக்குநர் பி.வாசு.

இரண்டு நண்பர்களுக்கிடையிலான நட்புதான் இந்தக் கதையின் அடிநாதம்.

மறையூர் கிராமத்தில் ஒரு ஓட்டை சலூன் வைத்திருக்கும் நேர்மையான ஏழை பாலு (பசுபதி). அன்றாட பிழைப்புக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டாலும், காதல் மனைவி ஸ்ரீதேவி (மீனா) மற்றும் மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்கிறான்.

தனது பழைய சலூனைப் புதுப்பிக்க எங்கெங்கோ கடன் கேட்கிறார். அவனது நேர்மை யாருக்கும் அவனை லஞ்சம் கொடுக்க விடாமல் தடுக்கிறது. அதன் விளைவு எந்த அரசு வங்கியிலும் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.

ஆனால் அவரிடம் உதவியாளராக இருந்த சலூன் சண்முகம் (வடிவேலு), நடைமுறையைப் புரிந்து தகிடுதத்தம் செய்து பெரிய நவீன சலூனைத் திறந்து ஏராளமாய் சம்பாதிக்கிறார்.

ஒருநாள் அந்த கிராமத்தின் இயல்பே தலைகீழாக மாறிப்போகிறது. காரணம் நாடே போற்றும் சூப்பர்ஸ்டார் அசோக்குமார் (ரஜினி) அந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக வருகிறார்.

இந்தப் படப்பிடிப்பால் கிராமத்திலுள்ள பலருக்கும் இதனால் வேலை கிடைக்கிறது. எல்லோர் கையிலும் பணம் புரள ஆரம்பிக்கிறது. அப்போதுதான் சலூன் பாலு, சூப்பர்ஸ்டார் அசோக்குமாரின் நெருங்கிய நண்பன் என்ற உண்மை கிராமத்தினர் மத்தியில் கசிகிறது. இதையடுத்து பாலுவை, ஊரே கொண்டாடத் துவங்குகிறது.

ஊரே சூப்பர்ஸ்டாரை தரிசிக்க அவரது கெஸ்ட் அவுஸ் முன் தவம் கிடக்கிறது. ஆனால், தன் பழைய நண்பன் தன்னை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கப் போகிறான் என்ற அவநம்பிக்கையில் அவரைப் பார்க்கப் போகாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் பாலு.

நிர்பந்தம் காரணமாக ஒருமுறை பார்க்கப் போக, அங்குள்ள கடும் காவல் அவரை மெளனமாய் திரும்ப வைக்கிறது.

ஷூட்டிங் முடிந்து அசோக்குமார் ஊரைவிட்டுக் கிளம்பும் கடைசிநாள் ஒரு பள்ளியின் விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவுக்கு நீண்ட தயக்கத்துக்குப் பின் மனைவியுடன் புறப்படுகிறார் பாலு.

அடுத்த சில நிமிடங்களில் யாருமே எதிர்பார்க்காத உணர்ச்சிப் பிரவாகமான காட்சிகள் அரங்கேற, விழா நடக்கும் பள்ளியே உருகி உறைந்து போகிறது. இரு நண்பர்களும் எப்படிச் சேர்ந்தார்கள் என்பது இறுதிக் காட்சி.

படத்தின் ஆரம்பத்தில் ரஜினியின் ஆவேச ரசிகர்களாய் உள்ளே நுழையும் அத்தனைபேரும் ஒருவித நெகிழ்வுடன் வெளியேறும் காட்சியை ரொம்ப நாளைக்குப் பிறகு குசேலனில் பார்க்கலாம்.

நல்ல படத்துக்கு உயரிய தொழில் நுட்பமோ, வெளிநாட்டு சூட்டிங்கோ, பஞ்ச் டயலாக்கோ, பஞ்சர் டயலாக்கோ, கோடிகளைக் கொட்டி செட் போடுவதோ தேவையே இல்லை என்பது இந்தப் படம் உணர்த்தும் முக்கியப் பாடம்.

குசேலனில் ரஜினி தோன்றுவது வெறும் 40 நிமிடங்கள்தான் இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தப் படத்திலும் அவரே நிறைந்திருப்பது போன்ற மேஜிக்கை நிகழ்த்தியிருப்பது கதை எழுதிய சீனிவாசன் மற்றும் இயக்கிய வாசுவின் தனித் திறமை.

அதிரடி, ரகளையான அறிமுகப் பாடல் கிடையாது. காற்றில் பறந்து பறந்து அடிக்கும் ஸ்டண்டுகள் கிடையாது. தனியான பஞ்ச் வசனங்களும் கிடையாது. வெளிநாட்டு லொக்கேஷன்களில் பாடல் காட்சிகள் கிடையாது. ஆனாலும் படத்தின் கதையால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் ரஜினி.

'மாதா, பிதா, குரு, நல்ல நண்பன், தெய்வம் – இதுதான் இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்லும் புதிய மந்திரம்' எனும் ரஜினி, தனது வாழ்க்கைக்கு விளக்கேற்றிய நண்பனைப் பற்றிச் சொல்லும் காட்சி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சரியான பாடம்.

கிளைமாக்ஸுக்கு முந்திய பள்ளி விழாவில் கலங்கிய விழிகளுடன் ரஜினி தன் நண்பனை நினைவு கூறும்போது கல்லும் கரையும்.

ரஜின் ஏன் இமயமலைக்குப் போகிறார்... அரசியலில் ஏன் அடிக்கடி குழப்புகிறார், சூப்பர் ஸ்டாராக இருந்து கொண்டே சந்நியாசி வாழ்க்கையை ஏன் வாழ்கிறார்? என்று கேள்வி-பதில் காட்சியும் படத்தில் உண்டு. ஆர்.சுந்தர்ராஜன் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு ரஜினியே அதற்கு பதில் சொல்கிறார்.

பசுபதி... இந்தப் பாத்திரத்துக்கென்றே வார்க்கப்பட்டவர் போல அப்படியொரு கச்சிதம். 'அந்தப் பெரிய நடிகர் வந்ததால என் தூக்கம் போச்சி, அந்த விளக்கை அணைச்சிடு... அதுவாவது நிம்மதியா தூங்கட்டும்', என்று அவர் மனைவியுடன் பேசும்போது தம்மை மறந்து கைதட்டுகிறார்கள் ரசிகர்கள்.

நயன்தாராவுக்கு ஒரு வேலையும் கிடையாது. இரு பாடல் காட்சிகளில் வந்து போகிறார். குறைந்த காட்சிகளில் மிகக் குறைந்த உடையுடன் வந்து தந்த வேலையை நிறைவு செய்கிறார்.

கதபறயும் போளில் செய்த அதே வேடம் தான் இதில் மீனாவுக்கு. திரும்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார் கண்ணழகி.

படத்தில் பின்னி எடுக்கும் இன்னொரு கேரக்டர் வடிவேலு. வாவ்... வடிவேலுக்குள் எத்தனை பெரிய, அரிய நகைச்சுவைக் கலைஞர்..? பிரமிக்க வைக்கிறார்.

வாசுவின் படத்துக்கே உரிய ஏராளமான நட்சத்திர பட்டாளம் இதிலும் உண்டு. பிரபு, லிவிங்ஸ்டன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, விஜயகுமார் என திரை நிறைய ஏகப்பட்ட பேர். அவரவர் பாத்திரங்களில் நச்சென்று நடித்திருக்கிறார்கள்.

ஆனாலும் படத்தில் மகா வெட்டியாக வந்து போவது 'சின்னதம்பி' பிரபு. ( சந்திரமுகி செண்டிமெண்ட் போல..)

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம். பிரகாஷ் குமாரின் இசையும் குறைசொல்லும்படி இல்லை. பேரின்பப் பேச்சுக்காரன்..., போக்கிரி ராஜா... பாடல்கள் அருமை.

நயன்தாரா தனியாகப் பாடும் அந்த மழைப் பாடல் படு செயற்கை.

குசேலன்- கதை தரத்தில் குபேரன்!

http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=240

குசேலன் குப்பை என்று பார்த்தவர்களின் கருத்து...

பழைய உசு..உசு ரஜினிக்காக போனா நாமம். நல்ல படமா பார்க்க போன திருப்பதி லட்டு. :unsure:

ம்ம்..வசபண்ணா..(குமுத விமர்சன இணைப்பிற்கு)..நன்றிகள் :o ..ஒரு மாதிரி நாமளும் முதல் காச்சிக்கு போயிட்டோம் அல்லோ..போனா "கிரேட்டர் யூனியன்" சினிமாவே சும்மா அதிர்ந்திச்சல்ல...(நானும் என்னை பார்த்து தான் எண்டு நினைத்திட்டன்)..பிறகு தான் விளங்கிச்சு அது எனகில்ல எண்டு..சரி அதை விடுவோம்..

படம் தொடங்கினதில இருந்து விறு விறுப்பா போய் கொண்டு இருந்துச்சு..(ஆனா எப்ப ரஜனி மாமா)..வருவார்..வருவார் எண்டு பார்த்து கொண்டிருக்க..காரில இருந்து சந்தானம் அண்ணா இறங்க.(ரஜனி மாமா எண்டு நினைத்து எல்லாரும் விசில் அடித்து ஏமாந்தது தான்).. :D

பிறகு ரஜனி மாமா வருவார் அல்லோ..(சினிமா..சினிமா)..எண்ட பாட்டோட..அவர் வரக்க சும்மா தியேட்டரை அதிர்ந்துச்சு எண்டா பாருங்கோவன்..அந்த பாட்டு வேற 75 வருச தமிழ் சினிமாவிற்கு சமர்பணம் எண்டு வேற அதில போட்டு காட்டீச்சீனம் அல்லோ.. :lol:

மேல எல்லாரும்..(மேலோட்டமாக கதையை சொன்னபடியால)..நான் மறுபடி அதை சொல்லவில்லை :o ..ஆனால் கதை பிழை இல்ல எண்டு சொல்லுவன்..அதை விட பசுபதி மற்றும் மீனாவின் ஆடம்பரமற்ற நடிப்பு கண் முன் வந்து செல்கின்றது அதுக்கு பக்கபலமாக வடிவேலு மற்றும் பல நகைசுவை கலைஞர்களின் நகைசுவை படதினை மேலும் மெருகூட்டுகிறது என்பதில் எந்த வித ஜயமும் இல்லை எண்டு சொல்லலாம்.. :D

அடுத்து இதில் ஆச்சரியபட வேண்டிய விசயம் என்னவெண்டால்..ரஜனி மாமா சிவாஜி படத்திலும் பார்க்க இளமையாக இருப்பது தான்..அத்துடன் ரஜனி மாமா இந்த படத்தில் முழுவதும் வரமாட்டார் அல்லோ ஆனாலும் ரஜனி மாமா படம் முழுக்க வந்த பிரமை போல படத்தை நகர்த்தி இருக்கு வாசுவை பாராட்ட தான் வேண்டும்... :lol:

குசேலன் திரைபடத்தில் ரஜனி மாமா.."சூப்பர் ஸ்டாரகவே" வருகிறார் ஒரு கிராமதிற்கு பட "சூட்டிங்கிற்காக"..ரஜனி மாமாவை வைத்து சூட்டிங் நடைபெறுகிறது..அதில் எசமான்,அண்ணாமலை,சந்திரமுகி,ச

  • தொடங்கியவர்

உண்மை தான் ஜம்மு.

நீண்ட நாட்களுக்குப் பின் கதையுடன் கூடிய நடிப்பில் ரஜனி படம் வந்துள்ளது. நிச்சயம் முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, புதுக்கவிதை போன்ற தரமான ரஜனி பட வரிசையில் குசேலனும் இடம் பிடிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.