Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்களில் தமிழ்க்கொலை -கவிஞர் காசி ஆனந்தன் சாட்டையடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களில் தமிழ்க்கொலை

கவிஞர் காசி ஆனந்தன் சாட்டையடி

அயலகத் தமிழர் கருத்தரங்கத்தில் தலைமையுரை ஆற்றிய உலகப் பெருந் தமிழர் காசி ஆனந்தன் அவர்கள் உரை யாற்றும் பொழுது தமிழ்நாட்டில் தமிழ் எவ் வாறு கொச்சைப்படுத்தப்படுகிறது - தமிழ் மொழி எங்ஙனம் சீரழிக்கப்படுகிறது எனக் குமுறினார்.

ஒரு விபத்து பற்றி தகவல் கூறிய ஒருவன் மறைமலை அடிகள் பிரிட்ஜ் கிட்டே விபத்து என்று சொல்கிறான். வட மொழியை எதிர்த்துப் போராடிய மறை மலையடிகள் பெயரால் உள்ள பாலத்தை பாலம் என்று சொல்ல முடியவில்லை என்ற உதாரணத்தை முன்வைத்து நாம் ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டு இருக்கிறோம் அதனால் தான் தமிழ் மொழி இப்படியெல்லாம் அழிந்து கொண்டு இருக்கிறது எனக் கூறினார்.

நாட்டில் ஒரு தலைவருக்கோ தலை விக்கோ பிறந்த நாள் வருகிறது. நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பிறந்தநாள் வந்தால் தமிழே வாழ்க என்று சொல் கிறான். ஒரு தமிழன் ஒரு மனிதனைப் பார்த்து - ஒரு மாந்தனைப் பார்த்து தமிழே வாழ்க என்று சொல்கிறான். தமிழ் மிக உயர்வானது. தமிழுக்காக உயிரையும் கொடுப்போம். உயிருக்கும் மேலானது தமிழ் என்று சொல்வோம். ஆனால் ஒரு தலைவரைப் பார்த்து தமிழே என்று சொல் கிறான். ஒரு தலைவனுக்கு 70 அகவை ஆகிறது. சுவரொட்டி ஒட்டு கிறான். தமிழுக்கு வயது 70 என்று சுவரொட்டி ஒட்டுகிறான். அவன் செத்து விட்டால் தமிழ் செத்துவிட்டது என்று சுவரொட்டி ஒட்டுவதா? அது சரியாக இருக்குமா?

தமிழ் ஒருபுறம் இப்படி அழிந்து கொண்டிருக்கிறது என்றால் ஊடகங்கள் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பாய்கிறது. பக்கத்தில் இருக்கிற தமிழ் ஈழத் தையும் தொடுகிறது. கொஞ்சம் தொடத் தான் செய்கிறது. ஊடகங்களினால் தமிழ் சாகும். பெருமையாக மார் தட்டி "தமிழ் தெய்வீக மொழி. அது சாகாது" என்று பேசுகிற பட்டிமன்றப் பேச்சாளனாக நான் இல்லை. தமிழ் சாகும். தமிழ் செத்திருக் கிறது. 800 ஆண்டுகளுக்கு முன் தமிழ் செத்து தான் மலையாளம். கி.பி. 5ம் நூற்றாண்டில் தமிழ் செத்து தான் தெலுங்கு. தமிழ் செத்து தான் கன்னடம். தமிழ் சாகக் கூடியது. செத்திருக்கிறது. தப்பிப் பிழைத்து இந்த தமிழ்நாட்டில் தமிழ் வாழ் கிறது. தமிழ் வாழ வேண்டும். தமிழைச் சாக விட மாட்டோம்.

பெயர்ப் பலகைகள் தமிழகத்தில் தமிழில் இல்லை, “மொழி இல்லை என் றால் இனம் இல்லை. தமிழ் ஈழத்தில், இந்த நேரத்தில் - குண்டுகளுக்கிடையே போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் - நமது இல்லத்திற்குப் போய் பாருங்கள் - தமிழ் ஈழத்தில் புலிகளுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற தமிழ் ஈழத்தில் ஒரு கடையின் பெயரும் பெயர்ப்பலகை யும் ஆங்கிலத்தில் இல்லை. ஒன்றைக் கூடக் காட்ட முடியாது. இருக்கவே இருக் காது. ஆனால் இங்கே - தமிழ்ச் சங்கம் இருந்த மண் - தமிழ் வளர்த்த மண் - தமிழர் வளர்ச்சி பற்றி பேசிய தமிழர் வாழ்ந்து வழிகாட்டிய மண் - சென்னை யில் போய் பார்த்தால் நீ சென்னையில் இல்லை, இலண்டனில் இருக்கிறாய் - ஒரு பெயர்ப்பலகை காட்ட முடியுமா தமிழில்? சென்னையில். இப்படி வாழ்ந்தால் மொழி அழியும். தேயும்.

அடையாளம் காப்பாற்றப்பட வேண்டுமானால் - கலையும் பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டும் திரைப்படம் சிறந்த ஊடகம் அந்த ஊடகத்தை எதிர்க்க வில்லை. திரைப்படங்களில் உடைகள் மற்றும் பண்பாடுகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

மொழி தான் தேசிய இனத்தைக் காக்கும். தேசிய இனங்கள் என்றைக்குமே மற்ற சிறுபான்மை இனங்களோடு சேர்ந்து வாழ முடியாது. “நான் 3 நாடுகளை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன். பெரிய தேசிய இனம் ஒரு சிறிய தேசிய இனத்தோடு சேர்ந்து வாழ்கிற பொழுது பெரிய தேசிய இனம் தன்னை மட்டும் கவனித்துக் கொள்ளும். தன்னைத் தான் மையப்படுத்திக் கொள்ளும். இந்தியா 28 மாநிலங்ளைக் கொண்ட பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு. இங்கே தலைநகரம் அமைக்கின்ற பொழுது - அனைத்து நிர்வாக தலைமையகங்களை ஏற்படுத்தும் போதோ - பெரும்பான்மை தேசிய இனம் உள்ள தில்லியில் தான் அமையும். நீ போக வேண்டும் வண்டி யில். அது தான் விதி. ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் நாட்டுக்காரன் ஆகியோர் உள்ள நாட்டில் இங்கிலீஷ் பேசுகிற பெரும்பான்மை மொழி பேசுகிற இலண்டனில் தான் - நாலு வெவ்வேறு மொழி பேசுகிற நாடாக பிரிட்டன் இருந் தாலும் தலைநகரம் பெரும்பான்மை இங்கிலீஷ் பேசுகிற பகுதியான இலண்ட னில் தான் அமையும். அத்தனை நிர்வாக அலுவலகங்களும் அங்கு தான் அமையும். அதைத் தான் அவன் செய்வான். அவனது ஆளுமையில் தான் அடுத்த தேசிய இனம் இருக்க முடியும். இவற்றிற்கு மேலாக நான் ஒன்றைச் சொல்கிறேன். பொதுவுடைமை பேசப்படுகிற - அனைத்து மக்களையும் நேசிக்கின்ற - சோவியத் குடியரசில் அங்கே பெரும்பான்மை இனம் கிரேட் ரஷ்யன். அங்கு உஸ்பெகிஸ்தான், உக்ரைன், குரேஷியா, சைபீரியா இப்படி பலப்பல தேசிய இனங்கள் - ஆனால் அந்த மண்ணின் தலைநகரம் பெரும் பான்மை மக்களான ரஷ்யமொழி பேசப்படு கிற மாஸ்கோ நகர் தான். அனைத்து தேசிய இனங்களும் சமம் என்று சோவியத் ரஷ்யாவில் சொல்லப்பட்டது. பேசப்பட் டது. அணுகுண்டு செய்தார்கள். சோவி யத் குடியரசு உடைந்து சிதறிய பொழுது அணுகுண்டு ரஷ்யாகாரன் கையில் தான் போனது. மற்ற தேசிய இனங்களின் கையில் போகவில்லை. அவன் திட்டமிட் டுத் தான் வாழ்கிறான். வேல்ஸ் நாட்டிலும் இளவரசன் உண்டு இளவரசி உண்டு. அரச பரம்பரை உண்டு. ஆனால் மாட்சிமை தங்கிய மகாராணி எலிசபெத் இங்கிலீஷ்காரியாகத்தான் இருப்பார்.

மண் எங்களுடைய சொந்த மண். வரலாற்றின் அடிப்படையில் அது எங்கள் தாயகம். இலங்கை என்ற சொல் - முத

லில் இலங்கையில் சிங்களவர்கள் இல்லவே இல்லை. தமிழ் - பாலி - சமஸ்கிருதம் கலந்து சிங்கள மொழி தோன்றியது. இடத்திற்குச் சிங்களச் சொல் இடமே. அவனுக்கு இடமில்லை. சிங்கள சொல்லு மில்லை. தமிழ்ச் சொல் தான். அந்த மண்ணில் அவன் ஆட்சி நடத்தியதில்லை. ஆட்சி என்ற சொல்லுக்கு சிங்கள சொல் என்ன தெரியுமா? ஆண்ட்ருவ என்பது சிங்களச் சொல். அவனுக்கு ஆட்சி இருந் ததும் இல்லை. ஆட்சி என்ற சொல்லும் இருந்ததில்லை. அந்த மண் எங்கள் சொந்த மண். இலங்கை என்ற சொல்தான் இலங்கா என்று மாறியது. இலங்குதல் என்றால் ஒளிவிடுதல் - தூய தமிழ்ச் சொல். அவன் சொல்லும் இலக்சண என்ற சொல்லுக்கும் இலங்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சிங்களவர்கள் பெயரில் இன்றும் இலங்காகோன்- அதாவது இலங்கைக் கோன். அந்த மண் எங்கள் சொந்த மண். எங்களது தாயகம் அது. இது இன்னொரு தாயகம்.

ஆகவே எங்கள் தேசம் - எங்கள் சொந்த மண்ணின் அடிப்படையிலே போராடுகிறோம். இரண்டாவது அப்படி இல்லையென்றாலும் மாந்தநேய அடிப் படையில் இணைந்து வாழலாம் என்றாலும் அவன் எங்களை நடத்துகிற முறை ஆண்டாண்டு காலமாக அவன் அந்த மண்ணில் அவன் சிங்கள் மொழி தோன்றி - கி.பி.ஆறாம் ஆண்டில் தான் சிங்கள மொழி தோன்றியது. அவன் வரலாறு கடந்த 1500 ஆண்டுகள் தான். அந்த 1500 ஆண்டுகளில் அந்த மண்ணில் அவன் எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறான். அங்கே தான் நம் விழிப்பற்ற தன்மையைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வரலாற்றில் விழிப் பின்மையால் நாம் வீழ்ந்தோம். மற்றவர் களோடு சேர்ந்து அழிந்தோம் - இப்போது அழிந்து கொண்டிருப்பது போல. எங்கள் மொழியை - மக்களை கொலை செய்து - வெளிநாடுகளுக்கு ஓடச் செய்து எங்களை கொன்று குவித்து - குருதியில் குளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் போராட்டம் எங்களுக்கு மிகமிக அவசியமாக இருக்கிறது.

மூன்றாவது - ஒரு பெரிய தேசிய இனத்தை நம்பி சிறிய தேசிய இனம் நாம் ஒருபோதும் வாழ முடியாது. இது எங்களுடைய பட்டறிவு. ஆகவே இந்த 3 காரணங்களுக்காகவும் களத்தில் நின்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். என் அருமை நண்பர் சேனாதிராசா வந்திருக்கிறார். அவரும் நானும் ஒன்றாகச் சிறைவாசம் கண்டவர்கள். பக்கத்தில் அன்புத்தம்பி சிவாஜிலிங்கம் இங்கே வந்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர். அவரைக் கோடாலியால் கொத்தி - கத்தி யால் குத்தி - தடியால் அடித்து - துப்பாக்கி யால் சுட்டு - செத்துவிட்டான் என்று போட்டுவிட்டுப் போனவர்கள் சிங்கள வெறியர்கள். உயிரோடு நம்மிடையே இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். நாங்கள் போராடிக் கொண்டி ருக்கிறோம். சிங்களவர்கள் செய்கிற கொடுமை எல்லை மீறிப் போய்க் கொண்டி ருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? உலக வரலாற்றில் எந்த நாட்டிலும் பார்க்க முடி யாது. அம்பாறை பகுதியில் - ஒரு தமிழச் சியை - தாய்மார்களே என்னை மன்னிக்க வேண்டும் - வெறி பிடித்த சிங்கள படை வெறியர்கள், அவளைக் கெடுத்துவிட்டு , கடித்துக் குதறிவிட்டு, கசக்கிப் பிழிந்து விட்டு அந்த கோணேஸ்வரியின் மர்ம உறுப்பில் வெடிகுண்டு வைத்து அதை வெடிக்க வைத்தார்களே . இந்தக் கொடுமை வேறு எங்காவது நடந்த துண்டா? அது எந்த நாட்டின் விடுதலை வரலாறாக இருக்கட்டும். எங்காவது ஒரு தாய் - நாம் போற்றுகிற தாய் - தாயின் மர்ம உறுப்பில் வெடிகுண்டு வைத்து தகர்த் ததுண்டா? கொடியவர்கள். எங்களுக்கு விடுதலையைத் தவிர வேறு வழியில்லை. நாம் போராடுகிறோம். போராடியே தீர வேண்டியிருக்கிறது. போராடுகிறோம். களத்தில் நின்று போராடுகிறோம். சிங்கள வர்கள் பொய்ச் செய்தியை அவிழ்த்துவிட் டுக் கொண்டிருக்கிறார்கள். சிங்களவன் முன்னேறிக் கொண்டிருக்கிறான். அவன் பிடித்து விட்டான். பிடிக்கப் போகிறான் என்று எல்லாம் செய்திகள் வருகின்றன. இந்த உலகத் தமிழர் பேரமைப்பு - இங்கு வந்துள்ள அறிஞர்கள், தமிழர்கள் இவர்கள் கட்டி உருவாக்கி இருக்கிற உணர்ச்சி பெரிய உணர்ச்சி அல்ல. ஆனால் இங் கிருந்து பாயும் கனல் பலன் தந்திருக்கிறது. பார்ப்பனர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ஐம்பது விழுக்காடுக்கு அதிகமானவர்கள் - தனி ஈழத்தை ஆதரிக்கிறார்கள். அது தமிழனுடைய ஏடு அல்ல. இன உணர்வு பேசுகிறவனுடைய ஏடு அல்ல. தமிழ்த் தேசியவாதியினுடைய ஏடு அல்ல. அது அக்ரகாரத்தில் பேசப்படுகிற ஏடு. அந்த ஏட்டின் கருத்துக் கணிப்பில் தனித் தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கிறார்கள். உண்மையிலேயே இந்த மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய ஆனந்தவிகடன் இதழுக்கு நன்றி- இதை ஒரு தமிழ் ஏடு செய்திருக்க வேண்டும். தமிழன் அங்கு செத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் தான் இந்தக் கருத்துக் கணிப்பு தேவை. உண்மையிலேயே இந்த மேடை யில் நின்று மனமாற நான் ஆனந்தவிகட னைப் பாராட்டுகிறேன். ஆனந்தவிகடன் வாழ்க.

இது உலகத் தமிழர்களின் கருத்த ரங்கம். உலகிலுள்ள தமிழர்களையும் தமி ழர்கள் அல்லாதவர்களையும் ஆவலோடு தமிழீழ விடுதலைப் போருக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். பேராயக் கட்சியினர் என்னைக் கூப்பிட்டால் நான் போய் தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசுவேன். எங்களுக்கு இந்த கட்சி - அந்தக் கட்சி என்று இல்லை. இந்தியா விலுள்ள அத்தனை கட்சிகளையும் நாங் கள் கேட்கிறோம் - கெஞ்சுகிறோம். அனைத்து மக்களுடைய ஆதரவையும் வேண்டுகிறோம். விரும்புகிறோம். இது அறம் தழுவிய போராட்டம். இந்தப் போராட்டத்தில் அனைவரும் தமிழின உணர்வு என்பதைத் தாண்டி - மாந்த இன உணர்வு என்ற அடிப்படையில் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அந்த மண்ணில் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு மாத காலத்திற்குள் 70000 அகதிகள் மரநிழலில் வாடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் குழந்தைகள் சாகிறார்கள். பாகிஸ்தான் கொடுத்த பல்குழல் ஏவுகணை ஒரு வேளையில் எழுபது குண்டுகளைப் பொழி கிறது. எழுபது குண்டுகளும் தமிழர்கள் மீது பாய்கிறது. அப்படிப்பட்ட வண்டி களை அவன் தமிழர் பகுதிகளில் நகர்த்து கிறான். ஆனால் ஒன்றை நான் தெளிவா கத் திடமாகச் சொல்ல விரும்புகிறேன். அவன் எவ்வளவு ஊர்திகளைக் கொண்டு வந்து குண்டு மழை பொழிந்தாலும் தமிழீழத்தின் விடுதலை மிக விரைவில் உறுதிப்படுத்தப்பட இருக்கிறது. தெளி வோடு நம்பிக்கையோடு சொல்கிறேன். நாங்கள் வெறி பிடித்து போர் தொடங்கிய வர்கள் அல்ல. சிங்களவர்களுக்கு எதிரான வர்கள் அல்ல. சிங்களப் பண்பாட்டின் பகைவர்கள் அல்ல. நாங்கள் தமிழ் அழி யக் கூடாது என்பதற்காகப் போராடு கிறோம். தமிழ்த் தேசிய இனம் தன் அடை யாளத்தைத் தொலைத்து விடக்கூடாது என்பதற்காக அந்த மண்ணில் போராடு கிறோம். எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற இங்கே வந்திருக்கிற

நீங்கள் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.