Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தின் எழுச்சிக்கு அணைபோட முற்படுகின்றனரா?

Featured Replies

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியின் வெளிப்பாடாக புதிய திருப்பம் ஏற்பட வாய்பு இருப்பதாக எதிர்வு கூறப்பட்டநிலையில் பசில் ராஜபக்சவின் புதுடெல்லி வருகையுடன் எல்லாமே புஸ்வானமாகிவிட்டது.

கடந்த ஞாயிறன்று இலங்கை - இந்திய உயர்மட்டப் பேச்சுக்கள் புதுடெல்லியில் நடந்துமுடிந்த போது ஒரு உண்மை மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை என்பது போராடிப்பெற வேண்டியது ஒன்றே என்பதை நிரூபித்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு தமிழீழமே என்ற செய்தியையும் இந்தச் சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன. தமிழகத்தில் இதற்கான அதரவு அலை இப்போது பெருகிவருவதையும் அங்கு அதனை வலியுறுத்தும் குரல்களும் கேட்க்கத் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு அணைபோட முற்படுகின்றனரா? தமிழகத்தில் ஈழத்தமிர்களுக்கான ஆதரவு நிலை பெருகிவந்ததும் குறிப்பாக தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் ஈழத்தமிழர்களுக்காக குரல் எழுப்பத் தொடங்கியதும் தமிழக முதல்வர் விழித்துக் கொண்டார்.

பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சார் பொன் ராதாகிருஸ்ணன் ஈழத்தமிழர்தொடர்பான ஆதரவு நிலைப்பாட்டை மேலிடத்தலைவர்களின் பணிப்பின்படி கருத்தைத் தெரிவித்து வந்ததர். பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கின் செய்தியின்படி அடுத்த ஆட்சி பா.ஜ.க வினுடையதுதான் அப்போது ஈழத்தமிழர்களின் உரிமை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். பா.ஐ.க மாநில தலைவர் இல.கணேசன் இன்னம் ஒருபடி மேலாக ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா ஆளனி மற்றும் ஆயுத தளபாடங்கள் போன்றவற்றை சிறிலங்காவிற்கு வழங்குகிறது இதனை கருணாநிதி அங்கீகரிக்கிறார் இனிமேலாவது தனது தவறை உணரவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்ததர்.

சென்னைப் படைப்பாளிகள் கழகம் தமிழீழமே தீர்வு என்றது. இதுபோன்ற பல அமைப்புக்கள் ஈழத்தமிழர் படும் அவலம் குறித்து குரலெழுப்பியும் அறப்போராட்டங்களை நடாத்தியும் வந்த வேளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளிற்கும் அழைப்புவிடுத்தது. இதற்கு மேல் தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் அமைதியாக இருக்கமுடியவில்லை. அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததர். இந்தக் கூட்டத்திற்கு முதல்நாள் குறுந்தகடு ஒன்றை முதல்வர் பார்க்கநேர்ந்தது. சிறிலங்கா வான்படை விமானங்கள் தமிழர் வாழ்விடங்களில் வீசும் குண்டுகளும் அதனால் நிகழும் கொலைகளும் சித்தரிக்கப்பட்டிருந்தன. இது முதல்வரை நன்கு பாதித்திருந்ததாக சொல்லப்பட்டது.

இலங்கையில் போர்நிறுத்தம் இருவார காலத்துள் ஏற்பட இந்தியா தலையிடவேண்டும் அல்லாதுவிடின் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக நேரிடும் என்ற முக்கிய கோரிக்கையுடன் மேலும் 5 கோரிக்கைகள் முன்வைத்து அனைத்துக்கட்சி கூட்டம் முடிவடைந்தது. இது டெல்லியிலும் சென்னையிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. போதாக்குறைக்கு தி.மு.க.வைச்சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தனது பதவிவிலகல் கடிதத்தினை முதல்வரிடம் ஒப்படைத்தார். பரபரப்பு மேலும் தீவிரமாகியது. அந்தப் பரபரப்பு அடங்குமுன் வரிசையாக தி.மு.கவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவி விலகல்க் கடிதத்தினை முதல்வரிடம் கொடுத்தனர்.

இதனால் டெல்லியிலும் சென்னையிலும் இராஜதந்திர செய்திப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. போதாக்குறைக்கு சென்ளை தொடக்கம் செங்கல்பட்டுவரையான மனிதச்சங்கிலி அணிவகுப்பை முதல்வர் நடாத்திக் காட்டி ஈழத்தமிழர் பால் உள்ள அக்கறையை வெளிப்படுத்தி நின்றார் இந்தச் சம்பவங்கள் யாவும் கடந்த அக்டோபரில் தீவிரம் பெற்றிருந்தன. கருணாநிதியின் மேல் ஒருவித மதிப்பும்ஏற்பட்டன. உலத்தமிழர்களும், ஈழத்தமிழர்களும் இவற்றைப்பார்த்து இனிக்கவலை எதற்கு தமிழகமுதல்வர் ஈழத்தமிழர்விடயத்தில் அக்கறை கொண்டு செயற்படுகிறார். என ஆறுதல் அடைந்திருந்த நிலையில் தமிழக முதல்வரின் முடிவுகள் அதிர்ச்சியை அழித்துள்ளது. மனிதச்சங்கிலி அணிவகுப்பு தொடர்பில் கருணாநிதி எடுத்துக்கொண்ட முயற்சிக்கு தமிழினம் தலைசாய்த்துக் கொண்டிருந்த வேளையில் அதனை மாசுபடுத்துவதுபோல வைக்கோ சிறைப்பிடிக்கப்பட்டார்.

கருணாநிதியின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழக காவல்துறையினரே வை.கேவை கைதுசெய்து. இதனைத்தொடர்ந்துமறுநாள் சீமான்-அமீர் ஆகியோர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இந்தச் செயல் கருணாநிதி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில்தான் சிறிலங்காவில் இருந்து உயர் நிலைக்குழு ஒன்று டெல்லி சென்றது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிறப்ப ஆலோசகரும், அவரது சகோதரருமான பசில் ராஜபக்ச தலைமையில் இத்தூதுக்குழு டெல்லி சென்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரணாயணன் ஆகியோருடன் பேச்சு நடாத்தி கூட்டறிக்கையை வெளியிட்டுவிட்டு வெற்றிகரமாக நாடுதிரும்பி இருக்கிறது. ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நலன்கள் குறித்தோ அல்லது போர்நிறுத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை நடப்பதற்கான வரைமுறைகளோ எதுவும் பேசப்படாதநிலையில் வெறும் 800 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களுடன் ஈழத்தமிழர்களை இந்தியாகைகழுவி விட்டிருக்கிறதாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

இதுவிடயத்தில் டெல்லி நன்றாகவே தமிழக முதல்வர் மு.கருணாநிதியை ஏமாற்றியிருக்கிறது. முதல்வர் இவ்வாறு ஏமாரக் கூடியவர் என்ற செய்தி பரவலாக இருந்தே வந்தது. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்திநின்ற கருணாநிதி அக் கோரிக்கையில் உறுதிப்பாட்டைக் காட்டவில்லை. இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை இடம்பெறவேண்டும் இலங்கைக்கான ஆயுதஉதவிகள் நிறுத்தப்படவேண்டும் இதுவே அனைத்துக்கட்சிகளின் அவர் இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து தனது நியாயத்தை டெல்லிக்கு எடுத்துரைத்து வாதாடினார். இவரல்லவோ நம் தலைவர் கருணாநிதி என்றால் கருணாநிதிதான். அவரது இராஜதந்திரத்திற்கு இணையாக யார் உள்ளனர் என பலரும் வானளாவிப் புகழ்ந்து கொண்டிருந்த வேளை எல்லோரையும் போலதானும் ஒரு மூன்றாம் தர சுயநல அரசியல்வாதி என நிரூபித்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தன்னால் முடியுமென்று உறுதிப்பாட்டை தக்கவைத்துக்கொள்ளமுடியாது தனது கோரிக்கையைக் காற்றில் பறக்கவிட்டு அதிகாரிகளின் பழிச்சொல்லுக்கு இலக்காகியுள்ள கருணாநிதியின்நிலை எதிர்காலத்தில் எவ்வாறு இருக்குமென்பது குறித்து பலவிதமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. போர்நிறுத்தம் என்று சொல்லிவிட்டு எப்படியானது என்று கூடதெரியாமல் நாங்கள் சொன்னது மக்கள் மீது போர்செய்யக்கூடாது என்பதுதான் அதனை இலங்கை அரசு செய்யாது என உறுதியளிக்கப்பட்டிருப்பதாக கருணாநிதி சொன்னவியாக்கியனமே பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வாறான சொல்லாடல்கள் தமிழக மக்களிற்கு புரியுமோ என்னவோ ஈழத்தமிழர்களிற்கு அதிர்ச்சியாக இருக்கக் கூடியவையே போர் நிறுத்தம் ஏற்படவில்லையே உங்கள் உறுப்பினர்களின் பதவி விலகல் என்னாச்சு எனக்கருணாநிதியிடம் நிரூபர்கள் கேட்டதற்கு அதுகைவிடப்படும் ஏனென்றால் உறுதி மொழிதரப்பட்டிருக்கிறது என்றார் ஈழத்தமிழரின் அளப்பரிய தியாயங்கள் எங்கே? தங்கள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ளமக்களைப் பணயம் வைக்கும் தமிழக அரசியல் வாதிகள் எங்கே என எண்ணத்தோன்றுகிறது.

கருணாநிதி நடுவன் அரசால் ஏமாற்றப்பட்டு விட்டாரா? அல்லாது போனால் ஈழத்தமிழர்கள் மீதூன ஆதரவு நிலை அதிகரித்துவருவதற்கு அணைபோட எடுத்துக்கொண்ட முயற்சியின் ஒருபகுதியாக இந்த பதவி விலகல் நாடகம் நடந்ததா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர் மிக நீண்டகாலமாக சிறிலங்கா அரசால் இன அழிப்பிற்கு ஆளாகியுள்ள நிலையில் அந்த மக்களை பாதுகாத்து அம்மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமைதாங்கி விழிநடாத்திச் செல்பவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே எனவே இந்தியா விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி அரசியல் தீர்வுகாண உதவவேண்டும் இலங்கைத்தமிழர் விவகாரங்களில் தனது கவலையை மட்டும் வெளியிட்டுவரும் இந்தியா இனிமேலாவது தமிழரின் விடுதலையை அங்கீகரிக்க முன்வரவேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் அவா தமிழகத்தில் எழுந்துள்ள எழுச்சி என்பது வெறுமனவே அனுதாபத்தில் ஏற்பட்டது அல்ல அது இனஉணர்வின் உச்சக்கட்டவெளிப்பாடாகும். அரசியல் கட்சிகள் வேறுபாடின்றி தமது ஆதரவை வழங்கின. இனப்படுகொலையும் நில ஆக்கிரமிப்பும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை அடியோடு பாதித்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இவ்வாறான எழுச்சிஏற்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற உணர்வு இப்போது எழுந்துள்ளது பல ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக உறவுகளிடம் உறங்கிக்கிடந்த அந்த உணர்வுகள் இப்போது தட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அந்தப் பணி இப்போது தமிழகத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் அதற்கு அணைபோடுவதாக இந்திய மத்திய மாநில அரசுகளின் செயற்பாடுகள் அமையக் கூடாது சிறிலங்காவின் போர் வெறிக்கு தீனிபோடுவதன் ஊடாக தமிழர்களின் விடுதலைக்கும் பாதுகாப்பிற்கும் ஏனைய நலன்களிற்கும் ஆபத்தான காரியங்களில் இந்திய தரப்பு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பயனற்றவையாகவே முடியும். இலங்கைப் போரைநிறுத்தி அரசியல் பேச்சுக்கு வழிக்கொணர இந்தியாவால் முடியும். எனவே இதற்கு சரியான வழியை தேடுவது மிகமுக்கியம். வெறுமனே இராணுவத்தீர்வு சர்தியமில்லை எனக் கூறிக்கொண்டு இந்தியா இராணுவ உதவிகளை சிறிலங்காவிற்கு அழிப்பது அரசியல் தீர்வு ஏற்படவழிவகுக்கிறது.

ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழகத்தின் எழுச்சியும் முதல்வர் கருணாநிதியின் தொடர்ச்சியான செயல் முன்னெடுப்பும் இந்திய நடுவன் அரசைக் கவலைகொள்ளவைத்தது அதன்பின் இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடுகள் கொழும்பை ஊடுருவின. கருணாநிதியும் தமது நா.உ.வைத்து காலக்கெடு போட்டார். சென்னை டெல்லி கொழும்பு என இராஜதந்திர வழிமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. இதில் குறிப்பாக கருணாநிதி சற்று காட்டமாக இரண்டில் ஒன்று பார்த்து விடுவது போல தனது முயற்சிகளை வெளிப்படுத்தி நின்றார் நெருக்கடிக்கு தீர்வு கண்டுவிடுவார் எனஎண்ணிய வேளையில் கருணாநிதி குத்துக்கரணம் அடித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில்தான் சில உத்தரவாங்கள் பிரணாப்முகர்ஜி வழங்கியிருப்பதால்தான் கருணாநிதி விட்டுகொடுக்க நேர்ந்தது எனக்கூறுவோருமுண்டு இதன்பிரதிபலிப்புக்கள் போகப் போகத் தெரியவரலாம்.- ஞானமுருகன்

http://www.tamilskynews.com/

ஆதரவு அலை எங்கும் தோன்றலாம் எப்படி வேண்டுமானாலும் அடக்கப்படலாம். தளம்பல்கள் எதுவும் ஈழத்தமிழரை களத்திலும் புலத்திலும் பாதிக்கக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.